09 அக்டோபர் 2018

வாழைமரம் மணப்பந்தலில் கட்டுவது ஏன்?

வாழ்க்கை தத்துவம்:

                       குளிர்பதன வசதியுள்ள வாகனத்தில் ஒரு இளைஞன் தன் தந்தையை உட்கார வைத்து நகர்வலம் வந்துகொண்டு இருக்கும் வேளையில்,
“அப்பா உங்கள் வாழ்க்கையில் சொத்துசுகம், சேமிப்பு ஏதுமே இல்லாமல் எழுபது வயதைக் கடந்து விட்டீர்களே’ என்றான்.
வண்டி ஒரு கல்யாணப் பந்தலருகே போகும் போது நிறுத்தச் சொன்னார் தந்தை.
“தம்பி பந்தலில் உள்ள வாழை மரத்தைப் பார்த்தாயா” இதன் சரித்திரம், என்ன, தெரியுமா? இது தன்னுடைய வாழ்நாளில் இலை, பூ, காய், கனி, பட்டை ஆகிய எல்லாவற்றையும் தானமாக கொடுத்து விடுகிறது. இந்த வாழை மரத்தின் சேமிப்பு கன்றுகள் மட்டும் தான். இந்த வாழ்க்கைத் தத்துவம் மணமக்களுக்கும் புரிய வேண்டுமென்பதற்காகத் தான் நம்முடைய முன்னோர்கள் மணப்பந்தலில் வாழை மரம் கட்டுவதை பழக்கமாக வைத்தார்கள்.
தந்தை கொடுத்த உயிர் தான் மனிதனுக்கு மூலதனம். அதைக் கொண்டு முன்னேறுவது தான் தனக்கும் தன்னுடைய தந்தைக்கும் பெருமை இயற்கை விதியின்படி வாழும் மரங்களுக்கு துன்பமோ துயரமோ கிடையாது புரிந்துகொள்" என்றார் தந்தை
நன்றிங்க அப்துல் காதர்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...