05 ஏப்ரல் 2020

Thirukkural Perumai Arivom Part 10

                                    திருக்குறள் பெருமை அறிவோம் பகுதி 10

மரியாதைக்குரியவர்களே,
                        வணக்கம்.கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.(தேதி;6-4-2020)
              திருக்குறளும் குளறுபடிகளும்...
(1)திருக்குறள் அடிப்படையில் ஒரு வாழ்வியல்நூல் ஆகும்.மாந்தர்தம் அகவாழ்விலும்,புறவாழ்விலும் சுமூகமாக வாழவும்,இன்பமுடனும்,இசைவுடனும்,நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.
(2)நூலின் பெயரையோ,எழுதியவரின் பெயரையோ நூலின் எந்த இடத்திலும், எந்தவகையிலும்  குறிப்பிடப்படவில்லை என்பதை அறிந்துகொள்ளுங்க!..
(3) குறள்வெண்பா எனப்படும் வெண்பா வகையைச் சேர்ந்த நூல் (அந்தக்காலத்தில்வெண்பா வகையில் கிடைத்த ஒரேநூல்)  திருக்குறள் மட்டுமே.ஆதலால் 'குறள்' என்னும் காரணப்பெயரால் 'திரு' என்ற மரியாதை சேர்த்து அழைக்கப்படுகிறது.
(4)திருக்குறள் நூலுக்கு சமணம்,வைணவம்,பௌத்தம்,கிறிஸ்துவம் என எல்லா சமயநூல்களும் சொந்தம் கொண்டாடின.
(5)சென்னை தேனாம்பேட்டையில் 1972 ஆம் ஆண்டு நடைபெற்ற மறைதிரு.அருளப்பர் பாதிரியார் அவர்களது தலைமையிலான கிறிஸ்துவ மாநாட்டில்  திருக்குறள் எங்கள் நூல் என்று அறிவித்தனர்.
(6)உலகில் பொதுசமய கருத்துக்கள் கூறிகின்ற நூல்கள் பற்றிய சர்வ சமய மாநாடு ஒன்று இலங்கையில் 500ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றது. பல சமயங்களைச் சேர்ந்த ஆன்மீகவாதிகளும்,சாமியார்களும்,பாதிரியார்களும் பங்கேற்று உலகதிதலுள்ள பல இலக்கியநூல்களை ஆய்வுசெய்தபோது திருக்குறள்தான் பொது சமயக் கருத்துக்களை கூறுகிறதுஅதாவது சமயத்துக்கு பொதுமை கூறுகின்ற அறநூல் திருக்குறள் என்று போர்த்துக்கீசிய பாதிரியாரால் எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது.
                    (konguthendral.blogspot.com)
(7)பிரெஞ்சுநாட்டு அறிஞர் ஏரியல் அவர்கள் திருக்குறள் மனித சிந்தனையின் தூயவெளிப்பாடுயென்று போற்றுகின்றார்.
(8)அதையறிந்த கவிஞர்.மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை அவர்கள் திருக்குறள் எதற்கும் இடம் தரும் விடு,விடு என்று கூறினார்.
(9)திருக்குறள் தோன்றி 2000ஆண்டுகள் ஆகின்றன என்று பெரும்பாலான அறிஞர்கள் கூறியிருந்தாலும் திருக்குறள் தோன்றி ஆயிரம் ஆண்டுகள் கழித்தே உரைநூல்கள் எழுதப்பட்டுள்ளன.
(10)ஒருநூலுக்கு உரை எழுதுவது என்பது சாதாரணமான காரியம் இல்லை.அந்த நூலின் ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் அறிந்து எழுத வேண்டும்.ஒரு சொல்லுக்கு பொருள்கூற பல்வேறு மொழிப்புலமைகள் வேண்டும்.ஒருசொல் தோன்றிய காலத்தில் என்ன பொருளில் இருந்திருக்கும் என்ற வரலாற்று அறிவு தேவை.இந்தசொல்,இந்த தொடரில் என்ன பொருள்தரும் என்ற ஆய்வுச் சிந்தனை வேண்டும்.
(11)திருக்குறளுக்கு பத்துப் பேர் உரை எழுதியதாக
                                                                       பழம்பெரும் பாடல் ஒன்று பின்வருமாறு
 ''தருமர்,மணக்குடவர்,தாமதத்தர்,நச்சர்
பரிமேலழகர் - திருமலையர்,
மல்லர்,பரிப்பெருமாள்,காலிங்கர்
வள்ளுவர்நூற்கு
எல்லையுரை செய்தார் இவர்''.
                                                             என கூறுகிறது.
(12)இவர்களில் பரிமேலழகர்,மணக்குடவர்,காலிங்கர்,பரிதி,பரிப்பெருமாள், ஆகிய ஐவரின் உரை வெளிவந்துள்ளன.
 தருமர்,தாமதத்தர்,நாமச்சர் ஆகிய மூவரின் உரைகள் சில குறட்பாக்களுக்கு மட்டும் கிடைத்துள்ளன.
திருமலையர்,மல்லர் ஆகிய இருவரின் உரைகள்  கிடைக்கவில்லை.
                                    (konguthendral.blogspot.com)
(13) மணக்குடவர் மூல உரையின் திருக்குறளை முதன்முதலாக 1812 ஆம் ஆண்டு அச்சில் ஏற்றப்பட்டது.
(14)தஞ்சை மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசமும் அம்பலவாணரும் இணைந்து மிகுந்த கவனமெடுத்து சிறிதளவு பிழைகூட நேர்ந்துவிடக்கூடாது என்று அன்றைய தமிழறிஞர்கள் எல்லோரிடத்திலும் கருத்துக் கேட்டு சரிபார்த்து பயபக்தியுடன் அச்சிட்டுள்ளனர்.திருக்குறள் முதல் பதிப்பில் முன்னுரைக்கு முன்பாக திருக்குறள் வரலாறு என்ற தலைப்பிலான மூன்றுபக்கங்களை வாசித்தாலே ஓலைச்சுவடி வடிவிலிருந்து அச்சுநூலுக்கு கொண்டுவர எத்தனை கஷ்டப்பட்டிருப்பார்கள் என்று அறியலாம்.இவ்விடத்தில் வந்திருக்கின்ற வித்வ சனங்கள் எடுத்துக்கொடுத்து பிழையின்றி சாத்து செய்யப்பட்டநூல் என்று அச்சிட்டு அனைவரின் கையெழுத்தும் பெற்று வெளியிடப்பட்டிருக்கிறது.(சாத்து என்றால் சான்று எனப் பொருள் அறிக).என முன்னுரையில் காணலாம்.
                           (konguthendral.blogspot.com)
(15)முதலில் உரை எழுதிய பத்து உரையாசிரியர்களில் பரிமேலழகர் உரையும்,முறைவைப்பும் சிறந்தது என்று இன்றுவரை நடைமுறையில் பயன்படுத்தப்படுகிறது.
(16)முதிர்ந்த மரத்தை கண்ட கட்டிடமேஸ்திரி நல்ல மரம் உத்திரம் போட்டால் நீண்டகாலம் உழைத்து நீடிக்கும் என்று நினைப்பதுபோல,தச்சர் மேஜை நாற்காலி போன்ற பொருட்கள் செய்ய சிறந்த மரம் என எண்ணுவதைப்போல,சிற்பி அழகான கோயிற் சிற்பம் செதுக்க ஏற்றமரம் என சிந்திப்பதுபோல உரையாசிரியர்களும் அவரவர் எண்ணங்களுக்கேற்ப  உரை எழுதி உள்ளனர்.
(17)சிலர் வடிவத்தை மாற்றி அமைத்து உரை காண முயன்றுள்ளனர்,சிலர் பால்களை மாற்றியுள்ளனர்.சிலர் அதிகாரங்களை மாற்றியுள்ளனர்.சிலர் குறட்பாக்களின் வைப்புமுறைகளை மாற்றியுள்ளனர்.சிலர் மேற்கூறிய மாற்றங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றங்களைச் செய்து உள்ளனர்.
(17) இன்றுவரை 230க்கும் அதிகமானோர் உரை எழுதியுள்ளனர்.
(18)இவ்வாறான மாற்றங்களைக் கண்ணுற்று 33ஆண்டுகள் ஆய்வுசெய்த ஆய்வாளர், திருக்குறள் மாமுனிவர் கு.மோகனராசு அவர்கள் ''முறை மாறிய திருக்குறள் உரைகள்'' என்ற தலைப்பில் ஒருநூலினை  2005ஆம் ஆண்டில் மணிவாசகம் பதிப்பகத்தால்  வெளியிட்டார்.
(19)பரிமேலழகர் முறைவைப்பில் பொருட்பாலில் மூன்று இயல்கள் வைக்கப்பட்டுள்ளன.அவை முறையே (1)அரசியல்,(2)அங்கவியல்,(3)ஒழிபியல் ஆகும்.  (konguthendral.blogspot.com)
(20)மு.வரதராசன் அவர்கள் பொருட்பாலில் ஏழு இயல்கள் வைத்து எழுதியுள்ளார். அவை முறையே (1)அரசியல்,(2)அமைச்சியல்,(3)அரணியல்,(4)கூழியல்,(5)படையியல்,(6)நட்பியல்,(7)குடியியல் ஆகும்.
ஆதாரமாக இதோ.....
பரிமேலழகர் முறைவைப்பு இது...

மு.வரதராசனார் முறைவைப்பு இது....
                                                      இன்னும் தொடரும்.....


 என அன்புடன்,
செ.பரமேஸ்வரன்,
இலக்கியக் கூடல்,
விதைகள் வாசகர் வட்டம்,
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம்.
 தொடர்பு எண் 9585600733.
  (konguthendral.blogspot.com)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...