15 ஏப்ரல் 2020

நீங்களும் சமைக்கலாம் - பகுதி 16

                                                  தொக்கு வகைகள்
                                                     ------------------------
                              
மரியாதைக்குரியவர்களே,
       வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.  (c.parameswaran Driver)



           தொக்கு வகைகள்  எளிதான சமையல் வகையாகும். தொக்கு வகைகளை பக்குவமாக செய்தால் ஒருவாரம் முதல் ஒரு வருடம் வரை  பத்திரப்படுத்தி பயன்படுத்தலாம்.
(https://konguthendral.blogspot.com)
தொக்கு வகைகளை ...
                     (1) தக்காளித் தொக்கு, (2)பிரண்டைத் தொக்கு, (3)புதினாத் தொக்கு, (4)வெங்காயத் தொக்கு, (5)மிளகு கறிவேப்பிலைத் தொக்கு, (6)சுண்டைக்காய்த் தொக்கு, (7)பாகற்காய்த் தொக்கு, (8)கத்தரிக்காய்த் தொக்கு, (9)வாழைப்பூதொக்கு, (10)நெல்லிக்காய்த் தொக்கு, (11)அருநெல்லிக்காய்த் தொக்கு, (12)பச்சை சுண்டைக்காய்த் தொக்கு, (13)இஞ்சித் தொக்கு, (14)சேப்பங்கிழங்குத் தொக்கு, (15)கீரைத் தொக்கு, (16)பச்சைமிளகாய்த் தொக்கு, (17)கருணைக்கிழங்கு தொக்கு, (18)புளிப்பு மாங்காய்த் தொக்கு, (19)வெந்தயத் தொக்கு, (20)நீர்ச்சத்து இல்லாத காய்கறிகள் தொக்கு, (21)கொத்துமல்லித்த்தழை தொக்கு, (22)வத்தக்குழம்புத் தொக்கு, (23)பேரீச்சம்பழத்தொக்கு என பலவகைகளாக செய்து பயன்படுத்துங்க...
  (https://konguthendral.blogspot.com)
உதாரணமாக...

(1)தக்காளி தொக்கு
 தேவையானவை: 
  தக்காளி – ஒரு கிலோ,
வற மிளகாய் – 15,
பூண்டு – 4கட்டை,
எலுமிச்சம்பழம் – 3 ,
மஞ்சள் தூள் – சிறிதளவு, 
பெருங்காயத்தூள் -சிறிதளவு,
 நல்லெண்ணெய் –தேவைக்கேற்ப,
கடுகு
சீரகப்பொடி – ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
(https://konguthendral.blogspot.com)
செய்முறை: 
தக்காளியை ஒரு பாத்திரத்தில் போட்டு, மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, மூடி போட்டு வேக வையுங்க. வெந்ததும், மேல் தோலை எடுத்துவிட்டு, ஆற வைத்து மசித்துக் கொள்ளுங்க.
பூண்டு உரித்து வையுங்க. 
எலுமிச்சம்பழத்தைப் பிழிந்துகொள்ளுங்க.
 மிளகாயில் சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளுங்க.
இந்த விழுதுடன், சீரகப்பொடி, மஞ்சள்தூள், மசித்த தக்காளி சேர்த்துக் கலந்துகொள்ளுங்க.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, பூண்டு சேர்த்து வதக்குங்க.
 பூண்டு சிறிது வதங்கியதும் தக்காளி கலவையை ஊற்றி, கெட்டியாகும் வரை கொதிக்க வையுங்க.
 எலுமிச்சைச் சாறு ஊற்றி, உப்பு சேர்த்துக் கிளறி இறக்கி ஆறவைத்து பயன்படுத்துங்க.
ஒரு மாதம் வரை  கெடாது..

(2)காய்கறித் தொக்கு
தேவையானவை:
 நீர் இல்லாத காய்கறிகள் (உ-ம்: முருங்கை, அவரை, உருளைக்கிழங்கு, கேரட்) – அரை கிலோ,
வற மிளகாய் – 15,
புளி – எலுமிச்சை அளவு,
 நல்லெண்ணெய்-30மில்லி,
கடுகு - 1ஸ்பூன்,
மஞ்சள்தூள் கால் ஸ்பூன்,
 வெந்தயப்பொடி கால் ஸ்பூன்,
பெருங்காயத்தூள் சிறிதளவு ,
உப்பு – தேவையான அளவு.
(https://konguthendral.blogspot.com)
செய்முறை:
காய்கறிகளை அளவான தண்ணீர் சேர்த்து  வேக வைத்து  தண்ணீரை வடித்துக்கொள்ளுங்க.
 வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, வற மிளகாயை லேசாக வறுத்து எடுங்க,
வறுத்த வறமிளகாயுடன்   வேக வைத்த காய்கறிகள், புளி, உப்பு சேர்த்து  விழுதாக அரைத்து எடுங்க.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தபிறகு கடுகு,   வெந்தயப் பொடி,மஞ்சள் தூள்,பெருங்காயப் பொடி போட்டு தாளியுங்க.
 இதனுடன்  அரைத்து வைத்து உள்ள காய்கறி விழுதைச் சேர்த்து சுருள வதக்குங்க. அதாவது எண்ணெய் பிரிந்து மிதங்கும் வரை வதக்குங்க.
சாதம் மற்றும் சிற்றுண்டி வகைகளுக்கு ஏற்றது.
ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

(3)பிரண்டைத் தொக்கு
தேவையானவை:
பிரண்டை - 100 கிராம்
காய்ந்த மிளகாய் - 4
கடுகு - கால் டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 30 மில்லி
சீரகம் - ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை - 1இணுக்கு
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கடலைப்பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
பூண்டு - 6 பல்
புளி -கொட்டைப் பாக்கு அளவு
உப்பு - தேவையான அளவு
  (https://konguthendral.blogspot.com)
செய்முறை:
பிரண்டையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளுங்க.
வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து சூடானவுடன்  சீரகம், வறமிளகாய் -3, பூண்டு,  கறிவேப்பிலை பாதியளவு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், உப்பு, புளி, நறுக்கிய பிரண்டை ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ளுங்க.
 இனி  மிக்சியில் போட்டு  விழுதாக அரைத்து எடுங்க.
பிறகு வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு  போட்டு பொரிந்தவுடன் மீதமுள்ள வறமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு நன்றாக வதக்குங்க.
இதில் அரைத்த பிரண்டை விழுதினைச் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி இறக்குங்க.
 சாதம்,இட்லி,தோசை போன்ற சிற்றுண்டிகளுக்கும் பயன்படுத்தலாம்.

(4)சேனைக்கிழங்கு தொக்கு
தேவையானவை:
  சேனைக்கிழங்கு –கால் கிலோ,
 புளி -எலுமிச்சை அளவு,
மிளகாய்த்தூள் – 2 டேபிள் ஸ்பூன்,
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்,
நல்லெண்ணெய் - 3டேபிள் ஸ்பூன்,
கடுகு -சிறிதளவு,
உளுந்து - 2 ஸ்பூன்
பெருங்காயத்தூள் – சிறிதளவு,
 உப்பு – தேவையான அளவு.
  (https://konguthendral.blogspot.com)
செய்முறை:
    (சேனைக்கிழங்கு நறுக்குவதற்கு முன்னதாக கைகளில் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் தடவிக்கொள்ளுங்க.அரிப்பு எடுக்காது)
      சேனைக்கிழங்கை தோல் சீவி, பொடியாக நறுக்கி எடுங்க.
அடுப்பில் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய சேனைக்கிழங்கைப் போட்டு நன்றாக வதக்கி எடுத்துக்கொள்ளுங்க.
 வாணலியில்  எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்த பிறகு, வதக்கிய சேனைக்கிழங்கை போட்டு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பெருங்காயத் தூள், உப்பு, புளி எல்லாவற்றையும் போட்டு வதக்குங்க.
 ஆற வைத்து மிக்சியில் விழுதாக அரைத்து எடுங்க.
சிறிது எண்ணெயை லேசாகக் காய்ச்சி, அரைத்து வைத்திருக்கும் சேனைக்கிழங்கு விழுதின் மீது பரவலாக ஊற்றி பக்குவப்படுத்துங்க..
சாதம்,இட்லி,தோசை வகைகளுக்கு சுவையாக இருக்கும்.
 ஒரு வாரம் வரை கெடாமல் பயன்படுத்தலாம்.
(https://konguthendral.blogspot.com)
                 நீங்களும் சமைக்கலாம், இன்னும் தொடரும்........

என அன்புடன்,
செ.பரமேஸ்வரன்,
தொடர்பு எண் ; 9585600733
 சத்தியமங்கலம்.
ஈரோடு மாவட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...