06 மார்ச் 2014

நரம்பு மண்டலம்-மனித உடலின் அதிசயங்கள்.

மரியாதைக்குரியவர்களே,
                                         வணக்கம்.
           ''கொங்குத்தென்றல்'' வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.இந்த பதிவில் நரம்பு மண்டலம் பற்றி காண்போம்.
             இரத்த ஓட்ட மண்டலமும்,சுவாச மண்டலமும்,ஜீரண மண்டலமும் நம்மை நன்றாக இயங்கி வாழ்விக்கின்றன . ஆனால் நமக்கு கட்டளைகள் கொடுத்து நம்மை கட்டுப்படுத்தி,வழிகாட்டியாக நன்றாக நடத்தி செல்வது நரம்பு மண்டலமே ஆகும்.
உயிருள்ள ஒவ்வொரு உயிரினத்திற்கும் உணர்ச்சி என்பது மிக முக்கிய குணம் ஆகும்.அந்த உணர்ச்சி என்பது உடலில் பட்டதும் ஏற்படுகிற உறுத்து உணர்ச்சி ஆகும்.உற்று அறியும் உணர்ச்சி என்றும் கூறலாம்.இந்த உணர்ச்சி வெளி உலகில் நடைபெறுகிற விளைவுகளுக்கேற்ப அல்லது தூண்டுதலுக்கேற்ப செயல்பட்டுக்கொள்ளும் சீர்முறைகளாகும்.உதாரணமாக ஒருவர் கண்ணுக்கு நேராக கையை நீட்டுகிறார்.அப்போது நம்முடைய கைகளால் நம் கண்ணை பாதுகாப்புக்காக மறைத்துக்கொள்கிறோம்.அல்லது கண்ணை வேகமாக மூடுகிறோம்.
   நமது உடம்பிலுள்ள கண்,காது,மூக்கு,வாய்,தோல் போன்ற  ஐம்பொறிகளும் வெளி உலகில் நிகழ்வனவற்றை நமக்கு காட்டுவதாகவும்,கூறுவதாகவும்,உணர்வதாகவும் செயல்படுகின்றன.இதற்கு ஆதாரம் நரம்பு மண்டலங்கள் தான். இந்த நரம்பு மண்டலங்கள் உடலின் ஐம்பொறிகளில் மட்டும் இல்லாமல் அனைத்து உறுப்புகளுடனும் இணைக்கப்பட்டு இருக்கின்றன.பின்னர் முக்கிய உறுப்பான மூளையிலும் இணைக்கப்பட்டு இருக்கின்றன.
நரம்பு மண்டலம் என்பது மூளை,தண்டுவடம்,நரம்புகள் கொண்டவையாகும்.
               இவற்றில் நரம்பு மண்டலம் இரு பிரிவுகளாக பிரிந்து இருக்கிறது.
(1) மத்திய நரம்பு மண்டலம் இதில் மூளையும்,தண்டுவடமும் அடங்கும்.(2)வெளிப்புற நரம்பு மண்டலம் இதில்மூளையில் இருந்துவெளிவரும் கபால நரம்புகள் பன்னிரண்டு ஜோடி நரம்புகளும்,தண்டுவடத்தில் இருந்து வெளிவரும் தண்டுவட நரம்புகள் முப்பத்தியொன்று ஜோடி நரம்புகளும் இந்த நரம்புகளில் இருந்து பிரிந்து செல்லும் பல்வேறு உறுப்புகளும்,திசுக்களும்,கிளை நரம்புகளும்  அடங்கும்.

             நரம்புகள் அவற்றின் செயலுக்கேற்ப உட்செல்லும் நரம்புகள் அல்லது உணர்ச்சி நரம்புகள் என்றும்,வெளிச்செல்லும் நரம்புகள் அல்லது செய்கை நரம்புகள் என்றும்இரு வகை உள்ளன.அதாவது உடல் முழுவதில் இருந்தும் செய்திகளை மூளைக்கு எடுத்துச்செல்லும் நரம்புகள்  உட் செல்லும் நரம்புகள் அல்லது உணர்ச்சி நரம்புகள் என்கிறோம்.மூளை அனுப்பும் செய்திகளை எடுத்துக்கொண்டு அதற்கேற்ப பணிகளை மேற்கொள்ளும் நரம்புகளை செய்கை நரம்புகள் அல்லது வெளிச்செல்லும் நரம்புகள் என்கிறோம்.
மூளை;-
உடலின் முக்கிய உறுப்பாகவும்,நரம்பு மண்டலத்தின் மைய உறுப்பாகவும் மூளை திகழ்கிறது.இதுவே நமது சிந்தனைக்கும்,பேச்சுக்கும் அடிப்படையாக விளங்குகிறது.மூளையின் பணிகள் (1)செய்திகளை ஏற்றுக்கொள்கிறது.(2)கட்டளைகளை அனுப்புகிறது.(3)செய்திகளை சேகரித்து வைத்துக்கொண்டு அறிவுப்பணிகளை  செய்கிறது.
              மூளை மூன்று பாகங்களை கொண்டது.
                         அவை         பெருமூளை,சிறுமூளை,முகுளம் ஆகியன ஆகும்.
 நாம் நினைவோடு செய்யும் செயல்கள்,நாம் விருப்பத்தின் பேரில் செய்யும் செயல்கள் அனைத்தும் பெருமூளையின் கட்டளைப்படி நடக்கின்றன.
 நம்முடைய உடல் உறுப்புகளும்,தசைகளும் அசைந்து இயங்குகின்ற ஒருங்கிணைப்பு தன்மைகள் அவற்றின் தெளிவான தனிப்பண்பு,அவற்றின் எளிதான இலகுவான இயக்கம் ஆகியவற்றை கட்டுப்படுத்துவது சிறுமூளையாகும்.
சுவாச வேலைகள்,ஜீரணமாகுதல்,இதயத்துடிப்பு போன்ற தன்னிச்சையான செயல்களுக்கான அனைத்து தசைகளுக்கும் முகுளத்தின் கட்டளைகளே காரணமாக அமைகின்றன.
மனித உடலின் அதிசயங்கள் 
                இன்னும் தொடரும்.........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...