23 மே 2017

நெற்பானையும் எலியும்

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களது குழந்தைப்பாடல்கள் மிகவும் எளிமையானவை,இனிமையானவை.கொளப்பலூர் புனித மரியன்னை நடுநிலைப்பள்ளியில் நான் தொடக்கக்கல்வி பயின்றபோது கி.பி.1971ல் இரண்டாம் வகுப்பு தமிழ்ப் புத்தகத்தில்  படித்து இன்புற்ற பாடல்! 

பாட்டியின் வீட்டுப் பழம்பானை - அந்தப்
பானை ஒருபுறம் ஓட்டையடா!
ஓட்டை வழியொரு சுண்டெலியும் - அதன்
உள்ளே புகுந்து நெல் தின்றதடா!
உள்ளே புகுந்து நெல் தின்று தின்று - வயிறு
 ஊதிப் புடைத்துப் பருத்ததடா!
மெல்ல வெளியில் வருவதற்கும் - ஓட்டை
 மெத்தச் சிறிதாகிப் போச்சுதடா!

பானையைக் காலை திறந்தவுடன்-அந்தப்
 பாட்டியின் பக்கமாய் வந்த ஒரு
பூனை எலியினைக் கண்டதடா!-ஓடிப்
போய் அதைக் கவ்வியே சென்றதடா!

 கள்ளவழியில் செல்பவரை - எமன்
காலடி பற்றித் தொடர்வானடா!
உள்ளபடியே நடப்பவர்க்குத் - தெய்வம்
உற்ற துணையாக நிற்குமடா!


எம்மதமும் சம்மதமே!


மரியாதைக்குரியவர்களே,
                வணக்கம்.நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை அவர்களின் ''எம்மதமும் சம்மதம்'' என்ற தலைப்பிலான மத ஒற்றுமைக் கவிதை  தங்களுக்காக.........


 எம்மதமாயினும் சம்மதம்

கோபமும் கொதிப்பும் குமுறிடும் படிபல
       கொடுமைகள் நடக்குது வடநாட்டில்
தாபமும் தவிப்பும் தந்திடும் ஆயினும்
       தமிழா! உன்குணம் தவறிடுமோ?       1

அன்னிய மதமென அடிக்கடி பழகிய
       அயலுள மக்களைக் கொல்லுவதை
என்னென உரைப்பது ஏதென வெறுப்பது
       எண்ணவுங் கூடத் தகுமோதான்?       2

வேறொரு மதமென அண்டையில் வசிப்பவர்
       வீட்டினைக் கொளுத்துதல் வீரமதோ?
ஆறறி வுடையவர் மனிதர்கள் என்றிடும்
       அழகிது தானோ? ஐயையோ!       3

பிறிதொரு மதமெனப் பெண்மையைக் கெடுப்பதும்
       பிள்ளையை மடிப்பதும் பேய்செய்யுமோ?
வெறிதரும் நெறிகளை விலக்கிய உன்குணம்
       விட்டிடப் படுமோ? தமிழ் மகனே!       4

அங்குள வெறியர்கள் அப்படிச் செய்ததில்
       அவசரப் படுத்திடும் ஆத்திரத்தால்
இங்குள சிலர்எதிர் செய்ய நினைப்பதை
       எப்படித் தமிழ்மனம் ஒப்பிடுமோ?       5

தீமையைத் தீமையால் தீர்க்க நினைப்பது
       தீயினைத் தீயால் அவிப்பதுபோல்
வாய்மையின் தூய்மையின் வழிவரும் தமிழா!
       வஞ்சம் தீர்ப்பதை வரிப்பாயோ?       6

அடைக்கலம் புகுந்தன அன்னிய மதம்பல
       அன்புள்ள நம்தமிழ்த் திருநாட்டில்
கொடைக்குணம் மிகுந்தநம் குலத்தவர் காத்தனர்
       கொள்கையை நாம்விடக் கூடாது.       7

வேற்றுமை பலவிலும்  ஒற்றுமை கண்டிடும்
வித்தையிற் சிறந்தது தமிழ்நாடு
மாற்றொரு மதத்தையும் போற்றிடும் பெருங்குணம்
 மதமெனக் கொண்டவர் தமிழர்களே . 8

எம்மதம் ஆயினும் சம்மதம்  என்பதை
ஏந்தி நடப்பது தமிழ்நாடு
அம் மன உணர்ச்சியை அறமெனக் காப்பதில்
அசைந்திடலாமோ தமிழறிவு?9

மதமெனும் பெயரால் மக்களை வதைப்பதை
மாநிலம் இன்னமும்  சகித்திடுமோ?
விதவிதம் பொய் சொல்லி வெறுப்பினை வளர்த்திடும்
வெறியரைத் தமிழர்கள் முறியடிப்போம்.10


தீண்டாமை ஓட்டடா!

 மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை அவர்களின் தீண்டாமை ஒழிப்புக் கவிதை..சிந்திக்க படியுங்க!

                          தீண்டாமை என்ற தீமையை  ஓட்டடா!

ஓட்டடா! ஓட்டடா!


நாட்டைவிட்டே ஓட்டடா!
தீட்டடா மனிதருக்குள்
தீண்டாலென்ற தீமையே.

தொத்து நோய்கள் மெத்தவும்
தொடர்ந்து விட்ட பேரையும்
தொட்டுக் கிட்டிச் சொஸ்தமாக்கல்
தர்ம மென்று சொல்லுவார்.
சுத்த மேனும் ஜாதியால்
தொடப்ப படாதிங் கென்றிடில்
தொத்து நோயைக் காட்டிலும்
கொடிய ரென்று சொல்வதோ?

நாய்கு ரங்கு பூனையை
நத்தி முத்த மிடுகிறோம் ;
நரக லுண்ணும் பன்றியும்
நம்மைத் தீண்ட ஒப்புவோம் ;
ஆயும் நல்ல அறிவுடை
ஆன்ம ஞான மனிதனை
அருகி லேவ ரப்பொறாமை
அறிவி லேபொ ருந்துமோ?

செடிம ரங்கள் கொடிகளும்
ஜீவ ரென்ற உண்மையை
ஜெகம றிந்து கொள்ளமுன்பு
செய்த திந்த நாடடா!
முடிவ றிந்த உண்மைஞானம்
முற்றி நின்ற நாட்டிலே
மூடரும் சிரிக்கு மிந்த
முறையி லாவ ழக்கமேன்?

உயிரி ருக்கும் புழுவையும்
ஈச னுக்காம் உறையுளாய்
உணரு கின்ற உண்மைஞானம்
உலகி னுக்கு ரைத்தநாம்
உயருகின்ற ஜீவருக்குள்
நம்மொ டொத்த மனிதனை
ஒத்திப் போகச் சொல்லுகின்ற
தொத்துக் கொள்ள லாகுமோ?

அமல னாகி அங்குமிங்கும்
எங்கு மான கடவுளை
ஆல யத்துள் தெய்வமென்றே
அங்கி ருந்தே எண்ணுவோம் ;
விமல னான கடவுள்சக்தி
மனிதன் கிட்டி விலகினால்
வேறு ஜீவன் யாவும்அந்த
விமல னென்ப தெப்படி?

ஞாய மல்ல ஞாயமல்ல
ஞாய மல்ல கொஞ்சமும்
நாடு கின்ற பேர்களை
நாமி டைத்த டுப்பது ;
பாயு மந்த ஆற்றிலே
பருகி வெப்பம் ஆறிடும்
பறவை யோடு மிருகமிந்தப்
பாரி லார்த டுக்கிறார்?

இடந்தடுமாற்றம்

 மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.நாமக்கல் கவிஞரின் கவிதைகள் மிகவும் எளிமையாக கருத்து நயமிக்கதாக உள்ளன கண்டு பேருவகை அடைந்தேன்.விரும்பாத தொழிலை விதியால் செய்து வரும் நமது மக்களின் நிலை பற்றி ''இடந் தடுமாற்றம்'' என்ற தலைப்பில் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை அவர்கள் எழுதிய கவிதை இதோ....
அறிவுக் கேற்ற அலுவல் கிடைப்பதோ
படிப்புக் குகந்த காரியம் பார்ப்பதோ
விரும்பிய படிக்கொரு வேலையில் சேர்வதோ
தகுதியைப் பற்றிய தன்மை யுள்ளதாய்
உத்தியோகம் அடைவதோ ஊதியம் பெறுவதோ
இந்திய நாட்டில் இப்போ தில்லை.
இலக்கிய ஞானம் இணையிலா ஒருவன்
கல்வியே வேண்டாக் காரியம் செய்வதும்
கணித சாத்திரம் கைதேர்ந்த ஒருவன்
எண்ணிக்கை வேண்டா வேலையில் இருப்பதும்,
ரஸாய னத்தில் ரஸனை மிகுந்தவன்
கச்சேரி மேசையில் கவிழ்ந்து கிடப்பதும்
சங்கீத வித்தையில் சமனிலாக் கலைஞன்
தபால் ஆபீஸ் தந்திய டிப்பதும்,
சித்திரக் கலையில் கைத்திறம் சிறந்து
பத்திரம், 'ரிஜிஸ்டர்' பதிவு செய்வதும்,
சத்தியம் தவறா உத்தம குணவான்
வக்கீல் தொழிலில் வருத்தப் படுவதும்,
கொல்லா விரதமே கொண்டுள ஒருவன்
பட்டாள வீரனாய்ப் பதிந்து கொள்வதும்,
விஞ்ஞா னங்களில் விருப்புள இளைஞன்
'டிக்கட் கலெக்டராய்'த் திண்டாட நேர்வதும்,
புத்தகம் படிப்பதில் பித்துள்ள புலவன்
'புக்கிங் கிளார்க்காய்'ப் புழுங்கு கின்றதும்,
உருட்டி மருட்டத் தெரியா ஒருவன்
போலீஸ் காரனாய்ப் பொழுதுபோக் குவதும்,
திட்டிப் பேசவும் தெரியா நல்லவன்
அமீனா வேலையில் அடிபட்டு வருவதும்,
கள்ளுச் சாராயம் கடிந்திடும் கருத்தன்
கலால் வேலையில் 'டிகிரி' கணிப்பதும்,
மாமிச உணவை மறுக்கும் மனத்தன்
ஆட்டுக் கறிவையும் மாட்டுக் கறியையும்,
சுத்தம் பார்த்தலில் முத்திரை குத்தலும்,
இப்படிப் பற்பலர் இடந்தடு மாறுவர்.

மது குடிப்பதைத் தடுப்போம்

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். குடிப்பதை தடுப்போம் என்ற தலைப்பில் நாமக்கல்.வெ.இராமலிங்கம் பிள்ளை அவர்கள் எழுதிய கவிதை இதோ தங்களுக்காக..
   

குடிப்பதைத் தடுப்பதேகோடிகோடி புண்ணியம்
அடிப்பினும் பொறுத்துநாம்
அன்புகொண்டு வெல்லுவோம்! . .(குடி)

மக்களை வதைத்திடும்
மனைவியை உதைத்திடும்
துக்கமான கள்ளினைத்
தொலைப்பதே துரைத்தனம். . .(குடி)

பித்தராகி ஏழைகள்
பேய்பிடித்த கோலமாய்ப்
புத்திகெட்டுச் சக்தியற்றுப்
போனதிந்தக் கள்ளினால். . .(குடி)

பாடுபட்ட கூலியைப்
பறிக்குமிந்தக் கள்ளினை
வீடுவீட்டு நாடுவிட்டு
வெளியிலே விரட்டுவோம்! . .(குடி)

கஞ்சியின்றி மனைவிமக்கள்
காத்திருக்க வீட்டிலே
வஞ்சமாகக் கூலிமுற்றும்
வழிபறிக்கும் கள்ளினை . . .(குடி)

மெய்தளர்ந்து மேனிகெட்டுப்
போனதிந்தக் கள்ளினால் ;
கைநடுக்கங் கால்நடுக்கங்
கண்டதிந்தக் கள்ளினால். . .(குடி)

தேசமெங்கும் தீமைகள்
மலிந்ததிந்தக் கள்ளினால் ;
நாசமுற்று நாட்டினார்
நலிந்ததிந்தக் கள்ளினால். . .(குடி)

குற்றமற்ற பேர்களும்
கொலைஞராவர் கள்ளினால் ;
கத்திகுத்துச் சண்டைவேண
கள்ளினால் விளைந்தவே. . .(குடி)

குற்றமென்று யாருமே
கூறுமிந்தக் கள்ளினை
விற்கவிட்டுத் தீமையை
விதைப்பதென்ன விந்தயே! . .(குடி)
==========================================================
(2)போதையைத் தந்தபின் நீதியை ஓதுதல்
புத்தி யுடைஓர் அரசாமோ?

   விட்டது சனியன் விட்டது சனியன்


விட்டது நம்மை விட்டதடா!
கொட்டுக முரசு கொம்பெடுத் தூது
கொடும்பாவி கள்ளைக் கொளுத்திவிட்டோம்!

செத்தது கள்பேய் இத்தினம் ; இதையினி
தீபா வளிபோல் கொண்டாடு ;
பத்திரம் கள்மேல் சித்தம்வா ராவிதம்
பார்ப்பதும் காப்பதும் உன்பாரம்!

ஈஸ்வர வருஷம் புரட்டா சியிலே
இங்கிலீஷ் ஒன்றுபத்து முப்பத்தேழில்
சாஸ்வதம் போலவே நமைப்பிடித் தாட்டிய
சனியன் கள்கடை சாத்திவிட்டார்!

கூலியைத் தொலைப்பதும் தாலியை இழுப்பதும்
கூசிட ஏசிடப் பேசுவதும்
சாலையில் உருண்டொரு சவமெனக் கிடப்பதும்
சந்தி சிரிப்பதும் இனியில்லை!

அழுதிடும் மக்களும் தொழுதிடும் மனைவியும்
ஐயோ! பசியுடன் காத்திருக்க,
பொழுதுக்கும் உழைத்தது முழுவதும் கூலியைப்
போதையில் இழப்பதும் இனியில்லை!

பெற்றதன் குழந்தைகள் சுற்றி நடுங்கிப்
பேயெனும் உருவொடு வாய்குளற
உற்றவர் உறவினர் காறி உமிழ்ந்திட
ஊரார் நகைப்பதும் ஒழிந்ததினி!

விடிகிற வரையிலும் அடிதடி ரகளை
வீதியில் மாதர்கள் ரோதனமும்
குடிவெறி யால்வரும் கொடுமைகள் யாவையும்
கூண்டோ டொழிந்தன இனிமேலே!

எல்லா விதத்திலும் கள்ளால் வரும்பணம்
ஏளனத் துக்கே இடமாகும் ;
நல்லார் சரியெனக் கொள்ளா வரியிதில்
நம்மர சடைந்திட்ட பழிநீங்கும்.

போதையைத் தந்தபின் நீதியை ஓதுதல்
புத்தி யுடைஓர் அரசாமோ?
பேதைக ளாக்கிப்பின் பிழைபுரிந் தாயெனல்
பேச்சுக் காகிலும் ஏச்சன்றோ?

காந்தியின் அருந்தவம் சாந்தமும் பலித்தது ;
காங்கிரஸ் ஆட்சியும் ஓங்கிடுமே ;
போந்தது புதுயுகம் ; தீர்ந்தது கலிபலம் ;
பூமிக் கேஒரு புதுமையிது!

சக்கர வர்த்திநம் ராஜா ஜீக்கொரு
சன்மா னம்நாம் தந்திடுவோம் ;
அக்கறை யோடவர் ஆணைப் படிகள்ளில்
ஆசை புகாவிதம் காத்திடுவோம்.

பாழும் கள்ளால் பட்டதை நினைத்தால்
பதைக்குது நெஞ்சம் கொதிக்குதடா!
வாழும் நாடினி ; ஏழைக ளில்லை ;
வானவர் வணங்கிட வாழ்ந்திடுவோம்!

20 மே 2017

நூலகத்தைக் காணவில்லை!

அறிவுக் கிடங்கினைத் திறக்க அரசின் கண்களைத் திறப்போம் வாங்க!.

மரியாதைக்குரியவர்களே,
          வணக்கம்.ஈரோடு மாவட்டம்,நம்ம தாளவாடியில் செயல்பட்டு வந்த அரசு பொது நூலகம் தற்போது நகரின் கடைக்கோடியில்  சந்தின் மூலையில் மதுவில் மயங்கிய மனிதனைப்போல களையிழந்து முடங்கிக் கிடக்கிறது. தனிமையைப் போக்க,தன்னம்பிக்கை வளர,சமூகத்தைப் படிக்க,சராசரி மனிதனாக வாழ,கற்பனை பிறக்க,சிந்தனை பெருக,நினைவாற்றல் வளர,பொது அறிவு கிடைக்க நூலகமே சிறந்த தளம் என சான்றோர்கள் சொல்லக்கேட்கிறோம்.ஆனால் நம்ம தாளவாடியில் அறிவுத்திருக்கோயிலாம் பொது நூலகம் ,கிளை நூலகமாகவே அடிப்படை வசதிகள் ஏதுமில்லாமல்,வாசகர்கள் அமர்ந்து படிக்கக்கூட இடமில்லாமல்,இருக்கை வசதியில்லாமல் பயன்படுத்த முடியாத நிலையில் பார்வைக்காக மட்டுமே அமைந்துள்ளது கண்டு மிகவும் வேதனையளிக்கிறது.
  அண்ணல் அம்பேத்கர்  உட்பட ,பகத்சிங்,மகாத்மா காந்தியடிகள்,நேரு,அறிஞர் அண்ணா,அப்துல் கலாம்,புரட்சித்தலைவி ஜெயலலிதா,கலைஞர் கருணாநிதி போன்ற மாபெரும் தலைவர்களும்,சமகாலத்தலைவர்களும்,சாதனையாளர்களும், நூலகத்தைப் பயன்படுத்தி புத்தகங்களைப் படித்தே படைப்பாளி ஆகி இருக்கிறார்கள். சாதனைகள் பல செய்து தம் வாழ்க்கையில் வெற்றி பெற்றதோடு,சமூகத்தில் விழிப்புணர்வு பெறவும் சான்றோர்கள் பலர் உருவாகவும் ,சாதனையாளர்கள் பலர் தோன்றவும் வழிகாட்டியிருக்கிறார்கள்.

              நூலகத்தின் முக்கியத்துவம் அறிந்த சான்றோன் புதுக்கோட்டை மாவட்டத்தைச்சார்ந்த கிருஷ்ணமூர்த்தி-டோரதி தம்பதியினர் தனி நபர் நூலகத்தை அதாவது தம்பதியினர் இருவரின் உழைப்பின் ஊதியத்தை புத்தகங்களாக மாற்றி சமூகத்திற்கு பயன்பெற தனியோருவராக நூலகம் அமைத்து செயல்படுத்தி வருகிறார்கள்.தங்களது ஓய்வூதியப்பணம் முழுவதையும் செலவிட்டு பல லட்ச ரூபாய் செலவில் 'ஞானாலயா' என்ற பெயரில் அறிவுத்திருகோயில் ஒன்றையும் மூன்றடுக்கு மாடிகளாக கட்டி நூலகமாக செயல்படுத்தி,சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியம் வரை முதல் பதிப்பு நூல்களாக,சட்ட நூல்கள்,சித்த மருத்துவ நூல்கள்,பைபிள்,இசுலாமிய நூல்கள்,துணியினால் ஆன பகவத்கீதை போன்ற சமய நூல்கள் உட்பட முதல் பதிப்பு நூல்களாக லட்சக்கணக்கில் சேகரித்து மக்களின் பயன்பாட்டிற்கு மாதந்தோறும் பல்லாயிரம் ரூபாய் பராமரிப்பு செலவு செய்து   இன்றும் இலவசமாக நடத்தி வருகிறார்கள்.தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி gnanalayapdk@gmail.com 

                               (புதுக்கோட்டையில் நடைபெற்ற கணினித்தமிழ்ச்சங்கம் நடத்திய உலக வலைப்பதிவர் மாநாட்டில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தபோது ஞானாலயா புத்தகாலயத்தை நேரில் பார்த்து வியப்பின் உச்சிக்கே சென்றுவிட்டேன்.புதுக்கோட்டை செல்லும் வாய்ப்புள்ளவர்கள் அவசியம் 'ஞானாலயா' என்ற தனி நபரின் இலவச நூலகத்தையும் பார்வையிட்டு வாங்க.)

இவ்வாறு வெளியுலகத்தில் சமூக நலனுக்கான நூலகச்சேவையை பார்க்கும்போது தாளவாடியில்  அரசு பொது நூலகத்தை தொலைத்துவிட்டோமோ?என்ற ஐயப்பாடு நிலவுகிறது.எனவே அறிவுமிகுந்த சான்றோர்களே,ஊடகங்களே,மாணவர்களே,சமூக அக்கறையுள்ளவர்களே,அனைவரும் வாங்க!. தாளவாடி நகரின் மையத்தில் நூலகம் அமைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் ''சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பு''க்கு ஆதரவளிப்போம்.சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளை சந்தித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வற்புறுத்துவோம்......................
என அன்புடன் அழைக்கும்,
சமூக நலனில் அக்கறையுள்ள அன்பன்,
 C. பரமேஸ்வரன்,
தாளவாடி-ஈரோடு மாவட்டம்.
+919585600733,
 paramesdriver@gmail.com

13 மே 2017

தைராய்ட்


மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன். தைராய்டு பற்றி தெரிந்துகொள்வோம்.
.
தைராய்ட் என்பது கழுத்துக்கு கீழே பட்டாம்பூச்சி வடிவத்தில் இருக்கும் ஒரு உறுப்பு. இதில் தைராய்ட் எனும் ஹார்மோன் சுரக்கிறது. நீங்கள் சிக்கன் சாப்பிட்டாலோ, கொண்டைக்கடலை சாப்பிட்டாலோ அது உங்கள் உடலில் ப்ரோட்டீனாக மாற இது உதவுகிறது. தவிர, உங்கள் உடலின் எனர்ஜி சரியான அளவில் இருக்க சில வேலைகளை செய்கிறது.
இந்த தைராய்ட் நிறைய நேரம் சரியாக சுரக்காமல் போகக்கூடும். அப்படி ஆகும் போது ஒன்று ஹார்மோன் மிக அதிகமாக சுரக்கத் துவங்கலாம், அல்லது மிகக் குறைவாக.
அதிகமாக தைராய்டு சுரப்பதை 'ஹைப்பர்' என்று சொல்வார்கள். கடகடவென்று உடல் எடை குறையும். கபகபவென்று பசிக்கும். அவ்வப்போது கைகால் நடுங்கும். எதற்கெடுத்தாலும் கவலை, பயம் வரும்.
குறைவாக சுரப்பதை 'ஹைப்போ' என்று சொல்வார்கள். உடல் எடை அதிகரித்து குண்டடிக்கும். அடிக்கடி மலச்சிக்கல் வரும். பெண்களுக்கு மாதவிடாயில் ரத்த இழப்பு அதிகரிக்கும், முடி கொட்டும், இதயத் துடிப்பு மந்தமாகும். குறிப்பாக, பெண்களுக்கு குழந்தைப் பேறு கைகூடாமல் இருப்பதற்கு தைராய்டு வில்லன் நிறைய நேரம் காரணமாக இருக்கக்கூடும்.
மேற்சொன்னதெல்லாம் வெறும் அறிகுறிகள்தான். இதய நோயில் இருந்து கான்ஸர் வரை பல்வேறு நோய்களுக்கு தைராய்டு பிரச்னை காரணமாக ஆகி விடுகிறது. குறிப்பாக பெண்களுக்கு தைராய்ட் தரும் பிரச்சனைகளை சொல்லி மாளாது. ஆண்களை விட பெண்களைத்தான் இது பெரிதும் பாதிக்கிறது. மூன்றாம் உலக நாடுகளில், குறிப்பாக இந்தியாவில், இது பெரிய பிரச்னை. சுகர், பிபி, கான்சர் அளவுக்கு தைராய்ட் பற்றிய விழிப்புணர்வு நம்மிடை இல்லாதது பிரச்சனையை மோசமாக்குகிறது. சொல்லப்போனால் நேரத்தில் இதை கண்டறிந்து மருத்துவம் மேற்கொண்டால் இது சப்பை மேட்டர்தான். ஆனால் நிறைய நேரம் தாமதமாக கண்டுபிடிப்பதால் பிரச்சனையின் வீரியம் அதிகரிக்கிறது. அதுவுமின்றி, இதய நோய், கான்ஸர் மாதிரி தைராய்ட் நோயை நாம் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை. குறிப்பாக பெண்கள். டாக்டர் 'உங்களுக்கு தைராய்ட் பிரச்னை இருக்கு,' என்று சொல்லி மருந்து கொடுத்தால் ஒரு மாதம் எடுத்துக் கொண்டு நிறுத்தி விடுகிறார்கள், அல்லது கொடுத்த மாத்திரையையே தொடர்ந்து அடுத்த பத்து பதினைந்து ஆண்டுகள் போட்டுக் கொண்டு வருகிறார்கள். அது எப்படி நம்மை பாதிக்கும், நாளைக்கு என்னென்ன சிக்கல்கள் வரும் என்பதை உணருவதில்லை. டாக்டர்களும் பெரும்பாலும் சொல்வதில்லை.
தைராய்டு மாத்திரை பெரும்பாலும் அதிகாலை எழுந்த உடன் வெறும் வயிற்றில் போட்டுக் கொள்ள வேண்டி இருக்கும். இது குணமாக முடியா விஷயம்.பெரும்பாலும் தைராய்டு பிரச்னை என்றால் வாழ்நாள் முழுவதும் மாத்திரையை எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கும். ஆனால் அதே மாத்திரையை அல்ல. குறைந்தது ஆறு மாதத்துக்கு ஒரு முறை பரிசோதனை செய்து வரும் ரிசல்ட்டை வைத்து டாக்டர் உங்கள் மாத்திரையை குறைக்கலாம், கூட்டலாம், அல்லது மாற்றலாம்.
தைராய்டு குறைபாட்டை கண்டுபிடித்து மாத்திரை எடுக்கத் துவங்கிய உடனே பெரும் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். எனர்ஜி கூடும், ஒரு பத்து வயது குறைந்தது மாதிரி உணர்வு வரும். மன அழுத்தங்கள் விலகும். Anxiety attack என்று சொல்வார்கள். திடீரென்று பெரிய ஒரு பயம் மனதை தாக்கும். மூச்சு விடக்கூட முடியாமல் போய் பயம் கவ்விக் கொள்ளும். இதெல்லாம் சரியாகலாம். சட்டென்று மனைவி கர்ப்பம் தரிக்கலாம்.
உங்கள் அம்மா, அப்பா, மாமா யாருக்காவது தைராய்டு குறைபாடு இருந்தால் நீங்கள் 20 வயதில் இருந்தே டெஸ்ட் செய்து கொள்ள வேண்டும். செய்து நார்மல் என்று தெரிந்தால் அடுத்த ஐந்து ஆண்டுகள் கழித்து திரும்பவும் டெஸ்ட் செய்து கொள்ளலாம். அப்படி குடும்ப வரலாறு இல்லை என்றால், சுமார் முப்பத்தைந்து வயதில் இருந்து டெஸ்ட் செய்யத் துவங்கலாம். ஆறு மாதத்துக்கு ஒரு முறை தைராய்ட் செக்கப் செய்து கொள்வது நல்லது. ‘இதெல்லாம் ரொம்ப ஓவர்,’ என்றால் குறைந்தது வருடத்துக்கு ஒரு முறை. அதுவும் பெண்களுக்கு இது மிக மிக முக்கியமான விஷயம். முக்கால்வாசி லேப்களில் 300 ரூபாய்க்கும் குறைவாக இந்த டெஸ்ட் செய்து கொள்ள முடியும்.
குறிப்பாக ஆண்களுக்கு இந்தக் கடமை இருக்கிறது. உங்கள் வீட்டில் உள்ள பெண்களைக் கூட்டிக் கொண்டு போய் தைராய்டு டெஸ்ட் செய்து கொள்ள அறிவுரையுங்கள். யாராவது கொஞ்சம் அலட்சியமாக இருந்தால் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து கூட்டிச் செல்லுங்கள். தைராய்ட் பிரச்னை இருந்தால் பரிந்துரைத்த மாத்திரையை ஒழுங்காக எடுத்துக் கொள்கிறார்களா என்று கண்காணியுங்கள். தொடர்ந்து செக்கப் செய்து மருந்தின் அளவை ஏற்றி இறக்க உதவுங்கள். மனைவி, அம்மா இவர்களுக்கு பிறந்த நாளுக்கு கேக் வாங்குவதோடு சேர்த்து ஒரு செக்கப்பையும் ‘பரிசாக’ வழங்குங்கள். அப்படி செய்தால் அவர்கள் உங்களை கண்டிப்பாக திட்டுவார்கள். ஆனால் அவர்களின் உடல் உங்களுக்கு நன்றி சொல்லும்!
=============================================================
 கட்டுரை-2
 தைராய்டு என்பது 

