20 ஆகஸ்ட் 2018

தாளவாடி தாலுக்கா சாம்பியன்ஷிப் செஸ்போட்டி பள்ளி மாணவ மாணவிகள் இடையே ந...

THALAVADI FACEBOOK FRIENDS MEETING-2018


தாளவாடி முகநூல் நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சி-2018



THALAVADI FACEBOOK FRIENDS MEETING

                                  தாளவாடி வட்டார அன்பு முகநூல் நண்பர்களே, வருகிற 2018ஆகஸ்டு 25 ஆம் தேதி அன்று காலை 10மணியளவில் நம்ம தாளவாடி பேருந்து நிலையத்தில் நடைபெறும் 2ஆம் ஆண்டு புத்தகக்கண்காட்சி அரங்கில் நடைபெறும் THALAVADI FACEBOOK FRIENDS MEETING என்னும் 'தாளவாடி முகநூல் நண்பர்கள் சந்திப்பு'  நிகழ்ச்சியில் பங்கேற்று மகிழ்வுரை வழங்க அனைவரும் வாங்க!
தொடர்புகொள்ள வேண்டிய எண்கள்;
(1)மணி தாளவாடி-9965700800
(2)பிரபு தாளவாடி- 6382227527
(3)பாலமுருகன் தாளவாடி - 9442819031
(4) கணேசன் தாளவாடி - 9047222642
(5)சுஹைல் அகமத் தாளவாடி-9442316608
(6)பரமேஸ்வரன் தாளவாடி-9585600733


படம் இதைக் கொண்டிருக்கலாம்: Ganeshkumar V, நிற்கிறார், மேகம், வானம், வெளிப்புறம் மற்றும் இயற்கை

THALAVADI CHESS ACADEMY










                               
                                 20-08-2018      THALAVADI CHESS ACADEMY
                    
                             தாளவாடி செஸ் அகாடமி-ஈரோடு மாவட்டம்.
                                     
                              தலைவர்
திரு.M.சுரேஷ்குமார் அவர்கள்,KCT MATRIC SCHOOL-

                   துணைத்தலைவர்
திரு.S.மரிய அருள் வியானி அவர்கள்,TRED

                  செயலாளர்
திரு.N.பிரபு அவர்கள்,
விடியல் இளைஞர் மன்றம்-தாளவாடி,

              இணை செயலாளர்,
திரு. K.தனசேகரன் அவர்கள்,
GOVT.HIGH SCHOOL-KUNNANPURAM,

               பொருளாளர்,
திரு.V. பாலமுருகன் அவர்கள்,

செயற்குழு உறுப்பினர்கள், - 
(1)திரு.C.பரமேஸ்வரன் அவர்கள்,
(2)திருS..சுஹைல் அகமத் அவர்கள்,
(3)திரு.K.செந்தூர் அவர்கள்,
(4)திரு.T.V.ஆனந்த நாராயணன் அவர்கள்,
(5)திரு.S. தென்னரசு அவர்கள் ,GOVT.HIGHER SECONDARY SCHOOL-THALAVADI,
(6)திரு.S. கணேசன் அவர்கள்,PRESS THALAVADI
(7)திருமதி.R.சங்கீதா அவர்கள்,KCT MATRICULATION SCHOOL,
தொடர்புக்கு; 
 C .பரமேஸ்வரன் - 9585600733

THALAVADI TALUK CHESS CHAMPIONSHIP TOUNAMENT-2018

 தாளவாடி தாலுக்கா சாம்பியன்ஷிப்-முதலாம் ஆண்டு செஸ் போட்டி-2018

                                       20-08-2018திங்கட்கிழமை
                                    தாளவாடி தாலுக்கா அனைத்து பள்ளிகளின் மாணவ,மாணவிகளுக்காக இன்று KCT MATRICULATION பள்ளியில் செஸ் போட்டி சிறப்பாக நடைபெற்றது.திரு.சுரேஷ்குமார் அவர்கள், தாளாளர் ,கேசிடி மெட்ரிக் பள்ளி தலைமை ஏற்க ,திரு.வியானி அவர்கள் முன்னிலை வகித்தார்.திரு.க.பெருமாள் அவர்கள்,(வட்டார வளர்ச்சி அலுவலர் தாளவாடி)முதன்மை விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார்.திரு.கணேசன் உட்பட திரு.ஆனந்தநாராயணன் அவர்கள்,திரு.சுஹைல் அகமது அவர்கள்,திரு.நா.பிரபு அவர்கள்,திரு.செந்தூர் அவர்கள்,திரு.பாலமுருகன் அவர்கள்,உட்பட சமூக ஆர்வலர்களும்,அனைத்து பள்ளிகளின் பொறுப்பாசிரியர்களும் கலந்துகொண்டு செஸ்போட்டியின் நடுவர்களாக பணியாற்றி சிறப்பித்தனர். (1)மரியதீப்தி மெட்ரிகுலேசன் பள்ளி,பனகஹள்ளி,(2)அரசு மேல்நிலைப் பள்ளி,பனகஹள்ளி,(3)அரசு உயர்நிலைப்பள்ளி-திகினாரை,(4)புனித அன்னாள் உயர்நிலைப் பள்ளி-திகினாரை,(5)அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி-மல்லன்குழி,(6)அரசு உயர்நிலைப்பள்ளி-குன்னன்புரம்,(7)புனித ஜோசப்ஸ் மேல்நிலைப் பள்ளி-சூசைபுரம்,(8)தொன்போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி-தொட்டகாஜனூர்,(9)அரசு மேல்நிலைப் பள்ளி-தாளவாடி,(10)ஜ.எஸ்.எஸ்.மெட்ரிகுலேசன் பள்ளி-தாளவாடி,(11)கேசிடி மெட்ரிகுலேசன் பள்ளி-ராமாபுரம் ஆகிய பள்ளிகளைச்சேர்ந்த 150 மாணவ,மாணவியர் மிக இளையோர் பிரிவு,இளையோர் பிரிவு,மூத்தோர் பிரிவு என மூன்று நிலைகளில் பங்கேற்று விளையாடி சிறப்பித்தனர். ஏழு அடுக்குகளாக நடைபெற்ற தாளவாடி தாலுக்கா சாம்பியன்ஷிப்-செஸ்போட்டி நிறைவில்
(அ)மிக இளையோர் பிரிவின் முதல்நிலைசாம்பியனாக ,
R.MEGA எட்டாம் வகுப்பு ,
அரசு மேல்நிலைப்பள்ளி-தாளவாடி
2-ஆம் நிலை சாம்பியனாக
J.FAVVS AHAMMED எட்டாம் வகுப்பு,
கேசிடி மெட்ரிக் பள்ளி,
(ஆ)இளையோர் பிரிவில்
முதல்நிலை சாம்பியனாக
S.SHIVA KUMAR பத்தாம் வகுப்பு,
அரசு மேல்நிலைப்பள்ளி-பனகஹள்ளி,
2ஆம் நிலை சாம்பியனாக IMMAN KHAN ஜே.எஸ்.எஸ்.மெட்ரிக் பள்ளி,தாளவாடி,
(இ) மூத்தோர் பிரிவில்
முதல்நிலை சாம்பியனாக
A.GOWTHAM பன்னிரண்டாம் வகுப்பு,
அரசு மேல்நிலைப் பள்ளி -தாளவாடி,
2ஆம் நிலை சாம்பியனாக
D.JOTHI பன்னிரண்டாம் வகுப்பு,
அரசு மேல்நிலைப் பள்ளி- பனகஹள்ளி
ஆகிய மாணவ,மாணவிகள் வெற்றி பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு வெற்றிக்கேடயமும்,பங்கேற்ற மாணவ,மாணவியர் உட்பட அனைத்து பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் சான்றிதழ்களும்,வருகிற2018ஆகஸ்டு 24ஆம் தேதி தொடங்கவுள்ள 2ஆம் ஆண்டு மூன்று நாள் புத்தகக்காட்சி தொடக்கவிழாவின்போது தாளவாடியில் வழங்கி சிறப்பிக்கப்படும்.

இன்று 20-08-2018 (திங்கட்கிழமை) மாலை KCT MATRIC பள்ளியில் நடைபெற்ற நடைபெற்ற பரிசீலனைக்கூட்டத்தில்
திரு. எம்.சுரேஷ்குமார் அவர்கள்,திரு.நா.பிரபு அவர்கள்,திரு.கா.தனசேகரன் அவர்கள்,திரு.எஸ்.சுஹைல் அகமத் அவர்கள்,திரு.கே.செந்தூர் அவர்கள்,திரு.டி.வி.ஆனந்த நாராயணன் அவர்கள்,திரு.வி.பாலமுருகன் அவர்கள்,திரு.சி.பரமேஸ்வரன் அவர்கள்,திருமதி,ஆர்.சங்கீதா அவர்கள் கலந்துகொண்டனர்.அது சமயம்,
(1)திட்டமிட்டபடி செயல்பாடும்,நேர நிர்வாகமும்,சரியாக கடைப்பிடிக்கவேண்டும்.
(2)முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் அவர்களிடம் முன்னதாக அனுமதி கடிதம் வழங்கப்பட வேண்டும்.
(3)அனைத்து பள்ளிகளுக்கும் செஸ்விளையாட்டு பயிற்சியளிக்க வேண்டும்,(4)பெயர் பதிவு செய்யப்பட்ட மாணவக்குழந்தைகள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்க வேண்டும்,
(5)பங்கேற்ற அனைவரின் பெயர்,முகவரி,பணி விபரத்துடன் தொடர்பு எண்களையும் பதிவிட்டு கையொப்பம் பெற வேண்டும்.(6)
பங்கேற்பாளர் உட்பட அனைத்து மாணவ,மாணவியருக்கு மதிய உணவு வழங்கப்பட வேண்டும்,(7)தாளவாடி செஸ் அகாடமி உடனடியாக தொடங்கப்பட வேண்டும்.(8)மாவட்ட,மாநில சதூரங்கக்கழகத்துடன் இணைக்கப்பட வேண்டும்.(9)ஆண்டுதோறும் மூன்று பேட்டிகளாவது நடத்த வேண்டும்,(10)செஸ் போட்டிகளின்போது திறமையுள்ள மாணவ,மாணவிகளை கண்டறிந்து நன்றாக பயிற்சியளிக்க வேண்டும்.(11)செஸ் பயிற்சிகளுக்கான புத்தகங்கள் போன்ற மூல ஆதாரங்களை சேகரித்து பயன்படுத்த வேண்டும்.
(12)நிதியுதவி செய்வோர் பட்டியலை உருவாக்குவதுடன்,செலவினங்களுக்கான நிதி ஆதாரங்களை திரட்ட வேண்டும்.
(13)செஸ் போட்டிகளில் வென்ற மாணவ,மாணவியருக்கு சான்றிதழ்களுடன் எளிமையான கேடயங்கள் மட்டும் வெற்றிப்பரிசாக வழங்கி மீதம் குறிப்பிட்ட தொகையாக வழங்கி உதவ வேண்டும்.உள்ளிட்ட பல தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.முடிவில் ,
'தாளவாடி செஸ் அகாடமி' (THALAVADI CHESS ACADEMY ) என்ற பெயரில் தாளவாடி சதுரங்க விளையாட்டு அமைப்பு தொடங்கப்பட்டது.
தொடர்புக்கு; சி.பரமேஸ்வரன்,9585600733

16 ஆகஸ்ட் 2018

karattur sathy-வெள்ளப்பெருக்கு-2018



அன்பான சத்தி கரட்டூர் மக்களே நம்ம உறவுகளுக்கு உதவுங்க!
  15-08-2018 நேற்று (50,000கன அடி தண்ணீர்)பவானிசாகர் ஆற்றில் அதிகப்படியான தண்ணீரை திறந்துவிட்டதால் எங்க கரட்டூரின் ஒருபகுதியான ஜே.ஜே.நகர் முழுவதும் வெள்ளம் சூழ்ந்ததால் அங்குள்ள மக்கள் அனைவரும் கட்டிய துணியோடு எந்தப்பொருட்களையும் எடுக்கமுடியாமல் தற்போது கரட்டூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் கண்ணீரும்,கம்பலையுமாக தவித்த காட்சி என்னை நிலைகுலையவைத்துவிட்டது.கரட்டூர் நண்பர்கள் அனைவரும் கட்சி வேறுபாடில்லாமல் நிதியும்,உணவுப்பொருட்களும் சேகரித்து வழங்கி வருகின்றனர்.எனது சகோதரரும் நானும் சேர்ந்து தற்போதைக்கு ரூபாய் இரண்டாயிரம் நிதி வழங்கி உதவினேன்.
  வெள்ளப்பாதிப்பால் துன்பப்படும் மக்களைப்  பார்க்கவே கடும் வேதனையாக உள்ளது.


14 ஆகஸ்ட் 2018

CHESS TOURNMENT @ THALAVADI -2018

தாளவாடி தாலுக்கா சாம்பியன்ஷிப் - முதலாம் ஆண்டு செஸ்போட்டி. 
மரியாதைக்குரிய சான்றோர்களே,
 வணக்கம்.
        இன்று காலை  (14-08-2018 செவ்வாய்க்கிழமை)  சத்தியமங்கலத்திலிருந்து 7 மணிக்கு புறப்பட்டு தாளவாடிக்கு காலை 9மணிக்கு சென்றடைந்தேன். பிறகு திரு.N.பிரபு அவர்களுடன் இருசக்கரவாகனத்தில் தாளவாடி வட்டார அனைத்து பள்ளிகளுக்கும் பயணித்தோம்.செஸ்போட்டி நடத்தும் பொறுப்பேற்றுள்ள KCT மெட்ரிகுலேசன் பள்ளிக்கு சென்றோம்.சிறப்பான உபசரிப்பினை ஏற்றுக்கொண்டு சிற்றுண்டி முடித்துவிட்டு 17-08-2018, THALAVADI TALUK CHAMPIONSHIP முதலாம் ஆண்டு செஸ் போட்டிக்கான மாணவர்களின் விபரங்களை அனைத்து பள்ளிகளிலும் சேகரித்தோம்.தாளவாடி வட்டார பழங்கால எழுத்தாளர்கள் மற்றும் சமகால எழுத்தாளர்கள் பற்றிய விபரங்களையும் சேகரித்தோம்.
(1)J.S.S.MATRIC SCHOOL,
(2)KCT MATRIC SCHOOL,
(3)MARIADEEPTHI MATRIC SCHOOL,
(4)DONBOSCO MAT.Hr.Sec.School,
(5)அரசு உயர்நிலைப்பள்ளி திகினாரை,
(6)புனித அன்னாள் உயர்நிலைப்பள்ளி திகினாரை,

(7)ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தாளவாடி,
(8)அரசு மேல்நிலைப் பள்ளி பனகஹள்ளி,
(9)அரசு உயர்நிலைப் பள்ளி குன்னன்புரம்(கெட்டவாடி),
(10)அரசு மேல்நிலைப் பள்ளி தாளவாடி,
(11)ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி காஜனூர்,

(12)புனித ஜோசப்ஸ் மேல்நிலைப் பள்ளி சூசைபுரம்,
(13)ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பாரதிபுரம்,
(14)அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி-மல்லன்குழி -
என பெரும்பாலான பள்ளிகளுக்கு சென்று 

                       மாணவ,மாணவியர்களின் பெயர்விபரங்களைப்பெற்றுக் கொண்டு அனைத்தையும் தொகுத்து திரு.T.V.ஆனந்தநாராயணன் வசம் ஒப்படைத்துவிட்டு,திரு K.பெருமாள் , வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களை சந்தித்து அய்யா அவர்களிடமும் அனுமதி பெற்றோம்.பிறகு தாளவாடி வட்டார கல்வி அலுவலகம் சென்றோம்,அதிகாரிகள் பள்ளி ஆய்வுக்காக வெளியில் சென்றுவிட்டதால் அலுவலகத்தில் புத்தகக்கண்காட்சி நோட்டீஸ்களை வைத்தோம்.பிறகு அனைவருக்கும் கல்வி இயக்கம் அலுவலகம் சென்றோம் .மேற்பார்வையாளர் அவர்கள் அலுவல் வேலையாக ஈரோடு சென்றுவிட்டதாக தகவலறிந்து அங்கிருந்த ஆசிரியப்பெருமக்களிடம் புத்தகக்கண்காட்சி பற்றிய விபரத்தினை கூறிவிட்டு அருகிலுள்ள மாற்றுத்திறனாளிகள் பள்ளிக்கு சென்று நோட்டீஸ்களையும் கொடுத்தோம்.பிறகு மதிய உணவுக்காக தாளவாடி ஜெயராஜ் அவர்கள் ஓட்டலில் இருவரும் நன்றாக சாப்பிட்டுவிட்டு! சாப்பிட்டதற்கான தொகையினை கொடுத்தபோது? ஏற்கனவே
 CID POLICE திரு.கந்தவேல் அய்யா  
         அவர்கள் எங்களுக்கான தொகையினை கொடுத்துவிட்டு சென்றுவிட்டதாக அறிந்து அப்படியே அதிர்ச்சியடைந்தோம்.உடனே பிரபுவிடம் சொல்லி காவலர் கந்தவேல் அய்யா அவர்களுக்கு போன் செய்யக் கூறினேன்.பிரபு அவர்களும் போனில் தொடர்பு கொண்டபோது தாளவாடி வட்டார மக்களுக்காக உழைக்கும் உங்களுக்கு தன்னால் ஆன சிறு உதவி என்று பதிலுரைத்துவிட்டு தொடர்பை துண்டித்துவிட்டார்.கிடைத்ததை ஏற்றுக்கொள்வோம் என சமாதானமடைந்துவிட்டு, தாளவாடி வணிகர் சங்க தலைவர் திரு.G.R.வெங்கடேஷ் அய்யா அவர்களை சந்தித்தோம்.பல பயனுள்ள தகவல்களை பரிமாற்றம் செய்துகொண்ட திருப்தியோடு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் தாளவாடி கிளைக்கு சென்று கிளை மேலாளர் அவர்களை சந்தித்து புத்தகக்கண்காட்சிக்கு அழைப்பு விடுத்தோம்.பின்னர் தொன்போஸ்கோ இல்லம் சென்றோம்.அங்கு அருட்தந்தை அவர்களை சந்தித்து மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு,உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சிக்கு இடம் கேட்டு அனுமதி பெற்றோம்.இரண்டு அரசு பள்ளிகளில் நாளைய சுதந்திர தினத்திற்கு சிறப்பு விருந்தினராக எனக்கு அழைப்பு கிடைக்கப்பெற்றேன்.எனது பணிச்சூழல் காரணமாக நாளைய சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்க இயலாது! என்பதை பணிவோடு தெரிவித்துவிட்டு நாளை தாளவாடி சென்று பணிக்கு செல்லவேண்டும் என மன அமைதி அடைந்தேன்.

07 ஆகஸ்ட் 2018

படமெடுக்கப்போறீங்களா?




1.     காட்சியியல் ஆழம்:
படத்தில் காட்சிகளில் உள்ள அனைத்து Depth-ம் ஒரு மாயை என்பதை நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கலாம். நாம் இயல்பு வாழ்க்கையில் ஒரு காட்சியைப் பார்க்கிறோம். நம் கண்களிலிருந்து பார்க்கிறபொழுது, நாம் எதில் கவனம் செலுத்திப் பார்க்கிறோமோ அது துல்லியமாகவும், அதற்குப் பிந்தைய பகுதியும், முந்தைய பகுதியில் உள்ள பொருட்களும் மங்கலாகக் காட்சிதரும். அதுவே கேமராவில் படம்பிடிக்கிறபொழுதும் கடைப்பிடிக்கப் படுகிறது. அதாவது தட்டையான ஒரு பிம்பத்தில் முப்பரிமாணத் தோற்றத்தைக் கொண்டுவருவதற்காக Depth-ஐ பயன்படுத்துகிறோம். இது காட்சியில் ஒரு வசீகரத்தையும், பார்வையாளர்கள் எதைக் கவனிக்க வேண்டும் என்ற சமிக்ஞைகளையும் கொடுக்கிறது.

கதை சொல்லலில் இதை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே இதன் பலன் தெரியும். காட்சியில் ஆழத்தை அதிகரிக்க பல வழிகள் உள்ளன. மேலும் நீங்கள் ஒளிப்பதிவு நுட்பங்களை அடுத்த நிலைக்கு நகர்த்த விரும்பினால்,  இதுபோன்ற சில தந்திரங்களை நீங்கள் கைக்கொள்ள வேண்டும்.
Best Cinematography Techniques and TIps - The Depth Of Field Is Toyed With To Emphasize The Impact Of The Moment Of Terror In Jaws
’Jaws’ படத்தில், பயங்கரவாதத்தின் தாக்கத்தை வலியுறுத்த ‘Depth of field’-உடன் சிறு கேமரா அசைவும் பயன்படுத்தப்படுகிறது. இது ‘Dolly zoom’ எனப்படும்.

2.     போஸ்ட் புரொடக்‌ஷனில் பார்த்துக்கொள்ளலாம் என எதையும் ஒத்திப்போடாதீர்கள்:
சரி, இந்த வார்த்தைகளை நீங்கள் சொல்லலாம். சில நேரங்களில் இப்படிச் சொல்வது உங்களுக்கே கூட வேடிக்கையாக இருக்கும். தவிர்க்கமுடியாத பட்சத்தில்  இது பயன்பாட்டிற்கு வருகிறது. போஸ்ட் புரொடக்‌ஷனில் பார்த்துக்கொள்ளலாம், எடிட்டிங்கில் சரி செய்துவிடலாம், கலர் கரெக்‌ஷனில் பார்த்துக்கொள்வோம் என்று ஒவ்வொரு காட்சியின் தரத்திலும் நீங்கள் சமரசம் செய்துகொண்டே வருவது நல்லதல்ல.
போஸ்ட் புரொடக்‌ஷனுக்கு ஒத்திப்போடும் மனநிலையைச் சார்ந்திருப்பதைத் தவிர்த்திடுங்கள்.
சிறந்த ஒளிப்பதிவு என்பது படப்பிடிப்புத் தளத்திலிருந்தும், லைட்டிங்கிலிருந்துமே உருவாகிறது. மாறாக, போஸ்ட் புரொடக்‌ஷனில் பயன்படுத்துகிற மென்பொருளிலிருந்து அல்ல. ஒளிப்பதிவு நுட்பங்கள் என்ற பட்டியலில் போஸ்ட் புரொடக்‌ஷனைக் கொண்டுவர முடியாது. நீங்கள் செய்திருக்கிற ஒளிப்பதிவு சிறப்பான முறையில் தோற்றம் தருவதற்கு அதனை ஒரு ஆதாரமாக வேண்டுமானால் பயன்படுத்திக்கொள்ளலாம்.
மேலும், படப்பிடிப்புத்தளத்தில் எதை உங்களால் இயல்பாக உருவாக்க முடியவில்லையோ, அதனை போஸ்ட் புரொடக்‌ஷனில் மறுஉருவாக்க அதிக பணமும், நேரமும் செலவாகும். இதைத்தவிர்க்க,  படப்பிடிப்பைக் கவனமாகத் திட்டமிட வேண்டும் என்று அர்த்தம், ஒரு திறமையான ஷாட் லிஸ்டை உருவாக்குவது சரியான காட்சியை, ஷாட்டை ஆராய்ந்து கண்டுபிடிப்பதற்கு உங்களுக்கு போதிய நேரம் கிடைக்கும் என்பதை உறுதி செய்யும். அல்லது படப்பிடிப்பில் போதிய நேரம் கிடைக்கும் என்பதை நம்ப முடியாது. நான் இன்னும் துரிதமாக வேலை செய்ய வேண்டும் என்று நினைத்தால், ஸ்டோரி போர்டை உருவாக்கிக்கொள்ளுங்கள்.
இதற்கு நீங்கள் திரைப்பட முன் தயாரிப்பில் அதிக நேரத்தை செலவிட வேண்டும். இதனால், படப்பிடிப்பில் ஒரு காட்சிக்காக மண்டையை உடைத்துக்கொள்ளும் நேரம் குறைக்கப்படுகிறது. ஒரு படம் எப்படி வரவேண்டும் என்பதையே கூட ஸ்டோரிபோர்டின் மூலம் உருவாக்க முடியும். பின்னர் அதற்கே கூட சில மென்பொருட்கள் வந்திருக்கின்றன. அதைப் பயன்படுத்தியும் ஒரு திரைப்படத்தின் காட்சியமைப்புகளை படப்பிடிப்புத் தளத்திற்குச் செல்வதற்கு முன்னரே உங்களால் உருவாக்கிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஸ்டோரிபோர்டில் காட்சி பார்ப்பதற்கு நன்றாக இருந்தால், படப்பிடிப்புத் தளத்தில் அது உருவாக்கப்பட்டு திரையில் பார்க்கும்பொழுதும் நன்றாகவே இருக்கும். ஒரு காட்சியின் முன் மாதிரியைத்தான் நாம் ஸ்டோரிபோர்டில் உருவாக்குகிறோம்.
ஒளிப்பதிவு நுட்பங்களில் உங்களின் நிபுணத்துவத்திற்காக நீங்கள் பணியமர்த்தப்பட்டுள்ளீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தயாரிப்பாளரின் பணத்தை நீங்கள் விரயம் செய்யாமலிருக்கும்பொழுது, அவர் உங்களை நேசிக்கத் துவங்குகிறார். ஆனால், போஸ்ட் புரொடக்‌ஷனில் குறைபாடுகளைத் திருத்துவதற்கு அதிகமான பணம் வசூலிக்கப்படுகிறது. வேறு வழிகள் இல்லாத பட்சத்தில் வேண்டுமானால் இதன் உதவிகளை நாடலாம்.

