26 ஏப்ரல் 2020

PILES மூலநோய்

                                                               மூலநோய்

                                                                  ------------
 மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.
                கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன். எனக்கு எற்பட்ட மூலநோய்அனுபவத்தை இங்கு பகிரலாம் என்ற எண்ணத்தில்......... (konguthendral.blogspot.com)

 ஆமாங்க!.........................
                        கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அரசாங்கம் விதித்த ஊரடங்கு உத்தரவுக்கு பணிந்து வீட்டிலேயே 23-3-2020 அன்று முதல் அடைபட்டுக்கிடந்தபோது  ஊர் சுற்றிய உடம்பு அல்லவா! அதனால் ஓரிடத்தில் அடங்க மறுக்கவே? இந்த ஓய்வுநாட்களை பயனுள்ளவகையில் கழிக்கலாம! என்ற எண்ணத்தில்
முதலில் திருக்குறள் பெருமை அறிவோம் என்ற தொடரை எழுதி வந்தேன்.
தொடர்ந்து சமையல் கலை பற்றிய தொடரை எழுதி வந்தேன்.
அதன் பிறகு மூலநோய் தாக்குதலால் கணினி முன் உட்காரக்கூட முடியவில்லைங்க.....
 
 22-4-2020அன்று ஆசனவாயில் ஏற்பட்ட வீக்கத்தினால்  உட்காரக்கூட முடியாமல் வலியால் அவதிப்பட்டபோது......

          மற்றவர்களைப்போன்றே  கூச்சப்பட்டு  வெளியில் சொல்லாமல் தாக்குப்பிடிக்க முயற்சித்தும் தோல்வியைத் தழுவியதால் வெட்கமில்லாமல் வெளியில் சொன்னபோதுதாங்க  ........
     அதுதாங்க மூலவியாதி என்றார்கள். (konguthendral.blogspot.com)

              மூலவியாதியில் 21 வகை இருப்பதாக சித்தர்கள் கூறுகிறார்கள்.
தற்போது நவமூலம் அதாவது 9மூலநோய்கள் இருப்பதாக கூறுகிறார்கள்.
அவைகளை வெளி மூலம்,உள்மூலம்,ரத்த மூலம் என வகைப்படுத்திக்கொண்டே செல்கிறார்கள்.

 சரிங்க!..
அதுவல்ல  நமக்கு முக்கியம்?
மூலநோய் யாருக்கெல்லாம் வரும்?
மூலநோய் வருவதற்கு காரணங்கள் என்ன?
மூலநோய் வந்துவிட்டால் வேதனை எப்படி இருக்கும்?
மூல நோய் குணமடைய என்ன செய்ய வேண்டும்?
என்ற காரணங்களையும் தீர்வுகளையும்  இங்கு காண்போம்!


மூலநோய் என்பது.. (konguthendral.blogspot.com)
                ஆசனவாய் வெடிப்பு, ஆசனவாயில் முளைப்பு, புண், ரத்தப்போக்கு, சதை போன்று வளர்ச்சி, பலூன் போல வீக்கம், உட்புறமாக திட்டுதிட்டாக கட்டிகள் என பல்வேறு வடிவங்களில் உருவாகின்றன.
ஆண்,பெண் வேறுபாடின்றி அனைவருக்கும் வருகின்றன.
தற்சமயங்களில் இளைய சமூகத்திற்கும் மூலநோய் வருவது வேதனைக்குரியது.நம்பிக்கை இருந்தால் எனது அனுபவத்தைக்கூறியுள்ள சிகிச்சைகளை மேற்கொள்ளுங்க...சந்தேகமிருந்தால் அரசு சித்த மருத்துவமனைக்கு செல்லுங்க.வெட்கப்படாமல் சொல்லுங்க..ஆயுர்வேதம் மருத்துவமும்,ஓமியோபதி மருத்துவமும்  நல்ல பலனளிக்கிறது....



                     மூலநோய் வருவதற்கு காரணமே மலச்சிக்கல் மற்றும் உடல் சூடுதாங்க.
                      மலச்சிக்கல் வருவதற்கு காரணம் நமது  சமீபத்திய உணவுமுறைகள்.
பருவகாலத்திற்கேற்ற உணவுகளை எடுக்கத் தவறுவதும்,சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பதும்,காரசாரமான உணவுகளை உட்கொள்வதும்,மசாலாப்பொருட்களை சாப்பிடுவதும்,விரைவு உணவுகளை சாப்பிடுவதும், கடைகளில் வணிக நோக்கத்தில் கலக்கப்படும் நிறமூட்டிகள்,சுவையூட்டிகள்,கெடாமலிருக்க பயன்படுத்தும் ரசாயனப்பொருட்கள் இவைகளை உண்பதாலும் மூலநோய் வருகிறது.

                 இயற்கை உணவுகளையும்,நார்ச்சத்து மிகுந்த உணவுகளையும்,தானியவகை உணவுகளையும்,சிறுதானிய உணவுகளையும்,காய்கறி பழங்களையும் அதிக அளவில் உண்ணவேண்டும். மோர்,எலுமிச்சை சாறு,நன்னாரி சர்பத்,இளநீர் கம்மஞ்சோறு, பழைய சோறு இவைகள் சின்னவெங்காயத்துடன் தினமும் சாப்பிட்டுவரவேண்டும்.நெல்லிக்காய்,மாங்காய்,கொய்யா,பப்பாளி,முள்ளங்கி,பாகற்காய்,கேரட்,பீட்ரூட்,வெண்பூசணி,சுரைக்காய்.இவைகளை சாப்பிட்டு வரவும். (konguthendral.blogspot.com)

(கவனியுங்க;...கத்தரிக்காய்,முருங்கைக்காய் மற்றும் முருங்கைக்கீரை போன்ற வெப்பத்தை தரும் உணவுகளை  கோடைகாலங்களில் சேர்க்கவேண்டாம்...SEASON  என்னும் பருவகாலங்களில் கோடைகாலமானது வெயில் வாட்டும் வெப்ப நாட்களோடு வருடத்தின் காலாண்டாக இருக்கிறது.அதாவது ஏப்ரல்,மே,ஜூன் மாதங்களில்தாங்க மூலநோய் நம்மை பெரும்பாலும் தாக்குகிறது..)

மோட்டார் வாகன ஓட்டுனர்கள், வங்கி போன்ற அலுவலகங்களில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் காசாளர்கள்,கணினி இயக்குநர்கள்,எழுத்தர்கள்,தையல்கலைஞர்கள், நின்றுகொண்டே வேலை செய்யும் லேத் டெக்னீசியன்கள் போன்ற பணிகளில் ஈடுபடுவோர்களுக்குத்தாங்க அதிகளவில் பாதிப்பை எற்படுத்துகிறது.
ஆதலால் உடல் உஷ்ணமடையாமல் இருக்க
பருத்திநூலாலான துண்டு போட்டு உட்காருங்க.
            கோடைகாலங்களில் பருத்தி ஆடைகளை அதுவும் இளக்கமாக அணியுங்க.ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை இரண்டு நிமிடங்களாவது எழுந்து நடைபயிற்சி செய்து ஆசனவாய்க்கு காற்றோட்டம் கொடுங்க. (konguthendral.blogspot.com)
     பெண்கள் கருத்தரிப்பு காலத்தில் அதிக எடை கூடி மலக்குடலை அழுத்துவதால் பெண்களுக்கு மூலநோய் ஏற்படுகிறது.
சிலருக்கு பரம்பரைநோயாகவும் வருகிறது.

மூலநோய் குணமாக...

                

    துத்தி இலையை ஒரு கைப்பிடி எடுத்து புழு,பூச்சி இல்லாமல் நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக்கொள்ளுங்க.சின்னவெங்காயம் ஒரு கைப்பிடி எடுத்து பொடியாக நறுக்கிக்கொள்ளுங்க.நல்லெண்ணெய்,அல்லது விளக்கெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஊற்றி சீரகம்,வெந்தயம் போட்டு தாளித்து சின்ன வெங்காயத்தையும் துத்திகீரையையும் போட்டு வதக்கி சிறிது தண்ணீர் ஊற்றி ஐந்து, ஆறு நிமிடங்கள்  வேகவையுங்க (konguthendral.blogspot.com).பிறகு எடுத்து ஆறவைத்து காலையில் வெறும் வயிற்றிலும்,மாலையிலும் தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிடுங்க.எப்பேற்பட்ட மூலநோயும் இருக்குமிடம் தெரியாமல் ஓடிவிடும்.

                    துத்தி இலையை சின்னவெங்காயத்துடன் சேர்த்து பச்சையாகவும் காலை வெறும்வயிற்றில் ஒருவாரம் சாப்பிடலாம்.

                   துத்தி இலையை பறித்து வந்து மிக்சியில் அரைத்து சாறு பிழிந்து  ஒர டம்ளர் (200மில்லி) தேங்காய்ப்பாலில் அல்லது மோரில் சேர்த்தும் காலையில்வெறும் வயிற்றில் ஒருவாரம்  குடித்து வரலாம். (konguthendral.blogspot.com)

                    சோற்றுக்கற்றாழையின் ஒரு மடலை எடுத்து தோலை சீவி உள்ளிருக்கும் ஜெல் எனப்படும் ஊண் பகுதியை  காலை வெறும் வயிற்றிலும்,மாலையிலும்  ஒரு வாரம் சாப்பிட்டுவந்தால் மூலநோய் குணமாகும்.

