25 ஏப்ரல் 2012

விலையில்லா மடிகணிணி-கோபி








   தாளவாடி கிரிக்கெட் இளைஞர்கள் வெற்றிப்புன்னகையுடன் இங்கு..கோப்பையுடன் இது தாளவாடி மலைப்பகுதிங்க!.................







          மாண்புமிகு.முதலமைச்சர் அவர்கள் ''விலையில்லா மடிகணிணி'' கல்லூரி மாணவியருக்குக் கொடுத்ததன் விளைவு,வீட்டில் எல்லோரும் கணிணி பயின்று கொண்டிருக்கிறார்கள்.இந்த திட்டம் மிகவும் வரவேற்கக்கூடியது.என்றால் அது மிகையாகாது.இந்த இளம் பிஞ்சுகள் எங்கே சென்று கணிணியை தொட்டுப்பார்க்கப்போகிறார்கள்?.இப்போது இந்தக்குழந்தை கணிணியை நன்றாக   இயக்கக்கற்றுக்கொண்டுவிட்டது. மடிக்கணிணி மட்டுமல்ல மேஜைக்கணிணியையும்தானுங்க.







             நம் குடும்பம் - இது சத்தியமங்கலத்தில்  வெளிவரும் தம்பதியினருக்கான  முதல் தமிழ் மாத சிற்றிதழ்.
         ''வாசிப்பதற்கு மட்டுமல்ல,நேசிப்பதற்கு''. 
        இனிய இல்லறத்தை விரும்பாதோர் தொடர்ந்து படிக்க வேண்டாம்- என்று ஒரு அன்பு வேண்டுகோளும் இப்பத்திரிக்கையின் முதல் அட்டைப்படத்தில் உண்டுங்க......









   இங்க பாருங்க! இது கர்நாடகா மாநிலத்திலிருந்து ஏற்றிவரும் கால்நடைங்க. இது பாவங்க, கர்நாடகாவில் பொதுமக்களே கால்நடைகளை சித்திரவதை செய்ய அனுமதிப்பதில்லைங்க.அதனாலே அங்கு தெரியாமல் ஆனால் தாளவாடியில் வெளிப்படையாக மூட்டை போல ஏற்றிவரும் மாடுங்க,தலமலை வனப்பாதையில் பயணம்!.பாவங்க.அதுக என்ன செஞ்சுதுங்க!  மிகுந்த சித்திரவதைக்கு உட்பட்டு திம்பத்தில் இறக்கப்படுதுங்க.உன்னிப்பாக கவனித்தால்தான் தெரியும் கடைசியில் ஏற்றப்பட்டுள்ள எருமை என்ன துன்பத்திற்கு ஆளாகுகிறது என்று.இதுபோல தினசரி வருகிறது மூட்டை போல அடுக்கிக்கொண்டு!!!!!!!!!வனத்துறையினர் இதைக்கவனித்தால் நன்றாக இருக்கும்.இந்த போட்டோ எடுத்தது யாருன்னு தெரிஞ்சா! எடுத்தவருக்கு  அடி உதைதாங்க!


14 ஏப்ரல் 2012

பார்த்தீனியம் களைச்செடி-அபாயம்.

அன்பு நண்பர்களே,
இனிய வணக்கம். 
இங்கு மனித குலத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் பார்த்தீனியம் என்னும் விஷச்செடி பற்றி காண்போம்.


              பார்த்தீனியம்

        பார்த்தீனியம் களைச்செடி முதன் முதலில் நம்
நாட்டில் பூனாவில் காணப்பட்டது. பின்பு அது எல்லா
மாநிலங்களுக்கும் பரவி விட்டது. முன்னமேயே பார்த்~
தீனியத்தின் விதைகள் மிகவும் எடை குறைவாகவும் 
தட்டையாகவும் இருப்பதால் ஓரிடத்தில் இருந்து மற்~
றோர் இடத்திற்கு காற்றின் மூலமாக பரவி விடுகின்றன
என்பதைப் பார்த்தோம். பார்த்தீனியத்தின் வயது 135
நாட்களில் முடிந்து விடுகின்றது. இது ஒரு பருவத்தில்

10,000 விதைகளை உற்பத்தி செய்கின்றது. பார்த்தீனியம்
ஒரு வருடத்தில் மூன்று தலைமுறைகளை உற்பத்தி செய்ய~
வல்ல திறன் கொண்டதாக இருக்கின்றது. ஒரு பார்த்~
தீனி௟ம் செடியை வளரவிட்டால் அது ஒரு வருடத்தில்
லட்சக்கணக்கில் விதைகளை உற்பத்தி செடி விடும்.
நீர் இல்லாத வறட்சியான இடங்களில் கூட வளர்வதற்~
கேற்ற தன்மையை பார்த்தீனியம் பெற்று உள்ளது.
ஆகவே பார்த்தீனியத்தை பூக்கும் பருவத்திற்கு முன்பே
அழித்து விட வேண்டும்.

அம்பேத்கர்

Nagoorkani Kader Mohideen Basha



இந்திய சட்ட நிபுணர் அம்பேத்கர் பிறந்த தினம் இன்று 14.04.1891.


பாபாசாகேப் டாக்டர் அம்பேதகர் மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் அம்பாவாதே என்னும் கிராமத்தில் 1891 ஏப்ரல் 14 அன்று ராம்ஜி - பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார். மகர் என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த அவர், இளம் வயதில் பல்வேறு துன்ப, துயரங்களை அனுபவித்தார்.


டாக்டர் அம்பேத்கர் தனது இளம் வயதில் ஒரு முறை மாட்டு வண்டியில் சகோதரருடன் பயணம் செய்து கொண்டிருந்தபொழுது, இவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை வண்டிக்காரன் அறிந்ததும் உடனே மாட்டை அவிழ்த்து விட்டு அச்சிறுவர்களை குப்பையைக் கொட்டுவது போலக் கொட்டிய கொடுமை நிகழ்ந்தது.

டாக்டர் அம்பேத்கர் மிகச் சிறந்த கல்வியாளர். பரோடா மன்னரின் உதவியுடன் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி பயின்றார். அங்கு அவர் 1915-ல் “பண்டைய இந்தியாவின் வர்த்தகம்’ என்ற ஆய்வுக்கு முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர், “இந்திய லாபப்பங்கு ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு’ என்ற ஆய்வுக்கு கொலம்பியா பல்கலைக் கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. “பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்’ என்ற ஆய்வுரைக்கு 1921-ல் முது அறிவியல் பட்டம் பெற்றார். “ரூபாயின் பிரச்சினை’ என்ற ஆய்வுரைக்கு 1923-ல் டிஎஸ்சி பட்டம் பெற்றார்.

11 ஏப்ரல் 2012

ஐகோனோகிராபி-

அன்பு நண்பர்களே,
        வணக்கம்.தங்களது வரவை இனிதே வரவேற்கிறோம்.
     புகைப்பட மாடலிங் பற்றிய படிப்புக்கு பெயர் ''ஐகோனோகிராபி'' என்று பெயர்.


          (இந்த படிப்பு நம்ம இந்தியாவில் உள்ளதா என்று தெரியவில்லை.தெரிந்தவர்கள் கூறுங்கள்.)


           The Meaning and Significance of Iconography

       When first used in the 18th cent. the term was confined to the study of engravings, which were then the standard mode of illustrating books on art and on antiquities in general. But it came shortly to be applied more specifically to the history and classification of Christian images and symbols of all sorts, in whatever medium they happened to be rendered originally or in whatever way they were reproduced for study.
With the rise of the systematic investigation of art from prehistoric ages to modern times, it became apparent that each major phase or epoch in which figural representations occur had created and developed in varying degrees of richness and elaboration an iconography of its own. As used today, therefore, the term is necessarily qualified to indicate the field of iconographic study under discussion—e.g., the iconography of the various Egyptian deities, the iconography of Roman imperial portraits, early Christian iconography, Buddhist or Hindu iconography, Byzantine iconography, Gothic iconography.
As a method of scholarly research the science of iconography strives also to recover and express the thought from which a given convention of representation has arisen, particularly when the convention has assumed the value of a symbol. The importance of identifying motifs is central to iconographical interpretation. For example, St. Catherine of Alexandria is traditionally portrayed in the presence of a wheel. This wheel is a familiar attribute that serves to identify her and that at the same time signifies a miracle connected with her martyrdom. Some attributes are more difficult to understand, and their obscurity has led scholars to consult other images or literary sources in order to interpret the motif more satisfactorily.
Certain themes characteristic of a specific philosophy have been commonly represented during an era, and an iconography has been developed to express them. An example is the still life vanitas vanitatum of the Middle Ages, a reminder of the transitory quality of earthly pleasure symbolized by a skull, candle, and hourglass (or, in later versions, a watch). In every living art the conventions and symbols, as well as their meanings, change with the passage of time and the growth of ideas; many disappear, while others become almost unintelligible to a later generation and can be recovered only by intensive study. Among the foremost scholars in iconographic studies are Didron, Émile Mâle, Aby Warburg, and Erwin Panofsky.

Read more: iconography: The Meaning and Significance of Iconography — Infoplease.com http://www.infoplease.com/ce6/ent/A0858734.html#ixzz1rk8fGp1U

03 ஏப்ரல் 2012

ஐஸ் மோர்:

கொளுத்துற வெயிலுக்கு ...சும்மா ஜில்லுன்னு ஒரு ஐஸ் மோர்:

by Mohana Somasundram on Tuesday, April 3, 2012 at 4:01pm ·

கொளுத்துற வெயிலுக்கு ...சும்மா ஜில்லுன்னு ஒரு ஐஸ் மோர்:
தேவையானவை:
  • புளிக்காத தயிர்/மோர்.........2 டம்ளர் . 

  • மல்லித் தழை ............கொஞ்சம்

  • கறிவேப்பிலை........... கொஞ்சம்
  • புதினா.......................... கொஞ்சம்
  • சீரகம்............................ கொஞ்சம்
  • இஞ்சி............................ கொஞ்சம்
  • காயம்.............................. கொஞ்சம்
  • ப.மிளகாய்......................1 /2
  • உப்பு..................................தேவையான அளவு 
  • ஐஸ் ................................. .தேவையான அளவு  
செய்முறை:
  • சீரகம் +இஞ்சியை நன்றாகத் தட்டிக்கொள்ளவும். 
  • மிக்சியில் மோர் தவிர அனைத்துப் பொருள்களையும் போட்டு இரண்டு சுற்று சுற்றவும்.

  • அதில் மோர்/ தயிர் கலந்து வேண்டிய அளவு நீர் விட்டு தேவையானால் ஐஸ் போட்டு பரிமாறவும்.

<photo6></photo6>
  • மேலே குறிப்பிட்ட அத்தனை பொருட்களும் வேண்டும் என்பதில்லை. 
  • இருக்கிறதை வைத்துக்கொண்டு நீர் மோர் தயாரிக்கலாம்.
  • இதில் கொஞ்சம் நீராகாரம்.. அதான்பா..பழைய சோத்து தண்ணி கலக்கலாம். கலக்கலா இருக்கும். 
வெயில்ல சாப்பிட்டா எப்படி இருக்கும் தெரியுமா? சும்மா தேவாமிர்தம் மாதிரி இருக்கும். 
கீழே.. கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, இஞ்சி மற்றும் சீர்கத்திலுள்ள் உணவுச் ச்த்துக்கள்  குறிப்பிடப்பட்டுள்ளன. மறக்காமல் பார்க்கவும். 

