21 அக்டோபர் 2018

மாணவ,மாணவியரின் படைப்புகள் கோருதல்.

தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்தூறும் அறிவு-திருக்குறள்.



விதைகள் -
கலை,இலக்கியம்,பண்பாட்டு இதழுக்கு
மாணவ,மாணவியரின் கதை,கவிதை,கட்டுரை,நாடகம்,நகைச்சுவைத் துணுக்குகள்,கருத்துப்படங்கள்,அனுப்பக் கோருதல்.
*************************
அனுப்புதல்,
செ.பரமேஸ்வரன்,
பொறுப்பாளர் ,
விதைகள் இதழ்,
(விதைகள் வாசகர் வட்டம் வெளியீடு)
சத்தியமங்கலம்.

பெறுதல்;
திரு.தலைமையாசிரியர் / முதல்வர்,
பள்ளி /கல்லூரி
கோபி கல்வி மாவட்டம்.
ஈரோடு மாவட்டம்.

பொருள்;
தங்களது கல்வி நிறுவனம் மாணவ,மாணவியரின் எழுத்துப்படைப்புகளை 'விதைகள்' இதழுக்கு அனுப்பி இலக்கியப்பணியில் பங்கேற்க கோருதல்.

மதிப்பிற்குரிய அய்யா,
                                வணக்கம்.சத்தியமங்கலம் விதைகள் வாசகர் வட்டம் சார்பாக ஆண்டுதோறும் நடத்தும் பொது அறிவுக்கான புத்தகக்காட்சியில் , சிறந்த வாசகர்களையும்,படைப்பாளர்களையும் கௌரவப்படுத்தி பாராட்டுச் செய்வதோடு,சமூக சிந்தனையாளர்களின் இலக்கிய உரைகளையும்,மாணவ,மாணவியருக்கான தனித்திறன் போட்டிகளையும் நடத்தி ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறோம்.
கடந்த 21-10-2018 ஞாயிற்றுக்கிழமை சத்தியமங்கலம் செட்டிநாடு ரெஸ்டாரெண்ட் ஓட்டலின் கூட்ட அரங்கில் நடைபெற்ற வழக்கமான கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி இந்த ஆண்டு முதல் மாணவ,மாணவியரின் சிந்தனை மிகுந்த எழுத்தாளுமையை வெளிக்கொணரும் பொருட்டு கலை,இலக்கியம்,பண்பாட்டு இதழாக விதைகள் என்ற பெயரில் காலாண்டு இதழ் அறிமுகம் செய்துள்ளோம்.
எனவே சமூகம் அவர்கள் தங்களது பள்ளி /கல்லூரி மாணவ,மாணவியரின் கதை,கவிதை,கட்டுரை,நாடகம்,நகைச்சுவைத்துணுக்குகள்,கருத்துப்படங்கள்,கேலிச்சித்திரங்கள் போன்ற கற்பனைக்கும்,சிந்தனைக்கும் விருந்து படைக்கும் படைப்புகளை கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைப்பதுடன்,தங்களது கல்வி நிறுவனமும் விதைகள் இதழின் இலக்கியப்படைப்புகளை பிரசுரிக்க உதவிட தமிழ்த்துறை ஆசிரியர்கள் பேராசிரியர்கள் பெயர்,தொடர்பு எண்,மின்னஞ்சல் முகவரி விபரங்களை கொடுத்துதவ அன்புடன் கோருகிறோம்.(விரைவில் தங்களது கல்வி நிறுவனம் தேடி வருவோம்)
இப்படிக்கு,
சமூக நலனில் அக்கறையுள்ள,
செ.பரமேஸ்வரன்,
பொறுப்பாசிரியர்,
விதைகள் இதழ் ,
விதைகள் வாசகர் வட்டம் வெளியீடு
சத்தியமங்கலம்-638402,
ஈரோடு மாவட்டம்.

தொடர்பு எண்;
(1) 9585600733 ,
(2) 9443883966

மின்னஞ்சல் முகவரி;
(1) muthurathinam1954@gmail.com
(2) emailtoparames@gmail.com

அலுவலகம்;
விதைகள் வாசகர் வட்டம்,
யாழினி புத்தக நிலையம்,
பேருந்து நிலையம் அருகில்,
சத்தியமங்கலம்-638402,
ஈரோடு மாவட்டம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...