05 மார்ச் 2014

எலும்பு மண்டலம்.மனித உடல் அதிசயங்கள்.

மரியாதைக்குரியவர்களே,
                                வணக்கம்.
                 கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
 இந்த பதிவில் எலும்பு மண்டலம் பற்றி காண்போம்.
                       எலும்புகளால்தான் நாம் நேராக நிற்கவும்,உருவத்தை பெறவும்,வலிமையை பெறவும் ,இயக்கம் பெறவும் முடிகிறது.
                 நமது எலும்புக்கூடு பல்வேறுபட்ட எலும்புகளாலும்,எலும்புகளின் இணைப்புகளாலும் உருவானதாகும்.இணைக்கும் திசுக்களிலேயே கடினமாக அமைந்து இருப்பது எலும்பு ஆகும்.எலும்புகளானது  50சதவீதம் தண்ணீரும்,25சதவீதம் கால்சியம் எனப்படும் சுண்ணாம்பும்,25சதவீதம் செல்களாலும் ஆனவை.
               நமது எலும்புகள் அவற்றின் வடிவத்தை பொறுத்து நான்கு வகையாக உள்ளன.அவை
          (1)நீண்ட எலும்புகள் உதாரணம்;-கை எலும்புகள்,முன்கை எலும்புகள்,தொடை எலும்புகள்,கால் எலும்புகள் ஆகியன.
          (2)கட்டையான எலும்புகள்,உதாரணம்;-உள்ளங்கை எலும்புகள்,பாத எலும்புகள்,விரல் எலும்புகள்,முள்ளெலும்பு,கணுக்கால்,மணிக்கட்டு ஆகியன.
             (3)தட்டையான எலும்புகள் உதாரணம்;-மண்டை ஓடு,மார்பு எலும்பு,விலா எலும்பு ஆகியன.
         (4)வடிவமற்ற எலும்புகள் உதாரணம்;-முதுகெலும்பு,தண்டுவடம் எலும்புகள் ஆகியன.

          மூட்டுகள்.......
                       நமது உடலின் எல்லா எலும்புகளும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டவையாக உள்ளன.இரண்டு அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட எலும்புகள் ஒன்றாக சேர்கின்ற இடத்தினை மூட்டு என்கிறோம்.
எலும்புகளின் ஒன்று சேர்கின்ற இடத்தையும்,அந்த எலும்புகளின் அசைவுகளையும் பொறுத்து மூன்று வகையாக பிரிக்கலாம்.அவை,
(1)அசையாத மூட்டு (மண்டை ஓடு).(2)சிறிது அசையும் மூட்டு -(முதுகெலும்பு),(3)அசையும் மூட்டு - 
         இவை நான்கு வகைகளாகும் அவை;- பந்து கிண்ண மூட்டு(தொடை மூட்டு,தோள் மூட்டு),
கீல் மூட்டு(முழங்கை மூட்டு,முழங்கால் மூட்டு),
வழுக்கு மூட்டு(மணிக்கட்டு மூட்டு,முதுகெலும்பு மூட்டு),
முளை மூட்டு(முதுகெலும்புத்தொடரின் மேற் பகுதியிலுள்ள முதலெலும்பு ஆகும்.அதனை பிடரி எலும்பு என்றும் கூறுகிறோம்.
          மனித உடல் அதிசயங்கள்,
 இன்னும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக