அனைவருக்கும் வணக்கம்.
நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டேன்...
இடம்பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்:
- உதகை
- குன்னூர்
- கூடலூர்(தனி)
- மேட்டுப்பாளையம்
- அவினாசி
- பவானிசாகர் (தனி)
நீலகிரி தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 14,18,915
ஆண் வாக்காளர்கள்: 6,83,021
பெண் வாக்காளர்கள்: 7,35,797
மூன்றாம் பாலின வாக்காளர்கள்:97
மலைகளின் அரசி’ என்று அழைக்கப்படும் உதகமண்டலத்தைக் கொண்டது நீலகிரி மக்களவைத் தொகுதி. இதில் உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகள் மட்டுமே நீலகிரி மாவட்டத்துக்கு உட்பட்டவை. மேட்டுப்பாளையம் தொகுதி கோவை மாவட்டத்திலும், அவினாசி திருப்பூர் மாவட்டத்திலும், பவானிசாகர் ஈரோடு மாவட்டத்திலும் உள்ளன. நீலகிரி மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரை, மலைப் பகுதியைச் சேர்ந்த தொகுதிகளும் சமவெளிப் பகுதிகளைச் சேர்ந்த தொகுதிகளும் வெவ்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன.
இரண்டு தனித்தனி ரக கொய்யா ...
கறிவேப்பிலை நாற்று...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக