21 மார்ச் 2014

மாயமான விமானங்கள்.......

மரியாதைக்குரியவர்களே
                 வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.
         மலேசியா விமானம் போன்றே மாயமான சில விமானங்கள் !
               அனைத்து ஊடகங்களிலும் இன்றைக்கு முக்கிய செய்தியாக, புரியாத புதிராக உலா வந்து கொண்டு இருக்கும் காணாமல் போன மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் MH370. 239 பயணிகளுடன் சென்ற அந்த விமானமானது திடீரென்று மாயமாகிவிட்டதோடு, இன்று வரை அதற்கான உண்மையான காரணம் எதுவும் கிடைக்கவில்லை. வரலாற்றில் இதுபோன்று நிறைய விமானங்கள் காணாமல் போயுள்ளன. அது போல மாயமாகி போய், இன்றளவும் கண்டுபிடிக்கமுடியாமல் போன விமானங்கள் சில உங்கள் பார்வைக்கு:

1. ஏர் பிரான்ஸ் விமானம் 447 :-

இந்த விமானத்தைப் பற்றி சொல்ல வேண்டுமானால், ஏர் பிரான்ஸ் விமானம் 447 ஆனது பிரேசிலிய வான்வெளியில் இருந்து பறந்து, செனகல் வான் எல்லைக்குள் நுழையும் போது, திடீரென்று விமான போக்குவரத்து கட்டுப்பாட்டுடன் கொண்டிருந்த அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுவிட்டது. இன்று வரை அது ஏன் நடந்தது என்று யாருக்கும் தெரியாது. இருப்பினும் 5 நாள் விசாரணைக்கு பிறகு, அந்த விமானமானது அட்லாண்டிக் பெருங்கடலைக் கடக்கும் போது வெடித்திருக்கும் என்று எண்ணி சாதாரணமாக விட்டுவிட்டனர்.

2. மெலியா இயர்ஹார்ட் சென்ற விமானம் :-

அமெரிக்காவை சேர்ந்த பெண் பைலட் அமெலியா இயர்ஹார்ட், சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உலகைச் சுற்றி பார்க்க 1937 ஆம் ஆண்டு பசிபிக் பெருங்கடல் வழியே பறந்து சென்றார். அப்போது லேசான மேக கூட்டத்தில் சென்றவர், திடீரென மாயமாகிவிட்டார். அதிலும் அவர் பசிபிக் பெருங்கடல் வழியே சென்ற பகுதியில் சோதனை செய்த போது, அப்பகுதியில் அவரது உடலோ அல்லது அவர் சென்ற விமானத்தின் சிறு பாகம் கூட கிடைக்கவில்லை.

3. விமானம் 739 :-

1962 ஆம் ஆண்டு இராணுவ விமானம் ஒன்று மாயமானது. இந்த விமானத்தில் 93 இராணுவ வீரர்களும், 3 தெற்கு வியட்நாம் மக்களும் பயணித்தனர். இந்த விமானமானது மேற்கு பசிபிக் பெருங்கடலின் வழியே செல்லும் போது திடீரென்று மாயமாகிவிட்டது. ஒருவேளை வெடித்திருக்குமோ என்று பார்த்தால், அதற்கான ஆதாரம் ஏதும் கிடைக்கவில்லை. ஆகவே இதுவும் வரலாற்றில் காணாமல் போன விமானங்களில் ஒன்றாக உள்ளது.

4. ஸ்டார் டஸ்ட் விமானம் :-

ஸ்டார் டஸ்ட் விமானமானது ஆண்டிஸ் மலைத்தொடரை கடக்கும் போது, எந்த ஒரு தடயமும் இல்லாமல் காணாமல் போய்விட்டது. ஆனால் அதை பற்றி சோதனை செய்யும் போது, ஒரு வித்தியாசமான யாரும் புரிந்து கொள்ள முடியாத தந்திக்குறிப்பு ஒன்று மட்டும் கிடைத்தது. ஆனால் அதையும் யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை என்பது தான் “வேதனையான” உண்மை.

5. பெர்முடா முக்கோணம் :-

பெர்முடா முக்கோணம்(Bermuda Triangle) என்றாலே அனைவருக்கும் புதிரான ஒன்று தான். ஏனெனில் அந்த பகுதியை கடக்கும் எந்த ஒரு பொருளும் மாயமாகிவிடும். அதுமட்டுமல்லாமல், உண்மையிலேயே விமானம் 19, பெர்முடா முக்கோணத்தை கடக்கும் போது மாயமாகிவிட்டது. இதுபோன்று 5 விமானங்கள் இந்த பகுதியை கடக்கும் போது மாயமாகியுள்ளன. இன்று வரை இதற்கான காரணத்தை யாரும் கண்டறியவில்லை. இனி எப்படியோ...!!!

6,மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் MH370 :-

மர்மமாக காணாமல் போன விமானங்களில் ஒன்று தான், மார்ச் 8 ஆம் தேதி மாயமான மலேசியா ஏர்லைன்ஸ் விமானம். இந்த விமானம் 239 பயணிகளுடன் மலேசியாவில் இருந்து சீனாவுக்கு சென்று கொண்டிருந்த போது, சீன கடற்பகுதியில் மாயமானது. ஒரு வாரம் ஆகியும் இன்னும் அந்த விமானம் என்ன ஆனது, அதில் உள்ளவர்கள் என்ன ஆனார்கள் என்பது இதுவரை புரியாத புதிராக உள்ளது. மேலும் இதனை கண்டுபிடிக்க உலக நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து தேடிக் கொண்டிருக்கிறது. பொறுத்திருந்து பார்க்கலாம்.

நன்றி : Sathiyam TV

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...