20 ஜூன் 2011

(24)ஈரோடு மாவட்ட ஆட்சியர்- சமூகப் பணி


             மாவட்ட ஆட்சியரின் சமூக நற்பணி

        அன்பு நண்பர்களே. வணக்கம்.
       
             நமது மாவட்டமாம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்கள் அரசுப் பள்ளிகளின் தரம்   தனியார் பள்ளிகளின் பள்ளிகளின் தரத்தை விட எவ்விதத்திலும் குறைந்துவிட வில்லை என்ற நிரூபணத்திற்காகவே

      (தனியார் பள்ளிகளில் தகுதிக்கும் மீறி அலைந்து திரிந்து கடன் வாங்கி வீண்  செலவு செய்யும் நம் போன்ற நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பத்தினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே என்று கூடக்கருதலாம்)

               தமது குழந்தையை ஈரோடு குமலன் குட்டை ஊராட்சி ஒன்றியதொடக்கப்       பள்ளியில் சேர்த்து! அரசுப்பள்ளிகளின் ஆசிரியர்களின் சேவைக்கு புதுமையான நற்சான்று வழங்கி இமாலயச் சாதனை புரிந்துவிட்டார்.
          அதற்காக மரியாதைக்குரிய ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் அய்யா அவர்களின் துணைவியார் மருத்துவர் அவர்களுக்கும்

                  ஈரோடு மாவட்ட குடிமக்கள் சார்பாகவும்,

                           கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பெற்றோர் சங்கத்தின் சார்பாகவும்,

                   தேனீக்கள் சமூக சேவை அமைப்பின்(தாளவாடி & சத்தியமங்கலம்) சார்பாகவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
           
          அய்யா அவர்களது இந்த மகத்தான சேவையானது அனைத்து தரப்பு மக்களுக்கும் முன்னுதாரணமாக அமைந்துள்ளது மட்டுமின்றி

                  அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும்,கல்வி அதிகாரிகளுக்கும் அவர்கள் பணி சிறப்பாகத் தொடர ஊக்க மருந்தாக அமைந்துள்ளது எனலாம்.
       
                    இலவசம் என்றாலே  அதன் சிறப்புகள் மற்றும் முக்கியத்துவம் பற்றி சிந்திக்காமல் ஏளனம் செய்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளது எனலாம்.
                        இதே முறையை சமூதாய உணர்வுள்ள அனைத்து அரசு அதிகாரிகளும் பின்பற்ற வேண்டும்.
             
               அனைத்துப்பகுதிகளிலும் பணியாற்றும் குறிப்பாக கிராமப்பகுதி மற்றும் மலைப்பகுதிகளில் பணி புரியும் அரசுப் பள்ளி ஆசிரியர்களும் கடமை உணர்ந்து
          ''ஆசிரியர் பணி அறப்பணி; அதற்கே உன்னை அர்ப்பணி'' 

          என்ற கூற்றுக்கேற்ப கடமை உணர்ந்து சமூக முன்னேற்றத்திற்காகப் பாடுபட வேண்டும், என்பதே அனைவரின் எதிர்பார்ப்பார்ப்பாகும்.
             
                   மரியாதைக்குரிய ஆட்சியர் அவர்கள் இன்னும் ஒருபடி மேலே சென்று தம் மகளுக்கு மதிய உணவும், இலவச சீருடையும் வழங்குமாறு பள்ளி  தலைமை ஆசிரியரிடம் விண்ணப்பித்திருக்கும்! அவரது சமூகப் பார்வை

              ''பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' 

                 என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாய்மொழிக்கு ஏற்ப சாதி,மத,இன வேறுபாடின்றி அனைவரும் மனிதகுலமே, என இந்த சமூகத்திற்கே வழிகாட்டிவிட்டார்.

                அதைவிட முக்கியமாக ஆட்சிப்பணி புரியும் அய்யா அவர்களும், அரசு மருத்துவ மனையில் மருத்துவப் பணி புரியும் அவரது துணைவியார் அவர்களும் படித்த சிறந்த பண்பாளர்கள் என்பதனையும்,அவர்களது முற்போக்கான சிந்தனைக்கேற்ப சமூகப்பணி சிறப்பாகச் செய்பவர்கள் என்பதனையும் இதன் மூலம் அனைவரும்உணரச் செய்து விட்டனர்.

                               அனைத்து தரப்பு அரசு துறை அதிகாரிகளும், அலுவலர்களும், ,பணியாளர்களும் அவரவர் பணிக்கேற்ப கடமையுணர்ந்து தம்மால் இயன்றவரை சமூகப் பணி சிறப்பாக ஆற்ற வேண்டும்.

            (குறைந்தது வறுமையில் வாடும் ஏழை மக்களிடம் கையூட்டுப் பெறுவதையாவது தவிர்த்து 
         அவர்கள் வரிப்பணத்தில்தான்  கை நிறையச் சம்பளமாகப் பெறுகிறோம் என்பதனை உணர்ந்தாவது 
            தம் கடமையைச் செய்ய வேண்டும்)

            .நாமக்கல் மாவட்ட முன்னாள் ஆட்சியர் மரியாதைக்குரிய சகாயம் அவர்களைப் போல,

                   ஈரோடு மாவட்ட இன்னாள் ஆட்சியர் மரியாதைக்குரிய ஆனந்தக்குமார் அவர்களைப் போல அனைவரின் எண்ணங்களும், செயல்களும் அமையுமேயானால்
          
               நமது நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் மரியாதைக்குரிய    டாக்டர்;அப்துல் கலாம் அவர்களின் ''வல்லரசுநாடு'' எனும்  இந்தியாவின் கனவு நனவாகும் தூரம் மிக தொலைவில் இல்லை எனலாம்.
                
                        வெற்றியும் பெறலாம்.
              
           சமூக சீர்திருத்தவாதி தந்தை  பெரியார் பிறந்த மண்ணுக்கு மேலும் பெருமை சேர்த்த நமது ஆட்சித்தலைவர் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் வாழ்த்துகிறோம்,வணங்குகிறோம்..என....

                 parameswaran.c
  

Monday, June 13, 2011


(23)GOBI ARTS & SCIENCE COLLEGE -counselling

அன்பு நண்பர்களே,வணக்கம்.
                நம்ம ஊர்க் கல்லூரியாம் கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்
            பொறியியல் கல்லூரிகளைப் போல,மருத்துவக் கல்லூரிகளைப் போல கலந்தாய்வு முறையில்
             தமிழகத்திலேயே முதல் முறையாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கலந்தாய்வு மூலம் நேரடிச்சேர்க்கை முறை ஆரம்பிக்கப்பட்டு அதனடிப்படையில் இந்த ஆண்டும் (COUNSELLING)  எனப்படும் கலந்தாய்வு முறையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது.
      பி.எஸ்.சி.கணிதம்.,இயற்பியல்.,வேதியியல்.,தாவரவியல்.,கணிப்பொறியியல்.,ஆகிய பாடப்பிரிவுகளுக்கு 28-05-2011 சனிக்கிழமையும்  ,                                                                 பி.ஏ.பொருளாதாரம்.,வணிகவியல் மேலாண்மைத்துறை பாடப்பிரிவுகளுக்கு 29-05-2011 ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்ற நேரடிச் சேர்க்கைக்கான கலந்தாய்வில் ஏராளமான மாணவ,மாணவியர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
                

(22) பழங்குடி மக்கள்

                                பழங்குடி மக்கள்
   
அன்பு நண்பர்களே,வணக்கம்.  பாரம்பரியத்திற்கும்,வரலாற்றிற்கும்,பண்பாட்டிற்கும் உலகத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்குவது இந்திய தேசம்.
                பல்வேறு இனத்தைச் சார்ந்த மக்கள் பலவகையான பண்பாடு,கலாச்சாரக்கூறுகளைக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
               அவர்களில் பழங்குடி இன மக்களும் அவர்களுக்கே உரிய தனித்துவமான கலாச்சாரம்,அடையாளம்,மொழி,இயற்கையோடு இணைந்த பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைப் பாரம்பரியமாகப் பின்பற்றி வாழ்ந்து வந்துள்ளனர். இன்றைய சூழலில்

(21)GOBI ARTS & SCIENCE COLLEGE- GOBI CHETTI PALAYAM.

                               தமிழகத்திலேயே முதல் கல்லூரி
                                          மற்றும் சிறந்த கல்லூரி
                                ====================================

        அன்பு நண்பர்களே, வணக்கம்.

                       நம்ம ஊர் கல்லூரியாம் கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (13-06-2011) முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுக வகுப்பு நடைபெற்றது.
                  காலை 08-00 மணி முதலே மாணவ,மாணவியர்கள் அவரவர் பெற்றோருடன் வருகை தர கல்லூரி வளாகம் சுமார் இரண்டாயிரம் பேருடன்  திருவிழாக் கோலம் பூண்டிருந்தது.
                அனைவரும்K.M.R.MAHAL-ல் குழுமியிருக்க  காலை 10-00மணிக்கு மரியாதைக்குரிய தலைவர்P.கருப்பணன்.B.A.B.L. அவர்கள் முதலாக வாழ்த்துரை வழங்கினார்கள்.
     அய்யா அவர்களது வாழ்த்துரையில் மாணவ,மாணவியர் அனைவரும் பல்வேறு ஊர்களிலிருந்தும்,பல்வேறு பள்ளிகளிலிருந்தும் வருகை தந்துள்ளீர்கள்.
          இக்கல்லூரி மற்ற கல்லூரிகளை விட மாறுபட்ட கல்லூரி.
         கோபி வட்டாரத்தில் உள்ள கிராமப்பகுதி மாணவருக்காக 11-07-1967- ல் ஆரம்பிக்கப்பட்டு  பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு சோதனைகளை எல்லாம் சாதனைகளாக்கி பல வளர்ச்சிகளைக் கண்டு இன்று சிறந்த கல்லூரியாக உருவாகி உள்ளது.
          இங்கு முதலில் ஒழுக்கம் அடுத்ததே கல்வி என கடைப்பிடிக்கப்படுகிறது.          
              முதலில் பெற்றோருக்கு மதிப்புக்கொடுங்கள். அடுத்து பெரியோர்களுக்கும்,ஆசிரியப் பெருமக்களையும் மதித்து நடந்தால் அதுவே கல்வியில் பாதி நிலை தாண்டியமைக்கு சமம்.                                     
          எனவே அனைவரும் நம்ம கிராமச் சூழலுக்கேற்றவாறு ஒழுக்கத்துடன் கல்வியையும் கற்று நீங்களும் முன்னேற வேண்டும், இந்த சமூகத்திற்கும் நல்ல பணியாற்ற வேண்டும்.  என்று உரையாற்றினார்.

          அடுத்து மரியாதைக்குரிய செயலர் மற்றும் தாளாளர் K.M..நடராஜன்.B.A.B.L.,.அவர்கள் தமது வாழ்த்துரையில்   
            கிராமப்பகுதியிலிருந்து வருகை தந்துள்ள அனைத்து மாணவச் செல்வங்கள் மற்றும் அவர்தம் பெற்றோர்கள் அனைவருக்கும் முதல் வணக்கம்.
             இக்கல்லூரி 46 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மிகச்சிறப்பான கல்லூரி
          .கிராமப்பகுதியைச் சார்ந்த ஏழைக் குடும்பத்தைச் சார்ந்த மாணவ,மாணவியரும் உயர் கல்வி பெற்று முன்னேற்றமடையும் பொருட்டு             கடந்த 43 ஆண்டுகளாக மிகக்குறைவான கட்டணத்தில் சிறப்பான உயர் கல்வியினை இங்குள்ள பேராசிரியப் பெருமக்கள் அன்புடனும் அதே சமயத்தில் நட்புடனும் ஒழுக்கம் நிறைந்த கல்வியினைக் கற்றுக் கொடுக்கின்றனர்.

          இந்த அரிய வாய்ப்பினை அனைத்து மாணவ,மாணவியரும் பயன்படுத்திக் கொண்டு தமது வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதோடு இந்த நாட்டின் முன்னேற்றத்திற்கும் சமூக சேவை அக்கறையோடு பாடுபட வேண்டும்.
          இக்கல்லூரியில் குற்றம் குறை இருந்தால் பெற்றோர்களாகிய நீங்கள் அவசியம் எங்களிடமோ அல்லது முதல்வரிடமோ இக்கல்லூரி சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருப்பினும் அவர்களிடம் சொல்லுங்கள்.
         கண்டிப்பாக குறைகள் களைந்தெறிய எந்நேரமும் இந்தக் கல்லூரி நிர்வாகம் தயாராக உள்ளது. என்று உரையாற்றினார்.

          அடுத்து உரையாற்றிய மரியாதைக்குரிய முதல்வர் DR.R..செல்லப்பன்.M.B.A.,M.COM.,M.PHIL.,D.L.L.P.hD,அவர்கள் தமது உரையில்
           1987-ல் தன்னாட்சி அனுமதி பெற்ற இக்கல்லூரியில் நடத்தப்படும் அனைத்து தேர்வுத்தாள்களையும் பிற மாவட்டங்களைச் சார்ந்த கல்லூரிப் பேராசிரியர்கள்தான் திருத்துவார்கள்.
          இன்னும் பல கட்டுப்பாடுகளைக் கொண்டது இக்கல்லூரி.
           எனவே இங்கு முறைப்படி அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு சரியாக நடைபெற்று வருகிறது.
           கடந்த ஆண்டு சிறந்த கல்லூரிக்கான முதல்வர் விருது எனக்குக்கொடுத்து கௌரவித்தது கல்வி மற்றும் மேலாண்மைக்கான பன்னாட்டு நிறுவனம்.

         அந்த விருது இங்கு சிறந்த முறையில் பணியாற்றிய அனைத்து பேராசிரியர்களின் ஒத்துழைப்பாலும் பிற அலுவலகப் பணியாளர்கள் மற்றும் இங்கு கல்வி கற்கும் அனைத்து மாணவச்செல்வங்களின் ஒத்துழைப்பாலும்தான் கிடைத்தது.

          எனவே, அவ்விருதினை இக்கல்லூரிக்கே ஒப்படைக்கிறேன் என்றார்.
        பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளுக்கு நடைபெறுவதைப் போல்
       கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இங்கு மட்டுமே கலந்தாய்வு  முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்
        .மேலும் இக்கல்லூரியில் மின் வெட்டு என்பதே கிடையாது என்ற வகையில் ஜெனரேட்டர் இயக்கப்படுகிறது.எனவே கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற பாடங்களுக்கு  மின் வெட்டுப் பிரச்சினையே கிடையாது.என்றார்.
            இங்கு உள் கட்டமைப்பு வசதிகள் மிகச் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளன.
         உணவு விடுதி  ஒரே சமயத்தில் 250 பேர் அமர்ந்து உணவருந்தும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
        தரமான சுகாதாரமான உணவு குறைந்த விலையில் தரப்படுகிறது.கிராமச் சூழலுக்கேற்றவாறு கலாச்சார சீர்கேடு ஏற்படாவண்ணம் ஒழுக்கத்திற்கும்,பண்பாட்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
         எனவே உடை அணிவதில் மிகவும் கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்படுகிறது.
         ஆண்கள் பேண்ட் மற்றும் சர்ட் மட்டுமே நாகரிகமாக அணிந்து வர வேண்டும்.
        பெண்கள் சுடிதார்-துப்பட்டா அல்லது சேலை அல்லது பாவாடை தாவணி மட்டுமே அணிந்து வர வேண்டும் . என்றார்.
       எக்காரணம் கொண்டும் மொபைல் போன் அனுமதி இக்கல்லூரி வளாகத்தினுள் இல்லை
         ,மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
      இதற்கு பெற்றோர்களாகிய நீங்கள் முழு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும் என்றார்.
        இக்கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவ,மாணவியரின் வருகைப்பதிவேடு, தேர்வு மதிப்பெண் விபரம் அன்றாடம் பெற்றோர்களின் மொபைல் போன் நெம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
      எனவே முடிந்தவரை ஒரே எண்ணைப் பயன்படுத்துங்கள்,அல்லது மாற்றப்பட்ட எண்ணை அவ்வப்போது கல்லூரிக்கு பெற்றோர்களாகிய நீங்கள் நேரடியாகத் தெரியப்படுத்துங்கள்,
     மேலும் அடிக்கடி கல்லூரிக்கு வருகை தந்து மாணவர்களின் செயல்பாடுகளைக் கேட்டறிந்தும் , இக்கல்லூரி செயல்பாடுகளைக் கேட்டறிந்தும் குறைகள் இருந்தால் தெரியப்படுத்தி நிர்வாகம் செம்மைபட உதவுங்கள் என்றார்.
                   பெற்றோர்கள் சாதி,மத வேறுபாடின்றி தாழ்வு மனப்பான்மை கொள்ளாமல் அடிக்கடி உரிமையோடு முதல்வரிடம் அணுகி மாணவர்களின் முன்னேற்றம் குறித்து விபரம் அறிந்து கொள்ளலாம். அதற்காக தாம் எப்போதும் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
             வன்பகடி எனப்படும் ராக்கிங்  இக்கல்லூரியில் நடைபெறுவதுமுழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
            எனவே முதலாம் ஆண்டு மாணவர்கள் எவ்வித பயமும் இன்றி நடமாடலாம் என்றும் மீறி யாராவது உடலையோ,மனதையோ சிறிதளவும் புண்படும்படி நடந்து கொள்வதாக உணர்ந்தால்
        உடனடியாக ஆங்காங்கு வைக்கப்பட்டுள்ள புகார்ப்பெட்டிகளில் அல்லது முதல்வர் அல்லது கல்லூரி பேராசிரியர்கள் அல்லது காவல்துறை அல்லது பெற்றோர் சங்க நிர்வாகிகள் என ஆங்காங்கு ஒட்ட வைத்துள்ள நோட்டீஸ்களில் கண்டுள்ள நபர்களின் மொபைல் எண்களுக்குத் தொடர்பு கொண்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
          அதேபோல் அரசுப் பேருந்துகளுக்கு இலவசப் பயண அட்டை கல்லூரி வளாகத்தினுள்ளேயே பெற்றுத்தரப்படுவதாலும்
         அனைத்துப் பேருந்துகளும் கல்லூரிக்குள்ளேயே வந்து செல்வதாலும் அனைவரும் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு
              இரு சக்கர வாகனப் பயணத்தினை முற்றாகத் தவிர்த்து படிப்பில் நன்கு ஈடுபாடு காட்டவேண்டும் என்றார்.
            அதேபோல் பேருந்தில் படிக்கட்டுப் பயணத்தினை முழுமையாகத் தவிர்த்து பாதுகாப்பான பயணத்தினை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
           இங்குள்ள நூலகம் மற்ற கல்லூரிகளை விட மிகச்சிறந்த முறையில் மிக அதிக எண்ணிக்கையில் புத்தகங்களும், அன்றாட உலக நடப்புகளை அறிந்து கொள்ளவும் ,பொது அறிவினை வளர்க்கும் விதமாக நூலகத்திற்கு அனைத்து தினசரி செய்தித்தாள்கள் மற்றும் வாராந்திர, மாதாந்திர  பத்திரிக்கைகள் வாங்கப்பட்டு வருகின்றன.
              அதேபோல கடந்த ஆண்டுகளின் அனைத்து பத்திரிக்கைகளும் பாதுகாக்கப்பட்டு வருவதால் கடந்த கால செய்திகளை உடனடியாகப் பெற்றுக்கொள்ளவும் முடியும்.
           வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொள்வது மாணவர்களுடைய பொறுப்பாகும்.என்றார்.
             உதவித்தொகை அரசு,மற்றும் கல்லூரி நிர்வாகம் மற்றும் பெற்றோர் சங்கம் மற்றும் முன்னாள் மாணவர் சங்கம் என பல தரப்பு களிலிருந்து  250க்கும் அதிகமான மாணவர்களுக்கு இலவசக் கல்வி வருடா வருடம் வழங்கப் பட்டு வருகிறது.
            எனவே அந்தச் சலுகையினையும் பெற மாணவர்கள் முயற்சி செய்து அதிக மதிப்பெண்கள் பெற்று பெற்றோர்களது நிதிச் சுமையினைக் குறைக்க வேண்டும் .என்றார்  ........     

         paramesdriver.blogspot.com

Tuesday, May 31, 2011


(20) குடும்பத்துடன் இன்ப சுற்றுலா

        சுற்றுலா  பயண தூரம்

                       சத்தி - திருப்பூர்     56 கி.மீ.                

                     திருப்பூர் -மதுரை    176 கி.மீ.
                                          
                     மதுரை -இராமேஸ்வரம்  176 கி.மீ.

                    மதுரை - திருச்செந்தூர்  200 கி.மீ.

                    மதுரை  -   திருநெல்வேலி  118 கி.மீ.

                  இராமேஸ்வரம் -திருச்செந்தூர்  300 கி.மீ.

                திருச்செந்தூர் -கன்யாகுமரி  118 கி.மீ.

               கன்யாகுமரி -  திருநெல்வேலி  101 கி.மீ.



அன்பு நண்பர்களே,வணக்கம்.

                             நமக்கு எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் நம்மையே நம்பி வீட்டில் அடைபட்டுக் கிடக்கும் மனைவி மற்றும் குழந்தைகளுக்காக நமது முன்னேற்றத்திற்காக அயராது பாடுபடும் அவர்களுக்கும் மன நிறைவினைக் கொடுக்கும் வகையில் வருடம் ஒருமுறையாவது நம் பொருளாதாரத்திற்கேற்றவாறு,சூழ்நிலைக்கேற்றவாறு ஒருநாள் முதல் அதற்கு மேல் உங்களது விருப்பத்திற்கேற்றவாறு சுற்றுலா அழைத்துச் செல்லலாம். நாங்கள் சென்ற சுற்றுலா விபரம்;

                               நான் பணிபுரியும் அரசு போக்குவரத்துக் கழகத்தில் எவ்வளவோ நெருக்கடிகள் உள்ளன. இருப்பினும் வருடம் இருமுறையாவது உள்ளூர் சுற்றுலாவாவது சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன்.
       அதேபோல இந்தமுறை திருச்செந்தூர்,கன்யாகுமரி செல்ல திட்டமிட்டோம். (எங்களது குடும்பத்தில் மூன்று நபர்,அண்ணன் மகள்,மருமகன்,பேத்தி என அவர்கள் மூன்று நபர்கள்,உறவினர் ஏழு நபர்கள் ஆக ஆண்கள் ஐந்து பேர்+ பெண்கள் ஆறு பேர்+சிறுமி ஒருவர் என பதிமூன்று பேர் ) அதன்படி 24-05-2011 செவ்வாய்க்கிழமை அன்று மாலை சத்தி பஸ்நிலையத்தில் 06.45மணிக்கு குடும்பத்துடன் தேவையான பொருட்களுடன் புறப்பட்டோம்.திருப்பூர் சென்று அங்கு எங்களது சுற்றத்தாரையும் சேர்த்துக்கொண்டு ஏற்கனவே முன்பதிவு செய்து வைத்திருந்த அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்தில்09.00(இரவு )மணிக்குப் புறப்பட்டோம்.திருப்பூரிலிருந்து திருச்செந்தூர் 25-05-2011 புதன்கிழமை அதிகாலை 05.00 மணிக்கு சென்றடைந்தோம். அங்கு அதிகக் கூட்டம் காரணமாக தங்க இடம் கிடைக்காத காரணத்தால் லாக்கரில் எங்களது பொருட்களையெல்லாம் வைத்துவிட்டு கடலில் நன்கு அதாவது இரண்டு மணி நேரம் எனது பேத்தி (மைதிலி) எட்டு வயது சிறுமி திருப்தி ஆகும் வரை ஆடிவிட்டு நாழிக்கிணறு சென்று அங்கு நல்லதண்ணீர்க் குளியல் கட்டணம் ரூ=01.00 நபருக்கு என்ற வீதத்தில் கொடுத்துக் குளித்தோம்.அங்கேயே துணிகளை மாற்றிக் கொண்டு கோவிலில் உள்ள வள்ளி குகையில் சாமி கும்பிட்டுவிட்டு கோவிலை சுற்றி வந்து வரிசையில் நின்று சுமார் இரண்டு மணி நேரம் காத்து முருகப் பெருமானைத் தரிசித்தோம்.அதன்பிறகு அங்கிருந்து கன்யாகுமரி செல்ல பேருந்து நேரம் விசாரித்து மதியம்12.25 மணிக்கு புறப்பட்ட பேருந்தில் பயணம் செய்தோம்.அப்பேருந்து கன்யாகுமரி பஸ்நிலையம் மாலை04.30 மணிக்குச் சென்றடைந்தது.பேருந்து நிலையத்தினுள்ளேயே உள்ள தங்கும் விடுதியில் ஆறாம் எண் அறை எடுத்தோம்.அங்குள்ள அனைத்து நபர்களும் எங்களுக்கு எல்லா உதவிகளையும் செய்து கொடுக்க எங்களுக்கு மிக உதவியாக இருந்தது.அடுத்த நாள்26-05-2011 அன்று காலை அங்கு தினசரி இயங்கும் அரசு போக்குவரத்துக் கழக ஒரு நாள் இயற்கையைக் கண்டுகளிக்கும் இன்பச்சுற்றுலா பேருந்தில் ஒரு நபருக்குக்கட்டணம் ரூ=200=00 வீதம் கொடுத்து பயணித்தோம்.அப்பேருந்தானது காலை 07-00 மணிக்கு தினசரி இயங்குகிறது.

Friday, May 13, 2011


(19) தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

    
                        தமிழ்நாடு அறிவியல் இயக்கம் _  ஈரோடு மாவட்டம்  

   அன்பு நண்பர்களே,வணக்கம்.
                   
                     தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக  தாளவாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட  கெத்தேசால் பகுதியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக புத்தக வாசிப்பு முகாம் 14,15 மற்றும் 16ந் தேதிகளில் மே மாதம் 2011-ல் நடைபெற்றது.அது சமயம் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியிலிருந்து கல்லூரிப் பேராசிரியர்கள்,பள்ளி ஆசிரியர்கள்,ஆசிரியைகள், மற்றும் சமூக ஆர்வலர்கள்,சமூக சேவை அமைப்புகள், காட்டுயிர் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் தன்னார்வலர் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் திரு நா.மணி பேராசிரியர்,ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அவர்கள் சிறப்பாக

            

Thursday, May 5, 2011

(18)வாகனம் ஓட்டும் கலை

               பாதுகாப்பாக, தற்காப்புடன் வாகனம்   ஓட்டுவது எப்படி?


அன்பு நண்பர்களே,வணக்கம்.

                   இணையத்திலும் சரி,வலைப்பதிவுகளிலும் சரி,

       வாகனம் ஓட்டுவது பற்றிய விழிப்புணர்வு, வாகனம் ஓட்டும்  கலை, பாதுகாப்பான பயணம் , போக்குவரத்துச் சின்னங்கள்,போன்ற மோட்டார் வாகனம் பற்றிய பதிவுகள்

           எளிமையாக,விளக்கமாக தமிழில் பதிவுகள் இல்லை என்றே தோன்றுகிறது.

         எனவே,எனது அனுபவங்கள், பிற அனுபவசாலிகள், ஓட்டுனர் பயிற்சிப்பள்ளிகள்,மற்றும் நான் சார்ந்துள்ள அரசு போக்குவரத்துக்கழக ஓட்டுனர் பயிற்சியாளர்கள்,மோட்டார் வாகன ஆய்வாளர்கள்,காவல் துறை அதிகாரிகள் 

          ஆகிய வாகனம் சம்பந்தப்பட்ட அனைத்து வகை நண்பர்களிடமும் அனைத்து விபரங்களும் முடிந்தவரை தகவல்கள் சேகரிக்கப்பட்டு சமூக நலன் கருதி கூடிய விரைவில் பதிவிடுகிறேன்.

             அதுவரை பொறுமை காக்க வேண்டுகிறேன். என,,,,,,,,,,

                  பரமேஸ் டிரைவர்-சத்தியமங்கலம்






முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...