06 மார்ச் 2014

தசை மண்டலம்-மனித உடல் அதிசயங்கள்.

மரியாதைக்குரியவர்களே,
                                             வணக்கம்.
                               கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
இந்த பதிவில் தசை மண்டலத்தை பற்றி காண்போம்.
 நமது உடல் அசைவுகளையும்,இயக்கத்தையும் பெற்றது.இந்த அசைவு மற்றும் இயக்கத்திற்கு ஆதாரமாக அமைந்துள்ளது தசைகளே.
செல்கள் ஒன்று கூடி கூட்டமாக சேர்ந்து திசுக்கள் ஆகின்றன.திசுக்கள் கூட்டமாக ஒன்று சேர்ந்து தசைகளாக மாறுகின்றன.
மனித உடலில் 600க்கும் மேற்பட்ட தசைகள் உடலின் 206க்கும் மேற்பட்ட எலும்புகளுடன் சேர்ந்து உடல் இயக்கம் பெற உதவுகிறது.
தசைகள் மூன்று வகை ஆகும்.அவை;-
(1)இயக்கு தசைஅல்லது எலும்பு தசை,(2)இயங்கு தசை,(3)இதயத்தசை ஆகியன.
            (1)இயக்கு தசைகள்அல்லது எலும்பு தசைகள்  நமது விருப்பத்திற்கேற்ப  இயக்கப்படுகின்றன.இவை எலும்புகளுடன் சேர்ந்து இருப்பதால் எலும்பு தசை என்றும்,இந்த தசைகளில் வரி போன்ற அமைப்பு உள்ளதால் வரித்தசை என்றும் கூறுகிறோம்.உதாரணம் தலை,நடு உடல்,கை,கால் தசைகள்.
                (2)இயங்கு தசைகள் இவை தாமாக அதாவது தன்னிச்சையாக இயங்குகின்றன.இந்த தசைகளில் வரி எதுவும் இல்லாமல் மழுமழுப்பாக இருக்கும்.அதனால்  வரியற்ற தசைகள் என்றும் கூறுவர்.உதாரணம் வயிறு,குடல்கள்,இருதயம்,மற்ற உறுப்புகள் ஆகியன.
                (3)இதயத்தசை. இந்த தசையும் நமது விருப்பத்திற்கும்,இயக்கத்திற்கும் கட்டுப்படாது.இதன் சிறப்பம்சம் இயக்கு தசைகள் போன்று காணப்பட்டாலும் செயல்பாட்டில் இயங்குதசைகளாகும்.மற்றும் சிறப்பு அமைப்பு கொண்ட வரி இருக்கும்.
ஒவ்வொரு எலும்பு தசையிலும் தசை இழைகள் உண்டு.
                 இணைப்பு திசுக்கள்,இரத்த நாளங்கள்,நரம்புகள் உள்ளன.
               இந்த தசைகள் இரத்த நாளங்களிலிருந்து இரத்தத்தை பெற்றுக்கொண்டு,தங்களிடமுள்ள கழிவுகளை வெளியே அனுப்பிவிடும்.
தசைகளுக்கும் மத்திய நரம்பு மண்டலத்திற்கும் நேரடியான இணைப்பு உண்டு.ஒவ்வொரு தசையிலும் இயக்க நரம்பு இழை மற்றும் உணர்வு நரம்புஇழை என இரண்டுவித நரம்பு தொடர்கள் உள்ளன.அதேபோல ஒவ்வொரு தசைக்கும் தொடக்கம் மற்றும் முடிவு என இரண்டு நிலைகள் உள்ளன.
                தொடக்க நிலைத்தசை அசையாமல் நிலையாக இருக்கும்.முடிவுத்தசை அசையும் அதாவது இயங்கும்.ஒரு தசை இயங்குகின்றபோது அதற்கு எதிராக இன்னொரு தசை செயல்படும்.மடக்கு தசைகள் சுருங்கினால் நீட்டு தசைகள் நீளும்.நீட்டு தசைகள் சுருங்கினால் மடக்கு தசைகள் நீட்டும்.இவ்வாறு பலதரப்பட்ட,பலதிறப்பட்ட தசைப்பகுதிகள் சுருங்கி விரிகன்ற இயக்கங்கள்,ஒரு குறிப்பிட்டமுறையில்,ஒரு குறிப்பிட்ட வேகத்துடன் நரம்பு மண்டலத்தின் உதவியால் நடத்தப்படுகின்றன.

                 இந்த தசை இயக்கத்தை மூன்று வகைகளாக பிரிக்கலாம்.அவை (1)நிலையான நீளாத இயக்கம்,(2)நீள்கின்ற இயக்கம்,(3)குவிகின்ற இயக்கம் ஆகியன.இவ்வாறு தசைகள் செயல்புரியும்போது தசைகளுக்கு உள்ளே இருக்கும் உயிர்க்காற்று ஆக்சிகரணம் அடைந்து எரிந்து விடுகிறது அதனால் கரியமிலவாயுவும்,லாக்டிக் அமிலம் போன்ற கழிவுகளும் உண்டாகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக