19 செப்டம்பர் 2011

உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன்-05

        உலக சுற்றுச்சூழல் தினம்

     

   நோக்கம்:
     
  சுற்றுச்சூழல் மாசுபடுவதைப் பற்றி  உலக அளவில் அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கவும் 'ஐநா' சபை  ஒவ்வொரு ஜுன் மாதம் ஐந்தாம் தேதியை
  உலக சுற்றுச்சூழல் தினமாக அறிவித்துள்ளது.


     சுற்றுச்சூழல் மாசு வகைகள்;
        
   * காற்று மாசுபடுதல்
   * நீர் மாசுபடுதல்
   * நிலம் மாசுபடுதல்
   * ஒலி மாசுபடுதல்
   * காற்று மாசுபடுதல்:
 
      காரணங்கள் : 
   
  1. தொழிற்சாலைகளிலிருந்து வரும் புகை மற்றும் கழிவுகள்
   2. வாகனங்களிலிருந்து வெளிவரும் புகை
   3. குப்பை போன்ற கழிவுப்பொருட்களையும் எண்ணைப் பொருட்களையும் எரிப்பதனால் வெளிவரும் புகை, பிற...


        தவிர்க்கும் முறைகள்:
   
  1. இயந்திரங்களையும் வாகனங்களையும் முறையாக பராமரித்தல்,
   2. மாற்றுக்கருவிகள் மற்றும் புதிய செயல்முறைகளை கண்டுபிடித்து
பயன்படுத்துதல்,
  3. குறைந்த தூரங்களுக்கு நடந்து போதல் அல்லது மிதி வண்டிகளைப்
பயன்படுத்துதல்,
  4. காரீயமற்ற எரிபொருளை உபயோகித்தல், எரிவாயு மற்றும் மின்கலம் மூலம் இயங்கும் வாகனங்களைப் பயன்படுத்துதல்,
 5.வீட்டு கழிவுப்பொருட்களை வகைப்பிரித்து மறுசுழற்சிக்குட்படுத்துதல் அல்லது புதிய பொருட்களை உண்டாக்குதல்,
 6. தேவையற்ற பொருட்களை எரிப்பதை தவிர்க்க,
  7. மரம் வளர்த்தல், பிற...


      நீர் மாசுபடுதல்:
           
  1. தொழிற்சாலை கழிவு,
  2. நகரக் கழிவு நீர், பிற...

   தவிர்க்கும் முறைகள்:
           
1. தொழிற்சாலை மற்றும் நகரக் கழிவுகளை சுத்திகரித்து,
மறுபயன்பாட்டிற்கு உட்படுத்த வேண்டும்.
 2. கழிவுகளை குறைக்கும் வழிமுறைகளை கண்டுபித்தல் வேண்டும்,
 3. இராசாயன பொருட்களின் பயன்பாட்டை தவிர்த்தல், பிற...

     பாதிப்புகள்:

1. உலக வெப்பநிலை அதிகரித்தல் - புவிச் சூடு (Global Warming)
2. பனிக்கட்டி உருகுதல் அதன்மூலம் ஏற்படும் வெள்ளப் பெருக்கு, கடல் நீர் மட்டம் உயருதல் போன்றவை
3. மழை வளம் மற்றும் மண் வளம் குறைதல்
4. தோல் நோய்கள், நுரையீரல் மற்றும் பல நோய்கள்
5. குடி நீர், உணவுப் பொருட்களில் நச்சுத்தன்மை
6. கால்நடை மற்றும் விவசாயம் பாதிக்கப்படுதல், பிற...


       இன்று உலகில் வாழும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் சுற்றுச்சூழல் மாசுபடுவதிலிருந்து காப்பாற்ற வேண்டிய கடமை உள்ளது. எனவே, இது போன்ற தினங்களிலாவது இது பற்றி சிந்தித்து நம்மால் இயன்ற காரியங்களை செய்தல் வேண்டும்.
நன்றி! என paramesdriver.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக