30 மார்ச் 2014

இமெயிலை டிக்டேட் செய்யலாம்

மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.
 
Nagoorkani Kader Mohideen Basha
நீங்கள் சொல்ல சொல்ல இமெயில் தானாகவே எழுதப்பட்டால் எப்படி இருக்கும் ?
நீங்களும் இனி, இமெயிலை டிக்டேட் செய்யலாம்
நீங்கள் சொல்ல சொல்ல இ மெயில் தானாகவே எழுதப்பட்டால் எப்படி இருக்கும் ? இது ஒன்றும் சாத்தியமாகாத மாயம் இல்லை. பேச்சறியும் மென் பொருள் ( ஸ்பீச் ரிகக்னிஷன் சாப்ட்வேர்) கைவசம் இருந்தால், நாம் சொல்வதை அது புரிந்து கொண்டு எல்லாவற் றையும் வாக்கியங்களாக எழுதித்தரும். இப்போது இந்த வசதியை உங்கள் உலாவிக்கே (பிரவுசர்) கொண்டு வந்திருக்கிறது டிக்டேஷன்.இயோ இணைய தளம்.

இந்த தளத்தை உங்களது நட்பான உதவியாளர் என்று வைத்துக் கொள்ளுங்களேன். இதில் நீங்கள் இமெயிலை டிக்டேட் செய்யலாம் . கட்டுரை மற்றும் ஆவணங்களை டிக்டேட் செய்யலாம். நீங்கள் சொல்லுவது இருந்தாலும் அதை எழுத்து வடிவில் டைப் செய்து தருகிறது இந்த தளம்.

இதை பயன் படுத்துவதும் எளிதானது தான். இதன முகப்பு பக்கத்தில் மாணவர்களின் நோட்டு பக்கம் போல கோடுகளை கொண்ட குறிப்பேடு இருக்கிறது. அந்த குறிப்பேட்டின் கிழே உ ள்ள, டிக்டேட் செய்யவும் பகுதியை கிளிக் செய்து விட்டு , யாரோ நீங்கள் சொல்வதை எல்லாம் கேட்க காத்திருப்பது போல மளமளவென்று சொ ல்ல வேண்டும். இப்படி சொல்லப்படு வதை எல்லாம் அந்த குறிப்பேடு டைப் செய்து தரும்.

இமெயில் அனுப்புவதாக இருந்தால் , அதை டைப்
செய்யாம லே இப்படி டிக்டேட் செய்து அனுப்பிவிடலாம். அட நன்றாக இருக்கிறதே என வியக்கத்தோன்றுகிறாதா?

பொதுவாக பேச்சறியும் மென் பொருளை தனியே வாங்கி பயன்படுத்த வேண்டும். ஆ னால் இந்த தளமோ அதை தானே உள்ளீடு செய்து ,நம் ப ன்பாட்டிற்கு தருகிறது.

இந்த வசதி கூகுல் கூரோமிலேயே இருப்பது தான் . அது
எத்தனை பேருக்கு தெரியும் எனத் தெரியவில்லை. ஆனால்
இந்த தளம் கூகுல் குரோமில் உ ள்ளடங்கியுள்ள பேச்சறியும் மென்பொருள் வசதியை எல்லோரும் பயன்படுத்தக்கூடிய அழகான சேவையாக எளிதாக்கி தந்திருக்கிறது.

பணிச்சுமை மிக்கவர்களுக்கும் ,எழுதுவதை ஒரு வேலையாக நினைப்பவர்களுக்கும் இந்த சேவை பேரூதவியாக இருக்கும்.
இவ்வளவு சொல்லிவிட்டு, இப்போது ஏமாற்றம் தரக்கூடிய ஒரு தகவல். இந்த டிக்டேஷன் சேவையை ஆங்கிலத்தில் தான் பயன்படுத்த லாம்.

இந்தி , தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பயன்படுத்தும் வசதி இல்லை. இத்தனைக்கும், இந்தியரான அமீத் அகர்வால் தான் இந்த சேவையை உருவாக்கியுள்ளார். அப்படியும் இந்தியும் இல்லை , தமிழும் இல்லை.

அகர்வால் வாருங்காலத்தில் இந்திய மொழிகளை கொண்டு வருகிறாரா என பார்க்கலாம். இல்லை கூகு லு குரோம் அதை செய்ய காத்த்ருப்பாரா என்று தெரியவில்லை.

இணையதள முகவரி: https://dictation.io/

Posted on March 28, 2014 by vidhai2virutcham

நமக்கேற்ற குளிர்சாதனப்பெட்டி....

மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.வெயில் காலம் தொடங்கிவிட்டது!.எளிமையான குளிர்சாதனம் இதோ உங்களுக்காக....
               எளிதான சிறிய குளிர் சாதன பெட்டி. முயற்சி செய்து பாருங்கள், தவறாமல் நண்பர்களிடம் பகிருங்கள்
கோடை காலம் தொடங்கிவிட்டது! தமிழ்நாட்டிற்கு மின்வெட்டும் தொடங்கிவிட்டது!

கோடை காலத்தில் வீட்டில் உள்ள உணவுப்பொருள்களை குளிர்சாதன பெட்டி இல்லாமல் கெடாமல் குளிர்ச்சியுடன் வைத்துக்கொள்ள இந்த இயற்கை முறையை பயன்படுத்தலாம்.

ஒரு சிறிய மண்பானையை எடுத்து ஒரு பெரிய மண்பானை உள்ளே வைத்துக் கொள்ளவேண்டும். இவை இரண்டிற்கும் இடையே ஈரமான மணல் நிரப்பி, உணவுப்பொருள்களை சிறிய மண்பானையில் வைத்து ஈரபதத்துடன் உள்ள துணி கொண்டு மூடிவைக்க வேண்டும்.

இந்த நீர் ஆவியாகும் போது உள்ளே இருக்கும் வெப்பம் இழுக்கப்பட்டு, உணவுப்பொருள்களை குளிர்ச்சியுடன் வைத்துக்கொள்ள உதவும்.

இவ்வாறு செய்வதனால் மூன்று நாட்களில் அழுகிவிடும் பொருட்கள் கூட மூன்று வாரங்கள் வரை அழுகாமல் நீடித்து இருக்கும். இது ஒரு இயற்கையான, பக்கவிளைவுகள் இல்லாத, மலிவான மற்றும் பயன்படுத்த எளிதான சிறிய குளிர் சாதன பெட்டி. முயற்சி செய்து பாருங்கள், தவறாமல் நண்பர்களிடம் பகிருங்கள்!

தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள்-தமிழில்-2014

மரியாதைக்குரியவர்களே, 

                                    வணக்கம்.

             'கொங்குத்தென்றல்' வலைப்பக்கத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.
             'நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு' வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ள வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு வாசகங்களை பகிர்ந்து உள்ளேன்.
                    
               வாக்களிப்பதன் அவசியம் குறித்து புதிய வாசகங்களை உருவாக்கிக் கொடுத்த 
         'கோபி கல்வி மாவட்டத்தின்' கல்வி நிறுவனங்களான,

 (1)கோபி கலை அறிவியல் கல்லூரி - கோபிசெட்டிபாளையம், 
 (2)சத்தி காமதேனு கலை அறிவியல் கல்லூரி - சத்தியமங்கலம்,  (3)ஸ்ரீராகவேந்திரா மேனிலை பள்ளி - சத்தியமங்கலம் ,
(4)அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி - ஆசனூர், (5)டிவைன் மெட்ரிக் பள்ளி-தாளவாடி. 
ஆகியவற்றிற்கும் & மாணவ,மாணவியருக்கும்  சமூக ஆர்வலர்களுக்கும்
                   நன்றிகள் பல....
      
       வாக்காளர் உணரவேண்டிய உண்மைகள்;
 (1)வாக்குரிமை நமது அடிப்படை உரிமை,

(2) நமக்கு கிடைத்திருக்கும் தார்மீக உரிமை வாக்குரிமை,

(3) வாக்களிப்பது ஜனநாயக கடமை,

(4)வாக்களிப்பது நமது வாழ்வுரிமை,

(5)ஜனநாயகம் காக்க வாக்களிப்போம்,

(6)தவறாமல் வாக்களிப்போம்,சமுதாயத்தை மேம்படுத்துவோம்,

(7)நமது வாக்கு நாட்டின் போக்கு,

(8)வாக்கின் வலிமை தேசத்தின் வலிமை,

(9)ஓட்டு என்ற அதிகாரம் செலுத்துவோம்,ஆட்சி செய்ய உத்தரவிடுவோம்.

(10)வாக்களிப்பது ஐந்தாண்டு ஆட்சியை தீர்மானிக்கும் உரிமை,

(11)வாக்களிப்போம் வாழ்வுரிமை காப்போம்,

(12)நல்லாட்சி அமைய வாக்களிப்போம்

(13)அனைவரும் வாக்களிப்போம் ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம்,

(14)சிந்திப்போம் சுயசிந்தனையில் வாக்களிப்போம்,

(15)சுதந்திரமாக வாக்களிப்போம்,சுதந்திரத்தை பேணி காப்போம்,

(16) யாருடைய தூண்டுதலும் இல்லாமல் வாக்களிப்போம்,

(17)மற்றவர்கள் சொல்வதை கேட்காமல் மனசாட்சிப்படி வாக்களிப்போம்,

(18)நல்லாட்சியை தேர்ந்தெடுப்பதே நமது முதல் கடமை,

(19)நமக்கு இருப்பது ஒரே ஓட்டு,தவறாமல் வாக்களிப்போம்,

(20)வாக்களிப்பு என்பது நம்மை ஆளவேண்டியருக்கு நாம் கொடுக்கும்  உத்தரவு,

(21)நமது வாக்கு நாட்டின் தலை எழுத்தையே மாற்றியமைக்கும்,

(22)வாக்களிப்போம் சமூகத்தை வளப்படுத்துவோம்,

(23)நயவஞ்சக பேச்சுக்களை நம்பாதீர்,நல்லவருக்கே வாக்களிப்பீர்,

(24)வாக்காளர் என்பதில் பெருமை வாக்களித்தால் மட்டுமே,

(25)நம்மை ஆள்பவரை நாமே தீர்மானிப்போம்,நியாயமாக வாக்களிப்போம்,

(26)எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே,அனைவரும் வாக்களிப்போம்,

(27)நமக்கு நாமே எஜமானர் நேர்மையாக வாக்களிப்போம்,

(28)ஓட்டுப் போடுவது நமது உரிமையும் கடமையும் ஆகும்,

(29)எவருக்கும் வாக்களிக்க விருப்பமில்லையா "நோட்டா'' பட்டன் அழுத்துவோம்,

(30)எனது வாக்கு எனது உரிமை,

(31)விரல் நுனியில் தேசத்தின் தீர்ப்பை எழுதுவோம்,

(32)எனது வாக்கு விற்பனைக்கு அல்ல,

(31)காசு,பணம் வாங்காமல் கண்ணியமாக வாக்களிப்போம்,

(32)மனதில் உறுதி வேண்டும்,கையூட்டு பெறாமல் வாக்களிக்க வேண்டும்,

(33)எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே,எந்த இனாமும் வாங்காமல் வாக்களிப்போம்,

(34)ஓட்டுக்கு பணம் பெற்றால் ஒரு வருடம் ஜெயில் தண்டனை,

(35)வாக்களிக்க பணம் கொடுப்பதும் பணம் வாங்குவதும் குற்றம்,

(36)மதுபானம்,பிரியாணி,பணம் என ஒருநாள் கொண்டாட்டத்திற்கு ஐந்து வருட ஆட்சியை வீணடிக்கலாமா?

(37)நம் வாக்கினை விற்கலாமா - நல்லாட்சியை தொலைக்கலாமா?

(38)வாக்கை விற்க மாட்டேன்,எதிர்காலத்தை வீணடிக்க மாட்டேன்,

(39)விலை பெற்று வாக்களிக்க விட்டில்பூச்சிகளா நாம்,

(40)வலுவான ஜனநாயகத்திற்கு விறுவிறுப்பாக வாக்களிப்போம்,

(41)வாக்கின் வலிமை மறந்துவிட - நாம் என்ன கொம்பை மறந்த மாடுகளா? நன்றாக சிந்திப்போம்,நல்லவருக்கே வாக்களிப்போம்,

(41)நமது அடிப்படை உரிமைகளை வழங்குவது ஜனநாயகமே,அனைவரும் வாக்களிப்போம்,

(42)பணமோ,இனாமோ வாங்காமல் மனச்சாட்சிப்படி வாக்களிப்போம்,

(43)நம்மை ஆளவேண்டியவரை தீர்மானம் செய்வோம்,நல்லவருக்கே வாக்களிப்போம்,

(44)பணத்திற்கு ஆசைப்பட்டு உரிமையை இழக்கலாமா?

(45)அற்ப சுகத்திற்காக ஐந்து வருடத்திற்கு அடிமையாகலாமா?

(46)இன்று கை நீட்டி பணம் வாங்கினால்? நாளை விரல் நீட்டி பேசமுடியாது,
சிந்திப்பீர் நல்வாக்கினை அளிப்பீர்.

(47)வாக்களிப்பது இன்றியமையாத கடமை,

(48)மருத்துவமனை,ரேசன்கடை,இலவசங்கள்,மதுக்கடை,சினிமா,கேஸ் சிலிண்டர் பெற,கரண்ட் பில் கட்ட,எல்.ஐ.சி.பில் கட்ட,வங்கி கணக்கு கட்ட,கிரிக்கெட் பார்க்க,அன்றாடம் டி.வி. சீரியல் பார்க்க என பொன்னான நேரங்களை வீணடிக்கும் நாம் வாக்களிக்க மட்டும் சலிப்பு காட்டலாமா?வாக்களிப்போம் நமது தார்மீக உரிமையை உறுதிப்படுத்துவோம்,

(49)நம் வாக்கை விற்பது ஐந்து வருடங்களை விற்பது போலாகும்,

(50)வாக்களிப்பு பற்றிய புரிதல் அவசியமாகும்.எனவே பொறுமை இழக்காதீர், புறக்கணிப்பு செய்யாதீர்,
        வாக்களிப்போம் - வலிமையான ஆட்சி அமைப்போம்,

(51)கட்சிகளையும்,தலைவர்களையும் மனதில் வைக்காதீர் மனசாட்சிப்படி வாக்களிப்பீர்,

(52)நமது வாக்கு தர்மத்தை நிலைநாட்டும்,

(53)நம் விரல் நுனியில் வைக்கும் அடையாள 'மை' - சமூக அழுக்கை சலவை செய்யும்,வாக்களிப்போம்.

(54) இன்று நமக்கு தேவை?  வாக்களிப்பதற்கான பக்குவமும் அக்கறையுமே,

(55)சொந்த கரங்களால் ஓட்டு போடும் வாக்காளர்களே,சொந்த சிந்தனையால் ஓட்டு போடுங்கள்,

(56)நாட்டில் வளர்ச்சி ஏற்படவும்,ஊழலை ஒழிக்கவும் ஓட்டு போடுங்கள்,

(57)வாக்காளர் என்பதில் பெருமை கொள்வோம்,வாக்களிக்க தயார் ஆவோம்,

(58)நமது வாக்குப்பதிவு நம்ம கருத்துரிமை,

(59)போலியான வாக்குறுதிகளை நம்பாதீர்! பொறுப்பாக வாக்களிப்பீர்,

(60)பிடித்த கட்சி என்று பார்க்காதீர்! அதுவே நமக்கு பாதிப்பு,

(61)பழகிப்போன சின்னம் என்று பாராதீர்!,பாதகத்தை தேடாதீர்,

(62)தெரிந்த வேட்பாளர்! என்று பார்க்காமல் எச்சரிக்கையாக வாக்களிப்பீர்,

(63) பழங்காலத்து கொள்கை! என தயங்காதீர்,தன்னிலை இழக்காமல் வாக்களிப்பீர்,

(64)நல்வாக்கு நாம் அளிப்போம்,நல்லவருக்கே அதை அளிப்போம்,
(65)வாக்களிப்பது புனிதமான கடமை ஆகும்,

(66)MY VOTE - MY GOVERNMENT - MY INDIA 

(67)MY VOTE NOT FOR SALE

(68)பணத்திற்கு மயங்கி பல நன்மைகளை இழக்கலாமா?

(69)எனக்கென இருப்பதுஒரே ஓட்டு,அதை வீண்டிக்க மாட்டேன்,

(70)என் வாக்கு என் எதிர்காலத்தின் குரல்,

(71) நமது வாக்கு ஐந்து வருட ஆட்சிக்கான சக்தி,

(72)வேட்பாளர்கள் எவரும் வேண்டாம் என்றால் ''எவருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை'' என்று ''நோட்டா'' வுக்கு வாக்களிப்போம்.

             தேர்தலில் அதிருப்தியடைந்த மக்களே,'' நம்முடைய ஒரு வாக்குப்பதிவால் எல்லாம் சரியாகிவிடுமா?'' என்ற மனப்பான்மையில் வெறுப்புடன் வாக்களிக்க மறுக்க வேண்டாம்.
''எவருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை''  
                                                   என்ற பட்டனும் உள்ளது.
    தேர்தல் நடத்தை விதிகள் 1961 ஆம் ஆண்டு 49 - ஓ விதியின்படி
எல்லா வேட்பாளர்களையும் நிராகரிக்க சட்டப்படி அனைவருக்கும் உரிமை உண்டு.
         அதனால் ''எவருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை''. 
அதாவது ( NOTA -  None Of The Above)  'நோட்டா' என்னும் விருப்பத்தினையும் வாக்குப்பதிவு செய்யலாம்.
              ''நோட்டா'' பட்டன்  இந்த ஆண்டு  வாக்குப்பதிவு எந்திரத்திலேயே பொருத்தப்பட்டுள்ளது. 'எவருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை' என்ற ''நோட்டா'' பட்டன் அனைத்து வாக்கு எந்திரங்களிலும் கடைசியில் இருக்கும்.
இது தேர்தல் மற்றும் வாக்கு பற்றிய புரிதலுக்கான பதிவு.

29 மார்ச் 2014

இஸ்லாமியர்களும்-இந்திய சுதந்திர போராட்டமும்.

மரியாதைக்குரியவர்களே,

வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
          வள்ளல் முஹம்மது ஹபீப் – நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அவர்களால் ஹிந்த் கே சேவக் (இந்தியாவின் சேவகர்) என்று அழைக்கப்பட்டவர் -

 You give me blood and I will give you Freedom என்று நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் தேசவிடுதலைக்காக ரத்தம் சிந்த அழைப்பு விடுவித்த போது, அவரது இந்திய தேசிய ராணுவத்தில் (Indian National Army) நுற்றுக்கணக்கான இஸ்லாமிய இளைஞர்கள் இணைந்தனர். பர்மா, மலேசியா, சிங்கப்பூரில் வியாபாரங்களிலும் தொழில்களிலும் ஈடுபட்டிருந்த பல இளைஞர்கள் அவரது ராணுவத்தில் இணைவதில் முந்திக்கொண்டனர். நேதாஜி 1943 ஜுலை 2 – இல் சிங்கப்பூரில் ஆரம்பித்த ஆசாத் ஹிந்த் சர்க்கார் என்ற தற்காலிக சுதந்திர இந்திய அரசாங்கத்தின் மந்திரி சபையில் ராணுவ பிரதிநிதிகளாக லெப் கர்னல்ஸ் அஸீஸ் அஹமது, எம்.இஸட்கியானி, இஷான் காதிர், ஷாநாஸ்கான் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.* மேலும் கரீம் கனி, டி.எம்.கான், ஹபிபுர்ரஹ்மான் ஆகியோரும் லெப்.கர்னல்ஸ் ஆகப் பணியாற்றியுள்ளனர். இதில் லெப். கர்னல் ஹபிபுர்ரஹ்மான் தான் நேதாஜியின் இறப்பு பற்றி உறுதி செய்யும், ‘விமான விபத்து நடந்தது உண்மைதான்’ என்று கூறியவர்.** பிரிட்டீஷாரால் சுரண்டப்பட்டு, அவ்வாறு சுரண்டுவதற்கு வசதியாக இருக்கவேண்டும் என்பதற்காகவே எழுத்தறிவின்றி வைக்கப்பட்டிருக்கும் கோடிக்கணக்கான பட்டினி இந்தியர்களின் நிலை கண்டு இரங்கி, தனது உறவினரில் தந்தை முதற்கொண்டு 80 பேர் பிரிட்டீஷ் இந்திய ராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நேரத்தில், தேசவிடுதலைக்காக நேதாஜி படையில் இணைந்தவர்தான் ஷாநவாஸ்கான். 1943 ஜுலை 2 – ஆம் தேதி சிங்கப்பூரில் ‘ஆஸாத் ஹிந்த் சர்க்கார்’ (Azad Hind Government) என்ற இந்திய தேசிய தற்காலச் சுதந்திர அரசை நிறுவிய நேதாஜி சுபாஸ் சந்திர போஸ், அவ்வரசின் நிர்வாக செலவிற்காகவும்: ’ஆசாத் ஹிந்த் பவுச்’ என்ற இந்திய தேசிய ராணுவத்தை நடத்துவதற்காகவும் ரிஸர்வ் பேங்க் ஒன்றை நிறுவினார். அவ்வங்கிக்கான நிதியை சிங்கப்பூர், மலேசியா, பர்மா போன்ற கீழை நாடுகளில் திரட்டினார். அவ்வாறு நிதி திரட்டும் கூட்டம் ஒன்றை பர்மாவின் தலைநகரான இரங்கூனில் கூட்டினார். கூடிஇருந்த அந்நகரத்து வியாபார பிரமுகர்களிடம் நேதாஜி பேசும்போது, “தேசவிடுதலைக்காகப் போராடும் நம் இந்திய தேசிய ராணுவத்திற்கு அள்ளி வழங்குங்கள்” – என்று வேண்டுகோள் விடுத்தார். வருகைதந்த வியாபாரப் பெருமக்கள் அனைவரும் ஒன்று கூடிப் பேசி, “எங்கள் வருமாணத்தில் 10 சதவிகிதத்தை இந்திய தேசிய ராணுவத்திற்கு தொடர்ந்து வழங்குகிறோம்” என்று அறிவித்தனர். இவ்வறிவிப்பைக் கேட்ட நேதாஜி சற்று கோபத்துடன், தாய்நாட்டின் விடுதலைக்காக ரத்தம் சிந்தும் எங்கள் வீரர்கள் ஐந்து சதவிகிதம் 10 சதவிகிதம் என்று கணக்குப் பார்த்தா சிந்துகின்றனர்? நீங்கள் நிதி வழங்க பார்க்கின்றிர்களே ! – என்று பேச, கூட்டத்திலிருந்து தலையில் தொப்பி, தாடியுடன் முதியவர் ஒருவர் மேடையை நோக்கி வருகிறார். வந்தவர் நேதாஜியின் கையில் ஒரு காகிதத்தைக் கொடுக்கிறார். அதை வாங்கிப் படித்த நேதாஜியின் கண்களில் நீர் திரண்டு இமை வரப்புகளுக்குள் முட்டி மோதி நிற்கிறது. நேதாஜி உணர்ச்சி வசப்படும் வகையில் அக்காகிதத்தில் அப்படி என்ன தான் எழுதப்பட்டிருந்தது? “ரங்கூன் மாநகரில் எனக்குச் சொந்தமான ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வியாபார நிறுவனங்களை இந்திய தேசிய ராணுவத்திற்காக நான் எழுதி வைக்கிறேன்” – என்ற கொடை வாசகங்கள் அக்காகிதத்தில் இடம் பெற்றருந்தன. அவ்வாசகங்களை எழுதிய கரங்களுக்குச் சொந்தக்காரரான வள்ளல் முஹம்மது ஹபீப் என்ற அந்த முதியவரை நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் ஆரத்தழுவியவராக, இவர்தான் ஹிந்த் கே சேவக் (இந்தியாவின் சேவகர்) என்ற பெருமிதத்துடன் அறிவித்தார்.
             இவ்வாறு நேதாஜி படை நடத்துவதற்கான பொருளாதாரப் பின்னணியை உருவாக்கிக் கொடுத்தவர்களுள் பெரும்பாலோர் கீழை நாடுகளில் வாழ்ந்த முகம்மது ஹபீப் போன்ற முஸ்லிம் தனவந்தர்களாவர். நேதாஜியின் மாலைக்கு மூன்று லட்சம் பிரிட்டீஷ் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட நேதாஜியின் ‘இளமையின் கனவு’, ‘நேர்வழி’ ஆகிய இரண்டு புத்தகங்களைப் படித்து தேசிய உணர்வால் தூண்டப்பட்டு தனது 21 வயதில் இந்திய தேசிய ராணுவத்தில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டவர் எம்.கே.எம்.அமீர் ஹம்சா. எண்பது வயது முதியவராக இன்று சென்னையில் வாழ்ந்து வரும் இத்தியாகச் செம்மல் பல லட்சங்களைத் துணிச்சலுடன் இந்திய தேசிய ராணுவத்திற்கு வாரி வழங்கியவராவார். பிரிட்டீஷாரால் நாடுகடத்தப்பட்ட வங்கத்தைச் சார்ந்த ராஷ்பிஹாரி போஸ் ஆரம்பித்த ‘இந்திய சுதந்திர லீக்’ அமைப்பில் தன்னை முதல் நபராகப் பதிவு செய்தார். பின்னர் நேதாஜிபுரட்சிப் படைக்குத் தலைமை ஏற்ற போது அதிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியதற்காகப் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியம் விதித்த மரண தண்டனையிலிருந்து தப்பியவர். 1943 – இல் நேதாஜி ரங்கூனுக்கு முதலில் சென்றபோது நடந்த விழாவில் அவருக்கு அணிவிக்கப்பட்ட மாலைகளைப் போராட்ட நிதிக்காக ஏலம் விட்டனர். அம்மாலைகளில் ஒன்றை மூன்று லட்சம் ரூபாக்கு ஏலத்தில் எடுத்தார். இந்திய தேசிய ராணுவத்தில் அமீர் ஹம்சா பணியாற்றியதைப் பாசத்தின் காரணமாக அவரது தந்தை விரும்பவில்லை. இரண்டு நாள் அவரை வீட்டில் பூட்டிவைத்துவிட்டார். இதனை அறிந்த நேதாஜி அமீரையும் அவரது தந்தையையும் அழைத்து வரச்செய்தார். நாடு சுதந்திரம் அடைய வேண்டிய அவசியத்தை உணர்ச்சிப் பொங்க எடுத்துரைத்தார். நேதாஜியின் உரையாடலைக் கேட்டு உணர்ச்சி வசப்பட்ட இவரது தந்தையார், தனது சட்டைப் பையிலிருந்த காசோலைப் புத்தகத்தை எடுத்து இரண்டு லட்சத்து முப்பதாயிரத்துக்கான ஒரு காசோலையை எழுதி நேதாஜியிடம் கொடுத்ததோடு தன் மகனையும் முழுமையாக நேதாஜியிடம் ஒப்படைத்தார். 23-01-1944 – இல் நேதாஜின் 47 – வது பிறந்த நாளின் போது ஒரு லட்சத்துக்கான காசோலையை இவர் நேதாஜிடம் வழங்கியதோடு, தனது வைர மேததிரத்தை நேதாஜிக்கு பிறந்த நாள் பரிசாக அணிவித்தார். அமீர் ஹம்சாவுக்கும் அவரது தந்தையாருக்கும் நேதாஜி புத்தாடைகளை வழங்கி கௌரவித்தார்.* 23-01-1944 இல் நேதாஜியின் 47-வது பிறந்த நாள் விழா ரங்கூன் ஜுப்ளி அரங்கில் நடைபெற்றது. பர்மா வாழ் தமிழர்கள் நேதாஜிக்கு எடைக்கு எடை தங்கம் கொடுத்தனர்.எதிர்பார்த்ததை விட மூன்று மடங்கு அதிகமாகத் தங்கமும் நகைகளும் குவிந்தன. – அமீர் ஹம்சா. தனது செல்வத்தை எல்லாம் நேதாஜியின் சுதந்திரப் பணிக்கு வழங்கிவிட்டு, நேதாஜி தனக்கு வழங்கிய சட்டைத் துணியை இன்றளவும் பாதுகாத்தவராக, பழைய தியாக நாட்களை நினைவில் பசுமையுடன் ஏந்தியவராக இன்றும் சென்னையில் வாழ்ந்து வரும் இப்பெருமகனை, இந்திய சுதந்திரப் பொன்விழா ஆண்டில் யார் கௌரவித்தார்? 1945 – ஆம் ஆண்டு நவம்பர் 5- ஆம் தேதி இந்திய தேசிய ராணுவத்தினர் மீதான வழக்கு விசாரணை டெல்லி செங்கோட்டையில் ஆரம்பமானது. இவ்விசாரணையில் முதலில் உட்படுத்தப்பட்ட மூவருள் ஒருவர் ஷாநவாஸ்கான் ஆவார். மற்ற இருவர் கேப்டன் ஸேகால், லெப். தில்லான். இவர்களுக்காக ஜவஹர்லால நேருவும், ஆஸிப் அலியும் வாதாடினர். இவ்விசாரணையின் போது ஷாநவாஸ்கான் அளித்த வாக்குமூலம் அன்று தேசம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ‘இந்த விசாரணையை பிரிட்டீஷ் அரசு நடத்தியிருக்கக்கூடாது’ என்று ஆங்கிலப் பத்திரிக்கைகள் எழுதும் அளவிற்கு, ஷாநவாஸ்கானின் சாட்சியங்கள் போராட்ட நியாயங்களை உறுதி செய்வனவாக அமைந்தன.*** இவ்வழக்கு விசாரணையில் முதன் முதலாக இந்திய தேசிய ராணுவ வீரர் ஒருவர் 23-08-1945-இல் தூக்கிலிடப்பட்டார். அந்த வீர இளைஞனின் பெயர் ஷாகுல் ஹமீது. நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் தேச விடுதலைக்காக ஜப்பானியர் உதவி வேண்டி, பர்மாவைத் தளமாகக் கொண்டு படை திரட்டிக் கொண்டிருந்த காலத்தில் ரங்கூன் யார்க் சாலையில் உள்ள பகதுர்ஷாவின் சமாதியை பல லட்சரூபாய் செலவில் புதுப்பித்தார். பகதுர்ஷா சமாதியில் இருந்துஒருபிடி மண்ணை எடுத்து தமக்கு மக்கள் அன்புடன் அளித்த தங்க வாளின் பிடியில் அடைத்து,*அவ்வாளினை ஓங்கிப் பிடித்தவராக, “நம் வீரர்களின் நெஞ்சில் நம்பிக்கையும், இம்மஹானிடம் இருந்தது போல் தேசபக்தியும் அணுவளவாவது இருக்கும் வரையில், இந்துஸ்தான் வாள் மிகக் கூர்மையாக இருப்பதுடன், ஒரு நாள் லண்டனின் வாசற்படியையும் தட்டும்..!“ – என்று சபதமேற்றார். இந்திய சுதந்திர வரலாற்றில் கம்பீரமிக்கப் போராளியான நேதாஜிக்கே … ஒருதூண்டுதலை ஏற்படுத்திய பெருமகன் மாமன்னர் பகதுர்ஷா ஜஃபர். 1973ம் ஆண்டு தமிழக அரசு புத்தகம் ஒன்றை வெளியிட்டது. அதில் நேதாஜியின் தேசிய இராணுவத்தில் பணியாற்றிய தமிழர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தது. அப்பட்டியலில் 25% மேற்பட்ட முஸ்லி­ம்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
           அவர்களின் விபரம் வருமாற
          மனிமொழி மவ்லானா இராஜகிரி அப்துல்லா இளையான்குடி கரீம் கனி திருப்பத்தூர் அபூபக்கர் திருப்பத்தூர் தாஜிதீன் அத்தியூத்து அபூபக்கர் பக்கரி பாளையம் அனுமன் கான் சென்னை அமீர் ஹம்சா சென்னை ஹமீது செங்குன்றம் கனி வண்ணாரப்பேட்டை ஹயாத்கான் புதுவலசை இபுராஹிம் பார்த்திபனூர் இபுராஹிம் வனரங்குடி இபுராஹிம் இளையான்குடி அப்துல் கபூர் மேலூர் அப்துல் ஹமீது சோழசக்கர நல்லூரி அப்துல் ஜப்பார் தத்தனனூர் அப்துல் காதர் பட்டுக்கோட்டை அப்துல் காதர் திருப்பூர் அப்துர் ரஜாக் காரிவிப்பட்டினம் அப்துல் மஜித் குருவம் பள்ளி அப்துல் மஜீத் கண்ணாத்தாள் பட்டி அப்துல் முத்தலிபு லெப்பைக் குடிகாடு அப்துல் சலாம் ராம்நாடு அப்துல் வஹாப் மானாமதுரை அப்துல் பாசித் திரிவிடைச் சேரி அப்துல் வஹிப் அத்தியூத்து இபுராஹிம் ô சென்னை ஜாபர் ஹக்கிமி சிங்கம் மங்களம் ஜெய்னுல் ஆபிதீன் திருப்பத்தூர் காதர் பாட்ஷா புதுவலசை முஹம்மது லால் கான் பார்த்திபனூர் கச்சி மைதீன் தஞ்சை முஹம்மது தாவூது அறந்தாங்கி முஹம்மதுசெரிபு திருச்சி வரகனேரி முஹம்மது சுல்தான் வடபழனி சென்னை முஹம்மது யூசுப் தூத்துக்குடி முஹம்மது கல்லுரிஜனி சிவகங்கை முஹம்மது இபுராஹிம் சென்னை முஹம்மது உமர் மதுரை மொய்தீன் பிச்சை அம்மன்சத்திரம் முஹம்மது மீராசா திருப்பத்தூர் பீர் முஹம்மது கும்பகோணம் ரஹ்மத்துல்லா குடியாத்தம் நஜீமுல்லாஹ் கிருஷ்ணகிரி தாவூத் ஷாயிபு இராமநாதபுரம் சையது கனி பரங்கிப்பேட்டை தாஜிதீன் மன்னர்குடி சிக்கந்தர் கம்பம் சிக்கந்தர் முதுகுளத்தூர் சுல்தான் கும்பகோணம் சுல்தான் இராமநாதபுரம் தாஜிதீன் 
                 வரலாறு என்றைக்கும் மாறாதது,,சுதந்திரத்தை நேசிக்கும்..ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் ஒவ்வொருவரின் நெஞ்சிலும் இவர்களின் தியாகங்கள் என்றென்றும் நிலைத்திருக்கும்..

இந்திய தேர்தல் அட்டவணை-2014

மரியாதைக்குரியவர்களே,
                   வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு இனிதே வரவேற்கிறோம்.இந்திய தேர்தல் அட்டவணை-2014 நடைபெறும் தேதிகள் விவரம் கீழ்கண்டவாறு .........

தேர்தல் அட்டவணை-2014

மாநிலம் / யூனியன் பிரதேசம் மொத்தத்
தொகுதிகள்
தேர்தல் கட்டங்களும், தேதிகளும் 
  • கட்டம் 1
  • ஏப்ரல் 7, 2014
  • கட்டம் 2
  • ஏப்ரல் 9, 2014
  • கட்டம் 3
  • ஏப்ரல் 10, 2014
  • கட்டம் 4
  • ஏப்ரல் 12, 2014
  • கட்டம் 5
  • ஏப்ரல் 17, 2014
  • கட்டம் 6
  • ஏப்ரல் 24, 2014
  • கட்டம் 7
  • ஏப்ரல் 30, 2014
  • கட்டம் 8
  • மே 07, 2014
  • கட்டம் 9
  • மே 12, 2014
ஆந்திரா 42 - - - - - - 17 25 -
அருணாச்சலப் பிரதேசம் 2 - 2 - - - - - - -
அசாம் 14 5 - - 3 - 6 - - -
பீகார் 40 - - 6 - 7 7 7 7 6
சத்தீஸ்கர் 11 - - 1 - 3 7 - - -
கோவா 2 - - - - 2 - - - -
குஜராத் 26 - - - - - - 26 - -
அரியானா 10 - - 10 - - - - - -
இமாசலப் பிரதேசம் 4 - - - - - - - 4 -
ஜம்மு & காஷ்மீர் 6 - - 1 - 1 1 1 2 -
ஜார்கந்த் 14 - - 5 - 5 4 - - -
கர்நாடகா 28 - - - - 28 - - - -
கேரளா 20 - - 20 - - - - - -
மத்தியப் பிரதேசம் 29 - - 9 - 10 10 - - -
மகாராஷ்டிரா 48 - - 10 - 19 19 - - -
மணிப்பூர் 2 - 1 - - 1 - - - -
மேகாலயா 2 - 2 - - - - - - -
மிசோரம் 1 - 1 - - - - - - -
நாகலாந்து 1 - 1 - - - - - - -
ஒடிசா 21 - - 10 - 11 - - - -
பஞ்சாப் 13 - - - - - - 13 - -
ராஜஸ்தான் 25 - - - - 20 5 - - -
சிக்கிம் 1 - - - 1 - - - - -
தமிழ்நாடு 39 - - - - - 39 - - -
திரிபுரா 2 1 - - 1 - - - - -
உத்தரப் பிரதேசம் 80 - - 10 - 11 12 14 15 18
உத்தரகண்ட் 5 - - - - - - - 5 -
மேற்கு வங்கம் 42 - - - - 4 6 9 6 17
அந்தமான் நிக்கோபார் தீவுகள் 1 - - 1 - - - - - -
சண்டிகர் 1 - - 1 - - - - - -
தாத்ரா நகர் ஹாவேலி 1 - - - - - - 1 - -
தாமன் தையு 1 - - - - - - 1 - -
இலட்சத்தீவுகள் 1 - - 1 - - - - - -
டெல்லி 7 - - 7 - - - - - -
புதுச்சேரி 1 - - - - - 1 - - -
வாக்குப்பதிவு நடக்கும் தொகுதிகள் 543 6 7 92 5 122 117 89 64 41

வாக்குரிமை கவிதை

மரியாதைக்குரியவர்களே,
                 வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.இந்தப்பதிவில் வாக்குரிமை பற்றி ஒரு கவிதையினை காண்போம்.

வாக்குரிமை கவிதை - வ.கோவிந்தசாமி

வாக்குரிமை

இந்திய ஜனநாயகத்தின்
இன்றியமையா வாழ்வுரிமை
வாக்குரிமை!
மக்களாட்சியின் மாசற்ற
மகத்தான செல்வம்
வாக்குரிமை!
அடிமை வாழ்வை எண்ணி – அதில்
கொடுமை நிலையெண்ணி
விடுதலை வேட்கையிலே – அன்று
வீரர் பலர் இருந்தனர் – அவர்கள்
நித்தம் நித்தம் தம்
நிலையை எண்ணி – தம்
சித்தம் கலங்கி நின்றார் – அன்று
சிந்தையில் துணிவு கொண்டார். 
யுத்தம் பல புரிந்து
ரத்தம் பலர் சொரிந்து
பெற்றது இந்தக் குடியரசு – அதை
நன்றே பேணும் புவியரசு.
மக்கள் தானென்று
மகான்கள் மனத்தில் கொண்டு
வகுத்துத் தந்ததுவே
வாக்குரிமை!  
நாம் இந்திய நாட்டின்
குடிமகன் என்பதற்கு
ஓர் ஆதாரம் வாக்குரிமை! 
ஏர் பிடிக்கும் விவசாயி
தூறேடுக்கும் தொழிலாளி
வார்  பிடிக்கும் தினக் கூலி 
சேறு எடுக்கும் சிற்றாளும்
ஊராட்சி உறுப்பினராய்
ஊராளும் தலைவராய்
சட்டமன்ற உறுப்பினராய்
சட்டசபை மந்திரியாய் 
பாராளுமன்ற உறுப்பினராய்
பாரதப் பிரதமராய்
ஆவதற்கு அச்சாணியே
வாக்குரிமை! 
வாக்குரிமை இல்லையேல் வாழ்வுரிமை இல்லை! 
வாக்குரிமையே வாழ்வுரிமை! 
வாழ்க ஜனநாயகம்!  வாழ்க வாக்காளர் புகழ்!
                                         --வ.கோவிந்தசாமி,
                   இளநிலை உதவியாளர்,

                   அரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை.

பேருந்துகளில் கறுப்பு பெட்டியும்-கண்காணிப்பு கேமராவும்.

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
 கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.கறுப்புப்பெட்டியும்-கண்காணிப்பு கேமராவும் பேருந்துகளில் பொருத்தவேண்டும்.அதுபற்றி இதோ இந்த கட்டுரை படியுங்கள்.பதிவிட்ட திருமிகு.நாகூர் கனி காதர் மைதீன் பாஷா அவர்களுக்கு நன்றிங்க.
Nagoorkani Kader Mohideen Basha
விமானங்களில் உள்ளது போலவே சொகுசு பஸ்களில் கறுப்பு பெட்டி விரைவில் அறிமுகமாகிறது
விமானங்களில் உள்ளது போலவே, விரைவு பஸ்களிலும் கறுப்பு பெட்டி பொருத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக தமிழகம் உள்பட சில மாநில அரசு பஸ்களில் இதை அறிமுகப்படுத்த மத்திய சாலை போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.விமானங்களில் Ôபிளாக் பாக்ஸ்Õ என்றழைக்கப்படும் கறுப்பு பெட்டி உள்ளது. தரை கட்டுப்பாட்டு அறையுடன் விமான பைலட்கள் தொடர்பு கொண்டு பேசும் உரையாடல்கள், சத்தங்கள் எல்லாம் அதில் பதிவாகி விடும். விபத்தில் சிக்கும் விமானத்தின் கறுப்பு பெட்டியை கண்டுபிடித்து அதில் பதிவாகி உள்ள தகவல்களை ஆய்வு செய்வார்கள். அதன்மூலம் விமானத்தில் கடைசி கட்டத்தில் என்னென்ன நடந்தது என்பது தெரிந்து விடும். பைலட்களின் கவன குறைவா அல்லது சதியா என்பதெல்லாம் கறுப்பு பெட்டி தகவல்களை வைத்து கண்டுபிடித்து விடுவார்கள்.

அதுபோன்ற கறுப்பு பெட்டியை விரைவு பஸ்களிலும் பொருத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் சொகுசு பஸ்களில், விரைவில் கறுப்பு பெட்டிகளை பொருத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களுக்கு இடையே செல்லும் வால்வோ மற்றும் ஸ்கேனியா போன்ற சொகுசு பஸ்களில் கறுப்பு பெட்டிகள் பொருத்தப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அடுத்த வாரம் பெங்களூரில் மாநில போக்குவரத்து அதிகாரிகள், வால்வோ மற்றும் ஸ்கேனியா பஸ் தயாரிப்பாளர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அப்போது பஸ்களில் கறுப்பு பெட்டி பொருத்துவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.சொகுசு பஸ்கள் விபத்தில் சிக்கும் போது, பயணிகள் முன்பக்க இருக்கையில் மோதிக் கொள்வதாலேயே உயிரிழப்பு அதிகமாவது தெரிய வந்தது. அதை தடுக்க பஸ் பயணிகளுக்கு சீட் பெல்ட் வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது. பஸ்களில் கறுப்பு பெட்டி பொருத்துவதன் மூலம் டிரைவர்களின் நடவடிக்கைகளை அறிந்து நடவடிக்கை எடுக்க முடியும். டிரைவர்களும் பொறுப்பாக நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நோட்டா-வுக்கு வாக்களித்தால் என்ன பயன்?

மரியாதைக்குரியவர்களே,
                      வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.
       
Nagoorkani Kader Mohideen Basha
நோட்டாவால் பயன் உண்டா?
ஒவ்வொரு தேர்தலின் போதும் தேர்தல் சீர்திருத்தங்கள் பற்றி நிறைய பேசப்படுகிறது. வேட்பாளர்களின் சொத்து விவரங்கள், அவர்கள் மீதான வழக்குகள் எல்லாம் பகிரங்கமாக மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். தேர்தல் செலவுகளுக்கு கட்டுப்பாடு, பேனர், போஸ்டர்களுக்கு தடை என்று பல்வேறு சீர்திருத்தங்கள் வந்து விட்டாலும் அவை எல்லாம் இன்னும் தேர்தலை முறைப்படுத்தி விடவில்லை. ஜனநாயக ரீதியாக தேர்தல் நடைபெற்றாலும் மக்கள் விருப்பப்பட்டு, வேட்பாளர்கள் பற்றி நன்கு அறிந்து ஆராய்ந்து தேர்வு செய்கிறார்களா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும்.

இன்னமும் பணபலம்தான் பெரும்பாலும் தேர்தலை நிர்ணயிக்கிறது எனலாம்.
எனினும், இந்த தேர்தலில் ஒரு நல்ல விஷயம். தேர்தலில் போட்டியிடும் எந்த வேட்பாளரும் பிடிக்கா விட்டால், வாக்காளர்கள் அந்த எண்ணத்தை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக ‘நோட்டா‘ அறிமுகப்படுத்தப்படுகிறது. அதாவது, ‘மேற்கண்ட எவரும் இல்லை‘ என்று குறிப்பிடும் பட்டன், வாக்காளர் இயந்திரத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த பட்டனுக்கும் ஒரு சின்னத்தை வழங்க வேண்டுமென தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லை என்றால், வாக்களிக்க விரும்பவில்லை என்று தெரியப்படுத்த ஏற்கனவே 49(ஓ) என்ற வழிமுறை இருந்தது. ஆனால், அதை பதிவு செய்ய வாக்குச்சாவடி அலுவலரிடம் தனியாக ஒரு விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்ய வேண்டும். இதனால், அந்த வாக்காளரின் வாக்கு ரகசியமாக பதிவு செய்யப்படாது என்பதுடன், அவர் கட்சி ஏஜென்டுகளுக்கு அடையாளம் காட்டப்படுகிறார்.

இதனால்தான், இந்த பிரிவை செல்லாது என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பரில் ரத்து செய்தது. வாக்குப்பதிவு இயந்திரத்திலேயே ஒரு பட்டனை கொண்டு வர உத்தரவிட்டது. அப்படி வந்ததுதான் நோட்டா.

ஒரு தொகுதியில் வேட்பாளர்கள் எல்லாரையும் விட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் பதிவானால், மறுதேர்தல் நடத்துவதுதான் சரியானது. ஆனால், இதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.

எனவே, எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லை என்று ஒரு தொகுதியில் மெஜாரிடி வாக்காளர்கள் கூறினாலும், அந்த தேர்தல் ரத்து செய்யப்படாது. இதனால், நோட்டாவின் மூலம் பயன் உண்டா என கேள்வி எழுகிறது. எனினும், மக்களின் எண்ணத்தை வெளிப்படுத்த நோட்டா ஒரு நல்ல வாய்ப்புதான்.

தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பி, எம்எல்ஏக்களையே மக்களுக்கு பிடிக்காத பட்சத்தில் திரும்ப பெற வாய்ப்பு கேட்கப்பட்டு வருகிறது. இந்த காலகட்டத்தில், நோட்டா வாக்குகள் அதிகரிக்கும் தொகுதியில் மறுதேர்தல் நடத்துவது பற்றி தேர்தல் ஆணையம் சிந்திக்கலாம்.

25 மார்ச் 2014

சுயலாப தொண்டு நிறுவனங்கள்!

மரியாதைக்குரியவர்களே,
                 வணக்கம். 
                 கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.சமூக சேவை அமைப்புகள் அதாவது தொண்டு நிறுவனங்கள் இப்படியெல்லாம் குளறுபடிகள் செய்கின்றனவா?.இதோ தினமணி கட்டுரை படித்துப்பாரீர்.

First Published : 25 March 2014 02:37 AM IST
     தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என்கிற பெயரில் காளான்கள் போல உருவாகி இருக்கும் அமைப்புகள், வெளிநாட்டிலிருந்து நன்கொடை பெறவும், அரசு நிதியுதவி பெற்று, பெயருக்குப் போலிக் கணக்கெழுதி பெரும் பகுதியைச் சுருட்டிக் கொள்ளவும் செய்கின்றன என்கிற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி மத்தியப் புலனாய்வுத் துறை (ம.பு.து.) நடத்திய விசாரணையில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பற்றிய பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
120 கோடி மக்கள் தொகையுள்ள இந்தியாவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றில் 43,527 நிறுவனங்கள் கடந்த 2011-12 நிதியாண்டுப்
புள்ளிவிவரப்படி, வெளிநாட்டிலிருந்து கணிசமாக நன்கொடைகள் பெறுபவை. ஏறத்தாழ 12,000 கோடி ரூபாய் நன்கொடையாக இந்தியாவுக்கு வருகிறது. இதில் கணிசமான பகுதி, அமெரிக்காவிலிருந்து மட்டுமே பெறப்படுகிறது.
தில்லிதான் மிக அதிகமான வெளிநாட்டு நன்கொடைகள் பெறும் இடமாக இருந்து வருகிறது. யூனியன் பிரதேசமான தில்லியில் செயல்படும் 1,482 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே ரூ.2,285 கோடி ரூபாய் வெளிநாட்டு நன்கொடை கிடைத்
திருக்கிறது. தமிழகத்தில் 3,341 நிறுவனங்கள் ரூ.1,704 கோடி, ஆந்திரத்தில்  2,527 நிறுவனங்கள் ரூ.1,258 கோடி, மகாராஷ்டிரத்தில் 2,056 நிறுவனங்கள் ரூ.1,107 கோடி வெளிநாட்டு நன்கொடை பெற்றிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது.
இந்தியாவில் இயங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்
களுக்கு மிக அதிகமான நன்கொடைகள் அமெரிக்கா (ரூ.3,838 கோடி), பிரிட்டன் (ரூ.1,219 கோடி), ஜெர்மனி (ரூ.1,096 கோடி), இத்தாலி (ரூ.529 கோடி), நெதர்லாந்து (ரூ.418 கோடி) ஆகிய ஐந்து நாடுகளிலிருந்துதான் வருகின்றன. இந்த நன்கொடைகளில் 80 சதவீதம் கிறிஸ்துவ அமைப்புகளுக்கு வழங்கப்படுகிறது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
ஏறத்தாழ 20 லட்சம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சங்கங்கள் அல்லது அறக்கட்டளைகள் சட்டப்படி பதிவு செய்யப்பட்டிருந்தாலும் இவை பற்றிய துல்லியமான புள்ளிவிவரமோ, ஒவ்வொரு அமைப்பும் எவ்வளவு நன்கொடை யாரிடமிருந்து பெறுகிறது, எப்
படிச் செலவு செய்கிறது போன்ற விவரமோ மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இல்லை. இவற்றில் வெளிநாட்டு நன்கொடைகள் ஒழுங்காற்றல் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள்
2 சதவீதமாவது இருக்குமா என்பது சந்தேகம்தான்.
இந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் முறையாக கணக்கு வைத்திருப்பதோ, வருமான வரித் துறையிடம் கணக்குத் தாக்கல் செய்வதோ இல்லை என்று மத்தியப் புலனாய்வுத் துறை உச்சநீதி
மன்றத்தில் தெரிவித்திருக்கிறது. நீதிமன்ற வழிகாட்டுதல்படி, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளிடம் அந்தந்த மாநிலங்களில் செயல்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பற்றிய தகவல்
களையும், அவை பெறும் நன்கொடைகள் பற்றியும் ம.பு.து. விவரம் கேட்டது. ஆந்திரப் பிரதேசம், பிகார், தில்லி, ஹரியாணா, கர்நாடகம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஒடிசா, தமிழ்நாடு, சத்தீஸ்கர், இமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் எந்தவிதப் புள்ளிவிவரங்களையோ, தகவல்களையோ தந்து உதவவில்லை என்று ம.பு.து. உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.
கிடைத்திருக்கும் தகவல்படி, உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 5,48,194 நிறுவனம், கேரளத்தில் 1,07,797, மத்தியப் பிரதேசத்தில் 1,40,000, குஜராத்தில் 75,729 நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றில் பெருவாரியானவை மத்திய அரசிடமிருந்து தொடர்ந்து மானியங்கள் பெற்று வருகின்றன.
முன்னாள் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தங்கள் உறவினர்கள், பினாமிகள் பெயரில் இதுபோன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைப் பதிவு செய்து, மத்திய அரசின் நிதியுதவி பெற்று வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. வெளிநாட்டிலிருந்து நன்கொடையாக வரும் பணம் ஹவாலா மூலமாக இங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்ட அரசியல்வாதிகளின் கருப்புப் பணமாக இருந்தால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. தன்னார்வம் பாராட்டுக்குரியது. தொண்டும்தான். ஆனால் அந்த நிறுவனங்கள் முறை
யாகச் செயலாற்றுகின்றனவா என்பதும், நன்கொடையாகப் பெறும் பணம் முறையாக செலவிடப்படுகிறதா என்பதும் கண்காணிக்கப்
படாவிட்டால், அரசு எதற்கு, நிர்வாகம்தான் எதற்கு?
தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஒவ்வொன்றும் முறையான விசாரணைக்கும், கணக்குத் தணிக்கைக்கும் உட்படுத்தப்பட்டு, போலிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டால் மட்டுமே, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சுயலாப தொண்டு நிறுவனங்களாக செயல்படுவது தடுக்கப்படும்.
                                                             நன்றிங்க.
                                     என அன்பன்.பரமேஸ்வரன்.C.

23 மார்ச் 2014

பகத் சிங்

மரியாதைக்குரியவர்களே,
     வணக்கம்.கொங்குத்தென்றல்      வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.
          
                     மார்ச் 23: இந்திய இளைஞர்களின் எழுச்சி நாயகன் பகத்சிங் நினைவு தினம்.
                 பகத் சிங் இந்தியாவின் விடுதலை வரலாற்றில் ஒரு தனித்துவமான நாயகன். புரட்சிகரமான ஆயுதம் ஏந்திய ஒரு வீரனாக மட்டுமே நம்மில் பலருக்கு அவரைத்தெரியும். பகத் சிங் கண்ட கனவுகள்,கொண்டிருந்த கொள்கைகள் பிரமிப்பானவை.
பதினான்கு வயது இருக்கும் பொழுது பகத் சிங் ஊருக்கு எண்ணற்ற பேர் வந்திருந்தார்கள். முதலில் யாருமே அந்தப்பக்கம் போகவே இல்லை. என்ன விஷயம் என்று பகத் சிங் கேட்டார். குரு கிரந்த்தசாஹிப் துப்பாக்கி சூடு சம்பவத்தில் மக்களை கொன்று அரசுக்கு எதிராக வந்திருக்கும் கூட்டம் அது என்றார்கள். “அவர்களை முன்னின்று வரவேற்க வேண்டியது நம்முடைய கடமைஇல்லையா ?” என்று கண்களில் ஒளி மின்ன கேட்டு வரவேற்றான் பகத் சிங். ஊரே அவன் பின்னர் அணி திரண்டது.லாலா லஜபதி ராய் போலீஸ் தடியடியில் கொல்லப்பட்ட பொழுது அதற்கு பழிதீர்க்க உறுதி பூண்டு ராஜகுரு,சுக்தேவ்,ஆசாத் உடன் இணைந்து திட்டமிட்டார்பகத் சிங். அதற்கு காரணமான ஸ்காட்டை கொல்வதற்கு பதிலாக சாண்டர்சை கொன்றுவிட்டார்கள், ஆங்கிலேய அரசாங்கம் அப்பொழுதே இவர்களை தேடிக்கொண்டு இருந்தது ஏப்ரல் எட்டு அன்று தான் அது நடந்தது. போலீஸ் படைகளுக்கு எல்லையற்ற அதிகாரம் கொடுக்கும் கொடூரமான சட்டத்தை நிறைவேற்ற லாகூரில் மத்திய சட்டமன்றம் கூடியிருந்தது. பகத் சிங் மற்றும் பட்டுகேஸ்வர் தத் இருவரும் இணைந்து மக்கள் இல்லாத இடத்தில் தான் குண்டுகளை வீசினார்கள். இன்குலாப் ஜிந்தாபாத்,ஏகாதிபத்தியம் ஒழிக என்று குரல் கொடுத்துக்கொண்டே அதை செய்து முடித்தார்கள் அவர்கள். தப்பிக முயலாமல் கம்பீரமாக் சரணடைந்தார்கள்.
                         புரட்சி என்பது எளிய மக்களை கொல்வது அல்ல என்று பகத் சிங் தெளிவாக பதிவு செய்கிறார். கேளாத ஆங்கிலேயரின் செவிட்டு காதுகளுக்கு உறைக்கும் வண்ணம் குண்டுகளால் பேசினோம் என்று கம்பீரமாக சரணடைந்த பின்னர் கோர்ட்டில் சொன்னார் பகத் சிங்.வழக்கு விசாரணையின் பொழுது எப்படி வெடிகுண்டு தயாரிப்பது என்றெல்லாம் விளக்கமாக வகுப்பு எடுக்க எல்லாம் செய்தார் அவர். சிறையில் அடிப்படை வசதிகளே இல்லாத சூழலில் வாழ நேர்ந்தது. சாப்பாடு வாயில் வைக்கவே முடியாது,ஒழுங்கான மருத்துவ வசதிகள்,கழிப்பறை எதுவும் கிடையாது. இதையெல்லாம் எதிர்த்து உண்ணாநோன்பு இருந்து உரிமைகளை பெற்றார்கள்
தோழர்கள்.

                          பகத் சிங் இக்காலத்தில் எழுதிய கடிதங்கள் எல்லாம் குறிப்பிடத்தக்கவை.அங்கே இருந்த சிக்கல்களை பற்றி ஒரு கடிதத்திலும் புலம்பவில்லை அவர். ‘மூலதன’த்தில் இருந்து, ரூசோவின் ‘சமுதாய ஒப்பந்தம்’, வால்ட்விட்மேனின் கவிதை வரிகள், லெனினின் தத்துவங்கள் ,உமர் கய்யாமின் கவிதைகள் என்று எக்கச்சக்கமாக தான் வாசித்தவற்றை பதிவு செய்கிறான் பகத் சிங்.
சுரண்டலற்ற,எல்லாருக்கும் சமநீதி கிடைக்கும் சமுதாயம் விடுதலைக்குபின்னர் அமைய வேண்டும் என்றும் அது சார்ந்து என்ன செய்ய வேண்டும் என்று அப்பொழுதே பதிவுகள் செய்கிறார் பகத் சிங். மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறைகள் மதவாதம் ஒழிய மக்களுக்கு தெளிவை உண்டு செய்ய வேண்டும் என்றும் எண்பது வருடங்களுக்கு முன்பே இருபது வயது இளைஞன் ஒருவன் பதிவு செய்திருக்கிறான் என்பதை நீங்கள் நம்பத்தான் வேண்டும். ‘ஒரு நாய் நம் மடியில் அமரலாம். நம் சமையலறைக்குள் செல்லலாம். ஆனால் ஒரு மனிதன்தொட்டுவிடக்கூடாது…விலங்குகளை நாம் வழிபடுகிறோம். ஆனால் மனிதர்களோடு மட்டும் நெருங்க முடியவில்லை.’ என்று ஜாதியத்துக்கு எதிராகவும் குரல் கொடுத்திருக்கிறார் பகத் சிங்
பகத் சிங்கின் அப்பா அரசிடம் மகனை விடுவித்து விடுங்கள் என்று மன்னிப்பு கேட்டார். பகத் சிங் தன் தந்தையை தான் இனிமேல் தந்தை என்று கொள்ளமாட்டேன். அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த உறவு முறிந்து போனது என்று கடிதம் எழுதுகிறார். அம்மாவுக்கு பகத் சிங் எழுதும் கடிதம் கண்ணீரை வரவைக்க கூடியது. “என் பிணத்தை வாங்க வராதே அம்மா. நீ என் பிணத்தை வாங்கினால் கண்ணீர் விட்டு அழுவாய். அந்த அழுகையில் என் மரணத்தின்
விதையில் எழவேண்டிய தாக்கம் எழாமல் போகும் !” என்று குறிக்கிறார்

