06 மார்ச் 2014

சுவாச மண்டலம்-உடலின் அதிசயங்கள்.

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
                             கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
 இந்த பதிவில் சுவாச மண்டலம் பற்றி காண்போம்.

     சுவாசம்;-
          சுவாசித்தலே அனைத்து உயிரினங்களுக்கும் இன்றியமையாத பணியாக மிக முக்கியமான பணியாக கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு உயிரினத்திற்கும் சுற்றுப்புறச்சூழலுக்கும் இடையில் ஓய்வின்றி தொடர்ச்சியாக காற்றுப்பரிமாற்றம் நடந்து கொண்டே இருக்கிறது.
 காற்றிலுள்ள பிராணவாயுவை எடுத்து உடல் உறுப்புகளுக்கு தருவதும்,உறுப்புகள் உயிர்க்காற்றினை எடுத்துக்கொண்டு அசுத்த காற்றினை அதாவது கரியமில வாயுவினை வெளியேற்றுவதும் சுவாசம் என்கிறோம்.

 இவ்வாறு காற்றை உள்ளிழுத்து வெளிவிடுகின்ற வேலையை இரு பிரிவுகளாக பிரிக்கலாம்.உள் சுவாசம்,வெளி சுவாசம் எனப்படும்.
ஒன்று உள் சுவாசம்;-
              உடலின் அனைத்து திசுக்களிலும் உள்ள செல்களனைத்தும் உயிர்வாழ,செயல்பட,இரத்தத்தில் இருந்து ஆக்ஸிஜன் என்னும் பிராணவாயுவை எடுத்துக்கொண்டு கார்பன் டை ஆக்சைடு என்னும் கரியமில வாயுவை இரத்தத்திற்கே அனுப்பி விடுவது உள் சுவாசம் எனப்படுகிறது.

 இன்னொன்று வெளி சுவாசம்;-
    நாம்  மூக்கினால் சுவாசிக்கும் காற்றிலுள்ள பிராணவாயுவை நுரையீரலில் உள்ள இரத்தம் எடுத்துக்கொண்டு அதிலுள்ள கரியமில வாயுவை வெளியேற்றுவது ஆகும்.
இந்த வெளி சுவாசத்திற்கு மூக்கு,தொண்டை,குரல்வளை,மூச்சுக்குழல்,மூச்சுக்கிளைகள்,போன்ற உறுப்புகள்உதவி செய்கின்றன.இவையே காற்று பாதைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.எல்லா காற்றுப்பாதைகளுமே சிலியா எபிதிலியம் என்னும் சளிப்படலத்தால்அமைக்கப்பட்டு இருக்கின்றன.இதன் சுரப்பிகள் எப்போதும் சளியை சுரந்து கொண்டு இருக்கின்றன.அதனால் வெளிக்காற்றில் கலந்து வரும் தூசிகள் மற்றும் நுண் கிருமிகள் இந்த சளியில் ஒட்டிக்கொண்டு உடனடியாக அகற்றப்படுகின்றன.
  நாம் ஒரு முறை சுவாசத்திற்கு ஏறத்தாழ 500 கன சென்டி மீட்டர் காற்றை உள்ளிழுத்து வெளி விடுகிறோம்.இதையே முயற்சி செய்தால் 1500கன சென்டி மீட்டர் காற்றை உள்ளிழுத்து வெளிவிட முடியும்.
          நாம் ஒரு நாளைக்கு சுமார் 13,638 லிட்டர் காற்றை சுவாசிக்கிறோம்.ஒரு வாரத்திற்கு 95,466 லிட்டர் காற்றை சுவாசிக்கிறோம்.ஒரு வருடத்திற்கு 53 லட்சம் லிட்டர் காற்றை சுவாசிக்கிறோம்.எழுபது ஆண்டு ஆயுட்காலம் என்றால் நீங்களே கணக்கிட்டு பார்த்துக்கொள்ளுங்கள்.
         நாம் ஒருமுறை சுவாசிக்கும் காற்றில் பிராணவாயுவை நான்கு சதவீதம் மட்டுமே பெற்றுக்கொண்டு மீதி பதினாறு சதவீத பிராணவாயுவை வெளியேற்றுகிறோம்.
இருமலும் ,தும்மலும்;-
 இவைகள் மூச்சு விடுதலின் பாதுகாப்பு அனிச்சை செயல்கள் ஆகும்.
  மனித உடலின் அதிசயங்கள் இன்னும் தொடரும்........
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...