06 மார்ச் 2014

கழிவு மண்டலம்-மனித உடலின் அதிசயங்கள்.

 மரியாதைக்குரியவர்களே,
                           வணக்கம். 
                                    ''கொங்குத்தென்றல்'' வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.இந்த பதிவில் கழிவு மண்டலத்தை பற்றி காண்போம்.
  நாம் எத்தனை உணவுகளை உட்கொண்டாலும் தேவையான சத்துக்களை மட்டும் நமது உடலானது எடுத்துக்கொண்டு மீதியுள்ளவற்றை சக்கையாக வெளியேற்றி விடும்.அதாவது கழிவுகளாக வெளியேற்றிவிடும்.இவ்வாறு தேவைக்கு அதிகமானவற்றை கழிவுகளாக வெளியேற்றும் பணியை செய்யும் உறுப்புகள் கழிவு மண்டலம் எனப்படுகின்றன.

      கழிவு மண்டலத்தில் நான்கு முக்கிய உறுப்புகள் உள்ளன.அவை
(1)சிறுநீரகங்கள், (2)தோல்,  (3)நுரையீரல்,  (4)பெருங்குடல் ஆகியன ஆகும்.
                   சிறுநீரகங்கள் மூத்திரத்தையும் அதாவது சிறுநீரையும்,     நுரையீரல்கள் கரியமில வாயுவையும்,         தோல் வியர்வையையும்,  பெருங்குடல் மலத்தையும் வெளியேற்றுகின்றன.

              இவற்றுடன் கண் மற்றும் காது பற்றியும் தெரிந்து கொள்வோம்.
 கண்;-
      கண்கள் பார்க்க மட்டுமின்றி வெளியுலக செய்திகளை மூளைக்கு அனுப்பும் உறுப்பாகவும் செயல்படுகிறது.
காது;-
 காது கேட்க மட்டுமின்றி வெளியுலகில் மற்றும் உடலின் நிலையில் ஏற்படுகின்ற தூண்டல்களையும்,மாற்றங்களையும் காது உணர்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சதுரங்கம் வாழ்க்கைக்கு தரும் பாடம்.

  ஒவ்வொரு அசைவும் முக்கியமானது. ஆட்டத்தில் மட்டுமல்ல வாழ்க்கையிலும். வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொரு நிகழ்வையும் மிகவும் கவனமாக செயல்படுத்த வ...