சாகிற நாட்கள் நெருங்கிக்கொண்டு இருந்த பொழுது எடை கூடிக்கொண்டே போனது பகத் சிங்குக்கு. நாட்டுக்காக சாகப்போகிறோம் என்கிற பெருமிதம் அலை மொத்த தூக்கு மேடையை தொடுகிற பொழுது ,”மரணத்தை புன்னகையோடு எதிர்கொள்ளும் ஒரு புரட்சியாளனின் முகத்தை பார்க்கும் பேறு பெற்றீர்கள் நீங்கள் !” என்று விட்டு பகத் சிங் மரணத்தின் வாசலை தொட்டார்.-
அன்றைக்கு பகத் சிங் கொஞ்சம் தாமதாக தான் தூக்கு மேடை வந்தார். இறுதிவரைநாத்திகனாக இருந்த அவர் அந்த இடைவெளியில் என்ன செய்தார் என்று கேட்கிறீர்களா ? “சாவதற்கு முன் கொஞ்ச நேரம் கொடுங்கள் வந்து விடுகிறேன் “என்றார் . “ஏன்?” என கேட்டதற்கு,”ஒரு புரட்சியாளன் இன்னொரு புரட்சியாளன் உடன் பேசிக்கொண்டு இருக்கிறேன் .வந்து விடுகிறேன்!” என்றார் .அவர் கையில் இருந்தது லெனின் அவர்களின் அரசும் புரட்சியும் நூல் தான்.

- பூ.கொ.சரவணன்
மார்ச் 23: இந்திய இளைஞர்களின் எழுச்சி நாயகன் பகத்சிங் நினைவு தினம் இன்று.

பகத் சிங் இந்தியாவின் விடுதலை வரலாற்றில் ஒரு தனித்துவமான நாயகன். புரட்சிகரமான ஆயுதம் ஏந்திய ஒரு வீரனாக மட்டுமே நம்மில் பலருக்கு அவரைத்தெரியும். பகத் சிங் கண்ட கனவுகள்,கொண்டிருந்த கொள்கைகள் பிரமிப்பானவை.

பதினான்கு வயது இருக்கும் பொழுது பகத் சிங் ஊருக்கு எண்ணற்ற பேர் வந்திருந்தார்கள். முதலில் யாருமே அந்தப்பக்கம் போகவே இல்லை. என்ன விஷயம் என்று பகத் சிங் கேட்டார். குரு கிரந்த்தசாஹிப் துப்பாக்கி சூடு சம்பவத்தில் மக்களை கொன்று அரசுக்கு எதிராக வந்திருக்கும் கூட்டம் அது என்றார்கள். “அவர்களை முன்னின்று வரவேற்க வேண்டியது நம்முடைய கடமைஇல்லையா ?” என்று கண்களில் ஒளி மின்ன கேட்டு வரவேற்றான் பகத் சிங். ஊரே அவன் பின்னர் அணி திரண்டது.லாலா லஜபதி ராய் போலீஸ் தடியடியில் கொல்லப்பட்ட பொழுது அதற்கு பழிதீர்க்க உறுதி பூண்டு ராஜகுரு,சுக்தேவ்,ஆசாத் உடன் இணைந்து திட்டமிட்டார்பகத் சிங். அதற்கு காரணமான ஸ்காட்டை கொல்வதற்கு பதிலாக சாண்டர்சை கொன்றுவிட்டார்கள், ஆங்கிலேய அரசாங்கம் அப்பொழுதே இவர்களை தேடிக்கொண்டு இருந்தது ஏப்ரல் எட்டு அன்று தான் அது நடந்தது. போலீஸ் படைகளுக்கு எல்லையற்ற அதிகாரம் கொடுக்கும் கொடூரமான சட்டத்தை நிறைவேற்ற லாகூரில் மத்திய சட்டமன்றம் கூடியிருந்தது. பகத் சிங் மற்றும் பட்டுகேஸ்வர் தத் இருவரும் இணைந்து மக்கள் இல்லாத இடத்தில் தான் குண்டுகளை வீசினார்கள். இன்குலாப் ஜிந்தாபாத்,ஏகாதிபத்தியம் ஒழிக என்று குரல் கொடுத்துக்கொண்டே அதை செய்து முடித்தார்கள் அவர்கள். தப்பிக முயலாமல் கம்பீரமாக் சரணடைந்தார்கள்.

புரட்சி என்பது எளிய மக்களை கொல்வது அல்ல என்று பகத் சிங் தெளிவாக பதிவு செய்கிறார். கேளாத ஆங்கிலேயரின் செவிட்டு காதுகளுக்கு உறைக்கும் வண்ணம் குண்டுகளால் பேசினோம் என்று கம்பீரமாக சரணடைந்த பின்னர் கோர்ட்டில் சொன்னார் பகத் சிங்.வழக்கு விசாரணையின் பொழுது எப்படி வெடிகுண்டு தயாரிப்பது என்றெல்லாம் விளக்கமாக வகுப்பு எடுக்க எல்லாம் செய்தார் அவர். சிறையில் அடிப்படை வசதிகளே இல்லாத சூழலில் வாழ நேர்ந்தது. சாப்பாடு வாயில் வைக்கவே முடியாது,ஒழுங்கான மருத்துவ வசதிகள்,கழிப்பறை எதுவும் கிடையாது. இதையெல்லாம் எதிர்த்து உண்ணாநோன்பு இருந்து உரிமைகளை பெற்றார்கள்
தோழர்கள்.

பகத் சிங் இக்காலத்தில் எழுதிய கடிதங்கள் எல்லாம் குறிப்பிடத்தக்கவை.அங்கே இருந்த சிக்கல்களை பற்றி ஒரு கடிதத்திலும் புலம்பவில்லை அவர். ‘மூலதன’த்தில் இருந்து, ரூசோவின் ‘சமுதாய ஒப்பந்தம்’, வால்ட்விட்மேனின் கவிதை வரிகள், லெனினின் தத்துவங்கள் ,உமர் கய்யாமின் கவிதைகள் என்று எக்கச்சக்கமாக தான் வாசித்தவற்றை பதிவு செய்கிறான் பகத் சிங்.

சுரண்டலற்ற,எல்லாருக்கும் சமநீதி கிடைக்கும் சமுதாயம் விடுதலைக்குபின்னர் அமைய வேண்டும் என்றும் அது சார்ந்து என்ன செய்ய வேண்டும் என்று அப்பொழுதே பதிவுகள் செய்கிறார் பகத் சிங். மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறைகள் மதவாதம் ஒழிய மக்களுக்கு தெளிவை உண்டு செய்ய வேண்டும் என்றும் எண்பது வருடங்களுக்கு முன்பே இருபது வயது இளைஞன் ஒருவன் பதிவு செய்திருக்கிறான் என்பதை நீங்கள் நம்பத்தான் வேண்டும். ‘ஒரு நாய் நம் மடியில் அமரலாம். நம் சமையலறைக்குள் செல்லலாம். ஆனால் ஒரு மனிதன்தொட்டுவிடக்கூடாது…விலங்குகளை நாம் வழிபடுகிறோம். ஆனால் மனிதர்களோடு மட்டும் நெருங்க முடியவில்லை.’ என்று ஜாதியத்துக்கு எதிராகவும் குரல் கொடுத்திருக்கிறார் பகத் சிங்
பகத் சிங்கின் அப்பா அரசிடம் மகனை விடுவித்து விடுங்கள் என்று மன்னிப்பு கேட்டார். பகத் சிங் தன் தந்தையை தான் இனிமேல் தந்தை என்று கொள்ளமாட்டேன். அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த உறவு முறிந்து போனது என்று கடிதம் எழுதுகிறார். அம்மாவுக்கு பகத் சிங் எழுதும் கடிதம் கண்ணீரை வரவைக்க கூடியது. “என் பிணத்தை வாங்க வராதே அம்மா. நீ என் பிணத்தை வாங்கினால் கண்ணீர் விட்டு அழுவாய். அந்த அழுகையில் என் மரணத்தின்
விதையில் எழவேண்டிய தாக்கம் எழாமல் போகும் !” என்று குறிக்கிறார்

சாகிற நாட்கள் நெருங்கிக்கொண்டு இருந்த பொழுது எடை கூடிக்கொண்டே போனது பகத் சிங்குக்கு. நாட்டுக்காக சாகப்போகிறோம் என்கிற பெருமிதம் அலை மொத்த தூக்கு மேடையை தொடுகிற பொழுது ,”மரணத்தை புன்னகையோடு எதிர்கொள்ளும் ஒரு புரட்சியாளனின் முகத்தை பார்க்கும் பேறு பெற்றீர்கள் நீங்கள் !” என்று விட்டு பகத் சிங் மரணத்தின் வாசலை தொட்டார்.-
அன்றைக்கு பகத் சிங் கொஞ்சம் தாமதாக தான் தூக்கு மேடை வந்தார். இறுதிவரைநாத்திகனாக இருந்த அவர் அந்த இடைவெளியில் என்ன செய்தார் என்று கேட்கிறீர்களா ? “சாவதற்கு முன் கொஞ்ச நேரம் கொடுங்கள் வந்து விடுகிறேன் “என்றார் . “ஏன்?” என கேட்டதற்கு,”ஒரு புரட்சியாளன் இன்னொரு புரட்சியாளன் உடன் பேசிக்கொண்டு இருக்கிறேன் .வந்து விடுகிறேன்!” என்றார் .அவர் கையில் இருந்தது லெனின் அவர்களின் அரசும் புரட்சியும் நூல் தான்

- பூ.கொ.சரவணன்

ஜி.டி.நாயுடு -கோவை.

மரியாதைக்குரியவர்களே,
                  வணக்கம்.
                     கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.
       
                          மார்ச் 23: இந்தியாவின் எடிசன் 
          எனப் புகழ்பெற்ற ஜி.டி.நாயுடுவின் பிறந்த நாள் இன்று..
                           தான் இருந்த, தொட்ட எல்லா துறையிலும் சாதித்தவர் ஜி.டி.நாயுடு.பள்ளிப்படிப்பை நான்காவதோடு விட்ட மனிதர், லாங்ஷெயர் எனும் வெள்ளையரிடம் இருந்த பைக்கை ஹோட்டலில் வேலை பார்த்து பணம் சேர்த்து வாங்கி, பிரித்து
சேர்த்து சாதித்தார். பஸ் விடுதலை தொடங்கி 600-க்கும் மேற்பட்ட பஸ்களை விடுகிற அளவுக்கு உயர்ந்தார். அரசாங்க ஆதரவு முற்றிலும் கிடைக்கவில்லை.மின்சாரத்தில் இயங்கும், வெட்டுக்காயங்கள் உண்டு பண்ணாத ஷேவிங் ரேசரைஐம்பதுகளில் உருவாக்கினார்.

           ஒரே வாழைத்தாரில் ஆயிரம் காய்கள் காய்க்கும் வகையில் புரட்சி செய்தவேளாண் விஞ்ஞானி அவர். இந்த நாட்டில் இளைஞர்களை கெடுப்பவை சினிமா,அரசியல், பத்திரிக்கைகள், பெற்றோர்கள் ஆகிய நான்கும் தான் என தெளிவாகசொன்னார். கிண்டி பொறியியல் கல்லூரி உட்பட மிக சிறந்த பொறியியல்கல்லூரிகள், ஐந்து வருட காலத்தில் உருவாக்கும் திறன் மிகுந்த மாணவர்களை,ஒரே வருடத்தில் உருவாக்கிக் காண்பிப்பதாகச் சொல்லி சில சாதித்தும்
காட்டினார்.

          எஞ்ஜின் ஒடிக்கொண்டிருக்கும் போதே அதன் அதிர்வு விகிதம் அதிகமா, குறைவா என்பதைக் கண்டுபிடிக்க vibrator tester என்ற இயந்திரத்தையும் கண்டுபிடித்தார். பழச்சாறு பிழிந்து எடுக்க ஒரு கருவி, எந்தவித வெட்டுக்காயமின்றி முகச்சவரம் செய்துகொள்ள பிளேடு, பல்வேறு பூட்டுகளை (ஆயிரக்கணக்கான பூட்டுகள்) திறக்கும் மாஸ்டர் கீ முதலியவை இவரின் பிற கண்டுபிடிப்புகள். இன்றைக்கு நாம் பேருந்துகளில் பார்க்கும் டிக்கெட் அச்சடிக்கும் இயந்திரத்தை ஐம்பது வருடங்களுக்கு முன்னரே தன்னுடைய பேருந்துகளில் அமல்படுத்தியவர் அவர்.

          இந்தியாவில் முதல் மின்சார மோட்டார் தயாரிக்கும் தொழிற்சாலை இவராலே தொடங்கப்பட்டது. கோவையில் தேர்தலில் தோற்றதால் அவர் கண்டுபிடித்துக் கொடுத்தது தில்லு முல்லு செய்யமுடியாத மின்சார ஒட்டுப்பதிவு இயந்திரம். எழுபது ரூபாயில் ரேடியோ என அவர் உருவாக்கிய பல திட்டங்கள் அரசாங்க ஒத்துழைப்பு இல்லாமல் நின்றுபோனது. நாட்டுக்கு பல நல்ல கண்டுபிடிப்புகளை ஒப்புவிக்க தயாராக இருந்த அவரை அரசு தொடர்ந்து தொல்லைப்படுத்தியது. பழைய இரும்பில் இருந்து தயாரித்த பேருந்துகளுக்கும் வரி போட்டது. ரொம்பவும் தொல்லை அதிகமாகிப்போக மனைவியை விவாகரத்து செய்து வருமான வரி கொடுப்பதில் இருந்து தப்பித்தார் அவர்.

          அவரின் பட்டறையில் ஒரு செருப்பும், கீழ்கண்ட வாசகம் தொங்கிக்கொண்டே இருக்குமாம். ‘அவரவர் செய்ய வேண்டிய வேலையைச் செய்ய வேண்டிய முறையில் செய்யாமல் போனால் 25 ரூபாய் அபராதமும், இதனால் ஒரு அடியும் கிடைக்கும்’. அவர் சொன்ன வரிகளை நாம் அனைவரும் மனதில் நிறுத்திக்கொள்ளலாம் :

                 21 வயது வரை படி, பிறகு பத்து ஆண்டுகள் ஏதாவது துறையில் வேலைசெய், பிறகு உன்னுடைய படிப்பையும் பத்து ஆண்டுகள் அனுபவத்தையும் வைத்து தொழில் செய். குறைந்தது அடுத்த இருபது ஆண்டுகளுக்குத் தொழில் செய்து பொருள் ஈட்டு, பிறகு உன்னுடைய படிப்பு, ஞானம் எல்லாம் பிறருக்குப் பயன்படப் பணி செய்.

நன்றி- பூ.கொ.சரவணன் அவர்களுக்கு...
மார்ச் 23: இந்தியாவின் எடிசன் எனப் புகழ்பெற்ற ஜி.டி.நாயுடுவின் பிறந்த நாள் இன்று..

21 மார்ச் 2014

சிட்டுக்குருவி....

மரியாதைக்குரியவர்களே,
             வணக்கம்
         கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன். நன்றி, திருமிகு. கவிஞர் மகுடேசுவரன் அவர்களுக்கு.....
 
வாசலில் தளத்தில்
தானியத்தைப் பரத்தி  
உலர வைத்திருந்தால் 
முற்றாக வழித்தள்ளாதீர். 
மணிகள் இறைந்திருக்கட்டும் 
குருவிகளின் பங்குக்கு.

சீனிப்புளிபோல்
கனிமரம் உண்டெனில்
உச்சிப்பழுப்புகளைப்  
பறிக்கத் துணியாதீர்.
பழங்கள் குடைவுறட்டும்
கிளிகளின் மூக்குக்கு. 

வேப்பங் கனிகள்  
காகங்களுக்கு விருந்து. 
வேறிடம் சென்று 
கழிக்கட்டும்
விழுங்கிச் செரித்து.
அவற்றால் தழைக்கும் சோலைகள் 
மனிதருக்கு நிழலூற்று. 

முருங்கை தீதென 
வெட்டி முறிக்காதீர்.
முருங்கைப் பூவெனும் 
வற்றா மதுச்சுனையில்
உறிஞ்சிக் குடிக்க 
பட்டுகளும் சிட்டுகளும் 
பறந்து வரட்டும்.  
 
பப்பாளிக் குடைமரம்
தானாய் வளர்ந்து 
தேனாய்ப் பழுப்பது.
கோடைக்கும் மழைக்கும்
ஈடுகொடுத்திருப்பது. 
வௌவாலும் அணிலும் 
வாயொழுகத் தின்னட்டும். 
ஈக்குவியல் போன்ற விதை
ஈர நிலம் வீழட்டும். 

ஓரத்தில் நிலமிருந்தால்
தென்னை ஊன்றுங்கள்.
இளநீரை நேரடியாய் 
ரத்தத்தில் பாய்ச்சுவதால்    
எத்தீங்கும் நேராதாம். 
வேறெதுவும் ஆகாதாம். 

பசுமை தழைப்பதற்கும்    
பல்லுயிர்கள் பெருகுதற்கும் 
இயன்றதனைத்தும் செய்க !
உம்மை எஞ்ஞான்றும் 
உயிர்களெல்லாம் தொழும் !
வாசலில் தளத்தில்
தானியத்தைப் பரத்தி
உலர வைத்திருந்தால்
முற்றாக வழித்தள்ளாதீர்.
மணிகள் இறைந்திருக்கட்டும்
குருவிகளின் பங்குக்கு.

சீனிப்புளிபோல்
கனிமரம் உண்டெனில்
உச்சிப்பழுப்புகளைப்
பறிக்கத் துணியாதீர்.
பழங்கள் குடைவுறட்டும்
கிளிகளின் மூக்குக்கு.

வேப்பங் கனிகள்
காகங்களுக்கு விருந்து.
வேறிடம் சென்று
கழிக்கட்டும்
விழுங்கிச் செரித்து.
அவற்றால் தழைக்கும் சோலைகள்
மனிதருக்கு நிழலூற்று.

முருங்கை தீதென
வெட்டி முறிக்காதீர்.
முருங்கைப் பூவெனும்
வற்றா மதுச்சுனையில்
உறிஞ்சிக் குடிக்க
பட்டுகளும் சிட்டுகளும்
பறந்து வரட்டும்.

பப்பாளிக் குடைமரம்
தானாய் வளர்ந்து
தேனாய்ப் பழுப்பது.
கோடைக்கும் மழைக்கும்
ஈடுகொடுத்திருப்பது.
வௌவாலும் அணிலும்
வாயொழுகத் தின்னட்டும்.
ஈக்குவியல் போன்ற விதை
ஈர நிலம் வீழட்டும்.

ஓரத்தில் நிலமிருந்தால்
தென்னை ஊன்றுங்கள்.
இளநீரை நேரடியாய்
ரத்தத்தில் பாய்ச்சுவதால்
எத்தீங்கும் நேராதாம்.
வேறெதுவும் ஆகாதாம்.

பசுமை தழைப்பதற்கும்
பல்லுயிர்கள் பெருகுதற்கும்
இயன்றதனைத்தும் செய்க !
உம்மை எஞ்ஞான்றும்
உயிர்களெல்லாம் தொழும் !

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...