Data on fresh Curry Leaves per 100gm 
 Many people have also reported weight loss, which is an additional benefit in diabetic people.

V Vitamin A 986 IU 19%  வைட்டமின் A
 Beta Carotene 592 mcg  பீட்டா கரோட்டின்
Vitamin C 11.4 mg 19% வைட்டமின் C
Vitamin E 21.99 mg 73% வைட்டமின்  E
 Vitamin K 99.8 mcg 166%  வைட்டமின் K
Thiamin 0.253 mg 16%  தையாமின்
Riboflavin 0.281 mg 16%   ரிபோபிளேவின்
Niacin 3.467 mg 17%       நியாசின்
 Vitamin B6 1.15 mg 57% வைட்டமின் B6
Folate 154 mcg 38%     ஃபொலேட்
Food Folate 154 5.6 mcg
Dietary Folate Equivalents 154 mcg   நார்ச்சத்து
Minerals % தாது உப்புக்கள்
Calcium 478 mg 47%  கால்சியம்
Iron 29.59 mg 164%   இரும்பு
Magnesium 254 mg 63%  மக்னீசியம்
 Phosphorus 349 mg 34%  பாஸ்பரஸ்
 Potassium 1543 mg 64%   பொட்டாசியம்
Sodium 52 mg 2%   சோடியம்
Zinc 4.05 mg 26%   துத்தநாகம்
Copper 0.815 mg 40% தாமிரம்
Manganese 4.289 mg 214% மாங்கனீஸ்
Selenium 17.1 mcg 24%  செலீனியம்
Fats %DV 
 Total Fat 13.81 mg 21% மொத்த கொழுப்பு
Saturated Fat 2.237 mg 11%
Monounsaturated Fat 5.551 mg
Polyunsaturated Fat 2.557 mg
Nutritional Value of Mint
Given below is the amount of nutrients present in 100g of mint
  • Moisture - 84.9 g  ஈரப்பதம்
  • Protein - 4.8 g  புரதம்
  • Fat - 0.6 g  கொழுப்பு
  • Minerals - 1.9 g  தாது உப்புக்கள்
  • Fibre - 2 g  நார்ச்சத்து
  • Carbohydrate - 5.8 g  மாவுப்பொருள்
Vitamin A protects against colorectal cancer as well as DNA damage from exposure to carcinogenic substances. Mint is also rich in iron, magnesium, calcium and other nutrients.
  • Calcium - 200 mg  கால்சியம்
  • Phosphorus - 62 mg  பாஸ்பரஸ்
  • Iron - 15.6 mg இரும்பு
  • Carotene - 1620 μg  கரோட்டின்
  • Thiamine - 0.05 mg  தையாமின்
  • Niacin - 1 mg  நியாசின் 
  • Riboflavin - 0.26 mg  ரிபோபிளேவின்
  • Folic Acid (Free) - 9.7 μg  ஃபோலிக் அமிலம்
  • Folic Acid (Total) - 114 μg
  • Vitamin C - 27 mg  வைட்டமின் C 
  • Magnesium - 60 mg   மக்னீசியம்
  • Copper - 0.18 mg  தாமிரம்
  • Manganese - 0.57 mg  மாங்கனீஸ்
  • Zinc - 0.44 mg  துத்த நாகம்.
  • Chromium - 0.008 mg  குரோமியம்
  • Oxalic Acid - 33 mg  ஆக்சாலிக் அமிலம் 
  • Phytin Phosphorus - 4 mg ஃபைட்டின் பாஸ்பரஸ் 
  • Energy - 48 Kcal சக்தி
Nutritional Value of Coriander  in 100 gm
  • Protein - 2.13 g புரதம் 
  • Fiber - 2.8 gm  நார்ச்சத்து
  • Water - 92.21 gm  நீர் 
  • Carbohydrate - 3.67 gm  மாவுப்பொருள்
  • Fats - 0.52 gm  கொழுப்பு 
  • Vitamin A - 6748 IU வைட்டமின் A
  • Vitamin B6 - 0.149 mg வைட்டமின் B6
  • Niacin - 1.114 mg  நியாசின் 
  • Riboflavin - 0.162 mg  ரிபோபிளேவின் 
  • Thiamin - 0.067 mg  தையாமின் 
  • Vitamin C - 27 mg வைட்டமின் C
  • Vitamin E - 2.5 mg வைட்டமின் E -
  • Vitamin K - 310 mg வைட்டமின் K
  • Calcium - 67 mg  கால்சியம் 
  • Copper - 0.225 mg  தாமிரம் 
  • Iron - 1.77 mg  இரும்பு
  • Manganese - 0.426 mg  மாங்க்னீஸ்
  • Magnesium - 26 mg  மக்னீசியம் 
  • Phosphorus - 48 mg  பாஸ்பரஸ் 
  • Potassium - 521 mg   பொட்டாசியம் 
  • Selenium - 0.9 mcg  செலிலியம் 
  • Sodium - 46 mg  சோடியம் 
  • Zinc - 0.5 mg  துத்த நாகம் 
  • Energy - 23 Kcal   ஆற்றல்
Ginger is composed of various nutrinets and phytochemicals.
The nutrients, listed alphabetically, are: Amino acids, calcium, essential fatty acids (EFA's), iron, magnesium, manganese, phosphorus, potassium, selenium, vitamin A, vitamin B-1, vitamin B-2, vitamin B-3, vitamin B-6, vitamin C, and zinc.
The Phytochemicals, listed alphabetically, are: Alpha-pinene, beta-carotene, beta-ionone, beta-sitosterol, caffeic acid, camphor, capsaicin, caryophllene, chlorogenic acid, citral, curcumin, farnesol, ferulic acid, geraniol, gingerols, lecithin, 1,8-cineole, and zingerone.
  • PrincipleNutrient Value
  • Percentage of RDA
  • Energy 80 Kcal 4% ஆற்றல்
  • Carbohydrates 17.77 g  13.5% மாவுப்பொருள்
  •  Protein 1.82 g 3% புரதம் 
  • Total Fat 0.75 g 3% மொத்த கொழுப்பு
  • Cholesterol 0 mg 0% கொலஸ்டிரால்
  • Dietary Fiber 2.0 g 5% நார்ச்சத்து 
  • VitaminsFolates 11 µg 3% ஃபோலேட்
  • Niacin 0.750 mg 4.5% நியாசின்
  • Pantothenic acid 0.203 mg 4% பாண்டோதனிக்  அமிலம் 
  • Pyridoxine 0.160 mg 12% பைராக்சின்
  • Vitamin A 0 IU 0%  வைட்டமின் A
  •  Vitamin C 5 mg 8% வைட்டமின்  C 
  •  Vitamin E 0.26 mg 1.5% வைட்டமின் E
  • Vitamin K 0.1 µg 0% வைட்டமின் K
  • Electrolytes
  • Sodium 13 mg 1% சோடியம் 
  • Potassium 415 mg 9%  பொட்டாசியம் 
  • Minerals தாது உப்புக்கள்
  • Calcium 16 mg 1.6% கால்சியம் 
  • Copper Iron 0.60 mg 7.5% தாமிரம், இரும்பு 
  •  Magnesium 43 mg 11% மக்னீசீயம் 
  •  Manganese 0.229 mg 10% மாங்கனீஸ்
  • Phosphorus 34 mg 5% பாஸ்பரஸ் 
  •  Zinc 0.34 mg 3% துத்தநாகம்
  • Cumin seeds (Cuminum cyminum), 
  • Nutritional value per 100 g. ( National Nutrient data base)
  • PrincipleNutrient Value
  • Percentage of RDA
  • Energy 375 Kcal 19% ஆற்றல்
  • Carbohydrates 44.24 g 34% மாவுப்பொருள் 
  • Protein 17.8 g 32% புரதம்
  • Total Fat 74% 22.27g  மொத்த கொழுப்பு
  • Cholesterol 0 mg 0% கொலஸ்டிரால் 
  • Dietary Fiber 10.5g 26% நார்ச்சத்து 
  •  VitaminsFolates 2.5%10 mcg ஃபோலேட் 
  •  Niacin 4.58 mg 28.5% நியாசின் 
  • Pyridoxine 0.435 mg 33% பைராக்சின் 
  •  Riboflavin 0.32 mg 24.5%ரிபோபிளேவின் 
  • Thiamin 0.628mg 52% தையாமின் 
  • Vitamin A 1270 IU 42% வைட்டமின் A 
  •  Vitamin C 7.7mg 13%  வைட்டமின் C
  • Vitamin E 3.3 mg 22%  வைட்டமின் E
  • Vitamin K 5.4 mcg 4.5%  வைட்டமின் K
  • Electrolytes
  • Sodium 1788 mg 38% சோடியம் 
  • Potassium 68 mg 11% பொட்டாசியம் 
  • MineralsCalcium 931 mg 93% கால்சியம் 
  •  Copper 0.867 mg 96% தாமிரம்
  • Iron 66.36mg 829% இரும்பு 
  •  Magnesium 366 mg 91% மக்னீசியம் 
  •  Manganese 3.3 mg 145% மாங்கனீஸ்
  • Phosphorus 499 mg 71% பாஸ்பரஸ்
  • Zinc 4.8 mg 43.5% துத்தநாகம் 
  •  Phyto-nutrientsCarotene-ß 762 mcg -
  • - Crypto-xanthin-ß 0 mcg -
  • - Lutein-zeaxanthin 448 mcg --

நண்பர்களே.. இந்த சத்துக்கள் போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா?


02 ஏப்ரல் 2012

தமிழக அறிவியலாளர் ஜி.டி.நாயுடு


தமிழக அறிவியலாளர் ஜி.டி.நாயுடு பிறந்த தினம்(23.03.1893)



தோற்றம்: 23-03-1893
மறைவு:04-011974

இந்தியாவின் தாமஸ் ஆல்வா எடிசன் எனவும், அகிலம் போற்றும் அதிசய மனிதர் எனவும் புகழப்படுகிற ஜி.டி.நாயுடு மிகப் பெரிய விஞ்ஞானி மட்டுமல்ல, பிஸினஸ் உலகில் தன் முத்திரையை ஆழமாகவே பதித்தவர். நாயுடு சமூகம் தந்த இந்த பிஸினஸ்மேனை பற்றி இன்று நாம் பார்ப்போம்.

G.D.Naidu
பஸ்ஸில் தானாகவே டிக்கெட் தரும் மெஷினை கண்டுபிடித்தார். கணக்கு போடும் கால்குலேட்டரை உருவாக்கினார்.

கோபால்சாமி துரைசாமி நாயுடு (சுருக்கமாக ஜி.டி.நாயுடு) 1893-ல் பிறந்தார். கோவைக்குப் பக்கத்தில் சூலூருக்கு அருகில் இருக்கிற ஒரு குக்கிராமம்தான் கலங்கல். இந்த கிராமத்தில் ஜி.டி.நாயுடுவின் தந்தை ஓரளவுக்குப் பெரிய விவசாயி. நாற்பது ஏக்கரில் விவசாயம் செய்த கொண்டிருந்தார்.ஜி.டி.நாயுடுவுக்கு சிறுவயது முதலே பள்ளிப் படிப்பில் அவ்வளவு நாட்டமில்லை. பள்ளிக்கூடத்தில், இல்லாத சேஷ்டைகளை எல்லாம் செய்தார். நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போதே பள்ளிக் கூடத்திற்கு முழுக்குப் போட்டு விட்டார்.

