06 மார்ச் 2014

நாளமில்லா சுரப்பி மண்டலம்.-மனித உடலின் அதிசயங்கள்.

மரியாதைக்குரியவர்களே,
                                       வணக்கம்.
                    ''கொங்குத்தென்றல்'' வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.இந்த பதிவில் நாளமில்லா சுரப்பிகள் பற்றி காண்போம்.
   நாளமில்லா சுரப்பி மண்டலம்.
                            நமது உடலில் உள்ள சுரப்பிகள் பல சிறப்பான திரவங்களை சுரக்கின்றன.இவை நரம்பு மண்டலம் தரும் தொடர்புகள் போன்று தகவல் தொடர்பு கருவியாகவும் பயன்படுகின்றன.நாளமில்லா சுரப்பிகளின் பணிகள் அனைத்தும் நரம்பு மண்டலத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன.
                   இவற்றை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்.
வெளிப்புற சுரப்பிகள் உதாரணம் வாய்,வயிறு,குடற் பகுதி,வியர்வை,கண்ணீர் போன்றவை ஆகும். மற்றொன்று உட்புற சுரப்பிகள் இவை சுரக்கும் நீர்கள் அல்லது திரவங்கள் அனைத்தும் வெளியேற்ற நாளங்கள் எனப்படும் குழாய்கள் ஏதும் இல்லாத காரணத்தால் நிண நீர் திசுக்களில் அல்லது இரத்தத்தில் நேரடியாக கலந்து விடுகின்றன.இரத்த மண்டலத்தில் இரத்த ஓட்டத்தில் கலந்து கொண்டு உடலில் உள்ள அனைத்து திசுக்களுக்கும் உறுப்புகளுக்கும் போய் சேர்கின்றன.பிறகு தனது தனித்தன்மையை காட்டி உடலின் உறுப்புகளில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன.இத்தகைய நாளமில்லா சுரப்பிகள் சுரக்கும் திரவத்தைத்தான்  ஹார்மோன்கள் என்று அழைக்கப்படுகின்றன.இந்த ஹார்மோன்கள் 
   நமது உடலின் வளர்ச்சிக்கு,சிதையும் திசுக்கள் சீரடைதலுக்கு,அடிப்படை உணர்வுகளின் உந்துதலுக்கு,இன உணர்வுகளின் ஊக்கத்திற்கு,கோபம்,பயம்,கொடூரம்,சந்தோசம்,துயரம் போன்ற குணாதிசயங்களுக்கு,சூழ்நிலைக்கேற்றவாறு உடலினை தயார்செய்துகொள்வதற்கு,நம்மை தாக்கும் நோய்களில் இருந்து காத்துக்கள்வதற்கு,காதல் உணர்வுகளுக்கு என அனைத்து செயல்களுக்கும் காரணமாக இருக்கின்றன.
நம் உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் பற்றி காண்போம்.
(1)பிட்யூட்டரி சுரப்பி,(2)தைராய்டு சுரப்பி,(3)பாராதைராய்டு சுரப்பி,(4)தைமஸ் சுரப்பி,(5)அட்ரீனல் சுரப்பி,(6)பால் இன சுரப்பி,(7)கணைய சுரப்பி,(8)பீனியல் சுரப்பி ஆகியன ஆகும்.

   பிட்யூட்டரி சுரப்பி;-
               இது கண்கள் மற்றும் மூக்குக்கு பின்புறமாக சிறுமூளைக்கு அடியில் கபால குழியில் பயிறு வடிவத்தில் அல்லது முட்டை வடிவில் அமைந்து உள்ளது.இதன் எடை 0.5கிராம் ஆகும்.
அனைத்து நாளமில்லா சுரப்பிகளை திறமையாக பணி செய்ய தூண்டுவது பிட்யூட்டரி சுரப்பி ஆகும்.அதனால் இது சுரப்பிகளின் தலைவன் எனப்படும்.
                  இது வளர்ச்சி ஹார்மோன்,தைராய்டு ஊட்ட ஹார்மோன்,அட்ரீனல் ஊட்ட ஹார்மோன்,இனப்பெருக்க ஊட்ட ஹார்மோன் மற்றும்ஆக்ஸிடோசின்,வேசோபிரசின் ஆகிய ஹார்மோன்களை சுரக்கிறது.

   தைராய்டு சுரப்பி;-
               இது கழுத்தின் முன் பரப்பில் அமைந்து உள்ளது.இதன் எடை 28கிராம்.
இது தைராக்சின் மற்றும் டிரையோடோதைரானின் ஹார்மோன்களை சுரக்கிறது.

 பாராதைராய்டு சுரப்பி;-
           இது தைராய்டு சுரப்பியின் பின்புறத்தில் அமைந்து இருக்கும்.இவை நான்கு இருக்கும்.ஒவ்வொன்றும்0.05கிராம் எடை அளவு இருக்கும்.இது பாராதார்மோன்  என்னும் ஹார்மோனை சுரக்கிறது.இதன் பணி கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவற்றை கட்டுப்படுத்துவது ஆகும். 

தைமஸ் சுரப்பி;-
            மூச்சுக்குழாய் இரு பிரிவாக பிரிவதற்கு முன்பாக தைராய்டு சுரப்பிகளுக்கு சற்று கீழாக அமைந்து உள்ளது.இது தைமிக் ஹ்யூமரல் ஃபேக்டர் என்னும் ஹார்மோனை சுரக்கிறது.

அட்ரீனல் சுரப்பி;-
     இது சிறுநீரகங்களின் மேற்பாகத்தில் அமைந்து உள்ளன.கார்டெக்ஸ் மற்றும் மெடுல்லா என்ற இரு பாகங்களை கொண்டது.ஒவ்வொன்றும் ஏழு கிராம் எடை கொண்டது.இது கார்டிசோன் மற்றும் அட்ரீனலின் ஹார்மோன்களை சுரக்கிறது.

பால் இன சுரப்பி;-
     இதன் சுரப்பிகளாக விரைகளும்,சூலகங்களும் விளங்குகின்றன.

கணைய சுரப்பி;-
            இது உட் புறமும் சுரக்கும்.வெளிப்புறமும் சுரக்கும்.கணையம் இன்சுலின் மற்றும் குளுகாகோன் என்ற இரண்டு ஹார்மோன்களை சுரக்கின்றது.

பீனியல் சுரப்பி;-
      இது பெருமூளை எபிபிசிஸ் என்னும் இடத்தில் ஒரு சிறிய உறுப்பாக அமைந்து உள்ளது.
 மனித உடலின் அதிசயங்கள் இன்னும் தொடரும்............
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...