10 ஏப்ரல் 2020

Neengalum Samaikkalam - 01

                                  நீங்களும் சமைக்கலாம் பகுதி -01
                                   சமைத்துப் பழகலாம் வாங்க!
                                          ------------------------------------
மரியாதைக்குரியவர்களே,
                          வணக்கம்.
கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.
உணவே மருந்து என்பதை உணருங்க!..
மருந்தே உணவு என்பதை தவிருங்க!!
                                (c.parameswaran Driver - 9585600733)
பொழுதுபோக்க எதையெதையோ கற்றுக் கொள்கிறோம்!...
சமையலை கற்றுக்கொள்வதில் ஏன் தயக்கம்?
                       
                       இன்றைய அவசர உலகத்தில் பல்வேறு பணிகளில் உள்ள இளைய சமுதாயம் உட்பட  ஆண்,பெண் இருவருமே சமைக்கத் தெரிந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.     (c.parameswaran Driver - 9585600733)     
                       உணவகங்களில் பெரும்பாலானவை ...
                    ருசிக்காவும்,மணத்திற்காகவும்,பார்வை ஈர்ப்புக்காகவும்,மட்டுமின்றி  மீதமான உணவுகளை கெட்டுப்போகாமல் நீண்டநாட்கள் இருப்பில் வைத்து மீண்டும் விற்று காசாக்க வேண்டும் என்ற வியாபார நோக்கத்தில் ,ரசாயனப்பொடிகளையும்,சுவையூட்டிகளையும்,மணமூட்டிகளையும்,நிறமூட்டிகளையும்,பயன்படுத்தி செய்யப்படும் உணவுகளால் நமது உடலுக்கு பெரும்தீங்கினை இழைக்கின்றன. (c.parameswaran Driver - 9585600733)
      ஆரோக்கியமான முறையில்வீட்டுமுறை சமையல் செய்பவர்களும் மிகச் சிலரே உள்ளனர்.அவர்கள் நமக்கு தெரிவதும் இல்லை,தெரிந்தாலும் வெகுதொலைவில் இருக்குமாதலால் நம்மால் சென்று வருவதும் இயலாத காரியமாக இருக்கின்றது.
                  ஆதலால் நமது உடல் நலம் பேண நாமே சமைத்துக்கொள்ளவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறோம்.
         மற்ற பணிகளைப் போன்றே சமையலும் ஓரிருநாட்கள் மட்டுமே தடுமாற்றமாக இருக்கும்.நமது தயக்கத்தினால் சமையல் செய்யவும் தடுமாறுகிறோம். இனி கவலையை விடுங்க!....
       விரைவாக எளிதில்,சுவையாக ஆரோக்கிய உணவுகளை நாமே சமைத்துக் கொள்ளலாம்.
    இங்கு கொங்குநாட்டின் முன்னோர்களின் சமையல் அனுபவத்தை  கேட்டு பதிவிடுகிறேன்.
                       சமைத்துப் பழகலாம் வாங்க!
.                       சமையல் கலையில் திட்டமிடுதலும்,நேரமேலாண்மையும்தாங்க அவசியம்....
முதலில் திட்டமிடுங்க....
அடுத்து தேவையான பொருட்களை எடுத்து வையுங்க....
முன் தயாரிப்பு வேலைகளை செய்யுங்க....
செய்முறை பட்டியல்படி வரிசையாக செயல்படுத்துங்க...
முன்தயாரிப்புவேலைகளுக்கு ஆகும் நேரத்தைக் கணக்கிடுங்க..
சமைக்கும் நேரம் எவ்வளவு என தெரிந்துகொள்ளுங்க...
பிறகென்ன ஜாலிதாங்க!... (c.parameswaran Driver - 9585600733)
                    அதேபோல அடுப்பில் தீ  அதிகமாகவோ அல்லது மிக குறைவாகவோ இல்லாமல்  தயாரிக்கும் உணவுகளுக்கேற்ப தீ அளவாக எரியவிடுதல் அவசியம்....,
                                                
                தாளிப்பவைகளையும்,வறுப்பவைகளையும்,வதக்குபவைகளையும்,
கருகிவிடாமலும்,அதேநேரத்தில் சரியான பதமில்லாமல் பச்சையாகவும் எடுத்தல்கூடாது.
     
              சாத வகைகள்,சிற்றுண்டி வகைகள்,சூப் வகைகள்,சாம்பார்,குழம்பு,ரசம்,குருமா,சிறுதானிய உணவுகள்,பழங்கள்,பயறுவகைகள்,கீரை வகைகள்,காய்கறிகள்,சுடுதல்,வேகவைத்தல், என பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். (c.parameswaran Driver - 9585600733)
                 இவைகளுக்கு பக்க உணவாக,துணை உணவாக,வடக வகைகள்,வற்றல் வகைகள்,துவையல்,சட்னி,பொரியல்,வறுவல்,அவியல்,கூட்டு,பச்சடி,தொக்கு,
இவைகளுடன் தாளித்தல்,வதக்குதல், அரைத்தல்,மசித்தல்  என பல வகைகள் இருந்தாலும்
                     எளிதாக ஒவ்வொரு உணவாக சமைத்து பழகினால் எளிதானதாக இருக்கும்.



                               இன்னும் தொடரும்  அடுத்த பதிவில்.....

என அன்புடன்,
செ.பரமேஸ்வரன்,
தொடர்பு எண் ; 9585600733
 சத்தியமங்கலம்.
ஈரோடு மாவட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...