ஆனால், பிற்பாடுதான் கல்வி என்பது ஒரு மனிதனின் வளர்ச்சிக்கு எவ்வளவு பெரிய தேவை என்பதை உணர்ந்தார். அதனால், தனது பிற்காலத்தில் கோவையில் சில முக்கிய கல்வி நிலையங்களைத் திறந்தார்.

பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய ஜி.டி.நாயுடுவிற்கு, தொழில்நுட்பம் தொடர்பான விஷயங்கள் கிளர்ச்சி தருவதாக இருந்தது. அந்த சமயத்தில் கலங்கல் கிராமத்திற்கு நில சர்வே செய்வதற்காக லாங்கார்ஷயர் என்கிற வெள்ளைக்காரர் ஒரு மோட்டார் பைக்கில் வந்தார். அந்த நேரத்தில் மோட்டார் பைக்கைப் பார்ப்பதே அபூர்வம்.

கிராமத்திற்கு வந்த இந்த மோட்டார் பைக் திடீரென ரிப்பேரானது. அதை சரிசெய்ய ஜி.டி.நாயுடுவிடம் கொஞ்சம் பெட்ரோலையும் கந்தல் துணியையும் கேட்டார் அந்த வெள்ளைக்காரர். அந்த ரிப்பேரை அவர் எப்படி சரி செய்கிறார் என்பதை உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தார் ஜி.டி.நாயுடு. பிறகு, அந்த பைக்கை விலைக்குத் தரமுடியுமா? என அந்த வெள்ளைக்காரரிடம் கேட்க, ''தம்பி, இதை வாங்குற அளவுக்கு உன்னிடம் பணம் இருக்கா?'' என்று கேட்டார் வெள்ளைக்காரர்.
பணம் சம்பாதிக்க வேண்டியதன் அவசியத்தை அப்போதுதான் அவர் உணர்ந்தார். உடனடியாக கோவைக்குச் சென்று ஒரு ஓட்டலில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு சில ஆண்டுகள் கடுமையாக உழைத்ததில் கிட்டத்தட்ட 400 ரூபாய் சேர்த்தார். அப்படி சேமித்தப் பணத்தை எடுத்துக் கொண்டு, மீண்டும் அந்த வெள்ளைக்காரரைச் சந்தித்து, அவர் வைத்திருந்த பைக்கை விலைக்கு வாங்கினார்.

பைக்கை வாங்கியவுடன் அதை எடுத்துக் கொண்டு தன் கிராமத்திற்கு வந்தார். அந்த பைக்கை தனித்தனியாக பிரித்துப் போட்டார். மீண்டும் சேர்த்தார். மீண்டும் பிரித்தார். இப்படி பலமுறை செய்ததில், மோட்டார் பைக் எப்படி இயங்குகிறது என்பது பற்றிய அத்தனை விஷயங்களையும் தெளிவாகத் தெரிந்து கொண்டார்.

இப்படி சுற்றிக் கொண்டிருந்த ஜி.டி.நாயுடுவை பருத்தி விவசாயம் பக்கம் திருப்பிவிட்டார் அவரது அப்பா. காரணம், அந்த சமயத்தில் இந்தியாவிலேயே பருத்தி வர்த்தகத்தில் முக்கியமான நகரமாக மாறியிருந்தது கோவை. முதலில் பருத்தி விவசாயம் செய்த ஜி.டி.நாயுடு, பிற்பாடு பருத்தி வர்த்தகத்தில் இறங்கினார்.
தரமான பருத்தியை சட்டென கண்டுபிடித்த அவரது திறமை, பருத்தி வர்த்தகத்தில் அவரை பெரும் செல்வந்தராக மாற்றியது. பருத்தி வர்த்தகத்தை இன்னும் பெரிய அளவில் செய்ய வேண்டும் என்று நினைத்து மும்பை சென்றார். ஆனால், மும்பையில் பருத்தி வர்த்தகம் என்பது ஏறக்குறைய ஒரு சூதாட்டமாகவே மாறியிருந்தது. சூதுவாது தெரியாமல் இந்த ஆட்டத்தில் சிக்கியதன் விளைவு, மிகப் பெரிய நஷ்டமடைந்தார் ஜி.டி.நாயுடு.

அதுவரை சம்பாதித்த பணம் அத்தனையையும் இழந்து, ராபர்ட் ஸ்டேன்ஸ் என்கிற வெள்ளைக்காரர் நடத்திய கம்பெனியில் மெக்கானிக்-ஆக வேலை செய்யத் தயாராக இருந்தார் ஜி.டி.நாயுடு. அந்த சமயத்தில் இந்தியாவில் பஸ்களை விற்றுக் கொண்டிருந்தார் ராபர்ட் ஸ்டேன்ஸ். ஒரு பஸ்ஸின் விலை நான்காயிரம் ரூபாய்.

பஸ்களின் வருகை மூலம் மக்கள் இன்னும் அதிக அளவில் ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்குச் செல்வார்கள் என்பதைச் சரியாகவே கணித்தார் ஜி.டி.நாயுடு. தவிர, அந்த சமயத்தில் கோவையில் ஒரு பஸ்கூட இல்லை. எனவே, ஒரு பஸ்ஸை வாங்கி பொள்ளாச்சி - பழநிக்கு இடையே ஓட்ட முடிவு செய்தார். காரணம், அந்த சமயத்தில் பொள்ளாச்சியிலிருந்து பல ஆயிரம் பேர் மாட்டு வண்டி மூலமாக நாள் கணக்கில் பயணம் செய்து பழநிக்கு வந்து சென்று கொண்டிருந்தனர்.
சரி, பஸ் வாங்க பணத்திற்கு எங்கே போவது? நல்ல வேளையாக பஸ் கம்பெனி அதிபர் ராபர்ட் ஸ்டேன்ஸே இரண்டாயிரம் ரூபாய் பணம் தந்தார். தனக்குத் தெரிந்த மற்ற நண்பர்களிடமும் பணத்தை புரட்டி எடுத்து, ஒரு பஸ்ஸை வாங்கி, பொள்ளாச்சியிலிருந்து பழநிக்கு அவரே ஓட்டிச் சென்று வந்தார். யுனைடெட் மோட்டார் சர்வீஸ் என்கிற பெயரில் அவர் நடத்திய இந்த போக்குவரத்துக் கம்பெனி நல்ல லாபத்தைத் தந்தது.

1920-
ல் அவரிடம் இருந்தது ஒரே ஒரு பஸ்தான். 1924-ல் 24 பஸ்ஸாக உயர்ந்தது. 1933-ல் அவரிடம் இருந்த பஸ்களின் எண்ணிக்கை 280. ஒரு கட்டத்தில் 600 பஸ்களுக்கும் மேலே வைத்திருந்தார் ஜி.டி.நாயுடு.
இந்த கம்பெனி நன்கு வளர்ந்த சமயத்தில் தன்னுடைய ஆராய்ச்சிகளுக்கு தொடர்ச்சியாக வடிவம் தர ஆரம்பித்தார். முக சவரம் செய்து கொள்ளும் மின் சாதனமான எலெக்ட்ரானிக் ரேஸரைக் கண்டுபிடித்தார். பஸ்ஸில் தானாகவே டிக்கெட் தரும் மெஷினை கண்டுபிடித்தார். கணக்கு போடும் கால்குலேட்டரை உருவாக்கினார்.
ஜி.டி.நாயுடு ஒரு கேமிரா பிரியர். படம் எடுக்கும் கேமிராவில் உள்ள தூரத்தை சரி செய்யும் லென்ஸை கண்டுபிடித்தார். 1930 வாக்கில் அவர் பல்வேறு மேற்கத்திய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டபோது பல்வேறு காட்சிகளை படமெடுத்தார். ஜெர்மனிக்குப் போனபோது ஹிட்லருடன் சேர்ந்து படமெடுத்துக் கொண்டார்.

ஜி.டி.நாயுடு எந்த அரசியல் கட்சியிலும் சேரவில்லை எனினும், 1936-ல் நடந்த கோவை புரவின்ஷியல் தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். இதன் விளைவாக, மோசடி செய்ய முடியாத மின் வாக்குப்பதிவு இயந்திரத்தை அப்போதே தயாரித்தார்.

1941-
ல் அவர் ஒரு ரேடியோவை உருவாக்கி, எல்லோரும் வாங்கும் வகையில் 70 ரூபாயில் கொடுக்க முடிவு செய்தார். இப்போது வந்திருக்கும் நானோ கார் போல 1940-லேயே வெறும் 2,000 ரூபாயில் இரண்டு சீட்கள் கொண்ட காரை உருவாக்கினார். ஆனால், இந்த புதுமையான முயற்சிக்கு அப்போதைய அரசாங்கம் அனுமதி அளிக்காததால், குறைந்த விலை கார் முயற்சி அப்படியே நின்று போனது.

தவிர, போத்தனூரில் 40 ஏக்கர் பரப்பளவில் விவசாய ஆய்வு பண்ணை ஒன்றையும் அமைத்தார். இதில் அதிக விளைச்சல் தரக்கூடிய பருத்தி விதைகள் உள்பட பல்வேறு விதைகள் கண்டுபிடிக்கப்பட்டன. நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன், மைசூர் அணையைக் கட்டிய விஸ்வேஸ்வரய்யா உள்பட பல அறிஞர்கள் இங்கு வந்திருக்கிறார்கள்.
1944-
ல் ஐம்பது வயதுகூட நிரம்பாத நிலையிலேயே தொழில் துறையிலிருந்து ஒதுங்கிக் கொண்டார் ஜி.டி.நாயுடு. 1945-ல் ஆர்தர் ஹோப் காலேஜ் ஆஃப் டெக்னாலஜியைத் தொடங்கி, 1949-ல் அதை அரசாங்கத்திற்குத் தானமாக தந்தார்.

1974-
ல் ஜி.டி.நாயுடு இறந்தாலும், அவரது வாரிசுகள் இன்றளவும் தொடர்ந்து பிஸினஸ் உலகில் சாதனை படைத்துக் கொண்டே இருக்கின்றனர்.


அவரின் பொன்மொழி:

21
வயது வரை படி, பிறகு பத்து ஆண்டுகள் ஏதாவது துறையில் வேலை செய்,

பிறகு உன்னுடைய படிப்பையும் பத்து ஆண்டுகள் அனுபவத்தையும் வைத்துத் தொழில் செய்.

குறைந்தது அடுத்து இருபது ஆண்டுகளுக்கு தொழில் செய்து பொருள் ஈட்டு.

பிறகு உன்னுடைய படிப்பு ஞானம் எல்லாம் பிறருக்குப் பயன்படப் பணி செய்.

ஜி.டி. நாயுடு என்று பரவலாக அறியப்படும் கோபால்சாமி துரைசாமி நாயுடு தமிழகம் தந்த அறிவியல் மேதைகளுள் ஒருவர்.விவசாயத்தில் எண்ணற்ற ஆராய்ச்சிகளை செய்தவர்.

கண்டுபிடுப்புகள்:

*
ஒரே வாழைத் தாரில் ஆயிரம் காய்கள் காய்க்கும் வகையில் புரட்சி செய்த வேளாண் விஞ்ஞானி அவர்.

*
தன்னிடம் பணியாற்றும் ஓட்டுநருக்கு ஒரு பேருந்தையே பரிசாகக் கொடுத்தவர். உலகம் சுற்றியவர். ஹிட்லரையும், முசோலினியையும் நேரில் சந்தித்து தமது கேமிராமூலம் படம் பிடித்தவர்.

*
முதன் முதலாக அவருடைய நிறுவனத்தைச் சேர்ந்த பேருந்துகள் வந்து, புறப்படும் நேரத்தைக் காட்டும் கருவி ஒன்றைக் கண்டுபிடித்து பேருந்து நிலையங்களில் வைத்து சாதனைப் படைத்தார். பயணச்சீட்டுகள் வழங்குவதற்கு அந்த காலத்திலேயே ஒரு இயந்திரத்தை தன்னுடைய சிறிய தொழிற்சாலையிலேயே தயாரித்து பயன்படுத்தினார்!

*
மோட்டார் ரேடியேட்டருக்கு இணையான ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடித்தன் மூலம் ரேடியேட்டருக்கு அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் அவருடைய பேருந்துகளுக்கு இருந்ததில்லை.

*
எஞ்சின் ஓடிக்கொண்டிருக்கும்போதே அதன் அதிர்வு விகிதம் அதிகமா, குறைவா என்பதைக் கண்டுபிடிக்க Vibrator Tester என்ற இயந்திரத்தையும் கண்டுபிடித்து அயல்நாட்டு விஞ்ஞானிகளுக்கு இணையாக நம் நாட்டிலும் அறிவியல் துறையில் சாதனைப் புரிய இயலும் என்று உலகுக்கு நிரூபித்தவர் நாயுடு.

*
புகைப்படத் துறையில் பிற்காலத்தில் மிகவும் உதவியாயிருந்த டிஸ்டன்ஸ் அட்ஜஸ்டர் என்ற கருவி, பழச்சாறு பிழிந்தெடுக்க ஒரு கருவி, எந்தவித வெட்டுக்காயமுமின்றி முகச்சவரம் செய்துக்கொள்ள பிளேடு என அவருடைய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தன.

*
இந்தியாவிலேயே முதன் முதலாக மின்சார மோட்டார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை கோவையிலேயே துவக்கப்பட்டது என்ற பெருமை அவரையே சாரும்.

*
விதைகளில்லா நார்த்தங்காய், ஆரஞ்சு பழம் ஆகியவை இவருடைய கண்டுபிடிப்புகளில் சில. அடுத்து, சோளச்செடிகளுக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தி நட்ட சிறிது காலத்திலேயே 26 கிளைகளுடன் 18 1/2 அடி உயரத்திற்கு வளரச் செய்தார்! சாதாரண சோளச்செடியில் மூன்று அல்லது நான்கு கதிர்கள்தான் இருந்தன. ஆனால் நாயுடுவின் அதிசய செடிகளில் 39 கதிர்கள்வரை இருந்தன!

அறிவு தாகம் மிக்க அவருக்கு இளைஞர் சமுதாயத்தின் மீது அதீத அக்கறை இருந்தது. கோயமுத்தூரில் சில கல்வி நிறுவனங்கள் துவங்கக் காரணமாக இருந்த அவர் ஒரு நாட்டின் எதிர்கால முன்னேற்றம் அந்நாட்டு இளைஞர்களின் தரத்தைப் பொருத்தே அமைகின்றது என்று நம்பினார். அக்காலத்தில் இளைஞர்களின் வாழ்க்கை எப்படி வாழப்படுகிறது என்பதை அறிய அக்காலத்தில் ஆராய்ச்சி செய்து ஒரு புள்ளி விவரத்தைப் பெற்ற அவர் கூறுகிறார்: இளம் உள்ளங்கள் நன்மை தீமைகளை ஆராய்ந்து பாராமல் அப்படியே ஏற்றுக் கொண்டு விடுகின்றன. இன்னும் சொல்லப் போனால் அவர்களுக்கு எப்படி உண்பது? எப்போது உண்பது? எப்போது உறங்குவது, எப்படி உடை அணிவது? எப்படிக் குளிப்பது எப்படி பிறருடன் பழகுவது? எப்படி வேலைகளைச் செய்வது? என்ற ஆரம்பப் பாடம் கூடத் தெரிவதில்லை. அவர்கள் இதையெல்லாம் நாள் தோறும் செய்கிறார்கள். ஆனால் ஒழுங்கற்ற முறையில்! அவர்கள் கல்லூரிக்கு எதற்காக வந்தார்களோ அதை மறந்து விளையாட்டிலும், திரைப்படத்திலும், விழாக்களிலும், நாவல்களிலும் நேரத்தை வீணாக்குகின்றனர். அவர்கள் 15ஆம் வயது முதல் 25ஆம் வயது வரை உள்ள பத்தாண்டு காலத்தை எப்படி கழிக்கிறார்கள் என்பதற்கு ஒரு புள்ளி விவரம் கூறுகிறேன்.

செலவு செய்த முறை ---------------- வருடம்-------மாதம்------நாள்

உறக்கம் ------------------------------- 3 ------- 4 ------- 5

உணவு -------------------------------- 0 -----------7 --------- 18

கண்ணாடிக்கு முன் அழகு பார்த்தல் ------- 0 ---------7 ----------18

வீண் பொழுது போக்குகள் -----------------4 --------- 3 --------- 4

படிப்பு ---------------------------------- 1 ---------- 1 -------- 15”

இளைஞர்களின் எண்ணங்கள் களியாட்டங்களையும், வீண் பொழுது போக்குகளையும் சுற்றியே வட்டமிடுமானால் அவர்கள் சக்தி சிதறுவதுடன் உடலும், உள்ளமும் கெடுகின்றன என்று அவர் ஆணித்தரமாக நம்பினார். 1953 ஆம் ஆண்டு மதுரைக் கல்லூரியில் உரையாற்றிய போது அவர் இளைஞர்களுக்குக் கூறினார். நீங்கள் எந்தத் தீய பழக்கத்திற்கும் அடிமையாகி விடாதீர்கள். தவறி அடிமைப்பட்டு விட்டால் அதனால் உங்கள் வாழ்நாள் முழுவதும் பாழாவதோடு மனித சமுதாயமும் நஞ்சூட்டப்படுகிறது. சாதாரணமாக 15 வயது முதல் 25 வயதுக்குள் தான் தீய பழக்கங்கள் ஏற்படுகின்றன. அவற்றை இளம் வயதிலேயே மாற்றா விட்டால் பிறகு எப்போதுமே மாற்ற முடியாது. மாணவப் பிராயத்தில் இயற்கையாகக் காணப்படும் ஊக்கமும் தைரியமும் தீய பழக்கத்தை எளிதாக ஒழித்து விடக் கூடியவை.

இளைஞர்கள் பட்டம் பெறும் காலத்தில் அறிவு முதிர்ச்சி பெறுகிறார்கள். அப்போது அவர்களுக்கு நன்மை தீமைகளைப் பகுத்துணரும் ஆற்றல் ஏற்பட வேண்டும். பரந்த நோக்கு ஏற்பட வேண்டும். நீங்கள் முதல் வகுப்பிலோ அல்லது இரண்டாம் வகுப்பிலோ தேறா விட்டாலும் அல்லது தேர்ச்சியே பெறா விட்டாலும் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. தீய பழக்கங்களை விட்டு விட்டோம் என்ற நம்பிக்கையோடும், தைரியத்தோடும் நேர்மைக்காக போராடும் உள்ளத்தோடும், ஆழ்ந்து நோக்கும் பிரச்னைகளை ஆராயும் தன்மையோடும் நீங்கள் இங்கிருந்து வெளியேறுவீர்களேயானால் உங்கள் வாழ்நாள் முழுவதும் எல்லாத் துறைகளிலும் வாகை சூடுவீர்கள்

நீங்கள் நிறைய கற்பதற்கும், உங்களை முன்னேற்றிக் கொள்வதற்கும், வாழ்க்கையை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் இது தான் தக்க பருவம். உலகின் மிகப் பெரிய தலைவர்களது வாழ்க்கை வரலாற்றை நீங்கள் பார்ப்பீர்களேயானால் அவர்கள் கல்லூரிப் பட்டம் பெற்றிருந்தாலும், பெறா விட்டாலும் நிறைய உழைத்தவர்களாக, அறிவைத் தேடி ஓடியவர்களாக இருப்பார்கள். அவர்கள் தான் மனித சமுதாயத்திற்கு வழிகாட்டிகளாக அமைகிறார்கள்

ஒழுக்கமான வாழ்க்கையும், அறிவுத் தாகமும், அதற்கேற்ற உழைப்பும் இருந்தால் ஒருவருக்கு சாதிக்க முடியாதது எதுவுமில்லை என்பது அவருடைய அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது. இது அவர் அடுத்தவருக்குச் சொன்ன அறிவுரை மட்டுமல்ல. அவருடைய வாழ்க்கையிலும் அவர் முழுமையாகக் கடைபிடித்தார். செல்வந்தராக ஆன பிறகும் கட்டுப்பாடான சிக்கனமான வாழ்க்கை வாழ்ந்த அவர் காலத்தையும் வீணாக்காமல் முழுமையாகப் பயன்படுத்தினார். அதனால் தான் அவரால் நிறைய சாதிக்க முடிந்தது.

தனக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களை அவர் ஒரு போதும் எள்ளளவும் வீணாக்கியதில்லை. இயந்திரங்கள், தொழில் நுட்பம் சம்பந்தமாக உலகில் எங்கு கண்காட்சி நடந்தாலும் கண்டிப்பாக அங்கு சென்று முழு நேரமும் அங்கு இருந்து தன் அறிவு தாகத்தைத் தீர்த்துக் கொள்வார். 1939 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நியூயார்க்கில் உலகக் கண்காட்சி நடைபெற்றதைக் காணச் சென்றார். அதுபற்றி பின்னர் குறிப்பிட்ட போது அவர் கூறுகிறார்: நான் கண்காட்சிக்கு தினமும் தவறாமல் சென்று வந்தேன். தினமும் நான் தான் காட்சி சாலைக்குள் நுழைவதில் முதல் மனிதனாகவும், வெளி வருவதில் கடைசி மனிதனாகவும் இருந்தேன். காலை உணவை முடித்துக் கொண்டு காட்சி சாலைக்குப் போவேன். மாலை வரையில் ஒன்றுமே உண்ணாமல் இயந்திரங்களைப் பார்த்து விட்டு வீடு திரும்புவேன்

வாழ்க்கையின் ஆரம்பத்தில் மட்டுமல்ல, வாழ்க்கையில் பல சாதனைகள் செய்து வெற்றியடைந்த பிறகும் அவர் இப்படியொரு ஆர்வத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தது அவருடைய உயர்வுக்கு ஒரு முக்கிய காரணம். அதனால் தான் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான சர் சி.வி.ராமன் ஜி டி நாயுடுவைக் குறித்து சொல்கையில் இலட்சத்தில் ஒருவர் என்று சொல்வது கூட அவரைக் குறைத்துச் சொல்வது போலத் தான்என்றார்.

இளைஞர்களே அவர் கூறியதைப் போல உங்கள் இளமைக் காலத்தில் எச்சரிக்கையாக இருங்கள். கவனமாக இருங்கள். உங்கள் சக்தியையும், காலத்தையும் வீணக்காமல் முழுமையாகப் பயன்படுத்துங்கள். அப்படிச் செய்தீர்களானால் அவரைப் போல் நீங்களும் கால மணலில் காலடித் தடங்களை விட்டுப் போகலாம்!

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...