06 மார்ச் 2014

ஜீரண மண்டலம்-மனித உடலின் அதிசயங்கள்.

மரியாதைக்குரியவர்களே,
                                              வணக்கம்.
                                 கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன். இந்த பதிவில் ஜீரண மண்டலம் பற்றி காண்போம்.
            நாம்  உயிர் வாழ காற்றும் ,நீரும்,உணவும் அவசியம்.நாம் உட்கொள்கின்ற உணவுகளை நமது உடல் ஏற்றுக்கொள்ளும் வகையில் பக்குவப்படுத்தி,பதப்படுத்தி,பல மாற்றங்களை செய்து உணவை செரிக்க செய்து இரத்தத்தில் கலக்கும்வரை நிகழும் பல்வேறு மாற்றங்களை ஜீரணம் என்று கூறுகிறோம்.இவ்வாறு ஜீரணத்திற்கு உதவும் உடல் உறுப்புகளை ஜீரண மண்டலம் என்கிறோம்.

            ஜீரண மண்டலம் ஆனது வாய் முதல் தொடங்கி மலம் கழிக்கும் குதம் வரை உள்ளது.அதாவது வாய்,தொண்டை,உணவுக்குழாய்,இரைப்பை,சிறுகுடல்,பெருங்குடல்,மலக்குடல் ஆகியனவாகும்.இதை திருவாய் முதல் எருவாய் வரை என்றும் கூறுவர்.இவற்றின் நீளம் சுமார் இருபத்தேழு அடி ஆகும்.உணவை உடைப்பதற்கு உதவும் பொருட்கள் இருப்பது போல் உணவை கரைப்பதற்கு சில வேதி நீர்மங்கள் உள்ளன.அவை உமிழ்நீர்,பித்த நீர்,இரைப்பை நீர்,கணைய நீர்,குடல் திரவங்கள் ஆகியன ஆகும்.
     மனித உடலின் அதிசயங்கள் இன்னும் தொடரும்.....

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...