29 மார்ச் 2014

இஸ்லாமியர்களும்-இந்திய சுதந்திர போராட்டமும்.

மரியாதைக்குரியவர்களே,

வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
          வள்ளல் முஹம்மது ஹபீப் – நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அவர்களால் ஹிந்த் கே சேவக் (இந்தியாவின் சேவகர்) என்று அழைக்கப்பட்டவர் -

 You give me blood and I will give you Freedom என்று நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் தேசவிடுதலைக்காக ரத்தம் சிந்த அழைப்பு விடுவித்த போது, அவரது இந்திய தேசிய ராணுவத்தில் (Indian National Army) நுற்றுக்கணக்கான இஸ்லாமிய இளைஞர்கள் இணைந்தனர். பர்மா, மலேசியா, சிங்கப்பூரில் வியாபாரங்களிலும் தொழில்களிலும் ஈடுபட்டிருந்த பல இளைஞர்கள் அவரது ராணுவத்தில் இணைவதில் முந்திக்கொண்டனர். நேதாஜி 1943 ஜுலை 2 – இல் சிங்கப்பூரில் ஆரம்பித்த ஆசாத் ஹிந்த் சர்க்கார் என்ற தற்காலிக சுதந்திர இந்திய அரசாங்கத்தின் மந்திரி சபையில் ராணுவ பிரதிநிதிகளாக லெப் கர்னல்ஸ் அஸீஸ் அஹமது, எம்.இஸட்கியானி, இஷான் காதிர், ஷாநாஸ்கான் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.* மேலும் கரீம் கனி, டி.எம்.கான், ஹபிபுர்ரஹ்மான் ஆகியோரும் லெப்.கர்னல்ஸ் ஆகப் பணியாற்றியுள்ளனர். இதில் லெப். கர்னல் ஹபிபுர்ரஹ்மான் தான் நேதாஜியின் இறப்பு பற்றி உறுதி செய்யும், ‘விமான விபத்து நடந்தது உண்மைதான்’ என்று கூறியவர்.** பிரிட்டீஷாரால் சுரண்டப்பட்டு, அவ்வாறு சுரண்டுவதற்கு வசதியாக இருக்கவேண்டும் என்பதற்காகவே எழுத்தறிவின்றி வைக்கப்பட்டிருக்கும் கோடிக்கணக்கான பட்டினி இந்தியர்களின் நிலை கண்டு இரங்கி, தனது உறவினரில் தந்தை முதற்கொண்டு 80 பேர் பிரிட்டீஷ் இந்திய ராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நேரத்தில், தேசவிடுதலைக்காக நேதாஜி படையில் இணைந்தவர்தான் ஷாநவாஸ்கான். 1943 ஜுலை 2 – ஆம் தேதி சிங்கப்பூரில் ‘ஆஸாத் ஹிந்த் சர்க்கார்’ (Azad Hind Government) என்ற இந்திய தேசிய தற்காலச் சுதந்திர அரசை நிறுவிய நேதாஜி சுபாஸ் சந்திர போஸ், அவ்வரசின் நிர்வாக செலவிற்காகவும்: ’ஆசாத் ஹிந்த் பவுச்’ என்ற இந்திய தேசிய ராணுவத்தை நடத்துவதற்காகவும் ரிஸர்வ் பேங்க் ஒன்றை நிறுவினார். அவ்வங்கிக்கான நிதியை சிங்கப்பூர், மலேசியா, பர்மா போன்ற கீழை நாடுகளில் திரட்டினார். அவ்வாறு நிதி திரட்டும் கூட்டம் ஒன்றை பர்மாவின் தலைநகரான இரங்கூனில் கூட்டினார். கூடிஇருந்த அந்நகரத்து வியாபார பிரமுகர்களிடம் நேதாஜி பேசும்போது, “தேசவிடுதலைக்காகப் போராடும் நம் இந்திய தேசிய ராணுவத்திற்கு அள்ளி வழங்குங்கள்” – என்று வேண்டுகோள் விடுத்தார். வருகைதந்த வியாபாரப் பெருமக்கள் அனைவரும் ஒன்று கூடிப் பேசி, “எங்கள் வருமாணத்தில் 10 சதவிகிதத்தை இந்திய தேசிய ராணுவத்திற்கு தொடர்ந்து வழங்குகிறோம்” என்று அறிவித்தனர். இவ்வறிவிப்பைக் கேட்ட நேதாஜி சற்று கோபத்துடன், தாய்நாட்டின் விடுதலைக்காக ரத்தம் சிந்தும் எங்கள் வீரர்கள் ஐந்து சதவிகிதம் 10 சதவிகிதம் என்று கணக்குப் பார்த்தா சிந்துகின்றனர்? நீங்கள் நிதி வழங்க பார்க்கின்றிர்களே ! – என்று பேச, கூட்டத்திலிருந்து தலையில் தொப்பி, தாடியுடன் முதியவர் ஒருவர் மேடையை நோக்கி வருகிறார். வந்தவர் நேதாஜியின் கையில் ஒரு காகிதத்தைக் கொடுக்கிறார். அதை வாங்கிப் படித்த நேதாஜியின் கண்களில் நீர் திரண்டு இமை வரப்புகளுக்குள் முட்டி மோதி நிற்கிறது. நேதாஜி உணர்ச்சி வசப்படும் வகையில் அக்காகிதத்தில் அப்படி என்ன தான் எழுதப்பட்டிருந்தது? “ரங்கூன் மாநகரில் எனக்குச் சொந்தமான ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வியாபார நிறுவனங்களை இந்திய தேசிய ராணுவத்திற்காக நான் எழுதி வைக்கிறேன்” – என்ற கொடை வாசகங்கள் அக்காகிதத்தில் இடம் பெற்றருந்தன. அவ்வாசகங்களை எழுதிய கரங்களுக்குச் சொந்தக்காரரான வள்ளல் முஹம்மது ஹபீப் என்ற அந்த முதியவரை நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் ஆரத்தழுவியவராக, இவர்தான் ஹிந்த் கே சேவக் (இந்தியாவின் சேவகர்) என்ற பெருமிதத்துடன் அறிவித்தார்.
             இவ்வாறு நேதாஜி படை நடத்துவதற்கான பொருளாதாரப் பின்னணியை உருவாக்கிக் கொடுத்தவர்களுள் பெரும்பாலோர் கீழை நாடுகளில் வாழ்ந்த முகம்மது ஹபீப் போன்ற முஸ்லிம் தனவந்தர்களாவர். நேதாஜியின் மாலைக்கு மூன்று லட்சம் பிரிட்டீஷ் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட நேதாஜியின் ‘இளமையின் கனவு’, ‘நேர்வழி’ ஆகிய இரண்டு புத்தகங்களைப் படித்து தேசிய உணர்வால் தூண்டப்பட்டு தனது 21 வயதில் இந்திய தேசிய ராணுவத்தில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டவர் எம்.கே.எம்.அமீர் ஹம்சா. எண்பது வயது முதியவராக இன்று சென்னையில் வாழ்ந்து வரும் இத்தியாகச் செம்மல் பல லட்சங்களைத் துணிச்சலுடன் இந்திய தேசிய ராணுவத்திற்கு வாரி வழங்கியவராவார். பிரிட்டீஷாரால் நாடுகடத்தப்பட்ட வங்கத்தைச் சார்ந்த ராஷ்பிஹாரி போஸ் ஆரம்பித்த ‘இந்திய சுதந்திர லீக்’ அமைப்பில் தன்னை முதல் நபராகப் பதிவு செய்தார். பின்னர் நேதாஜிபுரட்சிப் படைக்குத் தலைமை ஏற்ற போது அதிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியதற்காகப் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியம் விதித்த மரண தண்டனையிலிருந்து தப்பியவர். 1943 – இல் நேதாஜி ரங்கூனுக்கு முதலில் சென்றபோது நடந்த விழாவில் அவருக்கு அணிவிக்கப்பட்ட மாலைகளைப் போராட்ட நிதிக்காக ஏலம் விட்டனர். அம்மாலைகளில் ஒன்றை மூன்று லட்சம் ரூபாக்கு ஏலத்தில் எடுத்தார். இந்திய தேசிய ராணுவத்தில் அமீர் ஹம்சா பணியாற்றியதைப் பாசத்தின் காரணமாக அவரது தந்தை விரும்பவில்லை. இரண்டு நாள் அவரை வீட்டில் பூட்டிவைத்துவிட்டார். இதனை அறிந்த நேதாஜி அமீரையும் அவரது தந்தையையும் அழைத்து வரச்செய்தார். நாடு சுதந்திரம் அடைய வேண்டிய அவசியத்தை உணர்ச்சிப் பொங்க எடுத்துரைத்தார். நேதாஜியின் உரையாடலைக் கேட்டு உணர்ச்சி வசப்பட்ட இவரது தந்தையார், தனது சட்டைப் பையிலிருந்த காசோலைப் புத்தகத்தை எடுத்து இரண்டு லட்சத்து முப்பதாயிரத்துக்கான ஒரு காசோலையை எழுதி நேதாஜியிடம் கொடுத்ததோடு தன் மகனையும் முழுமையாக நேதாஜியிடம் ஒப்படைத்தார். 23-01-1944 – இல் நேதாஜின் 47 – வது பிறந்த நாளின் போது ஒரு லட்சத்துக்கான காசோலையை இவர் நேதாஜிடம் வழங்கியதோடு, தனது வைர மேததிரத்தை நேதாஜிக்கு பிறந்த நாள் பரிசாக அணிவித்தார். அமீர் ஹம்சாவுக்கும் அவரது தந்தையாருக்கும் நேதாஜி புத்தாடைகளை வழங்கி கௌரவித்தார்.* 23-01-1944 இல் நேதாஜியின் 47-வது பிறந்த நாள் விழா ரங்கூன் ஜுப்ளி அரங்கில் நடைபெற்றது. பர்மா வாழ் தமிழர்கள் நேதாஜிக்கு எடைக்கு எடை தங்கம் கொடுத்தனர்.எதிர்பார்த்ததை விட மூன்று மடங்கு அதிகமாகத் தங்கமும் நகைகளும் குவிந்தன. – அமீர் ஹம்சா. தனது செல்வத்தை எல்லாம் நேதாஜியின் சுதந்திரப் பணிக்கு வழங்கிவிட்டு, நேதாஜி தனக்கு வழங்கிய சட்டைத் துணியை இன்றளவும் பாதுகாத்தவராக, பழைய தியாக நாட்களை நினைவில் பசுமையுடன் ஏந்தியவராக இன்றும் சென்னையில் வாழ்ந்து வரும் இப்பெருமகனை, இந்திய சுதந்திரப் பொன்விழா ஆண்டில் யார் கௌரவித்தார்? 1945 – ஆம் ஆண்டு நவம்பர் 5- ஆம் தேதி இந்திய தேசிய ராணுவத்தினர் மீதான வழக்கு விசாரணை டெல்லி செங்கோட்டையில் ஆரம்பமானது. இவ்விசாரணையில் முதலில் உட்படுத்தப்பட்ட மூவருள் ஒருவர் ஷாநவாஸ்கான் ஆவார். மற்ற இருவர் கேப்டன் ஸேகால், லெப். தில்லான். இவர்களுக்காக ஜவஹர்லால நேருவும், ஆஸிப் அலியும் வாதாடினர். இவ்விசாரணையின் போது ஷாநவாஸ்கான் அளித்த வாக்குமூலம் அன்று தேசம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ‘இந்த விசாரணையை பிரிட்டீஷ் அரசு நடத்தியிருக்கக்கூடாது’ என்று ஆங்கிலப் பத்திரிக்கைகள் எழுதும் அளவிற்கு, ஷாநவாஸ்கானின் சாட்சியங்கள் போராட்ட நியாயங்களை உறுதி செய்வனவாக அமைந்தன.*** இவ்வழக்கு விசாரணையில் முதன் முதலாக இந்திய தேசிய ராணுவ வீரர் ஒருவர் 23-08-1945-இல் தூக்கிலிடப்பட்டார். அந்த வீர இளைஞனின் பெயர் ஷாகுல் ஹமீது. நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் தேச விடுதலைக்காக ஜப்பானியர் உதவி வேண்டி, பர்மாவைத் தளமாகக் கொண்டு படை திரட்டிக் கொண்டிருந்த காலத்தில் ரங்கூன் யார்க் சாலையில் உள்ள பகதுர்ஷாவின் சமாதியை பல லட்சரூபாய் செலவில் புதுப்பித்தார். பகதுர்ஷா சமாதியில் இருந்துஒருபிடி மண்ணை எடுத்து தமக்கு மக்கள் அன்புடன் அளித்த தங்க வாளின் பிடியில் அடைத்து,*அவ்வாளினை ஓங்கிப் பிடித்தவராக, “நம் வீரர்களின் நெஞ்சில் நம்பிக்கையும், இம்மஹானிடம் இருந்தது போல் தேசபக்தியும் அணுவளவாவது இருக்கும் வரையில், இந்துஸ்தான் வாள் மிகக் கூர்மையாக இருப்பதுடன், ஒரு நாள் லண்டனின் வாசற்படியையும் தட்டும்..!“ – என்று சபதமேற்றார். இந்திய சுதந்திர வரலாற்றில் கம்பீரமிக்கப் போராளியான நேதாஜிக்கே … ஒருதூண்டுதலை ஏற்படுத்திய பெருமகன் மாமன்னர் பகதுர்ஷா ஜஃபர். 1973ம் ஆண்டு தமிழக அரசு புத்தகம் ஒன்றை வெளியிட்டது. அதில் நேதாஜியின் தேசிய இராணுவத்தில் பணியாற்றிய தமிழர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தது. அப்பட்டியலில் 25% மேற்பட்ட முஸ்லி­ம்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
           அவர்களின் விபரம் வருமாற
          மனிமொழி மவ்லானா இராஜகிரி அப்துல்லா இளையான்குடி கரீம் கனி திருப்பத்தூர் அபூபக்கர் திருப்பத்தூர் தாஜிதீன் அத்தியூத்து அபூபக்கர் பக்கரி பாளையம் அனுமன் கான் சென்னை அமீர் ஹம்சா சென்னை ஹமீது செங்குன்றம் கனி வண்ணாரப்பேட்டை ஹயாத்கான் புதுவலசை இபுராஹிம் பார்த்திபனூர் இபுராஹிம் வனரங்குடி இபுராஹிம் இளையான்குடி அப்துல் கபூர் மேலூர் அப்துல் ஹமீது சோழசக்கர நல்லூரி அப்துல் ஜப்பார் தத்தனனூர் அப்துல் காதர் பட்டுக்கோட்டை அப்துல் காதர் திருப்பூர் அப்துர் ரஜாக் காரிவிப்பட்டினம் அப்துல் மஜித் குருவம் பள்ளி அப்துல் மஜீத் கண்ணாத்தாள் பட்டி அப்துல் முத்தலிபு லெப்பைக் குடிகாடு அப்துல் சலாம் ராம்நாடு அப்துல் வஹாப் மானாமதுரை அப்துல் பாசித் திரிவிடைச் சேரி அப்துல் வஹிப் அத்தியூத்து இபுராஹிம் ô சென்னை ஜாபர் ஹக்கிமி சிங்கம் மங்களம் ஜெய்னுல் ஆபிதீன் திருப்பத்தூர் காதர் பாட்ஷா புதுவலசை முஹம்மது லால் கான் பார்த்திபனூர் கச்சி மைதீன் தஞ்சை முஹம்மது தாவூது அறந்தாங்கி முஹம்மதுசெரிபு திருச்சி வரகனேரி முஹம்மது சுல்தான் வடபழனி சென்னை முஹம்மது யூசுப் தூத்துக்குடி முஹம்மது கல்லுரிஜனி சிவகங்கை முஹம்மது இபுராஹிம் சென்னை முஹம்மது உமர் மதுரை மொய்தீன் பிச்சை அம்மன்சத்திரம் முஹம்மது மீராசா திருப்பத்தூர் பீர் முஹம்மது கும்பகோணம் ரஹ்மத்துல்லா குடியாத்தம் நஜீமுல்லாஹ் கிருஷ்ணகிரி தாவூத் ஷாயிபு இராமநாதபுரம் சையது கனி பரங்கிப்பேட்டை தாஜிதீன் மன்னர்குடி சிக்கந்தர் கம்பம் சிக்கந்தர் முதுகுளத்தூர் சுல்தான் கும்பகோணம் சுல்தான் இராமநாதபுரம் தாஜிதீன் 
                 வரலாறு என்றைக்கும் மாறாதது,,சுதந்திரத்தை நேசிக்கும்..ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் ஒவ்வொருவரின் நெஞ்சிலும் இவர்களின் தியாகங்கள் என்றென்றும் நிலைத்திருக்கும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...