07 அக்டோபர் 2018

3ஆம் ஆண்டு புத்தகத்திருவிழா-2018விதைகள் வாசகர் வட்டம் நடத்திய 3ஆம் ஆண்டு புத்தகத்திருவிழா நிறைவுவிழா 07-10-2018
இன்று மாலை6மணிக்கு திரு.வெ.வெ.நாச்சிமுத்து (தமெகச)அவர்கள் தலைமையில் நிறைவுவிழா நடைபெற்றது.திரு.ஸ்டாலின் சிவக்குமார் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.திரு.செ.பரமேஸ்வரன் அவர்கள் தொடக்கவுரை ஆற்றினார்.திரு.சுப்பு.ரவிக்குமார் அவர்கள்,திரு.செ.சி.நடராசு,திரு.எஸ்.பி.சரவணன் அவர்கள் முன்னிலை வகித்தனர்.திரு.எஸ்.ஆர்.பி.வெங்கிடுசாமி (சத்தியமங்கலம் வியாபாரிகள் சங்கம்)அவர்கள் மற்றும் கவிஞர்.கோ.சுரேஷ் அவர்கள் சிறப்புரை ஆற்றினர்.சத்தி வட்டார படைப்பாளிகள்,சாதனையாளர்கள்,பேச்சுப்போட்டியில் வென்ற மாணவ,மாணவியருக்கு விருதுகளும்,பரிசுகளும் வழங்கப்பட்டன.கட்டுரையாளர் ,மு.பெரியண்ணா என்ற மாணவனுக்கும், 'போக்குவரத்து இல்லாததால் சமூகத்திற்கு ஏற்படும் ஆற்றல் இழப்பு'என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்து இளம்விஞ்ஞானி என்ற தேசியவிருது பட்டம் வென்ற மலைப்பகுதி இடைநின்ற மாணவன் சின்னக்கண்ணன் என்ற மாணவனுக்கும் பரிசு வழங்கி பாராட்டு வழங்கப்பட்டது.நிறைவாக திரு.கணபதிசோதரன் ஆசிரியர் அவர்கள் பேருரை ஆற்றினார்.திரு.மயூரிநாதன் அவர்கள் நன்றிகூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக