06 மார்ச் 2014

இரத்த ஓட்ட மண்டலம்-I.மனித உடல் அதிசயங்கள்.

மரியாதைக்குரியவர்களே,
                                         வணக்கம்.
                கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
                      இந்த பதிவில் இரத்த ஓட்ட மண்டலம் -I பற்றி காண்போம்.
நமது உடலின் நுண்ணிய அமைப்பு செல்கள் என்பது நமக்கு தெரியும்.இவ்வாறாக அறுநூறுகோடிக்கும் அதிகமான செல்கள் உள்ளன.ஒவ்வொரு செல்லுக்கும் உடனடி தேவை பிராணவாயுவும் உணவுச்சத்தும் ஆகும்.அனைத்து செல்களுக்கும் உணவுச்சத்து மற்றும் உயிர்க்காற்றினை இரத்தமே எடுத்து செல்கிறது.அதேபோல் செல்களின் செயல்பாட்டினால் உண்டாகும் கழிவுகளையும்,கார்பன் டை ஆக்சைடை யும் இரத்தமே திரும்ப எடுத்து வருகிறது.இவ்வாறாக இரத்தம் நமது உடலில் ஒரு போக்குவரத்து துறையாக வேலை செய்கிறது.வெளியே இருந்து உடலுக்குள் நுழையும் நோய்க்கிருமிகளை விரட்டியடித்து பாதுகாப்பு துறையாகவும் செயல்படுகிறது.
             இரத்த குழாய்கள் நமது உடலில் ஏறக்குறைய தொண்ணூற்றுஆறாயிரத்து ஐந்நூறு கிலோமீட்டர் நீளம் உள்ளன.நமது உடலில் ஐந்து லிட்டர் இரத்தம் உள்ளது.
இரத்தம் சிவப்பு அணுக்கள்,வெள்ளை அணுக்கள்,இரத்த தட்டுக்கள்,பிளாஸ்மா என்னும் மஞ்சள்திரவம்,மீதி தண்ணீர் போன்ற  திரவமாகும்.
இதில் பிளாஸ்மா என்ற மஞ்சள்நிற திரவம் காரத்தன்மை கொண்டது.90சதவீதம் தண்ணீரும்,8சதவீதம் புரோட்டீன் சத்தும்,மீதி2சதவீதம் உப்புக்கள்,உணவுச்சத்துக்கள்,நைட்ரஜன் பொருட்கள்,கரைக்கப்பட்ட வாயுக்கள்,ஹார்மோன் சத்துக்கள்,நோய் எதிர்ப்பு அணுக்கள்,என்சைம் வைட்டமின் சத்துக்கள் ஆகியன அடங்கி உள்ளன.இந்த பிளாஸ்மா திரவம் இரத்தத்தில் மூன்று லிட்டருக்கு மேல் உள்ளது.பிளாஸ்மாவில் மூன்று முக்கிய பொருட்கள் உள்ளன.அவை ஆல்புமின்,குலோபுலின்,ஃபைபிரினோஜென் ஆகியன ஆகும்.
 இரத்த அணுக்கள்;-
 சிவப்பு அணுக்கள் ஆயுட்காலம் 120நாட்கள் ஆகும்.ஒரு விநாடிக்கு 50இலட்சம் சிவப்பு அணுக்கள் அழிகின்றன.அப்போது சிவப்பணுக்கள் மண்ணீரலிலும்,ஹீமோகுளோபின் கல்லீரலிலும் சேமித்து வைக்கப்படுகின்றன.இவையே புதிய செல்கள் உருவாக பயன்படுகின்றன.
                 இரத்த சிவப்பு அணுக்கள் அதன் நிறத்தை புரோட்டீன் மற்றும் இரும்புச்சத்துக்களினால் உருவாக்கப்பட்ட ஹீமோகுளோபின் என்ற பகுதியில் இருந்து பெற்றுக்கொள்கிறது. ஹீமோகுளோபின் பணியானது நுரையீரலிலிருந்து ஆக்சிஜனை பெற்று உடலின் எல்லா செல்களுக்கும் கொண்டு சென்று கொடுப்பதே ஆகும்.தூய இரத்தம் நல்ல சிவப்பாக இருக்கும்.அசுத்த இரத்தம் கருஞ்சிவப்பாக இருக்கும்.
 சிவப்பு அணுக்கள் எலும்பு மூட்டுகளில் உள்ள எலும்பு சோற்றிலிருந்து உற்பத்தி ஆகின்றன.மார்பெலும்பு,விலா எலும்பு,முதுகெலும்பு,தொடை எலும்பு,கை எலும்பு,கேன்செல்லஸ் திசுக்கள்,கல்லீரல் போன்ற பகுதிகளில் இருந்து உற்பத்தி ஆகின்றன.
 வெள்ளை அணுக்கள்.
வெள்ளை அணுக்கள் நோய் க்கிருமிகளை அழித்து உடலை பாதுகாக்கின்றன.நோய்க்கிருமிகள் தாக்குதல்கள் ஏற்படும்போது வெள்ளை அணுக்கள் வெகு விரைவாக நான்கு மடங்கு பெருகி பெரும் படையாக உருவெடுத்து போராடி நோய்க்கிருமிகளை அழிக்கின்றன.இவ்வாறு தாக்குதல்களில் இறந்து போன வெள்ளை அணுக்கள்தான் சீழ் என்று அழைக்கிறோம்.
 இரத்ததட்டுக்கள்.இவை சிப்பு அணுக்களின் அளவில் மூன்றில் ஒரு பாகமாகவே இருக்கும்.ஒரு துளி இரத்தத்தில் ஒரு கோடியே ஐம்பது லட்சம் இரத்த தட்டுக்கள் உள்ளன.இந்த அணுக்களே இரத்தத்தை உறைய வைத்து இரத்த கசிவை தடுக்கிறது.
வைட்டமின் (K) கே என்னும் சக்திதான் இரத்தம் உறைதலுக்கான பற்பல சூழ்நிலைகளை உருவாக்கி 12க்கும் மேற்பட்ட உதவிப்பொருட்களை உற்பத்தி செய்து உதவுகிறது.
 பதிவின் நீளம் கருதி இரண்டாவது பதிவாக இரத்தம் பற்றி பதிவிடுகிறேன்.மீண்டும் தொடரும்..அடுத்த பதிவு....
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...