05 மார்ச் 2014

மனித உடல் அதிசயங்கள்.....

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
                 கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
            தாவரங்கள்,விலங்குகள் என அனைத்து உயிரினங்களுமே செல்களால் ஆனவை.
           மைக்ரோஸ்கோப் எனப்படும் நுண்ணோக்கியால்கூட பார்த்து அறியமுடியாத அளவு உருவாக்கப்பட்டுள்ள செல் ஆனது புரதங்கள்,கொழுப்புகள்,மாவுப்பொருட்கள்,தண்ணீர்,பலவகையான உப்புச்சத்துகள் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டிருக்கிறது.
             செல்லின் பாகங்கள் (1)செல் சுவர்,(2)நியூக்ளியஸ் உட்கரு,(3)சைட்டோபிளாசம் ஆகியவை ஆகும்.
               அதாவது செல் சுவர் ஒவ்வொரு செல்லையும் பாதுகாக்க உதவுகிறது.செல்லின் உட்கருவானது நியூக்ளியஸ் எனப்படுகிறது.செல்லின் உயிரும் இதுதான்.இந்த உட்கருவை சுற்றிள்ள பகுதிதான் சைட்டோபிளாசம் எனப்படுகிறது.நியூக்ளியஸின் பிரதான அங்கம் குரோமோசோம்கள் எனப்படுகின்றன.மனிதனுடைய செல்களில் 46 குரோமோசோம்கள் உள்ளன.உடலின் மொத்த எண்ணிக்கையில்33கோடிகளாக உள்ளன.சைட்டோபிளாசத்தை புரோட்டோபிளாசம் என்றும் கூறுவர்.இந்த பகுதி நைட்டிரஜன்,ஹைட்டிரஜன்,பிராணவாயு போன்ற மூலப்பொருட்களால் ஆனவை.
             செல்களின் அடிப்படை குணங்கள் ஆறு.அவை 
(1)வளர்கின்ற பண்பு, (2)உணர்கின்ற திறன், (3)இனப்பெருக்கம், (4)உணர்வுகளை இணைக்கும் திறன் அல்லது உணர்ச்சிகளை கடத்தும் திறன், (5)வளர்சிதை மாற்றம், (6)இயங்குதல் அல்லது நகரும் பண்பு ஆகியன ஆகும்.
    
          பல செல்கள் ஒன்றிணைந்த  கூட்டத்தால் திசுக்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.ஒவ்வொரு திசுவும் திட்டவட்டமான அமைப்பும் செயல்முறையும் கொண்டதாகவும்,ஓர் உயிர்ப்புள்ள மண்டலமாகவும் இயங்குகின்றது.இந்த திசுக்கள் உயிரின் ஒப்பற்ற அமைப்பாகும்.
     இவை ஐந்துவகையாக பிரிந்து இயங்குகின்றன.அவை
     (1)எபிதீலியத்திசு, (2)இணைப்புத்திசு, (3)தசைத்திசு, (4)நரம்புத்திசு,(5)இரத்தத்திசு ஆகும்.

            இந்த திசுக்கள் பலவாக ஒன்று சேர்ந்து உறுப்புகளை உருவாக்குகிறது.ஒரே மாதிரியான பணிகளை செய்யும் உறுப்புகள் பல ஒன்று சேர்ந்து உறுப்பு மண்டலமாக அமைந்து உள்ளன.

        அவை ஒன்பது மண்டலங்களாகும்.அதாவது
 (1)எலும்பு மண்டலம், (2)தசை மண்டலம், (3)இரத்த ஓட்ட மண்டலம்,(4)சுவாச மண்டலம், (5)ஜீரண மண்டலம், (6)நாளமில்லாச்சுரப்பி மண்டலம், (7)நரம்பு மண்டலம், (8)கழிவு மண்டலம், (9)சிறுநீரக மற்றும் பிறப்புறுப்பு மண்டலம் ஆகும்.
          மனித உடலின் அதிசயங்கள் பற்றி
  இன்னும் தொடரும்...........
   
 

1 கருத்து: