21 மார்ச் 2014

சிட்டுக்குருவி....

மரியாதைக்குரியவர்களே,
             வணக்கம்
         கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன். நன்றி, திருமிகு. கவிஞர் மகுடேசுவரன் அவர்களுக்கு.....
 
வாசலில் தளத்தில்
தானியத்தைப் பரத்தி  
உலர வைத்திருந்தால் 
முற்றாக வழித்தள்ளாதீர். 
மணிகள் இறைந்திருக்கட்டும் 
குருவிகளின் பங்குக்கு.

சீனிப்புளிபோல்
கனிமரம் உண்டெனில்
உச்சிப்பழுப்புகளைப்  
பறிக்கத் துணியாதீர்.
பழங்கள் குடைவுறட்டும்
கிளிகளின் மூக்குக்கு. 

வேப்பங் கனிகள்  
காகங்களுக்கு விருந்து. 
வேறிடம் சென்று 
கழிக்கட்டும்
விழுங்கிச் செரித்து.
அவற்றால் தழைக்கும் சோலைகள் 
மனிதருக்கு நிழலூற்று. 

முருங்கை தீதென 
வெட்டி முறிக்காதீர்.
முருங்கைப் பூவெனும் 
வற்றா மதுச்சுனையில்
உறிஞ்சிக் குடிக்க 
பட்டுகளும் சிட்டுகளும் 
பறந்து வரட்டும்.  
 
பப்பாளிக் குடைமரம்
தானாய் வளர்ந்து 
தேனாய்ப் பழுப்பது.
கோடைக்கும் மழைக்கும்
ஈடுகொடுத்திருப்பது. 
வௌவாலும் அணிலும் 
வாயொழுகத் தின்னட்டும். 
ஈக்குவியல் போன்ற விதை
ஈர நிலம் வீழட்டும். 

ஓரத்தில் நிலமிருந்தால்
தென்னை ஊன்றுங்கள்.
இளநீரை நேரடியாய் 
ரத்தத்தில் பாய்ச்சுவதால்    
எத்தீங்கும் நேராதாம். 
வேறெதுவும் ஆகாதாம். 

பசுமை தழைப்பதற்கும்    
பல்லுயிர்கள் பெருகுதற்கும் 
இயன்றதனைத்தும் செய்க !
உம்மை எஞ்ஞான்றும் 
உயிர்களெல்லாம் தொழும் !
வாசலில் தளத்தில்
தானியத்தைப் பரத்தி
உலர வைத்திருந்தால்
முற்றாக வழித்தள்ளாதீர்.
மணிகள் இறைந்திருக்கட்டும்
குருவிகளின் பங்குக்கு.

சீனிப்புளிபோல்
கனிமரம் உண்டெனில்
உச்சிப்பழுப்புகளைப்
பறிக்கத் துணியாதீர்.
பழங்கள் குடைவுறட்டும்
கிளிகளின் மூக்குக்கு.

வேப்பங் கனிகள்
காகங்களுக்கு விருந்து.
வேறிடம் சென்று
கழிக்கட்டும்
விழுங்கிச் செரித்து.
அவற்றால் தழைக்கும் சோலைகள்
மனிதருக்கு நிழலூற்று.

முருங்கை தீதென
வெட்டி முறிக்காதீர்.
முருங்கைப் பூவெனும்
வற்றா மதுச்சுனையில்
உறிஞ்சிக் குடிக்க
பட்டுகளும் சிட்டுகளும்
பறந்து வரட்டும்.

பப்பாளிக் குடைமரம்
தானாய் வளர்ந்து
தேனாய்ப் பழுப்பது.
கோடைக்கும் மழைக்கும்
ஈடுகொடுத்திருப்பது.
வௌவாலும் அணிலும்
வாயொழுகத் தின்னட்டும்.
ஈக்குவியல் போன்ற விதை
ஈர நிலம் வீழட்டும்.

ஓரத்தில் நிலமிருந்தால்
தென்னை ஊன்றுங்கள்.
இளநீரை நேரடியாய்
ரத்தத்தில் பாய்ச்சுவதால்
எத்தீங்கும் நேராதாம்.
வேறெதுவும் ஆகாதாம்.

பசுமை தழைப்பதற்கும்
பல்லுயிர்கள் பெருகுதற்கும்
இயன்றதனைத்தும் செய்க !
உம்மை எஞ்ஞான்றும்
உயிர்களெல்லாம் தொழும் !கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக