23 செப்டம்பர் 2011

ஆங்கில அகராதி

நமக்கு ஆங்கிலத்தில் சில வார்த்தைகளுக்கு இன்னும் அர்த்தம்
தெரியவில்லை, மிகப்பெரிய ஆங்கில டிக்ஸ்னரியில் பார்த்தாலும்
நம் தேடும் வார்த்தைக்கு அர்த்தம் இல்லை  உதாரணமாக நாம்
டிக்ஸ்னரியில் Teaching  என்ற வார்த்தைக்கு Teach என்று
தேடினால் தான் முடிவுகள் கொடுக்கும் அதேப்போல் இல்லாமல்
நாம் கொடுக்கும் அங்கில வர்த்தைக்கு துல்லியமான அர்தத்தை
சொல்ல இந்த இணையதளம் வந்துள்ளது. அதைப்பற்றி தான்
இந்த பதிவு.

இணையதள முகவரி:  http://advertt.com
இந்த இணையதளத்திற்கு சென்று நாம் தேடும் வார்த்தையை
கொடுத்து தேடினால் நாம் கொடுத்த வார்த்தைக்கான துல்லியமான்
முடிவை இந்த் இணையதளம் காட்டுகிறது. வீக்கிப்பிடியாவில்
இந்த வார்த்தை வருகிறது என்றால் அதன் பொருள் என்ன என்று
தெளிவாக விளக்கி காட்டுகின்றனர்.அடுத்து சாதாரண டிக்ஸ்னரியில்
நாம் கொடுத்த வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்றும் வேறு
எங்கெல்லாம் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றும்
துல்லியமாக கூறுகின்றனர். அதோடு இந்த வார்த்தையை பயன்படுத்தி
வந்துள்ள யூடியுப் வீடியோவையையும் இத்துடன் காட்டுகின்றனர்.
நாம் தேடும் அத்தனை வார்த்தைக்கான அர்த்தமும் உள்ள இந்த
இணையதளம் ஒரு மெகா ஆங்கில டிக்ஸ்னரி தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 நடவடிக்கை கோருதல் மனு 🙏 தமிழார்வலர்கள் அனைவருக்கும்  வணக்கம். மக்களின் அத்தியாவசியச் சேவை நிறுவனமான அன்றாடம் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணி...