05 அக்டோபர் 2018

முதியோர் இல்லத்தில் தந்தை.





முதியோர் இல்லம் சேர்க்கவா உன்னை தத்தெடுத்து வளர்த்தார்..
------------------------------------------------------
கொண்டு சேத்த மகனுக்குத் தெரியாது..,
பல ஆண்டுகளுக்கு முன்
தான்
அந்த அப்பா தத்தெடுத்த
அனாதை மகன் என்று.
தர்மபத்தினி
தவிக்கவிட்டு போனபின்
ஆதரவற்று, பின்பு
இந்த ஆனாதை மகனுக்கு
பாரமாகிப் போனார் தந்தை.
தனியாளாய் தவித்துப் போனார்.
தனிமையில்
இனிமை காண விரும்பிய
மகனின்
இனிய இளம் மனைவி..,
மென்னியைத் திருகி
புருஷனை மிரட்டினாள்.
கத்தினாள்,ஓலமிட்டாள்.,
ஒப்பாரி வைத்தாள்.,ராட்சசி.
கிழவனைக் கடாசிவிட்டு
வீட்டுக்குள் நுழையென்றாள்.
பழகின நாயைப் போல
பணிந்து குனிந்தான்.,பாவம்.
காம இன்பம் வளர்த்த
பாசத்தைப் பார்த்து பல்லிளித்தது.
பார்த்தார் தந்தை,
பவ்வியமாய் மகனை அழைத்தார்.
முதியோர் இல்லம்
வழி சொன்னார் முகமலர்ந்து.
வரவேற்றது அவனை தத்தெடுத்த
அதே அனாதை இல்லம்.
மகன்களை அறிந்து,
தற்கால மருமகளையும் உணர்ந்து
முதியோர் இல்லமாகவும்
தன்னைத் தரம்
உயர்ந்திருந்தது அனாதைஇல்லம்.
தெரிந்தவர் தானே!
சிக்கலேதுமின்றி
உடனே சேர்ந்து கொண்டனர்.
அவனை வளர்க்க இருந்த இல்லம்
இனி அவரை வளர்க்கும்!
பல நாள் பழகிய
நண்பனைப் போல கிளி ஒன்று
கலகலப்பாய் பேசி
அந்த அறையில் அவரை வரவேற்றது.
மனிதர்கள் தராத
இதமும் இங்கிதமும் இன்னுரையும்
தனி ஆளாகக் கிளி
தந்ததையெண்ணி வியந்து மகிழ்ந்தார்.
தத்து எடுக்கப்பிடாது போலுக்கு..ன்னு
பித்து பிடிச்ச தந்தை
கிளி கிட்டே ஒளறுதாரு.
ஒன்னும் கவலைப் படாதேய்யா,
சொல்லிட்டு கிட்ட வந்த கிளி,
ஒன்னை நான் தத்தெடுத்து
"தத்தப்பா" என அழைத்து எங் காலம் வரை
கண்கலங்காம பாத்துகிறேன்..னுது.
கெகக்கெக்கெக்கேஏஏ..ன்னு
சிரிச்சுட்டாரு பெரியவரு.
இனி, சிரிச்சுகிட்டே இருப்பாரு.
இது தான்
நிம்மதின்னும் புரிஞ்சுகிட்டாரு.
அவரைப் பொறுத்தவரை
எல்லாம் இழந்த பின்னும்
இது இன்னுமொரு நல்ல விதியே...
பிறவி கடைத்தேற சுகமான வழியே!
கிளியையும் அவரையும் வாழ்த்துவோம்.
நன்றி ,திரு.பரிமேலழகர் பாரி அவர்களுக்கு......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...