                கருணைக்கிழங்கு மூலநோய்க்கு அற்புத மருந்தாகும்.கருணைக்கிழங்கை நறுக்கி சமைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமாகும்.

                துத்தி இலையையும்,நாயுருவி இலையையும் சேர்த்து மைபோல அரைத்து இரவில் ஆசனவாயில் வைத்து கோவணம் கட்டி வந்தால் வெளிமூலம் சுருங்கும். (konguthendral.blogspot.com)

                சோற்றுக்கற்றாழை ஒரு மடலை எடுத்து இரண்டாக பிளந்து  தீயில் லேசாக வாட்டி இளஞ்சூட்டில் மலவாயில் வெளிமூல வீக்கத்தின்மேல்  கட்டி வரலாம்.
                  தொட்டால்சுருங்கி இலையை ஒரு கைப்பிடி எடுத்து அம்மியில் மைபோல அரைத்து ஆசனவாயில் கட்ட மூலநோய் வீக்கம் குறையும்.
 (konguthendral.blogspot.com)
                தினமும் இரவில் ஒரு ஸ்பூன் ஊறவைத்த வெந்தயம் சாப்பிட்டுவரலாம்.
வெள்ளை முள்ளங்கியும் அற்புத மருந்தாகும்.வெண்பூசணிச்சாறு அருந்திவர மூலநோய் குணமாகும்.தினமும் சுண்டைக்காய் சாப்பிட்டுவாங்க.தினமும் காலையில் 4 பச்சைவெண்டைக்காய் சாப்பிட்டு வாங்க.கனிந்த செவ்வாழைப்பழம் தினமும் சாப்பிட்டு வாங்க..

                      
கேரட் சாறு,எலுமிச்சை சாறு,நன்னாரி சர்பத்,இளநீர், பீட்ரூட் சாறு,கரும்புச் சாறு,அருகம்புல்சாறு இவைகளை பருகிவந்தால் உடல் உஷ்ணத்தைக்குறைத்து மூலநோய் வராமல் தடுக்கும். (konguthendral.blogspot.com)


 2020 மார்ச் 16ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று அறியப்பட்டு மார்ச் 23 முதல் ஊரடங்கு அமல்படுத்தியது ஒருபுறமிருந்தாலும் நம்மை நாமே பாதுகாக்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிவிட்டபடியால் சமூக விலகலைக் கடைப்பிடித்து தனியாக வீட்டிலேயே முடங்கிக் கிடந்தபோது தாங்க... உடல்நலனில் கவனம் செலுத்தவேண்டியதாயிற்று.அதன் விபரத்தை மற்றவர்களுக்கும் தெரிவிக்கலாமே என்ற எண்ணத்தினால் மூலநோய் பற்றிய பதிவு இட்டுள்ளேன்.இனி கல்லீரல்,மண்ணீரல்,கணையம்,பித்தப்பை,சிறுநீரகம் இருதயம்,நுரையீரல் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளை பாதுகாப்பது பற்றியும் இதிலிருந்து தொடராக  பதிவிடவுள்ளேன்.நான் பெரிய அறிவியலாசான் இல்லையென்றாலும் இணையங்களில் தேடித்தேடி தகவல்களை நோட்டில் எழுதி குவித்து பின்னர் தாங்கள் விரும்பி வாசித்து ஏற்குமளவு கருத்து மாறாமல்  சுருக்கி பதிவிடுகிறேன்.தங்களுக்குத் தெரிந்த கருத்துக்களையும் எனக்கு அனுப்புங்க.இதே பக்கத்தில் கீழே உள்ள கருத்துரை வழங்கும் பெட்டியில்  பின்னூட்டமிடுங்க.

பொறுப்பாகாமை அறிவிப்பு...
                         அனுபவப்பட்டவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து தகவல் நோக்கத்துடன் வாசகர்களுக்கு பயன்படும்வகையில் இங்கு பதிவிடப்படுகிறது.இந்த பதிவுக்கு துல்லியம்,மற்றும் நம்பகத்தன்மை மற்றும் காலவரையறை உத்தரவாதம் தர இயலாதுங்க.ஆதலால் நம்பிக்கை இல்லாதபோது அருகிலுள்ள சித்த,ஆயுர்வேத மருத்துவர்களை அணுகி சிகிச்சை எடுங்க.
என
  சமூக நலன் கருதி..
 அன்பன் செ.பரமேஸ்வரன்,
  கொங்குத்தென்றல் வலைப்பக்கம்,
 சத்தியமங்கலம்..ஈரோடு மாவட்டம்.
-------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...