05 அக்டோபர் 2018

3ஆம் ஆண்டு சத்தியமங்கலம் புத்தகத்திருவிழா-2018

அன்பர்களே,வணக்கம்.




                         
                      விதைகள் வாசகர் வட்டம் நடத்தும்
         3ஆம் ஆண்டு சத்தியமங்கலம் புத்தகத் திருவிழாவின்
                         4ஆம் நாள் மாலைநேர
                          கலை,இலக்கிய உரைநிகழ்வு.
                                              (05-10-2018 வெள்ளிக்கிழமை)

                     சத்தியமங்கலம் அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி அருகிலுள்ள  பாரீஸ்ஹாலில் (தினசரிச்சந்தை எதிரில்)05-10-2018 வெள்ளிக்கிழமை இன்று மாலை 6 மணிக்கு திரு.அ.ராக்கிமுத்து (தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்) அவர்கள் தலைமையில் தொடங்கியது.திரு.அ.ஆறுமுகம் ஆசிரியர்(அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி)அவர்கள் முன்னிலை வகித்தார்.திரு.ந.முத்துசாமி அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.பேராசிரியரும் எழுத்தாளருமான 'லயம்' காலசுப்பிரமணியம் (லயம் இலக்கிய இதழாசிரியர்) அவர்கள் தொடக்கவுரை ஆற்றினார்.திரு.அரசுதாமஸ் தலைமையாசிரியர் அவர்கள் 'புத்தகம் என்னும் பொக்கிஷம்'என்னும் தலைப்பிலும்,கவிதாயினி மஞ்சுவிஸ்வநாதன் அவர்கள் 'உவப்பத் தலைகூடி உள்ளப் பிரிதல்'என்னும் தலைப்பிலும் சிறப்புரையாற்றினர்.நிறைவாக இரா.வினோத்ராஜேந்திரன் (இளநிலைப் பொறியாளர்)அவர்கள் நன்றிகூறினார்.
இன்றைய கூட்டத்தில் விதைகள் வாசகர் வட்டம் சார்பாக பொது அறிவுத்தகவலிதழ் வெளியிட ஆலோசனை செய்யப்பட்டது.திங்களிருமுறை இதழாகவோ, மாத இதழாகவோ,காலாண்டு இதழாகவோ,அரையாண்டு இதழாகவோ  வெளியடுவது பற்றி பின்னர் முடிவெடுக்கலாம் என பருவ இதழ் காலம் குறித்து வெளியிடுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...