03 அக்டோபர் 2018










இரண்டாம் நாளான இன்று......
சத்தியமங்கலம்,விதைகள் வாசகர் வட்டம் நடத்தும் 3ஆம் ஆண்டு புத்தகத்திருவிழாவின் - மாலைநேர அறிவுசார் விழா.
சத்தி வடக்குப்பேட்டை,பாரீஸ் ஹாலில் 3-10-2018 இன்று திரு.சுரேஷ்குமார் KCT MATRIC SCHOOL தாளாளர் அவர்கள் தலைமையில் பாரீஸ்ஹால் புத்தக அரங்கில் மாலை 6மணிக்கு கலை இலக்கிய நிகழ்ச்சி தொடங்கியது.திரு. RANK.நா.முருகானந்தம் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.சிறப்புவிருந்தினர்களாக பங்கேற்ற எழுத்தாளர் .பாமரன் அவர்கள்,'தலைப்பிட நேரமில்லை'என்னும் தலைப்பிலும்,எழுத்தாளர்.ஈரோடு கதிர் அவர்கள்,'அறம் பழகு'என்னும் தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினர்.முன்னதாக எழுத்தாளர்.முத்துரத்தினம் அவர்களது படைப்பான ,'தமிழ்த்திரை தந்த நகைச்சுவை நட்சத்திரங்கள்'நூல் வெளியீட்டுவிழாவும்,தொடர்ந்து சிறப்புவிருந்தினர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கும் நிகழ்வும் நடைபெற்றன..நிறைவாக திரு.பொன்.பிரபாகரன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.பொதுஅறிவுவிழாவில் திரு.இந்திரன்காந்தி ,ஆசிரியர் சரத்அருள்மாறன் உட்பட ஏராளமான ஆசிரியர்களும்,வாசகர்களும்,மாணவர்களும் வருகை தந்து இலக்கியச்சுவை 
அள்ளிச்சென்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...