06 மார்ச் 2014

இரத்த ஓட்ட மண்டலம்-II.மனித உடல் அதிசயங்கள்.

மரியாதைக்குரியவர்களே,
                                         வணக்கம்.
                கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
                      இந்த பதிவில் இரத்த ஓட்ட மண்டலம் -II பற்றி காண்போம்.
   நமது உடலிலுள்ள இரத்தக்குழாய்களை மூன்று வகைகளாக பிரித்துக் கூறுகின்றனர்.அவை (1)தமனிகள், (2)தந்துகிகள், (3)சிரைகள் ஆகியன ஆகும்.

   தமனிகள்;- 
                இருதயத்தில் இருந்து உடலின் அனைத்து உறுப்புகளுக்கு உயிர்க்காற்றையும்,உணவுப்பொருட்களையும் கொண்ட இரத்தத்தை எடுத்துச்செல்லும் குழாய்களாகும். தமனிகள் மேலும் விரிவடைந்து நுண்ணிய குழாய்களாக மாறி நுண்தமனிகளாகின்றன.

  தந்துகிகள்;-
            நுண் தமனிகளிடமிருந்து மேலும் கண்ணுக்கு புலப்படாத குழாய்களாக மாற்றம் பெற்றுள்ள குழாய்களே தந்துகிகள் எனப்படுகின்றன.இவைகள்தாம் ஆக்சிஜன் மற்றும் உணவுச்சத்துக்களை திசுக்களுக்கு கொடுத்துவிட்டு அசுத்த இரத்தத்தையும்,கார்பன் டை ஆக்சைடு மற்றும் கழிவுப்பொருட்களையும் எடுத்த வருகிறது.

  சிரைகள்;-
                திசுக்களிடமிருந்து எரிக்கப்பட்ட கழிவுப்பொருட்களையும்,  கார்பன் டை  ஆக்சைடு காற்றையும் எடுத்து வரும் தந்துகிகள்,நுண் சிரைகள் மூலமாக அனுப்பி இருதயத்திற்கு அனுப்பும் இரத்தகுழாய்களே சிரைகள் எனப்படுகின்றன.அதாவது உடல் உறுப்புகளிலிருந்து இருதயத்தை நோக்கி இரத்தத்தை எடுத்து செல்லும் குழாய்கள் சிரைகள் எனப்படுகின்றன.


இரத்தத்தின் வகைகள் நான்கு.அவை;-O , A , B , AB .இவற்றிலும் பாசிட்டிவ் என்றும் நெகட்டிவ் என்றும் உட் பிரிவுகள் உள்ளன.
 உடலின் அதியங்கள் இரத்த ஓட்ட மண்டலம் பகுதி மூன்று.அடுத்த பதிவில்.
இன்னும் தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக