20 ஜனவரி 2012

புதுவை அறிவியல் இயக்கம்.&விஞ்ஞான பிரச்சார்-2012


                               அன்பு நண்பர்களே,
          கொங்குத்தென்றல்-ஈரோடு மாவட்டம் சார்பாக தங்களை இனிதே வரவேற்கிறோம்.
          கடந்த 17-ந்தேதி 18-ந்தேதி மற்றும் 19-ந்தேதி-அதாவது ஜனவரி2012-ல் புதுவை அறிவியல் இயக்கம் மற்றும் புது டெல்லி-விஞ்ஞான் பிரச்சார் சார்பாக நடத்தப்பட்ட 
 '' INNOVATIVE SCIENCE EXPERIMENTS TRAINING WORKSHOP ''
    அதாவது  புதுமையான எளிய அறிவியல் செய்முறைப்பயிற்சிப் பயிலரங்கத்தின் கண்ணோட்டம் பற்றி சிறிது இங்கு காண்போம்.

            எளிய செய்முறைஅறிவியல் பயிலரங்கின் - விழாப் பெயர்ப் பலகையின் தோற்றம் - மேலே உள்ள படம்.அமர்ந்திருப்பவர்கள்(1) THIRU. Prof.Pirre Fonttes (paris univ.france) (2) THIRU.T.A. Venkateshwaran - Vigyan Prasar-Dept.Of Science & Technology -Govt.Of India(NEW DELHI).


              புதுவை அறிவியல் இயக்கம், புதுடெல்லி விஞ்ஞான் பிரச்சார் அமைப்புடன் இணைந்து நடத்திய புதுமையான எளிய அறிவியல் செய்முறைப்பயிற்சி பயிலரங்கு நடைபெற்ற பள்ளியின் முகப்பு அறைத்தோற்றம் மேலே உள்ள படம்.(கர்நாடக மாநில அறிவியல் இயக்க நண்பர்(KSF),தமிழ்நாடு மாநிலஅறிவியல் இயக்க நண்பர்(TNSF),புதுவை மாநில அறிவியல் இயக்க நண்பர்(PSF) ஆகியோர் ஆர்வமுடன் பங்கேற்ற காட்சி.)      
 

     
            புதுடெல்லி விஞ்ஞான் பிரச்சார் அமைப்பின் நிர்வாகி திருமிகு.T.V.வெங்கடேஷ்வரன் அவர்கள் அறிவியல் செய்முறைப் பயிலரங்கத்தினைத் துவக்கி வைத்து உரையாற்றிய காட்சி மேலே உள்ள படம்.அருகில் திருமிகு.ஸ்ரீதரன் அவர்கள்,திருமிகு.பியர் பான்த்ஸ் Prof.Pirre Fonttes (paris univ.france) அவர்கள்,திருமிகு.T.P.ரகுநாத் அவர்கள்,திருமிகு.S.சீனிவாசன் அவர்கள்.

       
               புதுவை அறிவியல் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் திருமிகு.T.P.ரகுநாத் அவர்கள் பயிலரங்கத் துவக்கத்தின்போது இந்தப் பயிற்சிப்பட்டறையின் அவசியத்தை எடுத்துரைத்த காட்சி மேலே உள்ள படம்.



             எளிதில் கிடைக்கும் சாதாரண பொருட்களைக்கொண்டு செய்யும் அறிவியல் பயிற்சியின் எளிமை மற்றும் அதன் பயன்பாடு பற்றி விளக்குகிறார் பிரான்ஸ் நாட்டின் ஒடிசா பாரீஸ் சௌத்-11 பல்கலைக்கழகப் பேராசிரியர் திருமிகு.பியர் பான்த்ஸ் Prof.Pirre Fonttes (paris univ.france) அவர்கள் மேலே உள்ள படம்.



     

             புதுவை அறிவியல் இயக்கத் துணைத்தலைவர்களில் ஒருவரான திருமிகு.A.ஹேமாவதி அவர்களது உரையில்  பயிற்சியில் கலந்து கொள்ள வருகை தந்துள்ள தென்னிந்திய வட்டார அறிவியல் ஆர்வலர்கள் உட்பட அனைவரும் இந்த வாய்ப்பினை அனைத்து எளிய மக்களுக்கும்,மாணவர்களுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என கேட்டுக்கொண்ட  காட்சி மேலே உள்ள படம்.