தொண்டையில் மூச்சுக்குழாய்க்கு முன்பாக, குரல்வளையைச் சுற்றி இரு பக்கமும் படர்ந்து, ஒரு வண்ணத்துப்பூச்சி வடிவத்தில் அமைந்துள்ளது தைராய்டு சுரப்பி. உடலில் ஏற்படும் வளர்சிதைமாற்றப் பணிகளுக்குத் தேவையான, முதன்மை நாளமில்லா சுரப்பி இது. சாதாரணமாகப் பார்க்கும்போது நம் கண்ணுக்கு இது தெரியாது. நாம் உணவை விழுங்கும்போது, முன் கழுத்தில் குரல்வளையோடு தைராய்டும் சேர்த்து மேலே தூக்கப்படுவதைப் பார்க்க முடிகிறது என்றால், தைராய்டு சுரப்பி வீங்கியுள்ளது என்று அர்த்தம்.
தைராய்டு ஹார்மோன்கள்
'தைராக்சின்' (T4), 'டிரைஅயடோதைரோனின்' (T3) எனும் இரண்டு வித ஹார்மோன்களை இது சுரக்கிறது. இப்படிச் சுரப்பதற்கு அயோடின் சத்து தேவை. இந்த இரண்டு ஹார்மோன்கள் பெரும்பாலும் புரதத்துடன் இணைந்திருக்கும். சிறிதளவு ஹார்மோன்கள் புரதத்துடன் இணையாமலும் இருக்கும். அவற்றுக்கு FT3, FT4 என்று பெயர். இவை உடலின் தேவைக்கேற்ப ரத்தத்தில் கலந்து, உடல் உறுப்புகள் சீராகச் செயல்பட உதவுகின்றன. இவற்றின் செயல்பாடுகளை முன்பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கிற thyroid-stimulating hormone (TSH, thyrotropin)‘தைராய்டு ஊக்கி ஹார்மோன்' (TSH) கட்டுப்படுத்துகிறது.
குறை தைராய்டு
தைராக்சின் ஹார்மோன் குறைவாகச் சுரப்பதைக் 'குறை தைராய்டு’ (Hypothyroidism) என்கிறோம். இதன் ஆரம்பநிலையில் உடல் சோர்வாக இருக்கும்; செயல்கள் மந்தமாகும்; சாதாரணக் குளிரைக்கூடத் தாங்க முடியாது; முகம் வீங்கும்; முடி கொட்டும்; இளநரை தோன்றும்; தோல் வறட்சி ஆகும்; பசி குறையும். ஆனால், உடல் எடை அதிகரிக்கும். ஞாபக மறதி, அதிகத் தூக்கம், முறையற்ற மாதவிலக்கு, குரலில் மாற்றம், கருச்சிதைவு மற்றும் கருத்தரிப்பதில் பிரச்சினை, மூட்டுவலி இப்படிப் பல பிரச்சினைகள் அடுத்தடுத்துத் தலைதூக்கும்.
தைராய்டு வீக்கம்
உண்ணும் உணவில் உடலின் தேவைக்கு ஏற்ப அயோடின் சத்து கிடைக்காவிட்டால், தைராய்டு சுரப்பி தைராக்சின் ஹார்மோனைச் சுரக்க முடியாது. இதனால் தைராய்டு ஊக்கி ஹார்மோன் அதிக அளவில் சுரந்து, தைராய்டு சுரப்பியை மேன்மேலும் சுரக்கத் தூண்டும். ஆனாலும், அதனால் தைராக்சின் ஹார்மோனைச் சுரக்க முடியாது. பதிலாக, அது கழுத்தின் முன்பக்கத்தில் ஒரு கழலை போன்று வீங்கிவிடும். அதற்கு 'முன்கழுத்துக் கழலை' (Goitre) என்று பெயர். பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் காரணமாகத் தைராய்டு சுரப்பியில் அழற்சி (Thyroiditis) ஏற்பட்டு வீக்கமடைவதும் உண்டு. இது ஒரு தன்தடுப்பாற்றல் நோயாகவும் (Auto immune disease), கட்டியாகவும் (Thyroid adenoma) ஏற்படலாம்.
மிகைத் தைராய்டு
தைராய்டு சுரப்பி வழக்கத்துக்கு மாறாக வீக்கமடைந்து அதிகமாகப் பணி செய்தால், தைராக்சின் சுரப்பு பல மடங்கு அதிகரித்துவிடும். இந்த நிலைமையை ‘மிகை தைராய்டு' ( Hyperthyroidism ) என்கிறோம். இந்த நோய் உள்ளவர்களுக்கு அதிகமாகப் பசிக்கும். அடிக்கடி உணவு சாப்பிடுவார்கள். ஆனால், உடல் மெலியும். நெஞ்சு படபடப்பாக இருக்கும்; நாடித்துடிப்பு அதிகரிக்கும்; விரல்கள் நடுங்கும்; உள்ளங்கை வியர்க்கும்; அடிக்கடி மலம் மற்றும் சிறுநீர் கழியும்; சிலருக்குக் கண்கள் பெரிதாகி விகாரமாகத் தெரியும்.
பரிசோதனைகள் என்ன?
வழக்கமான ரத்தப் பரிசோதனைகளுடன், ரத்தத்தில் T3, T4,TSH, FT3, FT4 , anti TPO ஆகியவற்றின் அளவுகளைப் பரிசோதித்தால், நோயின் நிலைமை தெரியவரும். பொதுவாக T3 0.7 2 .04 ng/dL என்ற அளவிலும், T4 4.4 11.6 ng/dL என்ற அளவிலும் TSH 0.28 6.82 IU/dL என்ற அளவிலும் FT3 1.4 - 4.2 pg/dL, FT4 0.8 2 ng/dL இருக்க வேண்டும்.
இந்த இயல்பு அளவுகள் ஆய்வகத்தைப் பொறுத்தும், நோயாளியின் நோய்நிலை, அவர் எடுத்துக்கொள்ளும் மருந்துகள், வயது, கர்ப்பம், வயது ஆகியவற்றைப் பொறுத்தும் சிறிதளவு மாறலாம். எனவே, நோயாளியானவர் தான் எடுத்துக்கொள்ளும் மருந்து விவரத்தையும் கர்ப்பமாக இருந்தாலும் மருத்துவரிடம் சொல்லிவிட வேண்டும்.
முடிவுகள் எப்படி இருக்கும்?
l குறை தைராய்டு உள்ளவர்களுக்கு T3, T4 அளவுகள் குறைவாகவும், TSH அளவு அதிகமாகவும் இருக்கும்.
l மிகை தைராய்டு உள்ளவர்களுக்கு T3, T4 அளவுகள் அதிகமாகவும், TSH அளவு குறைவாகவும் இருக்கும்.
l இந்த மூன்று அளவுகளும் குறைந்திருந்தால், முன்பிட்யூட்டரி சுரப்பியில் குறைபாடு உள்ளது என்று பொருள்.
l சிலருக்குக் குறை தைராய்டு பிரச்சினை உடலில் இருக்கும். ஆனால், வெளியில் தெரியாது. இவர்களுக்கு T3, T4 அளவுகள் சரியாக இருக்கும். TSH அளவு அதிகமாக இருக்கும்.
l சிலருக்கு மிகை தைராய்டு பிரச்சினை உடலில் இருக்கும். ஆனால், வெளியில் தெரியாது. இவர்களுக்கு T3, T4 அளவுகள் சரியாக இருக்கும். TSH அளவு குறைவாக இருக்கும்.
l FT3, FT4 அளவுகள் அதிகமானால் மிகை தைராய்டு உள்ளது என்று அர்த்தம்.
l குறை தைராய்டு உள்ளவர்களுக்கு ரத்த ஹீமோகுளோபின் அளவு குறைவாகவும் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகவும் இருக்கும்.
l anti TPO பரிசோதனை ‘பாசிட்டிவ்’என்றால் முன்கழுத்துக் கழலைக்குக் காரணம் தன்தடுப் பாற்றல் நோய் என்றும், ‘நெகட்டிவ்’என்றால் சாதாரணக் கழலை என்றும் அறிய உதவும்.
எப்படிச் செய்வது?
l இந்தப் பரிசோதனையை வெறும் வயிற்றில் செய்வது நல்லது.
l பரிசோதனைக்கு வரும்போது மது அருந்தி யிருக்கக் கூடாது; புகைபிடிக்கக் கூடாது.
இதர பரிசோதனைகள்
l அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ஆகியவற்றின் மூலம் தைராய்டு சுரப்பியின் வடிவம், எடை, அளவு ஆகியவற்றை அளந்து, தைராய்டு பாதிப்பை ஓரளவுக்குத் தெரிந்துகொள்ள முடியும்.
l இப்போது 'ஐசோடோப் ஸ்கேன்' பரிசோதனை தைராய்டு பாதிப்புகளை மிகவும் துல்லியமாகத் தெரிவிக்கிறது.
l வீக்கம் காணும் தைராய்டு சுரப்பியிலிருந்து ஊசி மூலமாகச் சிறிய அளவில் திசுவை அகற்றி செல்களைப் பரிசோதிப்பதன் (FNAC) மூலம் புற்றுநோய் பாதிப்பு உள்ளதா என்பதை அறிய முடியும்.
யார், எதற்குச் செய்துகொள்ள வேண்டும்?
l குறை தைராய்டு, மிகை தைராய்டு பிரச்சினை உள்ளதாகச் சந்தேகப்படுபவர்கள் முதலில் நோயைக் கணிப்பதற்குப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.
l இவ்விரண்டு பிரச்சினைகளுக்கும் சிகிச்சை பெற்றுவருபவர்கள் நோயின் தற்போதைய நிலைப்பாட்டை அறிவதற்குப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.
l தைராய்டு சுரப்பியில் வேறு பிரச்சினை உள்ளவர்கள் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.
l தைராய்டு சுரப்பிக்கு அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்கள் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.
l பிட்யூட்டரி சுரப்பியில் பிரச்சினை உள்ளவர்கள் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.
l இளம்பெண்கள், கர்ப்பிணிகள், முதியவர்கள் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.
l இதயநோய்க்காக அமிய்டோரான் (Amiodarone) மாத்திரையை எடுத்துக்கொள்பவர்கள் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.
- கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்

.

கல்வி...கல்வி......கல்வி....

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.இன்றைய கல்விநிலை அதாவது கல்வி பெற ஆகும் செலவுநிலை பற்றி ..............                              
இன்று தமிழகத்தில் கவுரவமாக கருதபடுவது படிப்பு அதை எம் மகனையோ மகளையோ நான் பெரியகல்வி நிறுவனத்தில் படித்தால் கவுரவம் என நினைக்கும் பெற்றோர்களே சிறிதுசிந்தியுங்கள் !!!
உங்கள் மகன் & மகள் மழலை பள்ளி
சேர்க்கும் செலவு குறைந்த பட்சம்
இன்றைய கல்வி வியாபார விலை
:;15000.00
அடுத்த நிலை 1 ஆம் வகுப்பு விலை
:;25000.00
அடுத்த நிலை 2 ஆம் வகுப்பு
விலை:;35000.00
அடுத்த நிலை 3 ஆம் வகுப்பு
விலை:;37000.00
அடுத்த நிலை 4 ஆம் வகுப்பு
விலை:45000.00
அடுத்த நிலை5 ஆம் வகுப்பு விலை
::50000.00
அடுத்த நிலை 6 ஆம் வகுப்பு
விலை::65000.00
அடுத்த நிலை7ஆம் வகுப்பு விலை
;:78000.00
அடுத்த நிலை 8 ஆம் வகுப்பு
விலை::85000.00
அடுத்த நிலை9 ஆம் வகுப்பு விலை
::95000.00
அடுத்த நிலை10ஆம் வகுப்பு
விலை;:150000.00
அடுத்த நிலை 11ஆம் வகுப்பு
விலை::200000.00
அடுத்த நிலை 12 ஆம் வகுப்பு
விலை ::300000.00
உங்கள் மகனோ மகளோ பள்ளிபடிப்பை
முடிக்க குறைந்த பட்சம் நீங்கள்
பண்ணும் செலவு 11.80 லட்சம்
தனியாரிடம் தாரை வார்க்குறீங்க
எதற்காக இந்த இழப்பு ???
அரசு பள்ளியை நம்பாததன்
விளைவு அரசுப்பள்ளியில் இதே
படிப்பை உங்கள் மகனோ மகளோ
படித்தால் நீங்கள் இழக்கும் பணம்
எவ்வளவு ?
வருமானம் மட்டும்தான் அவ்வளவும்
சத்துணவு முதல் சைக்கிள் &
மடிகணணி செருப்பு சீருடை
பேருந்து கட்டணம் என 11.80
லட்சங்களை மிச்ச படுத்த முடியும்
உங்கள் மகனோ மகளோ பள்ளி
படிப்பை முடித்தால் தனியார் கல்வி
நிறுவனத்தை நடத்தும்
வியாபாரிகளிடம் இழக்கும் 11.80
லட்சம் முதலீட்டில் ஒரு தொழிலை
தொடங்கி உங்கள் மகனை மகளை
முதலாளியாக்கி நாட்டையும்
வல்லரசாக்க முடியும் சிந்தியுங்கள்
மக்களே சிந்திக்கும் திறனை இழந்த
தமிழக மக்களே இந்த வருடம் சாதனை
புரிந்த மாணவர்களின் எண்ணிக்கை
10 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு
இரண்டிலும் மொத்தம் மாநில
அளவில் முதல் மூன்று இடங்களை
பிடித்த தனியார் கல்வி நிலைய
மாணவர் எண்ணிக்கை 1362 அரசு
பள்ளிகளில் படித்த மாணவர்களின்
எண்ணிக்கை 483 ஆக அரசு
பள்ளியை தரம் உயர்த்த
பெற்றோர்களாகிய நாம்
நினைத்தால் நிச்சயம் முடியும்
உங்கள் கவுரவத்தால் நீங்கள் 11.80
லச்சத்தை தனியாரிடம் இழக்க
நேரிடுகிறது உங்கள் மகனை அரசு
பள்ளியில் சேர்த்து அந்த பள்ளிக்கு
வருடம் 2 ஆயிரம் மட்டும் செலவு
செய்தால் நமது மக்களின்
பொருளாதார நிலை கல்வி நிலை
மாற வாய்ப்பு அதிகம்.....

கேட்டேன்,கேட்டேன்...

சத்தம் இல்லாத school கேட்டேன்
யுத்தம் இல்லாத classroom கேட்டேன்
மொத்தத்தில் என்றென்றும் கல்வி கேட்டேன்
ரகசியமில்லா நட்பு கேட்டேன்.
உயிரைக் எடுக்காத time table கேட்டேன்
ஒற்றைப் பாடமாவது off ஐக் கேட்டேன்
இருமுகம் இல்லாத staff ஐக் கேட்டேன்
திறமைக்குச் சரியான பொறுப்பைக் கேட்டேன்.
பூச்சிகள் இல்லாத canteen கேட்டேன்
இளமை கெடாத party கேட்டேன்
பறந்து பறந்து off ஐ கேட்டேன்
பாசாங்கில்லாத principal கேட்டேன்.
Clean பண்ணிய toilet கேட்டேன்
பஸ்ஸின் ticket ஐ குறைக்கக் கேட்டேன்
தானே படிக்கும் மாணவரை கேட்டேன்
பயிற்சிகள் செய்யும் பிள்ளைகள் கேட்டேன்.
Daily எழுதும் marker கேட்டேன்
நீலம் கறுப்பில் ஒவ்வொன்று கேட்டேன்
க்ளாஸ் ரூம் போக lift ஐ கேட்டேன்
கிடந்து உருள staff room கேட்டேன்.
ருசித்துக் குடிக்க கூர்லிங்ஸ் கேட்டேன்.
எட்டிப் பறிக்க பழங்கள் கேட்டேன்
களைப்பு மறக்க சிறு தூக்கம் கேட்டேன்
கஷ்டம் தெரியா உழைப்பைக் கேட்டேன்.
O/L க்கெல்லாம் ஒரு எக்ஸ்ஸாம் கேட்டேன்
A-L க்கெல்லாம் சுயபடிப்பு கேட்டேன்
Parents க்கெல்லாம் ஒரு மனம் கேட்டேன்
Students க்கெல்லாம் ஒழுக்கம் கேட்டேன்.
நாடு முழுதும் சம கல்வி கேட்டேன்
கல்வி கெடாத sports ஐ கேட்டேன்
வகுப்பு முழுக்க அமைதி கேட்டேன்
ஆசிரியர் வரும்போதே எழும்ப கேட்டேன்.
விஞ்ஞானம் எல்லாம் உயரக் கேட்டேன்
கணக்கை தீயாய் படிக்கக் கேட்டேன்
வணிகம் கடந்த ஞானம் கேட்டேன்
தமிழை ஒழுங்காய் எழுத கேட்டேன்.
Poya கடந்தும் விடுமுறை கேட்டேன்
Casual medical இன்னும் கேட்டேன்
Steps ஏறாத வகுப்புகள் கேட்டேன்
கால் வலிக்கு மருந்து கேட்டேன்.
பண்கொண்ட கலைகள் பயிலக் கேட்டேன்
அதற்கு இருக்கும் வசதியை கேட்டேன்
பயன் கெடாத வளங்களைக் கேட்டேன்
சுருங்க விடாத பெறுபேறு கேட்டேன்.
Vice principal ஆ ஒருநாள் இருக்கக் கேட்டேன்
சுற்றும் கதிரையில் சுழலக் கேட்டேன்
Bathroom போக மறைவிடம் கேட்டேன்
கேட்டதும் லீவை தரும்படி கேட்டேன்
விழுந்தால் ஊரில் விழவே கேட்டேன்
அழுதால் கூட ஆறுதல் கேட்டேன்.
தனிமை என்னோடு போகக் கேட்டேன்
எப்போதும் சிரிக்கின்ற Principal கேட்டேன்
மஹிந்தோதயா போல் எல்லா க்ளாஸ் ரூம் கேட்டேன்
விடுதி போல் ஒரு கட்டிடம் கேட்டேன்.
ஸ்கூலுக்கருகில் வீட்டைக் கேட்டேன்
வீட்டுக்கு குறைந்த வாடகை கேட்டேன்
தவணைக்கு தவறாமல் வரும் team ஆட்களை ஓடக் கேட்டேன்
கேட்டவுடன் கொடுக்கும் transfer ஐக் கேட்டேன்
கல்வியமைச்சின் அதிகாரம் கேட்டேன்
அலைய விடாத வேலையைக் கேட்டேன்.
சொந்த ஊரில் தொழிலைக் கேட்டேன்
காலம் எல்லாம் பிடித்த ஸ்கூல் கேட்டேன்.
வருடத்திற்கு ஒரு பிரியாணி கேட்டேன்.
தகைமை இருக்குற பதவியை கேட்டேன்
பட்டம் வேண்டாம் நிம்மதி கேட்டேன்.
நியாயம் கேட்கும் ஊரை கேட்டேன்
ஊரைத் திருத்தும் இளைஞர்கள் கேட்டேன்
படிப்பைத் தாங்கும் உள்ளம் கேட்டேன்
துரோகம் தாங்கும் வலிமை கேட்டேன்.
படிக்க விடாதவனை துரத்தக் கேட்டேன்
தாய் தந்தை ஏமாற்றாத பிள்ளை கேட்டேன்
கல்வி வேண்டாட்டி தந்தைக்கு உதவக் கேட்டேன்
கயவனை அறிய cctv கேட்டேன்.
பொழுது போக்க TV கேட்டேன்
சின்ன சின்ன நேரங்கள் கேட்டேன்
இடைவேளையில் பார்க்க DISH TV கேட்டேன்
சீரியஸ் இல்லாத vp கேட்டேன்
வாரம் ஒரு லீவு கேட்டேன்
ஒரு வரியில் எழுதும் லெஸன் ஐ கேட்டேன்.
குறைந்த பட்சம் இங்கிரிமென்ட் கேட்டேன்.
இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை
இதிலே எதுவும் நடக்கவில்லை
Teaching teaching வேண்டாம் என்று
Visa visa visa கேட்டேன்......

10 மே 2017

மாமேதை கால்டுவெல்

    

கால்டுவெல் 1814-1891

     
                               ஐரோப்பிய குருமார்கள் தமிழ் மொழியினால் ஈர்க்கப்பட்டு, அதன்  சிறப்புகளில் மயங்கி, அதன் மேன்மைகளை மேதினிக்குப்  புலப்படுத்தினர். அவருள் முதன்மையானவர், தமிழ் தனித்தன்மை  வாய்ந்த மொழி, செம்மொழி  திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த  முதல் மொழி எனக்கூறி, உரிய சான்றுகளுடன் நிறுவிய மாமேதை  கால்டுவெல்!  டாக்டர் கால்டுவெல் தமிழகத்தில் தங்கியிருந்தபோது  தமிழ் மொழியை மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம்  போன்ற பிற திராவிட மொழி கற்றவராக விளங்கினார். அதன்பயனாக,  தமிழ் உள்ளிட்டதென்னிந்திய மொழிகளை குறித்திட, ‘திராவிட  மொழிகள்’ என்னும் சொல்லாக்கத்தை முதன்முதல் உருவாக்கி  உலகுக்கு அறிமுகம் செய்தார்.

வடமொழிச் சார்பாளர்கள் போலவே கீழை நாட்டு அறிஞர்கள் சிலரும்  திராவிடமொழிகளை சமஸ்கிருதத்திலிருந்து பிறந்தவை என்றே  கூறினர். அவர்களின்அக்கருத்தை கால்டுவெல் அவர்கள் வன்மையாக  மறுத்து, திராவிட மொழிகள் தனித்தன்மை வாய்ந்தவை; அவற்றுள்ளும்  தமிழ் வடமொழியின் துணையின்றி தனித்து இயங்கும் ஆற்றல்  உடையது என அழுத்தம் திருத்தமாக சான்று காட்டி நிறுவினார்.   இதன் காரணமாகத்தான், திமுக, கால்டுவெல்லை என்றும் நன்றியுடன்  போற்றி வருகிறது. 1968ம் ஆண்டில் நடத்திய இரண்டாம் உலகத் தமிழ்  மாநாட்டின்போது, 2.1.1968ல் சென்னை கடற்கரை காமராசர் சாலையில்  டாக்டர் கால்டுவெல்லின் திருவுருவச்சிலையை நிறுவினோம்.  கோவையில் 27.6.2010ல்  நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி  மாநாட்டு நிறைவு விழாவில் டாக்டர் கால்டுவெல் நினைவாகச் சிறப்பு  அஞ்சல் தலை வெளியிட ஆவன செய்தோம். .

 எங்கோ பிறந்து, தமிழகத்திற்கு வந்து, சமயத் தொண்டுகளாற்றி,  தமிழ் மொழியைக் கற்று, அதன் இன்பத்தில் தோய்ந்து, தமிழ்  மொழியில் இயல்பாய் அமைந்துள்ள மொழியியல் சிறப்பைக் கண்டு  வியந்து, தமிழின் மேன்மையை மேதினில் நிலைநாட்டிய மாமேதை  டாக்டர் கால்டுவெல்  கொடைக்கானல் மலையில் 28.8.1891ல்  மறைவெய்தினார். அவரது உடல், அவர் 50 ஆண்டுகாலம்  தங்கியிருந்து சமயத்தொண்டுகள் ஆற்றிய, இடையன்குடியில், அவர்  எழுப்பிய தேவாலய வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.


தமிழ் மொழிக்கு அருந் தொண்டு ஆற்றிய - திரா விட மொழிகளின் ஒப்பிலக் கணம் தந்த அறிஞர் கால்டுவெல் பாதிரியார் 50 ஆண்டு காலம் வாழ்ந்த நெல்லை மாவட்டம் இளை யான்குடி வீட்டினைப் புதுப் பித்து மானமிகு கலைஞர் தலைமை யிலான தி.மு.க. அரசு நினைவுச் சின்னமாக நாட்டுக்கு அர்ப்பணித் துள்ளது.

முதல்வர் கலைஞர் காணொலிக் காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார். தமிழுக்கு உழைத்தவர் களையெல்லாம் வரலாற் றில் வாழ வைத்த பெருமை தி.மு.க. அரசுக்கு உண்டு.

அதிலும் குறிப்பாக கால்டுவெல் அவர்களுக் குச் செய்யப்பட்டுள்ள சிறப்பு மிகமிகப் போற்று தலுக்கு உரியது.

கால்டுவெல் பற்றி மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் கூறுகிறார்:

மொழி நூலானது உலக மொழிகள் எல்லாவற் றையும் தழுவும் ஒரு பொதுக் கலை. உலக மொழிகள் எல்லாவற்றை யும் ஆரியம் (Aryan) , சேமியம் (Semitic), துரேனியம் (Turanian) என்னும் முப்பெருங் குலங்களாகப் பிரித்துள் ளார் மாக்கசு முல்லர். அவற்றுள் துரேனியத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் திராவிடக் குடும்பத்தின் மொழிகளைத் திறம்பட வகுத்துக் காட்டியவர் கால்டுவெல்.

இங்ஙனமே பிறரும் பிற குடும்பங்களை வகுத்துக் காட்டி உள்ளனர். மேற்கூறிய முக்குலங்கட் கும் உள்ள தொடர்பை ஆராய்வதே இந்நூலின் நோக்கம்.

அவற்றுக்கொரு தொடர்புண்டென்று; அஃதாவது அம்மூன்றும் ஒரு குலத்தினின்றும் கவைத்திருக்க வேண்டு மென்று சென்ற நூற்றாண் டிலேயே மாக்கசு முல்லர் (Max Muller) திடமாகக் கூறிவிட்டார்.  அம்மூலத்திற்குத் திரா விடம் மிக நெருங்கிய தென்று கால்டுவெல் கூறியுள்ளார்.

இக்கூற்றை என்னாலியன்ற வரை முயன்று மெய்ப்பித்திருக் கிறேன் - என்று மொழி ஞாயிறு அவர்களின் உயர்ந்த படைப்பான ஒப் பியன் மொழி நூல் எனும் நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் என்றால் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே இத்திசையில் சிந் தனையை செலுத்திய ஒரு வெளிநாட்டு அறிஞரை- அயர்லாந்துக்காரரை - அதுவும் வெளிநாட்டு மதத்தைச் சேர்ந்த கிறித் துவப் பாதிரியாரை - தமிழர் கள் எவ்வளவுத் தூரம் தூக்கி வைத்தும் புகழ வேண்டுமே!

தெலுங்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பும், கன்னடம் 1500 ஆண்டு களுக்கு முன்பும், 750 ஆண்டுகளுக்கு முன்பு மலையாளமும் ஆரிய மொழியான சமஸ்கிருத கலப்பால் பிரிந்தன என்பது தமிழ் அறிஞர்கள் ஆய்ந்து சொன்ன அதே கருத்தை தந்தை பெரியார் அவர் களும் கூறியிருக்கிறார் என்பது சுட்டிக் காட்டத் தகுந்ததாகும்.

