சிறுநீரகக் கல் மற்றும் பித்தப்பை கல்
Kidney Stone And Gallbladder Stone
-----------------------------
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
இந்தப் பதிவில் நமக்கு அதிக தொந்தரவை தருகின்ற... சிறுநீரகத்திலும்,பித்தப் பையிலும் கல் உருவாவதற்கு காரணங்களும்,தீர்வுகளும் பார்ப்போம்.
நமது உடலில் ஆறு இடங்களில் கல் உருவாக வாய்ப்புள்ளது. சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப் பாதை, பித்தப்பை, உமிழ்நீர்ச் சுரப்பிகள், மூக்கு, குடல், டான்சில் ஆகியவையே அந்த ஆறு இடங்கள். இவற்றில் சிறுநீரகக் கற்களைப் பற்றி தெரிந்த அளவுக்குப் பித்தப்பை, உமிழ்நீர் சுரப்பி உள்ளிட்ட மற்ற இடங்களில் உண்டாகும் கற்களைப் பற்றிநாம் அறியவில்லை என்பதே உண்மை..இவற்றில் சிறுநீரகக்கல் அதிகமாக நம்மை பாதிக்கிறது.அடுத்ததாக பித்தப் பையில் தோன்றும் கல் நம்மை பாதிக்கிறது.
கல்லடைப்பை நீக்க நம்பிக்கை,பொறுமை,கடைப்பிடிக்கும் தன்மை மனதில் உறுதியாக இருத்தல் அவசியம்....
(1)சிறுநீரகக் கல் உருவாக காரணங்களும்,தீர்வுகளும்....
சிறுநீரகங்கள் (kidneys)
நமது உடலின் இடப்பக்கத்திலும் வலப்பக்கத்திலும் அவரை விதை வடிவில் அமைந்த உறுப்புகளாகும். தன்னுள் பாய்ந்த ரத்தத்திலிருந்து சத்துப்பொருட்களையும்,கழிவுகளையும் வடித்தல், மீண்டும் உறிஞ்சுதல், சுரத்தல், கழிவகற்றல்ஆகிய நான்கு பணிகளைச் செய்தாலும் இதன் முக்கிய பணி யூரியா போன்ற கழிவுப் பொருட்களைக் குருதியில் இருந்து பிரித்து, நீருடன் சேர்த்துச் சிறுநீராக வெளியேற்றுவது ஆகும்.
மேலும் அமில-காரங்களை சமன் செய்வதோடு ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.
கிட்னி ஸ்டோன் எனப்படும்
சிறுநீரகக்கல் உருவாகுவதற்கான காரணங்கள்...
தண்ணீர் சரிவர குடிக்காதது,ஊறுகாய்,அப்பளம்,மற்றும் எண்ணெயில் வறுத்த உணவுகள்,நொறுக்குத்தீனிகள்,அதிக காரமுள்ள உணவுகள்,அசைவ உணவுகளை காரமாக சாப்பிடுவது,ஒரே நேரத்தில் அதிகமான காரத்தை சேர்ப்பது போன்றவைகளும் சிறுநீரகத்தில் கல் உருவாக காரணங்களாகின்றன.(konguthendral.blogspot.com)
தீர்வு......
ரணகள்ளி இலை துளிர் இலையில் ஆரம்பித்து தினமும் ஒரு இலை வீதம் பறித்து நான்குமிளகு,இந்துப்பு சேர்த்து ஏழுநாட்களுக்கு அடுத்தடுத்து கீழே உள்ள இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வாங்க.எப்பேர்பட்ட கல்லும் கரைந்துவிடும்.
வாழைத்தண்டு,பெருநெருஞ்சில்,சுரைக்காய்,வெண்பூசணி,கேரட்சாறு,பீட்ரூட்சாறு,எலுமிச்சைச் சாறு,நெல்லிச்சாறு,இவைகளை ஒருமணி நேரத்திற்கு ஒருமுறையாவது அதிகமாக குடித்துவாங்க.துளசிச்சாறு 100மில்லி காலையிலும்,மாலையிலும் குடித்து வாங்க.சப்போட்டா விதை 10 எடுத்து அரைத்து தண்ணீரில் கரைத்து அருந்திவாங்க.ஆனால் சப்போட்டா பழம் சாப்பிடக்கூடாது..
(konguthendral.blogspot.com)
.கவனியுங்க.உப்பு,சர்க்கரை,ஐஸ் சேர்க்கக்கூடாது.
(2)பித்தப் பை கல் உருவாக காரணங்களும் தீர்வும்...
பித்தப்பை என்பது கல்லீரலின் கீழே அமைந்துள்ள ஒரு சிறிய பை போன்ற அமைப்பாகும். கரும்பச்சை நிறத்தில் காணப்படும் இது கல்லீரலில் உற்பத்தியாகும் பித்தநீரை எடுத்துச் செல்லும் பித்த நாளத்துடன் இணைந்துள்ளது. கொழுப்பு வகை உணவை ஜீரணிப்பதற்குத் தேவையான பித்தநீரைச் சேமித்து வைத்திருந்து தேவைப்பட்டபோது குடலுக்குள் செலுத்துகிறது(konguthendral.blogspot.com).அதாவது...
தினமும் ஒரு லிட்டரிலிருந்து ஒன்றரை லிட்டர் வரை பித்தநீர் சுரக்கும் கல்லீரலானது நமது உடலில் உள்ள பல்வேறு சுரப்பிகளில் மிகவும் பெரியது ஆகும்.கல்லீரலில் சுரக்கும் பித்தநீரானது முன்சிறுகுடலுக்கு பித்தநீர்க்குழாய்கள் வழியாக வருகிறது.கூடுதலாக பித்தப்பையிலும் சென்று தேங்குகிறது.
பித்தப்பையானது பித்தநீரைப் பெற்றுக்கொண்டு, அதன் அடர்த்தியை அதிகரித்து, உணவு செரிமானத்துக்குத் தயாராக வைத்திருக்கும்.
அதிகப்படியான கொழுப்புச்சத்துக்களை செரிப்பதற்கு தன்னை சுருக்கி பித்தநீரை முன்சிறுகுடலுக்கு அனுப்பி உணவுக் கூழில் உள்ள கொழுப்பைச் சரியாகச் செரிக்க வைக்கும்.
படத்தின் பாகங்கள் (1) கல்லீரல், (2) பித்தநீர் குழாய், (3)பித்தப் பை
பித்தப்பை கல்...
ஆண்களை விட பெண்களுக்கே அதிகமாக ஏற்படுகிறது..
பித்தப் பையில் தோன்றும் கற்கள் மூன்று வகைப்படும்.அவை (1)பித்தநீரில் கொலஸ்ட்ரால் அளவு மிகுவதால் உண்டாகும் கற்களுக்குக் 'கொழுப்புக் கற்கள்' அல்லது 'கொலஸ்ட்ரால் கற்கள்' என்று பெயர். இது பெரும்பாலும் ஒரே ஒரு கல்லாகவே இருக்கும். வெண்மை கலந்த மஞ்சள் நிறம் கொண்டதாக இது காணப்படும்.(konguthendral.blogspot.com)
(2) கறுத்த நிறமிக் கற்கள். இவ்வகை கற்கள் கறுத்த நிறமுடையவை. கால்சியம் கார்பைடால் இவை உருவாகின்றன.
(3) கலப்படக் கற்கள் என்று பெயர். பெரும்பாலான பித்தப்பைக் கற்கள் கலவைக் கற்களால் ஆனவையே.
கொலஸ்ட்ரால், கால்சியம் கார்பனேட், கால்சியம் பிலிருபினேட் போன்றவற்றால் உருவானவை. இவை எண்ணிக்கையிலும் அதிகமாக இருக்கும், பித்தக் குழாயை விரைவில் அடைத்துப் பிரச்சினைகளை உருவாக்கும். சுமார் 80 சதவீதம் பேருக்கு இவ்வகை கற்களே காணப்படுகின்றன.
பித்தப்பை கல் கரைப்பதற்கு அதிக காலம் தேவைப்படும் ஆதலால் பொறுமை வேண்டும்.
கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்த்திடுங்க.இனிப்பு,காரம்,அசைவம் சாப்பிடவேண்டாம்.சீரகம் போட்டு கொதித்த தண்ணீரை அருந்திவாங்க.கேரட் மற்றும் பீட்ரூட் மற்றும் வெள்ளரிக்காய் இவைகளை சம அளவு எடுத்து மைய அரைத்த விழுதினை காலையிலும்,மாலையிலும் சாப்பிட்டு வாங்க.
தினமும் உணவுக்கு முன் காலையில் நல்லெண்ணெய் ஒரு ஸ்பூன் மாலையில் ஆலிவ் எண்ணெய் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வாங்க..சாப்பிடுங்க.
(konguthendral.blogspot.com)
வாசகர்களின் கனிவான கவனத்திற்கு...
கூடுதலாக விபரங்களை சேர்க்கும்வரை பொறுமை காக்க வேண்டுகிறேன்.
தாங்கள் அறிந்த தகவல்களையும் கருத்துப்பெட்டியில் பதிவிட்டு உதவுங்க.
பொறுப்பாகாமை அறிவிப்பு...
அனுபவப்பட்டவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து தகவல் நோக்கத்துடன் வாசகர்களுக்கு பயன்படும்வகையில் இங்கு பதிவிடப்படுகிறது.இந்த பதிவுக்கு துல்லியம்,மற்றும் நம்பகத்தன்மை மற்றும் காலவரையறை உத்தரவாதம் தர இயலாதுங்க.ஆதலால் நம்பிக்கை இல்லாதபோது அருகிலுள்ள சித்த,ஆயுர்வேதம் அல்லது அல்லோபதி மருத்துவர்களை அணுகி சிகிச்சை எடுங்க.
அன்புடன்
செ.பரமேஸ்வரன்,