3.     சரியான குழுவை உடன் வைத்திருங்கள்:
படப்பிடிப்புத் தளத்தில் அதிகமான அனுபவம் பெற்ற மனிதராக நீங்கள் இருக்கவேண்டிய அவசியமில்லை… ஏனென்றால், மற்றொரு அதி அனுபவசாலியான மனிதர் உங்கள் படத்திற்காக வேலை செய்ய வந்திருக்கலாம். திரைப்படத்துறையின் பல்லாண்டுகால பழுத்த அனுபவம் வாய்ந்த அந்நபரை நீங்கள் உடன் வேலை செய்ய அழைத்திருக்கலாம். அதன்படி படப்பிடிப்புத்தளத்தில் உங்களுடன் வேலை செய்கிறார்.
ஆனால், நீங்களோ படப்பிடிப்புத் தளம் என்ற சூழ்நிலைக்கே முற்றிலும் புதியவர். என்ன செய்யப்போகிறோம்? எப்படி இந்தக் குழுவைச் சமாளிக்கப்போகிறோம்? எப்படி வேலை வாங்கப்போகிறோம்? போன்ற பல்வாறான பதட்டங்கள் எழுவது இயற்கையே. சினிமா என்பது குழு முயற்சியால் உருவாகிற ஒன்று. அதன்படியே உங்களுக்கும் ஒரு குழு கொடுக்கப்படுகிறது. நீங்கள் திறமையானவராக இருந்தாலும், படப்பிடிப்பு என்ற அனுபவம் உங்களுக்கு இல்லாமலிருப்பதே இப்போதைய ஒரு குறையாக இருக்கிறது. உங்களுக்குத்தான் அந்த அனுபவம் இல்லையே தவிர, உங்களுடன் இருப்பவர்கள் அந்த அனுபவத்தில் ஊறித்திளைத்தவர்கள். பின்பு எதற்காகக் கவலைப்பட வேண்டும்?
ஏதாவது ஒரு சிக்கல் நேர்ந்தால், சந்தேகங்கள் எழுந்தால் அந்த அனுபவசாலிகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் எல்லாவற்றையுமே சொந்தமாகக் கண்டுணர நேரம் கடத்தவேண்டியதில்லை.
ஒன்றை மட்டும் நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
படப்பிடிப்புத் தளத்திற்குள் நுழைவதற்கு முன், வாசலிலேயே உங்கள் ஈகோ-வை உதறிவிட்டு வாருங்கள்.
யார் சொல்கிறார்கள் என்பதும், அவர் எப்படி நமக்கு அறிவுரை சொல்லலாம்? என்பதையும் விட அவர் சொல்கிற பொருளில் உண்மையுள்ளதா? என்பதைப் பாருங்கள். அது சரியெனில் ஏற்றுக்கொள்ளவும், இல்லையெனில் மறுக்கவும் உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், அந்த யோசனையை முற்றிலும் புறக்கணிக்க வேண்டாம்.
அந்த மனநிலையை அடைவதற்கு உங்களிடம் தன்முனைப்பு என்ற நிலை இருக்கக்கூடாது.
4.     உங்கள் குழுவை வழிநடத்துங்கள்
திரைப்பட உருவாக்கத்தைப் பொறுத்தவரை மிக முக்கியமான குறிப்பு என்பது சினிமா தொழில்நுட்பங்கள் பற்றியதல்ல, மனிதர்களை எப்படிப் பயன்படுத்துகிறோம், மக்கள் திறனை எப்படிக் கட்டுப்படித்தி வேலை வாங்குகிறோம் என்பதுதான்.
சிறந்த குழுவை நிர்வகிப்பதன் மூலம் தெளிவான, விரைவான முடிவுகளை உடனடியாக எடுக்க முடியும். நீங்கள் அவர்களுக்கு எவ்வளவு வேலைகளை உருவாக்குகிறீர்கள் என்பதில் விழிப்போடு இருக்க வேண்டும்.
குழுவினர் பெரும்பாலும் வேலை செய்வதை மகிழ்ச்சியாகத்தான் உணர்வார்கள். ஒரு ஷாட் தயாராகிக்கொண்டிருக்கும்பொழுது, குழுவில் உள்ளவர்கள் உதாரணத்திற்கு லைட் மேனின் உதவி கூட மிகவும் முக்கியமானது. அவரும் ஆரம்பத்தில் சொன்ன இடத்தில் ஊக்கத்தோடு விளக்கைக் கொண்டுபோய் வைப்பார். ஆனால், ஒளிப்பதிவாளர்களுக்கு ஒரு பதினைந்து நிமிடங்கள் கழித்து அந்தக் கோணம் திருப்தியில்லாமல் போகும். எனவே லைட் இருந்த இடத்தை மாற்ற வேண்டும். இப்போது லைட் மேன் இடம் மாறுவார். இப்படியே தொடர்ந்து நடக்கிறபோதுதான் வேலையின் மீது ஒரு அலுப்பு உண்டாகிறது. எனவே, ஒளிப்பதிவாளராகிய உங்களுக்கும் தெளிவாக அன்றைக்கு எந்த ஷாட், எந்தக் கோணத்தில் எப்படிப் படமாக்கப் போகிறோம் என்று தெரிந்திருக்க வேண்டும். உடன் வேலை செய்பவர்களை மரியாதையாக  நடத்த வேண்டும். பொறுப்பான தலைவராக இருங்கள். தவறுகள் நடந்தால்கூட அதற்கான பழியை எப்போதும் அடுத்தவர்கள் மீது திருப்புவதையே குறிக்கோளாய்க் கொண்டிருக்காதீர்கள்.
திறமையான ஒளிப்பதிவாளர்கள், குழுவினரின் கண்களுக்கு சிறந்த ஒளிப்பதிவாளர்களே. ஏனென்றால், நல்ல ஒளிப்பதிவு என்பது, வேகமாக படப்பிடிப்புத் தளத்தை காட்சிக்குத் தயாராக அமைப்பது, அதற்குரிய நேரத்திற்குள் அந்த ஷாட்டை முடித்துவிடுவது.
StudioBinder போன்ற வசதிகளைப் பயன்படுத்தி யாருடன் வேலை செய்ய வேண்டும்?, என்ன வேலை? போன்ற அட்டவணைகளை உருவாக்க முடியும்.
நீங்கள் எவரையும் இழக்கவோ, மறந்துவிடவோ வாய்ப்பில்லை.
உங்கள் குழுவை நிர்வகிப்பதும், பயன்படுத்துவதும் கூட நல்ல ஒளிப்பதிவு உத்திகள் ஆகும்.

5.     எப்போதும் தயாராக இருங்கள்:
ஒருவேளை நீங்கள் ஒளிப்பதிவாளரின் வேலை படப்பிடிப்புத்தளத்தில் என்ன? என்பதைப் பற்றி சிலவற்றை அறிந்ததோடு, திரைப்படக் கல்லூரிகளிலிருந்து வெளியேறியிருக்கலாம்.
ஆச்சரியம்!
ஆனால், அது எப்போதும் அதன் பாதையிலேயே இருக்காது.
சில வேலைகளில் நீங்கள் சொந்தமாகப் பணியாற்ற வேண்டும். மின்சார சாதனங்களை இயக்குதல், இறுகப் பிடித்துக்கொள்ளுதல்…. தயாரிப்பு வடிவமைப்பாளர் என்று இந்தப் பட்டியல் இன்னும் நீளும்.
ஆக, நீங்கள் திரைப்படக் கல்லூரிகளில் இதுதான் ஒளிப்பதிவாளரின் வேலை என்று வரையறுத்துக்கொண்டதெல்லாமே, உதவாததாகிறது. படப்பிடிப்புத் தளத்தில் அனைத்து வேலைகளையும் நீங்கள் செய்திருக்கிற அனுபவம் இல்லாவிட்டாலும், அதெல்லாம் என்னென்ன வேலைகள் என்பதைப் பற்றிய புரிதல் உங்களிடத்தில் இருக்க வேண்டும்.
நீங்கள் வந்துதான் பூர்த்தி செய்யவேண்டும் என்ற கட்டாயம் இந்த வேலைகளில் இல்லை. யாரும் இதை உங்களிடம் நிர்ப்பந்திக்கப்போவதும் இல்லை.
ஆனால், இந்தச் செய்கைகளின் மூலம் எல்லோருடைய வேலைகளையும் உங்களால் புரிந்துகொள்ளவும், மதிக்கவும் முடியும்.
முடி மற்றும் மேக்கப் போடுவதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறது என்பதைத் தெரிந்துகொள்வது முக்கியம். படப்பிடிப்புத்தளத்தில் தங்குதடையில்லாமல் நீரோட்டம் போல வேலைகள் தொடர்ந்து நடக்க வேண்டுமானால், நீங்கள் அங்கு வேலை செய்கிற அனைவருடனும் ஒத்திசைந்து பழக வேண்டும்.
அதைத் தவிர்த்து நீங்கள் ஒரு தீவு போலச் செயல்படுவது சிறந்ததல்ல.
எனவே, படப்பிடிப்பின் முழு செயல்முறையையும் தெரிந்துகொள்ளுங்கள்.
ஆள் இல்லாதபொழுது, அதனை நிரப்பவும் தயாராகயிருங்கள்.

6.     விலையுயர்ந்த கேமராவால் மட்டுமே நல்ல காட்சி உருவாவதில்லை
சில விஷயங்கள் முறியடிக்கப்பட வேண்டும். நல்ல விலையுயர்ந்த கேமராக்கள் வைத்திருந்தால்தான் வேலைகள் உங்களைத் தேடி வரும் என்ற நினைப்பே தவறு.
நீங்கள் ஒரு ஒளிப்பதிவாளர், மாறாக விலையுயர்ந்த கேமராக்களை வாடகைக்கு எடுக்கும் வாடிக்கையாளர் அல்ல.
சிறந்த ஒளிப்பதிவாளர்களிடம் எந்தக் கேமராவைக் கொடுத்தாலும் அதிலிருந்து ஒரு உன்னதமான காட்சியை உருவாக்கிக்காட்டுவார்கள். எந்தக் கேமராவிலிருந்தும் சிறந்த ஒளிப்பதிவைக் கொண்டுவந்துவிடுவார்கள்.
இந்தச் சினிமா, ஒளிப்பதிவாளர்களாகிய உங்களுக்கு சில வரம்புகளை நிர்ணயிக்கிறது. நீங்கள் ஏற்கனவே கற்று வைத்திருக்கிற திரைப்பட நுணுக்கங்கள், ஒளிப்பதிவு நுட்பங்கள் உங்கள் சட்டைப்பையில் இருக்கின்றன. எனவே, அந்த வரம்புகளுக்குட்பட்டு மிகச்சிறந்த பிம்பங்களை நீங்கள் உருவாக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.

சிறந்த ஒளிப்பதிவாளராக அறியப்படுகிற பாலுமகேந்திராவிடம், யாராவது “இந்தப் படத்தை எந்தக் கேமராவில் எடுத்தீர்கள்?” என்று கேட்டால், அவரது பதில் இப்படித்தான் இருக்கும். “ஒரு நல்ல கவிதையைப் படிக்கிறோம். அதை எந்தப் பேனாவில் எழுதினீர்கள்? என்று யாராவது கேட்பார்களா? ஆனால், சினிமாவில் மட்டும் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது.  பேனா ஒரு ஊடகம். அதை வைத்து கவிதை எழுதுகிறோம். அதேபோல கேமரா ஒரு ஊடகம். அதைவைத்து படமெடுக்கிறோம். நீங்கள் எழுதுவது காவியமாக இருக்கையில் அதை டாய்லெட் பேப்பரில் எழுதினாலும், காவியம்தான்” என்பார்.
உபகரணங்கள் வரும்…, போகும்…. எனவே, அதை அதிகமாகக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம். உங்கள் நிபுணத்துவம் மற்றும் படப்பிடிப்புத்தளத்தில் திறமை மட்டுமே சிறந்த தருணங்களை உருவாக்கும்.

பசுமாடு?

மனித மனதின் இரட்டைவேடம்!...
மனிதர்களே,கொஞ்சமாவது இரக்கம் காட்டுங்க! தெய்வமாக வணங்கும் மாட்டினை அடிமாட்டுக்கு அனுப்பும்போதாவது சித்திரவதை செய்யாதீங்க!

                         வீடுகளில் மாடு வளர்ப்பவர்கள் அவைகளை, கோமாதா லக்ஷ்மி போலவும் தன் பிள்ளைகளைப் போலவும் பாவிக்கின்றோம்
தன் இரத்தத்தை பாலாக மாற்றி நம் தாய்க்கு நிகராக தங்கள் வீட்டில் வளர்ந்த மாட்டை வயதான பின்பு அடிமாட்டுக்கு விற்பனை செய்துவிடுகின்றனர், சிலர் கோவிலுக்கு காணிக்கையாக விட்டு விடுகின்றனர், கோவிலிலும் நிறைய மாடுகள் சேர்ந்ததும் அவைகளை மொத்தமாக ஏலம் விட்டுவிடுகிறார்கள்....
கோவில்களில் ஏலம் விடும் மாடுகளை அடிமாட்டுக்கு அதாவது அறுப்பு மாட்டுக்கு எடுத்து சென்று விடுகிறார்கள், இப்படி அறுப்பு மாட்டுக்கு எடுத்துச்செல்பவர்கள் மாடுகளை பலவித சித்தரவதைகளுக்கு ஆளாக்குகின்றனர்....
லாரியில் நிறைய மாடுகளை ஏற்றி பல நாட்கள் அவைகளை பட்டினி போட்டு மழையிலும் வெய்யிலிலும் நிற்கவைத்தே
கஷ்டப்படுத்தி மாடுகள் குறும்பு செய்யாமலிருக்க பச்சைமிளகாயை அதன் கண்களில் வைத்தும், இரண்டு மூன்று நாள் மாடுகள் லாரியில் படுக்காமலிருக்க அதன் பிறப்பு உறுப்பின் வழியாக மிளகாய் பொடிகளை உள்ளே போட்டும், மாடுகள் லாரியில் கத்தாமலிருக்க அதன் தொண்டையில் ஆயுதத்தால் குத்தியும் ஓட்டைபோட்டும் , இப்படி கொடுமைபடுத்தி மாடு அறுக்கும் இடத்திற்கு கொண்டு செல்கின்றனர்.
இறுதியில் அவைகளின் கழுத்தை அறுப்பதற்கும் முன் பெரிய சுத்தியால் அவைகளின் மண்டையில் ஓங்கி பலமுறை அடிக்கின்றனர், ஏனெனில் நல்ல நிலையில் இருக்கும் மாடுகளின் கழுத்தை அறுத்தால், அவை கழுத்து அறுபட்ட பின்பு வெகுநேரம் துள்ளி துடித்து அறுப்பவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால்.
தன் இரத்தத்தையே பாலாக மாற்றி தாய்க்கு நிகராக விளங்கும் மாடுகளின் நிலையை கொஞ்சம் நினைத்துப்பாருங்கள்..
நம் வீட்டு தோட்டத்தில் நமக்காகவே வளர்ந்த மாட்டை அதன் ஆயுள் முடியும் வரை வளர்ப்போம், இறந்தபின்பு
தோட்டத்தில் ஏதோ ஒரு மூலையில் புதைத்து அதன் மீது இரண்டு கனிதரும் மரக்கன்றுகளை நடுவோம்...
இறந்த மாட்டின் உடல் அந்த மரங்களுக்கு நல்ல, சிறந்த எருவாகிவிடும்....

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...