கிறித்துவப் பாதிரியார் கள் செய்துள்ள தமிழ்த் தொண்டில் கால்டுவெல் இயற்றிய திராவிட மொழி களின் ஒப்பிலக்கணம் அடிக்கோடிட்டுக் குறிப்பிடப் பட வேண்டிய பொன்னே டாகும்.

ஓவியக் கல்லூரியில் பயின்றவர்; 1838 முதல் மரணத்தின் வாயிலில் புகும் வரை (1891 ஆகஸ்ட் 28) தமிழ்த் தொண்டாற்றிய பெருமகனாரை நன்றி உணர்வோடு பேற்றுவோம்!
 அறிஞர் கால்டுவெல் தமது 77 ஆண்டுகளில் 53 ஆண்டுகள்  தமிழகத்தில் வாழ்ந்துள்ளார். தமிழ் மொழிக்கு செய்த தொண்டுகளால்  இன்றும் உலகம் முழுவதும் புகழப்படுகின்ற அந்த மாமேதை  கால்டுவெல் பிறந்த 200ம் ஆண்டு 7.5.2014ல்  நிறைவுபெறும்  வேளையில் அப்பெருமகனாரை ஒட்டுமொத்த உலகத் தமிழ் சமுதாயம்  சார்பில் நன்றியுடன் நினைந்து வணங்கி மகிழ்வோம். தமிழ் மொழிக்கு  செய்த தொண்டுகளால் இன்றும் உலகம் முழுவதும் புகழப்படுகின்ற  அந்த மாமேதை கால்டுவெல் பிறந்த 200ம் ஆண்டு 7.5.2014ல்  நிறைவுபெறும் வேளையில் அப்பெருமகனாரை ஒட்டுமொத்த உலகத்  தமிழ் சமுதாயம் சார்பில் நன்றியுடன் நினைந்து வணங்கி மகிழ்வோம்.

பாரதி பாடலில் ஒன்று

தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிப் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக்கு இரையெனப் பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வேன் என்று நினைத் தாயோ?

நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்
மூளா தழிந்தி டுதல் வேண்டும் - இனி
என்னைப் புதிய உயி ராக்கி - எனக்கு
ஏதுங் கவலையறச் செய்து - மதி
தன்னை மிகத் தெளிவு செய்து - என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்
தோளை வலியுடைய தாக்கி - உடற்
சோர்வும் பிணிபலவும் போக்கி - அரி
வாளைக் கொண்டு பிளந்தாலும் - கட்டு
மாறா உடலுறுதி தந்து - சுடர்
நாளைக் கண்டதோர் மலர் போல் - ஒளி
நண்ணித் திகழும் முகம் தந்து - மத
வேளை வெல்லுமுறை கூறித் - தவ
மேன்மை கொடுத்தருளல் வேண்டும்
எண்ணுங் காரியங் களெல்லாம் - வெற்றி
யேறப் புரிந்தருளல் வேண்டும் - பல
பண்ணப் பெருநிதியம் வேண்டும் - அதில்
பல்லோர் துணைபுரிதல் வேண்டும் - சுவை
நண்ணும் பாட்டினொடு தாளம் - மிக
நன்றாவுளத் தழுந்தல் வேண்டும் - பல
பண்ணில் கோடிவகை யின்பம் - நான்
பாடத் திறனடைதல் வேண்டும்
ஐயம் தீர்ந்துவிடல் வேண்டும் - புலை
அச்சம் போயொழிதல் வேண்டும் - பல
பையச் சொல்லுவதிங் கென்னே - முன்னைப்
பார்த்தன் கண்ணனிவர் நேரா - எனை
உய்யக் கொண்டருளல் வேண்டும் - அடி
உன்னைக் கோடிமுறை தொழுதேன் - இனி
வையத் தலைமையெனக் கருள்வாய்- அன்னை
வாழி! நின்ன தருள் வாழி!!!!
மகாகவி பாரதி.

விஜயகாந்த் என்னும் அற்புத மனிதர்.

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.கேப்டன் அவர்களை சிலர் தமிழ்நாட்டில் உள்ள விஜயகாந்த் எனும்
முட்டாள் என்கின்றனர்.இதோ கேப்டன் விஜயகாந்த்  பற்றிய செய்தி :
இலங்கைப் போர்,
அகதிகள் மறுவாழ்வு,
கார்கில் போர்,
கும்பகோணம் தீ விபத்து,
ஆந்திரா புயல்,
ஒரிசா வெள்ளம்,
குஜராத் நிலநடுக்கம்,
தமிழகத்தின் சுனாமி
இது போன்ற பேரிடர்கள்
இந்தியாவில் எங்கு
நடந்தாலும் முதல்
முட்டாளாக இவர் தான்
தன் சொந்தப் பணத்தை
கொடுத்து துணை நிற்பார்...
தான் சுயமாக சம்பாதித்த
பணத்தில் பாதிக்கப்பட்ட
மக்களுக்காக கொடுத்த
நிவாரணத் தொகை மட்டும்
ருபாய் 10 கோடிக்கு மேல்....
ஊழல் செய்த பணம் இல்லை...
ஏமாற்றி சேர்த்த பணம் இல்லை...
உழைத்து சம்பாதித்த பணம் !!!
அன்றைய காலத்தில் 10 கோடி
இன்றைய 100 கோடிக்கு சமமானதே....
(மக்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் தெய்வங்களாகிய கருணாநிதியும், ஜெயலலிதாவும் இந்த இழப்புக்கு தங்கள் சொந்த பணத்திலுருந்து ஒரு ரூபாய் கூட வழங்கியதில்லை)
2002 ல் நெசவுத் தொழில்
நழிவுற்ற போது நெசவாளர்கள்
சாப்பாட்டிற்கே கஷ்டபட்ட போது
நம் தெய்வங்கள் ஜெயா & கருணா
கஞ்சி தொட்டி திறந்து கஞ்சி
வழங்கிய போது...
இந்த முட்டாள் மட்டும் நேரில் சென்று
பத்து லட்சத்திற்கு நெசவு துணி வாங்கிவிட்டு...
இன்று நான் வாங்கியிருக்கிறேன்,
என்னை பார்த்து நிறைய பேர் வாங்க வருவாங்க, உங்கள் தொழில் முடங்கி விடாதுகவலை பட வேண்டாம்
என்று கூறினார்....
மேலும் இந்த முட்டாள்
சென்னையில் இலவச
மருத்துவமனை கட்டி
கடந்த 20 வருடங்களாக
இலவச மருத்துவம்
வழங்கி கொண்டிருக்கிறார்....
இவர் சுயமாக சம்பாதித்த பணத்தில்
மிகப் பெரிய மண்டபம் கட்டி
அதற்கு தாய் தந்தை பெயர் சூட்டி
தினமும் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கிய ஒரு அடி முட்டாள்
இவர்தான்....

காது கேளாதோர்,
வாய் பேச முடியாதோர்
இல்லங்களுக்கு மாதா மாதம் நன்கொடை.....
கை, கால் ஊனமுற்றவர்கள் இல்லங்களுக்கு மாதா மாதம் நன்கொடை.....
தன்னோடு பணியாற்றிய 100 க்கும் மேற்பட்டவர்களுக்கு பென்சன் வழங்க ஏற்பாடு......
இது போன்ற எண்ணற்ற
செயல்களுக்காக இந்த பிழைக்க
தெரியாத முட்டாளுக்கு
அப்துல்கலாம் அவர்கள் கையால்
சிறந்த குடிமகன்
என்ற விருதும் வழங்கபட்டது.....
சென்னை வெள்ளத்தில்
மக்களின் முதல்வர் முகத்தை பார்த்தாங்களோ இல்லையோ,
இந்த ஆளு முகத்தை அனைவருமே பார்த்தனர்....
சினிமா உலகில் எண்ணற்ற புதுமுகங்களை அறிமுகப்படுத்தி அவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றியவர் யாருன்னு தெரியுமா??
இந்த முட்டாள் தான்....
பல அறிவு ஜீவிகள்
நடிகர் சங்க தலைவர்களாக
இருந்தும் அவர்களால்
நிர்வகிக்க முடியாமல்,
கடனை அடைக்க முடியாமல்
வெளியேறிய ஜாம்பவான்களில்
எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி தாங்க...
ஆனால் நம்ம சொல்ற
இந்த முட்டாள் தாங்க
தூக்கி விட்டாரு அந்த சங்கத்தை....
இன்னைக்கு பேஸ்புக்,
வாட்ஸ் அப் ல இந்த
முட்டாளை தாங்க நம்ம கிண்டல்
பண்ணிட்டு இருக்கோம்.....
நான் எனக்கு தெரிந்த
விஷயங்களை மட்டும் தான் சொல்லியிருக்கேன்.
இதுபோன்று அவர் செய்த
முட்டாள்த்தனமான உதவி்கள்
இன்னும் பல.....
அன்று அப்துல்கலாம் மறைவுக்கு
இந்த நாடே வருந்தியது.
அன்றும் இத்தனை மக்கள் இருக்காங்களேனு பார்க்காம,
பெரிய பெரிய தலைவர்கள்
இருக்காங்களேனு பார்க்காம
இந்த ஆளு அழுததுல
எவ்வளவு உண்மை இருந்ததுனு
பார்த்த எல்லாருக்குமே தெரிஞ்சுருக்கும்.
(அவரோட மறைவுக்கு கூட வராம உடல்நிலை சரியில்லைனு சொன்ன கருணாநிதியும் ஜெயலலிதாவுக்கும் இப்போ எப்படி ஓட்டு கேட்க வரப்ப உடம்பு சரியாச்சுனு தெரியல.)
இது போன்ற தேச துரோக செயலுக்காக இந்த முட்டாளுக்கு நாம் அளித்து கொண்டிருக்கும் தண்டணைகள்
ஏராளம் ஏராளம் ஏராளம்..
தைராய்டு பிரச்சினை இருப்பதால்
குரல் வளம் குறைந்திருப்பதாலும் எதார்த்தமான மக்கள் மொழியில் பேசுவதாலும்,
நாம் இவரை கோமாளி,
குடிகாரர் என்றும் அழைக்கிறோம்....
நீங்களே ஒரு முடிவெடுங்கள்.....
பதிவிட்ட  முகநூல் நண்பர் அருண்குமார் அவர்களுக்கு நன்றிங்க.

27 ஏப்ரல் 2017

இன்வெர்ட்டரும் பேட்டரியும்

 மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.இனி மின்சார தடை அடிக்கடி ஏற்படலாம்.எனவே தங்களுடைய வீட்டிற்கு  யூபிஎஸ் வாங்க நினைக்கிறீர்களா?அதற்கு முன்னதாக மணிக்கு எத்தனை மின்னோட்டம் செலவழிப்பீர் என கணக்கு போடுங்க.அதற்கான பேட்டரி மற்றும் இன்வெர்ட்டர் வாங்கி பொருத்துங்க.இணையத்தில் கிடைத்த தகவலை உங்களுக்கு அப்படியே பதிவிட்டுள்ளேன்.பார்த்து கணக்குப்போட்டு அதற்கேற்ப தரமான பேட்டரியும்,இன்வெர்ட்டரும் வாங்கி பொருத்துங்க..

Calculate Size of Inverter for following Electrical Load .Calculate Size of Battery Bank and decide Connection of Battery.
Electrical Load detail:
 • 2 No of 60W,230V, 0.8 P.F Fan.
 • 1 No of 200W,230V, 0.8 P.F Computer.
 • 2 No of 30W,230V, 0.8 P.F Tube Light.
Inverter / Battery Detail:
 • Additional Further Load Expansion (Af)=20%
 • Efficiency of Inverter (Ie) = 80%
 • Required Battery Backup (Bb) = 2 Hours.
 • Battery Bank Voltage = 24V DC
 • Loose Connection/Wire Loss Factor (LF) = 20%
 • Battery Efficiency (n) = 90%
 • Battery Aging Factor (Ag) =20%
 • Depth of Discharge (DOD) =50%
 • Battery Operating Temp =46ºC
Temp. °C Factor
80 1.00
70 1.04
60 1.11
50 1.19
40 1.30
30 1.40
20 1.59

Calculation:

Step 1: Calculate Total Load:
 • Fan Load= No x Watt =2×60=120 Watt
 • Fan Load=(No x Watt)/P.F=(2×60)/0.8= 150VA
 • Computer Load= No x Watt =1×200=200 Watt
 • Computer Load=(No x Watt)/P.F =(1×200)/0.8= 250VA
 • Tube Light Load= No x Watt =2×30=60 Watt
 • Tube Light Load=(No x Watt)/P.F =(2×30)/0.8= 75VA
 • Total Electrical Load=120+200+60 =380 Watt
 • Total Electrical Load=150+250+75= 475VA
Step 2: Size of Inverter:
 • Size of Inverter=Total Load+(1+Af) / Ie VA
 • Size of Inverter= 475+(1+20%) / 80%
 • Size of Inverter= 712 VA
Step 3: Size of Battery:
 • Total Load of Battery Bank= (Total Load x Backup Capacity) / Battery Bank Volt
 • Total Load of Battery Bank=(380 x 2) / 24 Amp Hr
 • Total Load of Battery Bank= 32.66 Amp Hr
 • Temperature Correction Factor for 46ºC (Tp)=1
 • Size of Battery Bank=[ (Load) x (1+LF) x (1+Ag) x Tp] / [n x DOD] Amp/Hr
 • Size of Battery Bank= (32.66 x (1+20%) x (1+20%) x 1) / (90% x 50%)
 • Size of Battery Bank= 101.3 Amp/Hr
Step 4: Connection of Battery:
If We Select 120 Amp Hr , 12V DC Battery for Battery Bank:
Series Connection:
 • Series configurations will add the voltage of the two batteries but keep the amperage rating (Amp Hours) same.
 • Condition-I :
 • Selection of Battery for Voltage = Volt of Each Battery <= Volt of Battery Bank
 • Selection of Battery for Voltage =12< 24
 • Condition-I is O.K
 • No of Battery for Voltage = Volt of Battery Bank / Volt of Each Battery
 • No of Battery for Voltage =24/12 = 2 No’s
 • Condition-II :
 • Selection of Battery for Amp Hr = Amp Hr of Battery Bank <= Amp Hr of Each Battery
 • Selection of Battery for Amp Hr =3<=120
 • Condition-II is O.K
 • We can use Series Connection for Battery & No of Battery required 2 No’s
series_battery_configParallel Configuration
 • In Parallel connection, the current rating will increase but the voltage will be the same.
 • More the number of batteries more will be the amp/hour.  Two batteries will produce twice the amp/hour of a single battery.
 • Condition-I :
 • Selection of Battery for Amp Hr = Amp Hr of Battery Bank / Amp Hr of Each Battery <=1
 • Selection of Battery for Amp Hr =101/120 = 0.84=1 No’s
 • Condition-I is O.K
 • Condition-II :
 • Selection of Battery for Voltage = Volt of Battery Bank = Volt of Each Battery
 • Condition-II :Selection of Battery for Voltage for Amp Hr = 24<=12
 • Condition-II is Not Full Fill
 • We cannot use Parallel Connection for Battery as per our requirement But If We do Practically It is Possible and it will give more Hours of back
parallel_battery_configSeries-Parallel Connection:
 • Connecting the batteries up in series will increase both the voltage and the run time.
 • Condition-I :
 • Selection of Battery for Amp Hr = Amp Hr of Each Battery <= Amp Hr of Battery Bank
 • Selection of Battery for Amp Hr =120<=101
 • Condition-I is Not Full Fill
 • Condition-II :
 • Selection of Battery for Voltage = Volt of Each Battery <= Volt of Battery Bank
 • Selection of Battery for Voltage = 12<=24
 • Condition-II is OK
 • We cannot use Parallel Connection for Battery
If We Select 60 Amp Hr , 12V DC Battery for Battery Bank:
Series Connection:
 • Selection of Battery for Voltage = Volt of Each Battery <= Volt of Battery Bank
 • Selection of Battery for Voltage =12< 24
 • Condition-I is O.K
 • No of Battery for Voltage = Volt of Battery Bank / Volt of Each Battery
 • No of Battery for Voltage =24/12 = 2 No’s
 • Condition-II :
 • Selection of Battery for Amp Hr = Amp Hr of Battery Bank <= Amp Hr of Each Battery
 • Selection of Battery for Amp Hr =3<=60
 • Condition-II is Not Full Fill
 • We can use Series Connection for Battery
Parallel Configuration
 • Condition-I :
 • Selection of Battery for Amp Hr = Amp Hr of Battery Bank / Amp Hr of Each Battery <=1
 • Selection of Battery for Amp Hr =101/60 = 1.63=1 No’s
 • Condition-I is O.K
 • Condition-II :
 • Selection of Battery for Voltage = Volt of Battery Bank = Volt of Each Battery
 • Condition-II :Selection of Battery for Voltage for Amp Hr = 24=12
 • Condition-II is Not Full Fill
 • We cannot use Parallel Connection for Battery as per our requirement.
Series-Parallel Connection:
 • Condition-I :
 • Selection of Battery for Amp Hr = Amp Hr of Each Battery <= Amp Hr of Battery Bank
 • Selection of Battery for Amp Hr =120<=60
 • Condition-I is OK
 • No of Battery for Amp Hr = Amp Hr of Battery Bank / Amp Hr of Each Battery
 • No of Battery for Amp Hr = 120/60 =1.68 =2 No’s
 • Condition-II :
 • Selection of Battery for Voltage = Volt of Each Battery <= Volt of Battery Bank
 • Selection of Battery for Voltage = 12<=24
 • Condition-II is OK
 • No of Battery for Voltage = Volt of Battery Bank / Volt of Each Battery
 • No of Battery for Voltage = 24 / 12 =2 No’s
 • No of Battery Required = No of Battery Amp Hr x No of Battery for Voltage
 • No of Battery Required = 2 x 2= 4 No’s
 • We can use Series-Parallel Connection for Batteryseries-parallel_battery_config

Summary:

 • Total Electrical Load=380 Watt
 • Total Electrical Load=475VA
 • Size of Inverter= 712 VA
 • Size of Battery Bank= 101.3 Amp/Hr
 • For 120 Amp/Hr , 12V DC Battery : Series Connection & 2 No’s of Battery or
 • For 60 Amp/Hr , 12V DC Battery : Series-Parallel Connection & 4 No’s of Battery

25 ஏப்ரல் 2017

வாழ்க்கை குறுகியது, ஆனா அழகானது...

*என்னைக் கவர்ந்த வாசகங்கள்...*
பேசி தீருங்கள்.
பேசியே வளர்க்காதீர்கள்.
உரியவர்களிடம் சொல்லுங்கள்.
ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.
நடப்பதைப் பாருங்கள்.
நடந்ததைக் கிளறாதீர்கள்.
உறுதி காட்டுங்கள்.
பிடிவாதம் காட்டாதீர்கள்.
விவரங்கள் சொல்லுங்கள்.
வீண்வார்த்தை சொல்லாதீர்கள்.
தீர்வை விரும்புங்கள்.
தர்க்கம் விரும்பாதீர்கள்.
விவாதம் செய்யுங்கள்.
விவகாரம் செய்யாதீர்கள்.
விளக்கம் பெறுங்கள்.
விரோதம் பெறாதீர்கள்
சங்கடமாய் இருந்தாலும்
சத்தியமே பேசுங்கள்.
செல்வாக்கு இருந்தாலும்
சரியானதைச் செய்யுங்கள்.
எதிர் தரப்பும் பேசட்டும்.
என்னவென்று கேளுங்கள்.
எவ்வளவு சீக்கிரம் தீர்வு வரும் பாருங்கள்.
நேரம் வீணாகாமல்
விரைவாக முடியுங்கள்.
தானாய்த்தான் முடியுமென்றால்,
வேறு வேலை பாருங்கள்.
*யாரோடும் பகையில்லாமல் புன்னகித்து வாழுங்கள்....*


பணத்தின் அருமையை உணர்த்துவது எப்படி?

முகநூல் நண்பர் திரு எஸ்.ஜெகதீசன் அவர்களது பதிவு..
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
*ஒவ்வொரு தாய், தந்தையும் தவறாமல் படிக்க வேண்டிய ஒன்று*

                 *ஒரு பணக்கார தந்தைக்கு ஒரே கவலை. தன் மகன் சுயமாக பணம். சம்பாதிக்கும் வயது வந்தும் இன்னும் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்காமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றிக் கொண்டிருப்பதை எண்ணி எப்போதும் வருத்தப்பட்டார்*.
*ஒரு நாள் பொறுக்கமாட்டாமல் தினம் நூறு ரூபாய் சம்பாதித்துக் கொண்டு வந்தால்தான் இனி வீட்டில் தங்க முடியும் என்று கண்டித்தார்.*
*மறுநாள் வீட்டிற்குள் நுழையும்போது பையன் நூறு ரூபாய் எடுத்து நீட்டினான். அவனுடைய அப்பா அங்கே எரிந்து கொண்டிருந்த விளக்கில் காட்டி பணத்தை எரிய விட்டார். போய் சாப்பிடு என்றார்*
*மறுநாளும் உள்ளே நுழையும்போது அவன் கொடுத்த நூறு ரூபாயை விளக்கில் எரியவிட்டார். மூன்றாவது நாள் பணத்தை விளக்கில் காட்டி எரிய விடும் போது மகன் தாவி அதை அணைத்தான். அப்பா என்ன செய்கிறீர்கள் என்று அலறினான்.*
*அவர் சொன்னார், ‘இன்றுதான் உண்மையில் நீ உழைத்து சம்பாதித்து பணம் கொண்டு வந்திருக்கிறாய்’
ஆச்சரியமடைந்த அவன் எப்படி கண்டு பிடித்தீர்கள் என்றான்.
*நீ உழைத்து சம்பாதிக்காத பணம் என்பதால் அது கரியானபோது நீ கவலைப் படவில்லை* *அதுவே உன் உழைப்பு என்கிறபோது நீ துடித்துவிட்டாய். போய் சாப்பிடு. உழைப்பின்அருமையும் பணத்தின் அருமையும் தெரிந்ததால் இன்று நீ சாப்பிடுகிற சாப்பாடு கூடுதல் சுவையாக இருக்கும்’ என்றார் மலர்ந்த முகத்தோடு.*
*இன்றைய நம் குழந்தைகள் பலரின் நிலைமையும் இதுதான். உலகின் எந்த மூலையில் கார் வெளியானாலும் அந்த நொடியே குழந்தைகள் அதைப் பற்றி பேசுகிறார்கள். புள்ளி விபரங்கள் தருகிறார்கள். ப்ளஸ் மைனஸ் சொல்கிறார்கள்.*
*விற்பனைக்கே வராத செல்போன்கள் பற்றி விலை உட்பட எல்லா விபரங்களையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். எளிமையாக சொல்வ தென்றால் செலவு செய்வதற்கான வழிகள் தெரிந்த அளவிற்கு வருமானத்திற்கான வழிகள் நம் குழந்தைகளுக்கு தெரியவில்லை.*
*ஆயிரம் ரூபாய் தாளைக் கையில் கொடுத்து இதை செலவழிக்க 20 வழிகளை எழுதச் சொல்லுங்கள். இப்பொழுது அதை சம்பாதிக்கும் வழிகளை எழுதச்சொல்லுங்கள். வேலை பார்த்து சம்பாதிக்கலாம். பிஸினஸ் செய்து சம்பாதிக்கலாம் என்று பொதுவாக இல்லாமல் எப்படிப்பட்ட வேலை பார்த்து என்று விரிவாக எழுதச் சொல்லுங்கள்.*
*ஏனெனில் சம்பாதிக்கத் தெரியாதவனுக்கு செலவு செய்யவும் தெரியாது. இப்படியெல்லாம் சொல்வதன் நோக்கம் இப்போதே அவர்கள் சம்பாதிக்க வேண்டும் என்பதல்ல. ஆனால் அதற்கான ஆற்றலை இப்போதிலிருந்தே வளர்த்துக்கொள்ள வேண்டும்.*
*போட்டியில் ஜெயித்தால்தான் கோப்பை கிடைக்கும் என்றால்தான் வேடிக்கை பார்க்கும் குழந்தைகள் நாளை நாமும் பயிற்சி எடுத்துக் கொண்டு ஓட வேண்டும் என்று நினைப்பார்கள்.*
*குழந்தை கோப்பை கேட்கிறதே என்று நாம் கடையிலிருந்து வாங்கிக் கொடுத்துவிட்டால் ஒரு விளையாட்டு வீரன் உருவாகாமல் தடுத்து விட்டோம் என்று அர்த்தம்.*
*படிப்பை பற்றி தினமும் பேசுகிறோம். வாழ்க்கையின ஆதாரமான பணத்தை பற்றி மாதம் ஒரு முறையாவது பேசுகிறோமா ? பணம் எவ்வாறு சம்பாதிக்கப்படுகிறது? எவ்வாறு சேமிக்கப் படுகிறது? எவ்வாறு வளர்கிறது? என்று விவாதித்திருக்கிறீர்களா* ?
*இதையெல்லாம் ஒருமுறை சொல்வதால் மட்டும் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. பொறுப்புணர்வுடனும் பொறுமை உணர்வுடனும் அன்றாட நடவடிக்கைகளோடு இணைத்து இவற்றை கற்றுத்தர வேண்டும். அப்பா சம்பாதிப்பதே தான் செலவு செய்யத்தான் என்றுதான் பல குழந்தைகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதை மாற்ற சில எளிய டிப்ஸ்கள் :*
*100 ரூபாய் கேட்டால் இது ஒரு தொகையே அல்ல என்று ரீதியில் அலட்சியமாக எடுத்து* *நீட்டாதீர்கள். மாறாக 100 ரூபாயா எதற்கு என்று கேட்டுவிட்டு யோசித்துவிட்டு கொடுங்கள்.*
*கேட்டபொதெல்லாம் தூக்கி நீட்டாதீர்கள். பணம் இருக்கு. ஆனால் அது வேறு ஒருவருக்கு கொடுக்க வேண்டியது. உனக்கு இரண்டு நாளில் தருகிறேன் என்று சொல்லுங்கள். காத்திருக்க பழக்குங்கள்*.
*பணத்தை வீட்டிற்குள் கண் கண்ட இடத்தில் எல்லாம் வைக்காதீர்கள். சட்டைப் பையில் வைத்து அப்படியே தொங்க விடாதீர்கள். பீரோவில்தான் பணம் வைப்பீர்கள் என்றால் வீட்டிற்குள் வந்ததும் அதில் வைத்து பூட்டுங்கள். பணத்தை மதிக்க வேண்டும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தை நம் குழந்தைகளிடம் ஏற்படுத்த இதெல்லாம் உதவும்.*
*உங்கள் வீட்டில் உள்ள தொகைக்கு அல்லது பர்ஸில் உள்ள தொகைக்கு எப்போதும் கணக்கு வைத்திருங்கள். கணக்கில்லை என்றால் (யார் எடுத்தாலும் தெரியாது. இதன்மூலம் யாரோ தைரியமாக தப்பு செய்யத் தூண்டுகிறீர்கள் என்று அர்த்தம்) உங்களுக்கே பணத்தின் அருமை தெரியவில்லை என்று அர்த்தம்*.
*காசோட அருமை தெரிஞ்சவங்கதான் நாங்கெல்லாம் என்றெல்லாம் பேசாதீர்கள். இதெல்லாம் அவர்களுக்கு உண்மையில் புரிவதில்லை. ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், அநாதை இல்லங்கள் உடல் ஊனமுற்றோர் இல்லங்களுக்கெல்லாம் அழைத்துச் செல்லுங்கள். நல்ல சாப்பாடு என்பது யாராவது கொடுக்கும் நன்கொடையில்தான் என்பதை புரிய வையுங்கள். பணத்தின் அருமையை நிச்சயம் புரிந்து கொள்வார்கள்.*
*உங்கள் குழந்தையின் அறையில் பெரிய கவர் ஒன்றை தொங்கவிடுங்கள். அன்றாடம் அவர்கள்* *செலவு செய்த தொகைக்கான கணக்கு மற்றும் பில்களை அதில் சேகரிக்கச் சொல்லுங்கள்.*
*மாதம் ஒருமுறை கணக்கு பாருங்கள். தினமும் பத்து ரூபாய்க்கு ஸ்நாக்ஸ் வாங்குவது பெரிதாகத் தெரியாது. ஆனால் மாதம் 300 ருபாய் ஸ்நாக்ஸுக்கே செலவு செய்திருக்கிறோம் என்கிற போது குழந்தைகள் தங்கள் செலவுகளை சீரமைக்க இது ஒரு வாய்ப்பாக அமையும்.*
*தேவையில்லாததையெல்லாம் வாங்குகிறவன் தேவையானதை விற்க வேண்டிவரும் என்ற பாடத்தை அமெரிக்கா உலகத்திற்கே* *தன்னுடைய பொருளாதார சரிவின் மூலம் கற்றுக் கொடுத்துவிட்டது*.
*தொட்டதெற்கெல்லாம் அமெரிக்காவை பாரு என்று சொன்னவர்களுக்கும் கூட இந்தியாவைப் பாரு என்ற பாடத்தையும் கூடவே கற்றுக் கொடுத்திருக்கிறது.*
*எனவே எதை வாங்குவது? எப்படி வாங்குவது? எப்போது வாங்குவது? இதெல்லாம் பணத்தின் அருமையை குழந்தைகளுக்கு கற்றுத்தர நாம் கட்டாயம் சொல்லித்தர வேண்டிய பால பாடங்கள்.*
*எப்படித்தான் பணத்தின் அருமையை* *ஏற்படுத்துவது? 100 ரூபாய் விலையில் ஒரு பொருளை குழந்தை கேட்கிறதென்றால் உடனே வாங்கிக் கொடுத்துவிடாதீர்கள்.*
*அதற்கு பதில் தினம் ஒரு ரூபாய் கொடுங்கள். அதை சேர்த்துக்கொண்டே வந்து 100 வது நாளில் அதை வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவுறுத்துங்கள். (கேட்கிற பொருளின் முக்கியத்துவத்தையும் அவசரத்தையும் பொறுத்து தினம் 5 ரூபாய் அல்லது 10 ரூபாய் என்று அதிகரிக்கலாம்).*
*இதனால் என்ன என்ன பயன்? தினம் கிடைக்கிற அந்த ரூபாயை வேறு எதற்கும் செலவழித்து விடாமல் சேர்த்து வைப்பதால் மன உறுதி, சுயக்கட்டுப்பாடு வளரும். பொருளை வாங்க காத்திருந்த நாட்கள் அந்த பொருளின் மதிப்பை உணர்த்திக்கொண்டே இருக்கும்.*

கல்வி சுமை

வாழ்க்கையைக் கொடுக்கும் பாடங்களை
மருந்து போலத் தருகிறோம்.
கல்வி சுமையாகிறது.
வாழ்க்கையைக் கெடுக்கும் படங்களை
விருந்து போலத் தருகிறோம்
வாழ்க்கையே சுமையாகிறது.

19 ஏப்ரல் 2017

உலக புத்தக தினவிழா-2017

மரியாதைக்குரியவர்களே,
                            வணக்கம்.ஈரோடு மாவட்டம் நம்ம சத்தியமங்கலத்தில் விதைகள் வாசகர் வட்டம் மற்றும் ஈரோடு பாரதி புத்தகாலயம் இணைந்து உலக புத்தக தினத்தை முன்னிட்டு ஒருநாள் புத்தக கண்காட்சியினை நடத்தின.

.சத்தியமங்கலம் நகராட்சி ஆணையாளர் அவர்கள் புத்தக அரங்கினை தொடங்கிவைத்து புத்தகங்களை பார்வையிட்டார்.
சத்தியமங்கலம் விதைகள் வாசகர் வட்டத்தின் தலைவர்  திரு.யாழினி ஆறுமுகம் அவர்களிடம் சத்தி ஆணையாளர் அவர்கள்   புத்தக கண்காட்சி பற்றி பாராட்டுரை வழங்கியபோது..
ஒருநாள் புத்தக கண்காட்சி அரங்கின் சிறப்பான தோற்றமும் வாசகர்களின் பார்வையிடுதலும்....

03 மார்ச் 2017

ராகங்களின் பெயர்கள்

மரியாதைக்குரியவர்களே,
          வணக்கம்.ராகங்கள் பற்றி நாமும் கொஞ்சமாவது தெரிந்துகொள்வோம் வாங்க!
ராகம் பற்றிய சொற்கள்/ராகங்களின் பெயர்கள்
ஆலாபனை, ஆரோகணம்,  அவரோகணம், அங்கம், ஐன்ய ராகம், கமகம், மேளகர்த்தா ராகம், பிரயோகம், ராகமாலிகை, சக்ரம், சம்பூர்ண ராகம், ஸ்ருதி, ஸ்வரம், சரிகமபதநி (ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம்), ஸ்தாயி, வக்ரம்,
ராகங்களின் பெயர்கள்
A - அம்ருதவாகினி,  அம்ருதவர்ஷினி, அசாவேரி, அடாணா, ஆபேரி, ஆபோகி, ஆகிரி, ஆனந்தபைரவி, ஆந்தோலிகா, ஆரபி
B - பகுதாரி, பங்காளா, பாலஹம்ஸா, பேகடா, பேஹாக், பைரவி, பாவப்ரியா, பூபாளம், பூசாவளி, பிலகரி, பிந்துமாலினி, பௌளி, பிருந்தாவனசாரங்கா
C - சக்ரவாகம், சலநாட்டை, சந்திரஜோதி, சாருகேசி, சாயாதரங்கிணி, செஞ்சுருட்டி, சிந்தாமணி, சித்தரஞ்சனி
D - தன்யாசி, தர்பார், தர்மாவதி, தேணுகா, தேவகாந்தாரி, தேவக்ரியா, தேவமனோகரி, திலிபகம், திவ்யாமணி, த்விஜாவந்தி
G - கமகக்ரியா, கமனாஸ்ரமம், கம்பீரநாட்டை, கானமுர்த்தி, காங்கேயபூஷணி, கருடத்வனி, காயகப்ரியா, கண்டா, கோபிகாவசந்தம், கௌளா, கௌளிபந்து, கௌரி, கௌரிமனோகரி, குர்ஜரி
H - ஹமிர்கல்யாணி, ஹம்ஸத்வனி, ஹம்ஸநாதம், ஹம்ஸாநந்தி, ஹரிகாம்போஜி(தி), ஹேமாவதி, ஹிந்தோளம், ஹிந்தோளவசந்தம், ஹுசேனி
I ஈசாமனோகரி
J - ஜகன்மோகினி, ஜனரஞ்சனி, ஜயமனோகரி, ஜயநாராயணி, ஜயந்தசேனை, ஜயந்தஸ்ரீ
K - கதனகுதூகலம், கலாநிதி, கலாவதி, கல்யாணவசந்தம், கமலாமனோகரி, கமாஸ், காமவர்தினி (பந்துவராளி), காம்போஜி(தி), கானடா, கனகாங்கி, கன்னடா, கன்னடகௌளா, காந்தாமணி, காபிநாராயணி, கரகரப்ரியா, காபி, கர்நாடக காபி, கேதாரகௌளா, கேதாரம், கிரணாவளி, கீரவாணி, கோசலம், குந்தளவராளி, குறிஞ்சி
L - லலிதா, லதாங்கி
M - மகதி, மதுவந்தி, மத்யமாவதி, மலகரி, மலயமாருதம், மாண்டு, மந்தாரி, மணிரங்கு, மஞ்சரி, மனோகரி, மனோரஞ்சனி, மாலவஸ்ரீ, மானவதி,  மார்கஹிந்தோளம், மாயாமாளவகௌளா, மோகனம், மோகனகல்யாணி, முகாரி
N நாககாந்தாரி, நாதநாமக்ரியா, நளினகாந்தி, நாராயணி, நாட்டை, நடபைரவி, நாட்டைக்குறிஞ்சி, நவநீதம், நவரோஜ், நாயகி, நீலாம்பரி, நீதிமதி
P - பாடி, பாவனி, பரஜ், பூர்ணசந்திரிகா, பூர்விகல்யாணி, புன்னாகவராளி, புஷ்பலதிகா
R - ரஞ்சனி, ரத்னாங்கி, ரவிச்சந்திரிகா, ரேவகுப்தி, ரீதிகௌளா
S - சகானா, சைந்தவி, சாலகம், சாலகபைரவி, சாமா, சாரங்கா, சரசாங்கி, சரஸ்வதி, சரஸ்வதிமனோகரி, சாவேரி, சண்முகப்ரியா, ஸ்ரீ, ஸ்ரீரஞ்சனி, சுபபந்துவராளி, சிம்மேந்திரமத்யமம், சிந்துபைரவி, சௌராஷ்டிரம், சுத்ததன்யாசி, சுத்ததேசி,  சுத்தசாவேரி, சிந்துராமக்ரியா, சுருட்டி, சூரியகாந்தம், ஸ்வராவளி
T திலங், தோடி (ஹநுமத்தோடி)
V - வாசஸ்பதி, வாகதீஸ்வரி, வகுலாபரணம், வனஸ்பதி, வலஜி, வராளி, வசந்தா, வீரவசந்தா
Y - யதுகுலகாம்போதி, யமுனாகல்யாணி

23 பிப்ரவரி 2017

தானியங்கள் பதினெட்டு வகை..

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். தானியங்கள் பதினெட்டு வகைகள் உங்களது கவனத்திற்காக..
 நெல்லு,புல்லு,வரகு,சாமை,திணை,இராகி,எள்ளு,கொள்ளு,பயறு,
உளுந்து,அவரை,துவரை,கடலை,மொச்சை,சோளம்,கம்பு,இறுங்கு,தோரை,இவைகளை இணையத்தில் படித்தது.இவற்றில் இறுங்கு மற்றும் தோரை என்பவை பற்றி எனக்குத் தெரியவில்லை.தெரிந்த அன்பர்கள் இங்கு கருத்துரை இட வேண்டுகிறேன்.
 என அன்புடன்,
செ.பரமேஸ்வரன், 9585600733
சத்தியமங்கலம்,ஈரோடு மாவட்டம்.

அரிசி சாதம் குக்கரில்சமைத்துப் பழகுங்க!

  புத்தகத்தில் மட்டும்படித்து விட்டு நீந்தவோ,வாகனம் ஓட்டவோ முடியாத காரியம். அனுபவமே சிறந்த பயிற்சிக் களமாகும்.

மரியாதைக்குரியவர்களே,
                    வணக்கம்.குக்கரில் சாதம் வடிப்பது பற்றி காண்போம்.
 நபருக்கு அரை டம்ளர் அரிசி வீதம் தேவைக்கேற்ப எடுத்து தண்ணீர் ஊற்றி நன்றாக களைந்தெடுங்கள்.
 குக்கரில் அரிசி ஒரு பங்கு மூன்று பங்கு தண்ணீர் ஊற்றி விசில் மூடி குக்கரில் வைத்து வேகவிடுங்கள்.மூன்று விசில் வந்த பிறகு இறக்கிவைத்து குளிர்ச்சியாகும் வரை காத்திருங்கள்.பிறகு மூடியை திறந்து சாப்பாட்டை பரிமாறுங்கள்.அனுபவத்திற்கேற்ப தண்ணீரின் அளவு குறைக்கவோ,கூட்டவோ செய்து உங்களது விருப்பத்திற்கேற்ப சமைத்துப்பழகுங்க..
==============
 அடுத்த பதிவுகளில் .என் இல்லாளின் துணைகொண்டு சமையல் பாத்திரங்கள்,சமைத்தலில் உள்ள அளவுகள்,செய்முறைகள்,இத்துடன் காய்கறிகள் பட்டியல்,,கிழங்குகள்பட்டியல்,கீரைகள் பட்டியல்,மூலிகை உணவுகள்,ஆரோக்கிய உணவுகள்,இயற்கை உணவுகள்,தானியங்கள் பட்டியல்,பருப்புகள் பட்டியல்,கொட்டைகள் பட்டியல்,சுவைபொருட்கள் பட்டியல்,மீன் வகைகள் பட்டியல்,மாமிச உணவுகள் பட்டியல்.என சமையலறையில் இருக்க வேண்டிய பொருட்களை பட்டியலிட்டு பயன்படுத்தும் முறைகள் பற்றி பதிவிட வேண்டும்.முயற்சிக்கிறேன்..
என அன்புடன், 9585600733
செ.பரமேஸ்வரன்,
அரசுப் பேருந்து ஓட்டுநர்,
சத்தியமங்கலம்-
ஈரோடு மாவட்டம். 

சமையலுக்கான பொடி வகைகளில் சில...

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.
               இன்றைய காலத்தில்  சமைப்பதிலும் நேரத்தை மிச்சப்படுத்தும் இயந்திரமான நிலையில் உள்ளோம்.அதனால் சமையலுக்குத்தேவையான பொருட்களை ஏற்கனவே பொடி செய்துகொண்டால் சமைப்பது எளிதாகும்.
பருப்புப்பொடி
                   தேவையானவை:
                           துவரம்பருப்பு – 2 கப், கடலைப்பருப்பு – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 6, மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
                  வாணலியில் துவரம்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். கடலைப்பருப்பையும் பொன்னிறமாக வறுக்கவும். மிளகு, காய்ந்த மிளகாயையும் வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து தேவையான உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, மிக்ஸியில் அரைக்கவும்.
குறிப்பு: எண்ணெய் விட்டு வறுக்கக்கூடாது. இந்தப் பொடியை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்து இரண்டு மாதம் வரை வைத்து உபயோகப்படுத்தலாம். சூடான சாதத்தில் பருப்புப்பொடியைப் போட்டு, எண்ணெய் அல்லது நெய் விட்டுப் பிசைந்து சாப்பிட… சுவை அசத்தலாக இருக்கும்.

 செட்டிநாடு குழம்பு மிளகாய்ப்பொடி..
தேவையான பொருட்கள்; காய்ந்த சிவப்பு மிளகாய்- 35 முதல் 40 ,கொத்தமல்லி விதை - 1 கப், கடலை பருப்பு - 2 டீஸ்பூன்  துவரம் பருப்பு - 2 டீஸ்பூன் , சீரகம் - 2 தேக்கரண்டி,  கருப்பு மிளகு - 1  டீஸ்பூன்,   பெருங்காயம் பொடி - 1 தேக்கரண்டி,  மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

செய்முறை;
           வாணலியில்  மிளகாய் வற்றலை போட்டு வறுக்கவும். பின் கொத்தமல்லி விதை, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், மிளகு, இவை அனைத்தையும் கலந்து ஒன்றாக வறுக்க வேண்டும். கருகிவிடாமல் பார்த்து பதத்திற்கு வறுக்க வேண்டும். பின் மஞ்சள், பெருங்காயம், கலந்து கிளறி ஆறவைத்து பொடியாக்கி கொள்ள வேண்டும். குழம்பு செய்யும் போது தேவையான அளவு பயன்படுத்தலாம்.

சாம்பார்பொடி
தேவையானவை: காய்ந்த மிளகாய் – 250 கிராம், தனியா – 500 கிராம், துவரம்பருப்பு – 200 கிராம், கடலைப் பருப்பு – 100 கிராம், வெந்தயம், மிளகு – தலா 50 கிராம், மஞ்சள் – 2.

செய்முறை:
               வாணலியில் எண்ணெய் விடாமல் காய்ந்த மிளகாய், தனியா, மிளகு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, வெந்தயம், மஞ்சள் ஆகியவற்றை லேசாக வறுத்து (தனித்தனியாக வறுக்கவும்), மெஷினில் கொடுத்து அரைக்கவும் .
குறிப்பு: வெயிலில் காயவைத்து அரைப்பதைவிட வறுத்து அரைத்தால், சாம்பார் பொடி வாசனையாக இருப்பதுடன், நீண்ட நாள் கெடாது.

பூண்டுப்பொடி
              தேவையானவை:
                        பூண்டு – 250 கிராம், காய்ந்த மிளகாய் – 10, உளுத்தம்பருப்பு – ஒரு கப், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

                      செய்முறை:
                        பூண்டை தோல் உரிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, பூண்டை சேர்த்து மொறுமொறுப்பாக வரும் வரை வறுக்கவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனித்தனியாக எண்ணெய் விடாமல் வறுத்துக்கொள்ளவும். பூண்டுடன்… மிளகாய், உளுத்தம்பருப்பு, உப்பு சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.
குறிப்பு: பூண்டு, வாயுத் தொல் லையை நீக்கும். இதய நோயாளி களுக்கு மிகவும் பயன்தரக் கூடியது.

நெல்லிக்காய் பொடி
தேவையானவை:
                பெரிய நெல்லிக்காய் – 10, உளுத்தம்பருப்பு – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 2, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
                      நெல்லிக்காயை கேரட் துருவியில் துருவி வெயிலில் காயவைத்து, வெறும் வாணலியில் வறுக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனியாக வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, இவற்றுடன் உப்பு சேர்த்து, மிக்ஸியில் பொடிக்கவும்.
நெல்லிக்காய்… வைட்டமின் ‘சி’, இரும்புச்சத்து மிக்கது.

தேங்காய்ப்பொடி
தேவையானவை:
                   முற்றிய தேங்காய் – ஒன்று, உளுத்தம்பருப்பு – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 6, எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
                        தேங்காயை உடைத்து துருவிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு தேங்காய் துருவலை சிவக்க வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை எண்ணெய் விடாமல் வறுத்து… தேங்காய், உப்பு சேர்த்துப் பொடித்து நன்கு கலக்கவும்.
குறிப்பு: இந்த தேங்காய்ப்பொடியை சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். காய் கறிகளை சமைக்கும்போது மேலே தூவிக் கிளறலாம். இட்லி தோசைக்கும் தொட்டு சாப்பிடலாம். கொப்பரைத் தேங்காயில் தயாரித்தால், ஒரு மாதம் வரை வைத்துப் பயன்படுத்தலாம்.

இட்லி மிளகாய்ப்பொடி
தேவையானவை:
                            காய்ந்த மிளகாய் – 100 கிராம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு கப், எள் – 50 கிராம், பெருங்காயத்தூள் – சிறிதளவு, எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
                          வெறும் வாணலியில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும். எள்ளையும் வறுத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாயை வறுத்துக்கொள்ளவும். முதலில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை மிக்ஸியில் ரவை பதத்துக்கு அரைத்து, எள் சேர்த்து பொடித்து எடுக்கவும். அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து எடுத்து, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
குறிப்பு: காற்றுப்புகாத டப்பாவில் போட்டு, கைபடாமல் ஸ்பூன் உபயோகப்படுத்தி பயன்படுத்தினால்… இது இரண்டு மாதம் வரை கெடாமல் இருக்கும்.


கொத்தமல்லிப் பொடி
தேவையானவை:
                பச்சை கொத்தமல்லி – ஒரு கட்டு, உளுத்தம்பருப்பு – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 4, புளி – பெரிய நெல்லிக் காய் அளவு, உப்பு – தேவையான அளவு.

 செய்முறை:
          வெறும் வாணலியில் எண்ணெய் விடாமல் உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை  வறுத்துக் கொள்ளவும். புளியை தனியாக வறுக்கவும் (நன்கு உலர்ந்துவிடும் வரை). கொத்தமல்லியை ஆய்ந்து, கழுவி, ஒரு துணியில் பரவலாகப் போட்டு உலரவிடவும். வறுத்த உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், புளியை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி, உப்பு சேர்த்து, கொத்தமல்லியை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு பொடிக்கவும்.
(குறிப்பு: இது தயிர் சாதத்துக்கு சிறந்த காம்பினேஷன். கொத்தமல்லி இல்லாத நாட்களில், அதற்குப் பதிலாக இந்தப் பொடியை குழம்பில் சிறிதளவு சேர்க்கலாம்.)
மிளகு  சீரகப்பொடி
தேவையானவை:
              மிளகு, சீரகம் – தலா 100 கிராம், பெருங்காயத்தூள் – சிறிதளவு,  உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
                   வாணலியில் எண்ணெய் விடாமல் மிளகு – சீரகத்தை வறுத்துப் பொடித்து, இதனுடன் பெருங்காயத்தூளை சேர்க்கவும். இதை சாதத்துடன் கலக்கும்போது உப்பு சேர்க்கவும்.
குறிப்பு: ‘சம்பா சாதம்’ என்று கோயில்களில் இந்தப் பொடியை சாதத்துடன் சேர்த்து, நெய் கலந்து கொடுப்பார்கள். இது கைவசம் இருந்தால், ரசம் தயாரிக்கும்போது பயன்படுத்தலாம்.

கூட்டுப்பொடி
தேவையானவை:
                   கடலைப் பருப்பு, தனியா – தலா 100 கிராம், காய்ந்த மிளகாய் – 6.

செய்முறை:
                   வெறும் வாணலி யில் கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாயை தனித்தனியாக வறுக்கவும். மூன்றையும் ஒன்றுசேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
குறிப்பு: கூட்டு, பொரியல் செய்யும் போது இதை மேலே தூவிக் கிளறி இறக்கினால்… சுவை அதிகரிக்கும்.
ரசப்பொடி
தேவையானவை:
               தனியா – 4 கப், துவரம்பருப்பு, சீரகம், மிளகு – தலா ஒரு கப், காய்ந்த மிளகாய் – 10.
செய்முறை:
                       வெறும் வாணலியில் தனியா, துவரம்பருப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து, ஒன்றுசேர்த்து பொடித்துக்கொள்ளவும்.(குறிப்பு: புளியைக் கரைத்து இந்த ரசப்பொடி, உப்பு சேர்த்து, ஒரு தக்காளியை நறுக்கிப் போட்டு, கொதிக்கவிட்டு 10 நிமிடத்தில் ரசம் தயாரித்துவிடலாம். சிறிதளவு நெய்யில் கடுகு தாளித்து, பெருங்காயத்தூள் சேர்த்தால்… மணம், ருசி ஆளை அசத்தும்.)

மூலிகைப்பொடி
தேவையானவை:
            வல்லாரை இலை, முடக்கத்தான் இலை, துளசி இலை,  தூதுவளை இலை, புதினா – தலா ஒரு கைப்பிடி அளவு, சுக்கு – ஒரு துண்டு, உப்பு – தேவையான அளவு.
செய்முறை: இலைகளைத் தனித்தனியாக கழுவி, துணியில் பரவலாக போட்டு, நன்கு உலர்ந்ததும் வெறும் வாணலியில் தனித்தனியாக வறுக்கவும். வறுத்தவை எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து, சுக்கை நசுக்கிப் போட்டு, உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.(குறிப்பு: வல்லாரை ஞாபக சக்தி தரும். முடக்கத்தான் கீரை மூட்டுவலிக்கு சிறந்த மருந்து. துளசி – தூதுவளை தொண்டைக்கட்டு, சளி, இருமல் வராமல் தடுக்கும் சக்தி உடை யவை. புதினா வாய் துர்நாற்றத்தை போக்கும் தன்மை கொண்டது. சுக்கு வாயுத்தொல்லையை நீக்கும். இத்தனை பயனும் உள்ள இந்த மூலிகைப்பொடி உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்தது.)


எள்ளுப்பொடி
தேவையானவை:
                    எள், உளுத்தம்பருப்பு – தலா 100 கிராம், காய்ந்த மிளகாய் – 6, பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
                   வெறும் வாணலியில் எள், காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை தனித்தனியாக வறுத்து… உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ள வும்.


சுண்டைக்காய்பொடி
தேவையானவை:
         சுண்டைக்காய் வற்றல் – 100 கிராம், உளுத்தம்பருப்பு – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 4, பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
                 வெறும் வாணலியில் சுண்டைக்காய் வற்றல், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனித்தனியாக வறுக்கவும். பிறகு இவற்றுடன் தேவையான உப்பு, சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.(குறிப்பு: சுண்டைக்காய் வற்றல் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும். சூடான சாதத்தில் இந்தப் பொடியை சிறிதளவு சேர்த்து, நெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம்)

கொள்ளுப்பொடி
தேவையானவை:
                 கொள்ளு – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 6, உளுத்தம்பருப்பு – 100 கிராம், பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு

செய்முறை:
               வெறும் வாணலியில் கொள்ளு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை தனித்தனியாக எண்ணெய் விடாமல் வறுக்கவும். இவற்றுடன் தேவையான உப்பு, சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்துப் பொடித்துக்கொள்ளவும்.
(குறிப்பு: கொள்ளு, கொழுப்புச்சத்தைக் குறைக்கும்.)


தனியாப்பொடி (கொத்துமல்லிவிதை பொடி)
தேவையானவை:
          மல்லிவிதை என்னும்   தனியா – ஒரு கப், உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
                   வாணலியில் எண்ணெய் விடாமல் தனியா, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனித்தனியாக வறுக்கவும். இவற்றுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.
குறிப்பு: தனியாப்பொடி பித்தத்தை தணிக்கும். இதை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.

கறிவேப்பிலை பொடி
தேவையானவை:
                கறிவேப்பிலை (ஆய்ந்தது) – 4 கைப்பிடி அளவு, உளுத்தம்பருப்பு – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 6, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
                        வெறும் வாணலியில் கறிவேப்பிலையை எண்ணெய் விடாமல் மொறுமொறுப்பாக வரும் வரை வறுக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனியாக வறுக்கவும். இவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.(குறிப்பு:  இதை சூடான சாதத்தில் சேர்த்து, நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம். கறிவேப்பிலை கண்ணுக்கு நல்லது. தலைமுடி வளர்ச்சிக்கும் மிகவும் உதவும்.)


ஓமப்பொடி
தேவையானவை:
         ஓமம் – 100 கிராம், மிளகு – 10, சீரகம் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
                வெறும் வாணலியில் ஓமம், மிளகு, சீரகம் ஆகியவற்றை தனித்தனியாக வறுக்கவும். பிறகு அவற்றுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.(குறிப்பு: இந்தப் பொடியை சூடான சாதத்தில் போட்டு, நெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம். மோருடன் இதை சிறிதளவு சேர்த்து அருந்தினால், ஜீரண சக்தி அதிகரிக்கும். இந்தப் பொடி கைவசம் இருந்தால் தோசை மாவுடன் கலந்து தோசை செய்தால் மிகவும் ருசியுடன் இருக்கும். சிறிதளவு வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் நறுக்கிப் போட்டு தயாரித்தால் சுவையில் அசத்தும்.)

1. பருப்புப் பொடி
தேவையானவை
துவரம் பருப்பு                1 கப்
வரமிளகாய்                   1 (அ) 2
கருப்பு மிளகு                 1 டீஸ்பூன்
உப்பு                                    1 டீஸ்பூன்
புளி                                      1 கோலிகுண்டு அளவு
பெருங்காயம்                1 டீஸ்பூன்
நல்லெண்ணெய்         2 டீஸ்பூன்
செய்யும் முறை

வாணலியில் நல்லெண்ணெய் விட்டு அதில்  பெருங்காயம், புளி இரண்டையும் தனித்தனியே ஒன்றன் பின் ஒன்றாக  வறுத்துக் கொள்ளவும்.
மிச்சம் உள்ள  எண்ணெயில் துவரம் பருப்பு, மிளகாய், மிளகு இவற்றை சிவக்க வறுத்துக் கொண்டு நன்றாக ஆற வைக்கவும்.
வறுக்கும் சமயம் மிதமான தீயில் வறுப்பதும், ஆறிய பின்னே மிக்சியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
காற்றுப்புகாத ஜாடியில் வைத்து கைகளால் தொடாமல் பயன் படுத்தவேண்டும்.
பயன்படுத்தும் முறை;
வடித்த சாதத்தில் நெய் அல்லது, நல்லெண்ணெய் சேர்த்து, இந்த பொடியோடு சாப்பிடலாம்.
   என அன்புடன்
C.பரமேஸ்வரன்,
சத்தியமங்கலம்-
ஈரோடு மாவட்டம்.