11 ஏப்ரல் 2020

Neengalum Samaikkalam -02

                                 நீங்களும் சமைக்கலாம் பகுதி -02
                                   சமைத்துப் பழகலாம் வாங்க!
                                                     ----------------------

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.

 சமையல் கலையில்  தொடக்கமாக அளவுகளை அறிந்துகொள்வோம்..
 டீ ஸ்பூன் என்பது தேக்கரண்டி என்றும்,டேபிள் ஸ்பூன் என்பது மேஜைக் கரண்டி என்றும்,பின்ச் என்பது சிட்டிகை என்றும் பொருள் அறிந்துகொள்ளுங்க..  (c.parameswaran Driver - 9585600733)
(1) ஒரு பின்ச் என்பது கட்டைவிரலையும்,ஆட்காட்டி விரலையும் குவித்து எடுக்கப்படும் அளவாகும்.(பெரும்பாலும் பொடிவகைகளுக்கு சிட்டிகை அளவு பயன்படுத்துகிறோம்).
(2)ஒரு டீஸ்பூன் என்பது 5 MLஅளவாகும்.
(3)ஒரு டேபிள் ஸ்பூன் என்பது 15 ML அளவாகும். (3டீ ஸ்பூன் )
(4).ஒரு கப் என்பது 16 டேபிள் ஸ்பூன் அளவாகும்.(200கிராம்)
இந்த அளவுகள் திரவ,திட பொருட்களுக்கு ஏற்ப எடை விகிதம் மாறுபடும்.
ஒரு கப் அளவு என்பது உதாரணமாக...
ரவை - 185கிராம், சர்க்கரை - 245கிராம், மைதா - 140கிராம்,  எண்ணெய் வகைகள் - 200கிராம், வெண்ணெய் - 226கிராம்   (c.parameswaran Driver - 9585600733)
எனவே  துல்லியமாக கணக்கிட்டு குழப்பிக் கொள்ளவேண்டாம்.
திடப் பொருட்கள் என்றால் 200கிராம் என்றும்,திரவப் பொருட்கள் என்றால் 210மில்லிகிராம் என்றும் அறிந்துகொள்ளுங்க.
                 கிராமங்களில் அளவு கருவிகளை பயன்படுத்தியா  சமைக்கிறார்கள்! அவரவர் மனதில தோன்றியவாறு குத்துமதிப்பாக ஒவ்வொரு பொருட்களையும் எடுத்துப் போட்டுத்தாங்க சமைக்கிறார்கள்!...
 மணமாக இருப்பதில்லையா? ருசியாக இருப்பதில்லையா?
      
                           அடுத்த பதிவில்    இன்னும் தொடரும்....
  
என அன்புடன்,
செ.பரமேஸ்வரன்,
தொடர்பு எண் ; 9585600733
 சத்தியமங்கலம்.
ஈரோடு மாவட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...