24 ஜூன் 2015

முத்தமிழ்ச்சங்கம் வழங்கும் முகநூல் வேந்தர் விருது-2015

மரியாதைக்குரியவர்களே,
                 வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
              தமிழகம் முழுவதுமுள்ள 32 மாவட்டங்களில் முகநூலை சமூக அக்கறையோடும், அறிவுசார் பகிர்விலும் பயன்படுத்தும் சமூக ஆர்வலர்கள் 96 பேருக்கு காஞ்சி முத்தமிழ்ச்சங்கத்தின் சார்பில் நடைபெறவுள்ள வாகை சூட வா... என்ற நிகழ்வில்பட்டிமன்றம் நடுவர், எழுத்தாளர், திரைப்பட நடிகர், கலைமாமணி என பன்முகம் கொண்ட பேராசிரியர் முனைவர்*கு.ஞானசம்பந்தன்* அவர்களின் திருக்கரங்களால்
*முகநூல் வேந்தர்* என்ற விருது வழங்கப்படவுள்ளது..
மேலும் இந்நிகழ்வு உலக சாதனையாக மாற உள்ளது.
முகநூலை சமூக அக்கறையோடும், அறிவுசார் பகிர்வோடும் பயன்படுத்தி *முகநூல்வேந்தர் விருது* பெறும் சமூக ஆர்வலர்கள் 96 பேரும் மேடையில் சான்றோர்கள் முன்னிலையில் விருது பெற்று ஒருங்கே நிற்கும் தருவாயில் அதனை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 1000 கல்லூரி மாணவ/மாணவிகள்,
"உலகில் உள்ள முகநூல் அன்பர்கள் அனைவரும் முகநூலை சமூக அக்கறையோடும், அறிவுசார் பகிர்வோடும் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அதனை ஒரே நேரத்தில் புகைப்படம் எடுத்து ,அப்புகைப்படத்தை ஒரே நேரத்தில் அந்த 1000 பேரும் முகநூலில் பதிவேற்றவுள்ளார்கள்.இது உலக சாதனையாக மாற உள்ளது.
நிகழ்ச்சியினை 26.7.2015 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது... நண்பர்களே.. நமது பணிகளை நாமறியாமலேயே எங்கோ சில நண்பர்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்...!?












பரமேஸ்வரன்.9585600733

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...