28 செப்டம்பர் 2011

மாதங்களும் தாக்கும் நோய்களும்

ஜனவரி -  பிப்ரவரி           மாதங்கள்  பனிக்காலம்   என்பதால்   தோல்  பிரச்சனைகள்    ஏற்படும்.   குளிர்  அதிகமாக  இருப்பதால்  போதைப்  பார்ட்டிகளின்  மது  அளவும்  கூடும்,  இதனால்  நெஞ்செரிச்சல்,  தொண்டை வலி, ரத்த  அழுத்தம்  ஆகியவையும்  எட்டிபார்க்கும்.

முன்  எச்சரிக்கை :       நெஞ்சு  எரிச்சல்,  சுவாசத்தடை  ஆகியவை  வந்தால்...அதுவே  தொடர்ந்தால்... அதிகமாக  வலி  எடுத்தால்  அது  இதய  நோயின்  அறிகுறியாக  இருக்கலாம்.  உடனே ரத்த  பரிசோதனை  செய்து  கொள்வது  நல்லது.  உணவில்  உளுந்து,  கோதுமை  அதிகமாக  சேர்த்துக்கொள்ளவும்  அதோடு  பருப்பு, பயிறு,  கீரை  ஆகியவற்றையும்  சேர்த்துக்கொள்வது  நல்லது.  எண்ணெய்  குளியல்  உடல்  வெப்பத்தை  சீராக்கும்.  வெயில்  நம்  உடம்பில்  படுமாறும்  இருப்பது  நல்லது.

தவிர்க்க  வேண்டியவை :     குளிர்ந்த நீர்,  கூழ்  டிரிங்ஸ்,  பிரிஜ்ஜில்  வைத்த  உணவுகள்  ஆகியவற்றைத்  தொடவே  கூடாது.  அதே போல,  குளிர்ந்த  நீரில்  குளிப்பதும்  நல்லதல்ல.

மார்ச் -  ஏப்ரல்            மாதங்களில்  வெய்யிலின்  தாக்கம்  அதிகரிக்கும்.  இதனால் உடலில்  நீர்த்  தன்மை  வற்றிப் போகும்.  நமது  உடலில்  வெப்பத்தின் அளவும்  கூடும்.  வாந்தி,  வயிற்று போக்கு,  ஆஸ்துமா,  இருமல்,  பசியின்மை,  சளித்  தொல்லை,  அலர்ஜி,  தலைவலி  மற்றும்  வைரஸ்  நோய்கள்   நம்மை  தாக்கும்.

முன்  எச்சரிக்கை   :       ஆஸ்துமா  வந்தால்  கவனமாக  இருக்கவும்.  வந்த   தொடக்கத்திலேயே  அதை   கட்டுப்படுத்திவிடவும்.  இல்லாவிட்டால்  காய்ச்சல்  வந்து  நிமோனியாவாக   மாறிவிடும்.  பசியின்மை  ஏற்பட்டால்  சாதரணமாக  எடுத்துக்  கொள்ளாமல்   உடனே   டாக்டரை  அனுகுவது  நல்லது.  கீரை, பழவகை, சார்ந்த  உணவுகளை   அதிகமாக   சாப்பிடவும்.  அடிக்கடி  ஜீரணக்  குறைவு  ஏற்படும்  என்பதால்   சுக்கு, சீரகம்  கலந்த  நீரைக்  குடிக்கப்  பயன்படுத்தவும்.
                      
தவிர்க்க  வேண்டியவை  :   பகல்  தூக்கம்   ஆகவே  ஆகாது.  கொழுப்புள்ள   உணவை   அறவே  தவிர்க்கவும்.  அதுபோல்,  உளுந்து  சேர்த்த  உணவுகளை  சாப்பிட  வேண்டும்.

மே -  ஜூன்            மாதங்கள்  பருவக்காலம்  மாற்றம்  ஏற்படும் சமயம்.  வெயில்  உச்சத்தை  அடையும்.  இதனால்  அம்மை  நோய்,  கண்  தொடர்பான  நோய்கள்,  மஞ்சள்  காமாலை,  வாத  நோய்,  மூட்டு பிரச்சனைகள்  உடல்  சோர்வு   ஏற்படும்.  குழந்தைகள்  மண்ணில்  விளையாடுவதால்  அவர்களுக்கு  தோல்  சம்மந்தப்பட்ட  நோய்கள்  வரும்.

முன்  எச்சரிக்கை  :      அம்மை நோய்  மற்றும்  கண்   தொடர்பான   நோய்கள்  சீக்கிரமாகவே   அடுத்தவருக்கும்   பரவும்  என்பதால்  மிகவும்  கவனமாக   இருப்பது  நல்லது.  நமது  உடலை  சுத்தமாகவும், சுகாதாரமாகவும்   வைத்திருக்க  வேண்டும்.  பழங்களை  சாப்பிடும்  போது  சுத்தமான  நீரில்  நன்றாக  கழுவிய   பிறகு   சாப்பிடவும்.  இனிப்பான  உணவு,  பயறு,  உளுந்து,  காய்கறிகளை   அதிகமாக   சாப்பிடவும்.

தவிர்க்க வேண்டியவை  :   கடினமான உடற்பயிற்சிகள் செய்ய வேண்டாம்.  வெயில்  உடம்பில்,  தலையில்  படாமல்  இருப்பது  நல்லது.

ஜூலை - ஆகஸ்ட்           மாதங்கள்  சிக்கன்  கோனிய போன்ற  நோய்கள் வரும்  காலம்.  கண் நோய்,  பசியின்மை,  அலர்ஜி  ஆகிய  பிரச்சனைகளும்  ஏற்படும்.
               
முன்  எச்சரிக்கை  :            காய்ச்சல்,  கண்  நோய்  போன்ற  தொற்று  வியாதிகளின்    அறிகுறிகள்   தெரிந்தவுடன்  டாக்டரை  அனுகவும்.  அரிசி,  கோதுமை,  பயறு,  உளுந்து,  பச்சை  பட்டானி,  மசாலா  சேர்த்த  உணவுகளை  சாப்பிடலாம்.  குறிப்பாக  பயறு  கஞ்சி  நல்லது.

தவிர்க்க   வேண்டியவை :          மதிய  தூக்கம்   கூடாது.  அதிக  சூடான   உணவுகளை   சாப்பிட  வேண்டாம்.  வெயிலில்  அலையக்  கூடாது.  கொசு   கடிக்காமல்   கவனமாக  இருக்கவும்.  அலர்ஜி  உணவுகளை  தவிர்க்கவும்.  சுற்றுப்புறத்தை  சுத்தமாக  வைத்துக்கொள்வது   நல்லது.

செப்டம்பர் -  அக்டோபர்             மாதங்கள்   மழைக்காலம்   என்பதால்   ஜலதோசம்,  வயிற்று  நோய்கள்,  தலைவலி,  ஒற்றைத்  தலைவலி,  இதய நோய்,  வாத நோய்,  நெஞ்சு  எரிச்சல்,  பித்தம்  தொடர்பான  நோய்கள்,  கண் நோய்  ஆகியவை  தாக்கும்.

முன்  எச்சரிக்கை  :      இதயத்தில்   ஏதாவது  பிரச்சனை  என்றால்  உடனடியாக   டாக்டரிடம்  செல்லவேண்டும்.  டாக்டர்  ஆலோசனைப்படி  தேவையான   மருந்து,  மாத்திரைகளை   சாப்பிடவும்.  கண்களில்,  காதுகளில்  ஏதாவது  பிரச்சனைகள்  என்றாலும்  கவனமாக  இருக்கவும்.  பால்,  பால்வகை  பொருட்கள்,  முட்டை,  மீன்,  மாமிசம்   ஆகிய  உணவுகளை  சாப்பிடலாம்.

தவிர்க்க  வேண்டியவை  :      குளிர்ந்த  உணவு,  பகல்  தூக்கம்,  வெயிலில்  அலைவது  கூடவே  கூடாது.  அதே போல்  பெண்கள்  இந்த  காலங்களில்  விரதம்  இருப்பதை  தவிர்ப்பது  நல்லது.

நவம்பர் -   டிசம்பர்         மாதங்களில் மழையும்  பனியும்   சேர்ந்த  காலம்   என்பதால்  சுவாசத்தடை,  தும்மல்,  வயிற்றுக்  கோளாறு,  தோல்  நோய்  மற்றும்   குழந்தைகளுக்கு  பிரச்சனைகள்   ஆகியவை  ஏற்படும்.  குளிர்காலம்  என்பதால்  அதிகமாக  மது  குடிப்பவர்களுக்கு  அது  தொடர்பான  நோய்கள்  தாக்கும்.

முன்  எச்சரிக்கை :  ரத்த அழுத்தத்தை  கட்டுப்பாட்டோடு வைத்திருப்பது   நல்லது.  மது குடிப்பதை  தவிர்க்கவும்.  எண்ணெய்  உணவுகளை  ஓர்  அளவு  சாப்பிடலாம்.  எண்ணெய்  குளியல்  நல்லது.  உடலில்  வியர்வை  சொட்டும்  அளவிற்கு  உடற்பயற்சி  அவசியம்.  கெட்டியான  உணவுகளை  சாப்பிடவும்.  உடம்பில்  வெயில்  படுவது  நல்லது. 

தவிக்க   வேண்டியவை :   குளிர்ந்த  நீர்  மற்றும்  கூல்டிரிங்ஸ், ஐஸ்கிரீம்   ஆகியவற்றை  தவிர்க்கவும்.  இரவில்  குளிக்கக்  கூடாது.  பிரிட்ஜ்  உணவுகளை  தவிக்கவும்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...