திருமிகு.பேரா.பியர் பான்த்ஸ்Prof.Pirre Fonttes (paris univ.france) அவர்கள்  அறிவியல் செய்முறை விளக்கம் கொடுத்த காட்சி மேலே உள்ள படம்.



திருமிகு.பியர் பான்த்ஸ்Prof.Pirre Fonttes (paris univ.france) அவர்களதுஅறிவியல் விளக்கத்திற்கான  பிரெஞ்ச் மொழியின்  உரையினை, புதுவையில் உள்ள பிரெஞ்ச் பள்ளி இயற்பியல் ஆசிரியர் அவர்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில் அறிவியல் இயக்க நண்பர்களுக்காக மொழி பெயர்த்து விளக்கிய காட்சி மேலே உள்ள படம்.

            ஆந்திரா மாநில அறிவியல் இயக்க ஆசிரியப்பெருமக்கள் அறிவியல் விளக்கத்தினை ஏற்கும் காட்சி மேலே உள்ள படம்.


       கர்நாடகா மாநில அறிவியல் இயக்க அமைப்பாளர் அவர்கள் அறிவியல் செய்முறை விளக்கத்தினை சோதித்து தெளிவு பெறும் காட்சி.அதனை நோக்குபவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி மையத்தினைச் சேர்ந்த ஆசிரியர் அவர்கள் மேலே உள்ள படம்.

           கேரளா மாநில அறிவியல் இயக்கத்தினைச் சேர்ந்த அறிவியல் ஆசிரியர்கள் அறிவியல் செய்முறைகளைப் பரிசோதிக்கும் காட்சி மேலே உள்ள படம்.



      தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினைச் சேர்ந்த காஞ்சிபுரம் மாவட்ட அறிவியல் இயக்க நண்பர் பொறியியல் கல்லூரி மாணவர் மற்றும் ஈரோடு மாவட்ட தாளவாடி மையம்-பள்ளி ஆசிரியர் அறிவியல் பரிசோதனை செய்து பார்க்கும் காட்சி மேலே உள்ள படம்.



அறிவியல் பரிசோதனை எல்லாம் கடைகளில் கிடைக்கும் சோப்பு ஆயில் மற்றும் தண்ணீரிலும் செய்யலாங்க! என்கின்றனர்,கர்நாடகா அறிவியல் இயக்க நண்பர் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்க நண்பர் மேலே உள்ள படம்.


  ஆந்திர மாநில அறிவியல் இயக்க ஆசிரியர் சந்தேகத்திற்கான விளக்கம் Prof.Pirre Fonttes (paris univ.france) அவர்களிடம் பெற அந்த விளக்கம் தனக்கும் தேவை! என்ற நோக்கில் அருகில் ஆர்வமுடன் கேட்டறிகிறார் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி ஆசிரியர் அவர்கள் மேலே உள்ள படம்.



           கர்நாடகா அறிவியல் இயக்க நண்பர்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்க நண்பர்கள் தங்கிஇருந்த விடுதிக்கு வந்து உடன் ஊக்கமும் உற்சாகமும் அளித்த ஆசிரியர் திருமிகு.விசாகன்-புதுச்சேரி அவரது இருசக்கர வாகனத்துடன், அவர்கள் மேலே உள்ள படம்.
       
The Alliance Francaise Of  Pondicherry வழங்கிய பொங்கல் திருவிழா 18-ந்தேதி இரவு 7-00மணிக்கு கடற்கரை அருகில் உள்ள  Maison Colombani -இல் நடந்த Clowns Sans Frontieres circus என்னும்  கலை நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் அறிவியல் இயக்க நண்பர்கள் கலந்துகொண்டு இன்புற்ற காட்சி மேலே உள்ள படம். (இந்நிகழ்ச்சியினைக் கண்டுகளிக்க உதவிய புதுச்சேரி ஆசிரியர் திருமிகு. விசாகன் அவர்களுக்கு நன்றி!)
           கீழே உள்ள படத்தில் வலது கடைசியில் உள்ளவர் திருமிகு.விசாகன் புதுச்சேரி ஆசிரியர் அவர்கள் அவர்தம் வாரிசுடன்.!!!


   
                அன்பு நண்பர்களே,வணக்கம்.


              புதுவை அறிவியல் இயக்கம் மற்றும்  மத்திய அரசின் விஞ்ஞான் பிரச்சார அமைப்பு என்னும் அறிவியல் தொழில்நுட்பத்துறையுடன் இணைந்து '' INNOVATIVE SCIENCE EXPERIMENTS TRAINING WORKSHOP ''கலந்துகொண்ட அந்த   17,18 & 19 ஜனவரி-2012 ஆகிய மூன்று நாட்கள் மிக முக்கியமான நாட்களாக நமது அறிவியல் இயக்க நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.ஆம்!

          புதுச்சேரி, கண்ணன் நகரில் அமைந்துள்ள கோவிந்தபிள்ளை வீதியில் செயல்படும்- வெற்றி வெங்கடேஷ்வரா வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் மேல்தளத்தில் அமைந்துள்ள
     
          வெற்றி வெங்கடேஷ்வரா ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில்- 
       '' INNOVATIVE SCIENCE EXPERIMENTS TRAINING WORKSHOP ''என்னும்

           நூதன எளிய அறிவியல் செய்முறைப் பயிலரங்கு  நடத்தியது.இங்கு மூன்று நாட்களும் சுமார் 15+22+31 என 68-க்கும் அதிகமான அறிவியல் பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. சிறு கிராமத்தில் எளிமையாகக்கிடைக்கும் சமையல் பொருட்கள் உட்பட அன்றாடம் பயன்படுத்தும் விலை மலிவான பொருட்களைக்கொண்டு நிகழும் அறிவியல் விளைவுகளைச் செய்து காட்டிப் பயிற்சி அளிக்கப்பட்டன.
              இந்தப்பயிற்சியில் நியூட்டன் விதி,பாஸ்கல் விதி,கலிலியோ விதி, வேதிவினை மாற்றம் மற்றும் இயற்கையின் மாற்றம்&தோற்றம் எனப் பலவிதப் பயன்பாடுகள் அடங்கிய செய்முறைகள் எளிமையாக,தெளிவாக,ஆர்வமூட்டும் வகையில் எடுத்தாளப்பட்டன.

         தென்னிந்திய மாநிலங்களான  ஆந்திரா,கர்நாடகா,கேரளா,தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த அறிவியல் ஆசிரியப்பெருமக்களும்,அறிவியல் ஆர்வலர்களும் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர் & பயன்பெற்றனர்.இந்த அறிவியல் ஆக்கங்களை பள்ளி மற்றும் கல்லூரி மாணவக் கண்மணிகள் உட்பட சாதாரணப் பொதுமக்கள் மத்தியிலும் எடுத்துச் செல்லப்படும். என அந்தப்பயனாளர்கள் தெரிவித்தனர்.
                அடுத்து வரும்  21, 22 & 23 தேதிகளில் போபால் அறிவியல் இயக்கத்துடன் இணைந்து  போபாலிலும்,அடுத்ததாக ஹிமாசலப்பிரதேச மாநிலம் -மாண்டியிலும் இந்த நூதன எளிய அறிவியல் பயிற்சி அளிக்கப்போவதாக இந்த அறிவியல் பயிற்சி அமைப்பினர் தெரிவித்தனர்.
                          
               இதன் நோக்கம் நமக்கு முன்னே இருக்கும் அறிவியல் நிகழ்வுகளை கண்டறியவைப்பதும்,அதனால் கிராமப்பகுதியினைச் சேர்ந்த ஏழை மாணவர்களும் தங்களுக்கு அருகிலேயே கிடைக்கும் சமையல் பொருட்கள் உட்பட அன்றாடம் கிடைக்கும் எளிய பொருட்களைக்கொண்டு அறிவியல் நிகழ்வுகளைச் செய்யவைத்து அதன்விளைவாக அறிவியலில் ஆர்வத்தினைத் தூண்டச் செய்வதும்   ஆகும் எனவும் தெரிவித்தனர்.  தென்னிந்திய அளவிலான அறிவியல் பயிற்சி பயிலரங்கத்தினை நடத்திய புதுச்சேரி அறிவியல் இயக்கத்தினர் கலந்துகொண்ட அனைவருக்கும் மூன்று நாட்களும்  உண்ண உணவு    தங்குவதற்கு  ஏற்ற  உறைவிடம் சிறப்பாக ஏற்பாடு செய்து தந்துள்ள விதம் மிகவும் பாராட்டுக்குரியது.இரவு பகல் பாராமல் தேவைக்கேற்ப உதவிகள் செய்த  புதுச்சேரி அறிவியல் இயக்க அனைத்து அறிவியல்ஆர்வலர்கள் & ஆசிரியர்களுக்கு  எங்களது தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக மிக்க நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். என,,,,,,,,,,

                                              பதிவேற்றம்;- PARAMESDRIVER
                                   TAMILNADU SCIENCE FORUM- THALAVADY
                                                         ERODE DISTRICT-
                                       DATE:-20-JANUARY - 2012 FRI DAY.

09 ஜனவரி 2012

கணிப்பொறி மென்பொருள்

அன்பு நண்பர்களே,வணக்கம். 
இந்தப்பதிவில் மென்பொருள் பற்றிய தொகுப்பு காண்போம்.

        கணிப்பொறி மென்பொருள் அல்லது மென்பொருள் என்பது கணிப்பொறி நிரல்கள் மற்றும் கணிப்பொறிகளால் படிக்கவும் எழுதப்படவும் முடிகின்ற மற்றும் பிற வகைப்பட்ட தகவல் போன்ற டிஜிட்டல் முறையில் சேமிக்கப்படும் தரவு என்று முதன்மையாகப் பயன்படுத்தப்படுகின்ற பொதுவான ஒரு சொல்லாகும். இன்று இந்தச் சொல் திரைப்படச் சுருள், நாடாக்கள் மற்றும் பதிவுப்பொருட்கள் போன்று வழக்கமாக கணிப்பொறியோடு தொடர்புகொண்டிராத தரவையும் உள்ளடக்கியிருக்கிறது..இந்த சொற்பதம் வன்பொருள் (அதாவது உடலியல் சாதனங்கள்) என்ற பழைய சொல்லுக்கு முரணாக இருக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது; வன்பொருள் என்பதற்கு முரணாக மென்பொருள் என்பது கண்ணுக்குப் புலப்படாதது, அதாவது "தொட இயலாதது" என்பதைக் குறிக்கிறது. மென்பொருள் என்பதும் சிலசமயங்களில் மிகவும் குறுகலான பொருளிலேயே, அதாவது பயன்பாட்டு மென்பொருட்கள் என்பதாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
எடுத்துக்காட்டுகள்:
     

மென்பொருள் வகைகள்

நடைமுறை கணினி அமைப்புகள் மென்பொருள் அமைப்புகளை மூன்று முக்கிய வகைகளாகப் பிரிக்கின்றன: அமைப்பு மென்பொருள், நிரலாக்க மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள், இருப்பினும் இந்த வேறுபாடு விதிகளுக்கு உட்படாது என்பதுடன் தெளிவற்றதாகவே இருந்து வருகிறது.

        அமைப்பு மென்பொருள்

அமைப்பு மென்பொருள் கணிப்பொறி வன்பொருளையும் கணிப்பொறி அமைப்பையும் செயல்படுத்த உதவுகிறது. இது பின்வரும் இணைகளை உள்ளடக்கியிருக்கிறது:
  • சாதன இயக்கிகள்
  • இயங்கு தளம்
  • சர்வர்கள்
  • பயனீடுகள்
  • விண்டோ சிஸ்டம்ஸ்
பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட கணினியின் விவரங்கள் தொடர்ந்து சிக்கலானதாகவே இருப்பதிலிருந்து பயன்பாடுகள் நிரலாக்குநருக்கான சுமையைக் குறைப்பதே அமைப்பு மென்பொருளின் நோக்கமாகும், இது தகவல்தொடர்பு சாதனங்கள், அச்சிடும் சாதனங்கள், சாதன வாசிப்பான்கள், காட்சியமைப்புகள் மற்றும் விசைப்பலகைகள் போன்ற துணைப்பொருட்களையும், நினைவகம் மற்றும் நிகழ்படுத்தியை பாதுகாப்பான மற்றும் நிலைப்படுத்தப்பட்ட முறையாக கணிப்பொறி மூலாதாரங்களுக்கான பிரிப்பு ஆகியவற்றையும் உள்ளடக்கியிருக்கிறது. உதாரணங்கள்- விண்டோஸ் எக்ஸ்பி, லினக்ஸ், மற்றும் மேக் ஓஎஸ் எக்ஸ்.

       நிரலாக்க மென்பொருள்

நிரலாக்க மென்பொருள் வழக்கமாக கணிப்பொறி நிரலாக்கங்களை எழுதுவதில் நிரலாக்குனருக்கு உதவுவதற்கென்று கருவிகள் மற்றும் மிகவும் வசதியான முறையில் வேறுபட்ட நிரலாக்க மொழிகளைப் பயன்படுத்தும் மென்பொருளையும் வழங்குகின்றன. இந்தக் கருவிகளில் உள்ளடங்குவன:
  • கம்பைலர்கள்
  • டீபக்கர்கள்
  • இண்டர்பிரட்டர்கள்
  • லின்கர்கள்
  • டெக்ஸ்ட் எடிட்டர்கள்
ஒரு ஒருங்கிணைந்த உருவாக்கச் சூழல் என்பது (ஐடிஇ) இந்த செயல்பாடுகள் அனைத்தையும் கையாள்வதற்கு முயற்சிக்கும் ஒற்றைப் பயன்பாடாக இருக்கிறது.

         பயன்பாட்டு மென்பொருள்

பயன்பாட்டு மென்பொருள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறிப்பிட்ட (நேரடியாக கணினி மேம்பாடு தொடர்புடையது) வேலைகளை செய்துமுடிக்க பயனர்களுக்கு உதவுகிறது. வழக்கமான பயன்பாடுகளில் உள்ளவை:
  • தொழில்துறை தானியக்கம்
  • தொழில் மென்பொருள்
  • வீடியோ கேம்ஸ்
  • நுண்ணலகு ரசாயனம் மற்றும் திடநிலை இயற்பியல் மென்பொருள்
  • தகவல்தொடர்புகள் (அதாவது இணையத்தளம் மற்றும் அதில் உள்ளடக்கப்பெறும் அனைத்தும்)
  • தரவுத்தளங்கள்
  • கல்வித்துறை மென்பொருள்
  • மருத்துவ மென்பொருள்
  • இராணுவ மென்பொருள்
  • மூலக்கூறு மாதிரியாக்க மென்பொருள்
  • இமேஜ் எடிட்டிங்
  • ஸ்பிரெட்ஷீட்
  • போலியாக்க மென்பொருள்
  • வேர்ட் பிராசஸிங்
  • முடிவெடுத்தல் மென்பொருள்
பரந்துவிரிந்த தலைப்புகளுக்கான பயன்பாட்டு மென்பொருள் இருப்பதுடன் அவற்றில் தாக்கமேற்படுத்தவும் செய்கின்றன.

            System software

System software provides the basic functions for computer usage and helps run the computer hardware and system. It includes a combination of the following:
  • Device drivers
  • Operating systems
  • Servers
  • Utilities
  • Window systems
System software is responsible for managing a variety of independent hardware components, so that they can work together harmoniously. Its purpose is to unburden the application software programmer from the often complex details of the particular computer being used, including such accessories as communications devices, printers, device readers, displays and keyboards, and also to partition the computer's resources such as memory and processor time in a safe and stable manner.

Programming software

Programming software usually provides tools to assist a programmer in writing computer programs, and software using different programming languages in a more convenient way. The tools include:
  • Compilers
  • Debuggers
  • Interpreters
  • Linkers
  • Text editors
An Integrated development environment (IDE) is a single application that attempts to manage all these functions.

Application software

Application software is developed to perform in any task that benefits from computation. It is a broad category, and encompasses software of many kinds, including the internet browser being used to display this page. This category includes:
  • Business software
  • Computer-aided design
  • Databases
  • Decision making software
  • Educational software
  • Image editing
  • Industrial automation
  • Mathematical software
  • Medical software
  • Molecular modeling software
  • Quantum chemistry and solid state physics software
  • Simulation software
  • Spreadsheets
  • Telecommunications (i.e., the Internet and everything that flows on it)
  • Video editing software
  • Video games
  • Word processing

06 ஜனவரி 2012

23-வது சாலைப் பாதுகாப்பு விழா -2012 தாளவாடி

 

 

                06 January, 2012


           23-வது சாலைப் பாதுகாப்பு விழா -2012 

                                       தாளவாடி


     அன்பு நண்பர்களே,வணக்கம்.
                   tnsfthalavady.blogspot.com    வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
      
    '' விபத்தினால் வருவது துன்பம்-பாதுகாப்பினால் வருவது இன்பம்''

          23-வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி-
                  (1) ரோட்டரி கிளப் தாளவாடி,  (2)தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தாளவாடி,  (3)காவல்துறை தாளவாடி,   (4)சத்தி வட்டார போக்குவரத்து அலுவலகம்,  இணைந்து  சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தினர். 
           தாளவாடி வட்டார அனைத்து பள்ளிகள்,
            (1)அரசு மேல்நிலைப்பள்ளி-தாளவாடி   (2) அரசு உயர்நிலைப்பள்ளி-சிக்கள்ளி,  (3)புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி - சூசைபுரம்,   (4) புனித அன்னாள் உயர்நிலைப்பள்ளி-திகனாரை,  (5)டிவைன் மெட்ரிக் பள்ளி-காஜனூர் -ஆகிய அனைத்து பள்ளிகள் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கோஷங்கள் இட்டு பேரணியில் கலந்து கொண்டனர்.
             
       முன்னதாக '' விபத்துக்குக்காரணங்கள்-விபத்தைத்தவிர்க்க நமது பங்கு'' என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதி சமர்ப்பித்தனர்.

         அனைத்து பள்ளிக்குழந்தைகள்&ஆசிரியர்கள் குழுவின்  பேரணியை தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் வளாத்தினுள் ''கொடி அசைத்து துவக்கி வைக்கிறார்'' திருமிகு.M.சிங்காரவேலு B.E.,மோட்டார் வாகன ஆய்வாளர் சத்தியமங்கலம் அவர்கள்.அருகில்  தாளவாடி பஞ்சாயத்துத்தலைவர் அவர்கள் மற்றும் திகினாரை பஞ்சாயத்து தலைவர் திருமிகு. காளநாயக்கர் அவர்கள்.இவர்களுடன் தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அரசு அலுவலர்கள்&பணியாளர்கள்,பொது மக்கள்.(மேலே)





    பேரணியில் கலந்து கொண்ட பள்ளிக்குழந்தைகள் பேருந்து நிலையத்தினுள் ,(வெயில் காரணமாக).(மேலே)




 பள்ளிக்குழந்தைகள் ''மத ஒற்றுமைக்கு நல்லிணக்கமாக விளங்கும்'' கோவில்கள் முன்பு ''சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்'' வந்த காட்சி.(மேலே)



                         ''சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக் குழு'' 
         திருமிகு.சாந்தமல்லப்பா -ரோட்டரி கிளப் தாளவாடித் தலைவர் -அவர்கள் தலைமையுரை ஆற்றிய காட்சி.(மேலே)


         திருமிகு.M.சிங்காரவேலு.B.E.,மோட்டார் வாகன ஆய்வாளர்  சத்தியமங்கலம் அவர்கள்   சாலைப்பாதுகாப்பின் அவசியத்தையும்,விபத்திலிருந்து நம்மைக்காத்துக்கொள்வது பற்றியும் சிறப்புரை ஆற்றிய காட்சி.(மேலே).




             தாளவாடி(CIRCLE) காவல்துறை ஆய்வாளர் திருமிகு.கா.தங்கவேல் -அவர்கள் போக்குவரத்துக்குற்றங்களும்,சட்டங்களும் பற்றி விவரித்த காட்சி.(மேலே)


             திருமிகு.அரிமா.K.லோகநாதன் கோபி&சத்தி வட்ட ஓட்டுனர் பயிற்சிப்பள்ளி சங்கத்தலைவர் அவர்கள்- ஓட்டுனர் உரிமம் எடுப்பதன் அவசியத்தையும்,வாகனம் ஓட்டும் முறைகள்,சாலை விதிகள்,இன்சூரன்ஸ் எடுப்பதன் அவசியத்தையும் விளக்கிய காட்சி.(மேலே)




     திருமிகு.S.வியானி (DIVINE & ROTARY CLUB)அவர்கள் தனிநபர் வாகனக்குறைப்பின் அவசியத்தையும், அதனால் போக்குவரத்து நெரிசல் குறைவும்,சுற்றுச்சூழல் மாசு குறைவும் பற்றி விவரித்த காட்சி.(மேலே)



          திருமிகு. அந்தோணி முத்து-(PALM-2 & TNSF) அவர்கள் அங்குள்ள கன்னட மொழி மட்டும் தெரிந்த மக்களுக்காக ''கன்னடமொழியில்'' சாலை விபத்துக்கு நமது அறியாமை  ,தெரிந்தும் செய்யும் தவறுகள் பற்றியும் - சாலைப் பயணத்தின் பாதுகாப்பு பற்றியும் கன்னடமொழியில் விவரித்த காட்சி.(மேலே)


      திருமிகு.மனோஜ் ஆசிரியர் மற்றும் குழுமத்தினர்- டிவைன் மெட்ரிக் பள்ளி ஆகியோர் சாலை விழிப்புணர்வுப்பாடல் பாடிய காட்சி.(மேலே)








             திருமிகு. A.P.ராஜ் (TNSF)அவர்கள் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில் சமூக அக்கறையின்பேரில் சாலைப்பாதுகாப்பு விழா எடுத்த (1)ரோட்டரி கிளப்,(2)தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,(3)தாளவாடி காவல்துறை,(4)கோபி மற்றும் சத்தி வட்டார போக்குவரத்துத்துறை இவர்களுடன் துணை நின்ற சத்தி&கோபி வட்டஓட்டுனர் பயிற்சிப்பள்ளி நிர்வாகிகள்,தாளவாடி தனியார் வாகன ஓட்டுனர்&உரிமையாளர்கள்,பொதுமக்கள்,பேரணியில் கலந்து கொண்ட அனைத்துப்பள்ளி மாணவ,மாணவியர் மற்றும்ஆசிரிய,ஆசிரியைப் பெருமக்களுக்கும்,சமூக ஆர்வலர்களுக்கும் சாலை பாதுகாப்பு பற்றி கட்டுரைகள் எழுதிக்கொடுத்த அனைத்து மாணவ,மாணவியருக்கும்   நன்றி! நவிழ்ந்த காட்சி.(மேலே)





             வரவேற்புரை வழங்கிய  திருமிகு.பரமேஸ்வரன்(TNSF) அவர்கள்        '' விபத்துக்குக்காரணங்கள்-விபத்தைத்தவிர்க்க நமது பங்கு'' என்ற தலைப்பிற்கு கட்டுரை எழுதிய அனைத்து பள்ளி மாணவ,மாணவியருக்கும் அவரவர் பயிலும் பள்ளிகளின் இந்த வருடம் நடைபெறும் ஆண்டு விழாவின்போது பாராட்டுச்சான்றும்,பரிசும் வழங்கப்படும் என அறிவித்த காட்சி.மேலும் சூசைபுரம் மேல்நிலைப்பள்ளியில் சாலைப்பாதுகாப்பு இயக்கம் (R.S.P)  மற்றும் டிவைன் மெட்ரிக் பள்ளியில் சாலைப்பாதுகாப்புக் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது அறிந்து பாராட்டு நல்கிய காட்சி.(மேலே)
               23-வது சாலை பாதுகாப்பு 
      விழிப்புணர்வுப் பொதுக்கூட்டம்.
             நாள்;- 06-01-2012.
      இடம்;- தாளவாடி பேருந்து நிலையம்.
    நேரம்;-காலை 10-00மணி முதல் 12-00மணிவரை.

       தலைமை;- திருமிகு.சாந்தமல்லப்பா  அவர்கள்,
                          தலைவர்-  ரோட்டரி சங்கம்-தாளவாடி.

     முன்னிலை;- திருமிகு.கா.தங்கவேல் அவர்கள்,
                              காவல்துறை ஆய்வாளர் - தாளவாடி,

வரவேற்புரை;- திருமிகு.C.பரமேஸ்வரன்  அவர்கள்,
                      தலைவர்-தமிழ்நாடு அறிவியல் இயக்கம் - தாளவாடி,
  
      தலைமையுரை;- திருமிகு.சாந்தமல்லப்பா அவர்கள்,
             தலைவர்-ரோட்டரி கிளப் - தாளவாடி.
   
      சிறப்புரை;- திருமிகு. சிங்காரவேலு அவர்கள்,
           மோட்டார் வாகன ஆய்வாளர் -சத்தியமங்கலம்.
       திருமிகு.கா.தங்கவேல் அவர்கள்,
                            காவல்துறை ஆய்வாளர் - தாளவாடி(CIRCLE).
       
       திருமிகு.அரிமா.K.லோகநாதன் அவர்கள்,
                  தலைவர்- கோபி & சத்தி வட்ட ஓட்டுனர்பயிற்சிப்பள்ளி.
    
        திருமிகு.S.மரிய அருள் வியானி அவர்கள்,
                      டிவைன் பள்ளி  மற்றும் ரோட்டரி கிளப் - தாளவாடி.
   
        திருமிகு.அந்தோணி முத்து அவர்கள்,(PALM-2)
                    தமிழ்நாடு அறிவியல் இயக்கம் - தாளவாடி.

          விழிப்புணர்வுப்பாடல்;- 
         திருமிகு.மனோஜ் ஆசிரியர்,மற்றும் 
                                 குழுமத்தினர்
                            டிவைன் மெட்ரிக் பள்ளி - தாளவாடி.

          நன்றியுரை;-திருமிகு.A.P.ராஜூ அவர்கள்,
                       தமிழ்நாடு அறிவியல் இயக்கம் - தாளவாடி. 

நன்றிகள்;-             
(1)திருமிகு.சகாயம்-சூசைபுரம்  அவர்களுக்கும் (ஒலிபெருக்கி உதவி மற்றும் மின்தடை ஏற்பட்டவுடன் உடனடியாக ஜெனரேட்டர் உதவி செய்தமைக்கு),
                (2)திருமிகு.சேத்தன் பிரஸ்-தாளவாடி அவர்களுக்கும் (வேலைப்பளு இருப்பினும் சமூக நலனுக்கான நிகழ்வு என அறிந்து உடனடியாக பத்திரிக்கை 2000 எண்ணிக்கை அச்சடித்துக்கொடுத்தமைக்கு)
     ''தாளவாடி வட்டார  சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுக்குழு'' 
    சார்பாக மனமார்ந்த நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கிறோம்.       
                        ROTARY CLUB OF THALAVADY,
               TAMIL NADU SCIENCE FORUM- THALAVADY,
               POLICE DEPARTMENT-THALAVADY CIRCLE,
            REGIONAL TRANSPORT OFFICE-GOBI & SATHY,
                    ASSOCIATION OF DRIVING SCHOOLS,
                         ALL SCHOOLS OF THALAVADY.
 ======================================================================
 tnsfthalavady.blogspot.com //  paramesdriver.blogspot.com // konguthendral.blogspot.com //




05 January, 2012


23-வதுசாலை பாதுகாப்பு வாரம்-2012

  
                    


அன்பு நண்பர்களே,வணக்கம்.

 
















                                 நமது கோபி மாநகரில்05-01-2012 இன்றுகாலை 10-00மணிக்கு 23-வது சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விழாவினை மரியாதைக்குரிய கோபி உட்கோட்ட கண்காணிப்பாளர் ஐயா அவர்கள் சாலைப்பாதுகாப்பின் அவசியத்தை எடுத்துக்கூறினார்.நகராட்சி மன்றத்தலைவி அவர்களும்,வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களும் கோபி வட்டார போக்குவரத்து அலுவலர் சார்பாக மோட்டார் வாகன ஆய்வாளர்திருமிகு. ரகுபதி M.V.I. அவர்களும் மற்றும் இவ்விழாவினில் கலந்து கொண்ட அனைத்து சமூக ஆர்வலர்கள்,அமைப்புகள்,மோட்டார் வாகனம் சம்பந்த அனைவரின் சார்பாக ஒவ்வொருவர் சாலை பாதுகாப்பின் அவசியத்தை எடுத்துக்கூறினர்.பின்னர் மரியாதைக்குரிய துணைக்கண்காணிப்பாளர் அவர்கள் கொடி அசைத்து பேரணியைத்துவக்கி வைத்தார்.பேரணியில்  கோபி P.K.R.மகளிர் கல்லூரி மாணவிகளும் கலந்து கொண்டனர்.மேலும் கோபி வட்டார அனைத்து சுற்றுலா வேன்,கார்,டெம்போ,ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் நல சங்கங்கள்,காவல்துறையினர்,வட்டார போக்குவரத்து அலுவலர்கள்,வட்டாட்சியர் அலுவலர்கள்,பணியாளர்கள் என பல்வேறு சாலையைப்பயன்படுத்துவோர்கள் கலந்து கொண்டனர்.பேரணி காவல் நிலையத்திலிருந்து துவங்கி மத்திய பேருந்து நிலையம் சென்று நிறைவடைந்தது. 
             பதிவேற்றம்;- PARAMESDRIVER // 
          TAMIL NADU SCIENCE FORUM-THALAVADY

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...