07 ஜூன் 2015

இயற்கை விவசாயி திருமூர்த்தி அவர்களின் அனுபவம்..

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். 
  இயற்கை விவசாயத்தின் ஒரு பகுதியை அறிவோமா!.
வேதிபொருட்களின் மூலம் தயாரிக்கப்பட்ட செயற்கை உரங்களை பரலோகம் அனுப்பிய பஞ்சகவ்யா..
நேப்தா..
அரபு நாடுகளில் எண்ணை கிணறு அமைக்க பூமியை துளையிடும் போது கிடைப்பதுதான் இந்த நேப்தா..
நேப்தாவிலிருந்து கிடைப்பதுதான்
இந்த அமோனியா, யூரியா,டி ஏ பி,
பொட்டாஷ்..

இந்த ரசாயன பொருளுக்கு ஒரு பெயரை வைத்துக்கொண்டு இதுவரை நம் அப்பாவி விவசாயிகளின் தலையில் கட்டி வந்துள்ளது வளரும் நாடுகள்..
நெல்லுக்கு யூரியா போடுங்கள்,
மஞ்சளுக்கு டிஏபி போடுங்கள்,
வாழைக்கு பொட்டாஷ் போடுங்கள்,
என்று கூவிக்கூவி ஏமாற்றியும் வந்துள்ளனர்..

இப்போது நான் எந்த இடுபொருளையும் வெளியிலிருந்து வாங்குவது கிடையாது..
யூரியாவுக்கு பதிலா மாட்டு கோமியம்,
டிஏபி க்கு பதிலா ஜீவாமிர்தம்,அமுதகரைசல்,
பொட்டாஷ்க்கு பதிலா
அடுப்பு சாம்பல்,
காற்றில் உள்ள தழைச்சத்தை பயிருக்கு இழுத்துகொடுக்க பலதானியம்,
கொழுஞ்சி விதைப்பு,
ஆல் 19 க்கு பதிலா பஞ்சகவ்யா,
பயிர் ஊக்கிக்கும் பஞ்சகவ்யா,
பூச்சிகொல்லிக்கு பதிலா சிட்டுக்கு குருவி,
கரிச்சாங்குருவி, காகம், தேன்சிட்டு, பல்லி, பூரான், தேள், மயில், பாம்பு,
பூச்சி விரட்டிக்கு வேப்ப எண்ணை,
புங்க எண்ணை,
மகரந்த சேர்க்கைக்கு தேன்பூச்சி,
பார்த்தீனியா விஷசெடியை அழிக்க நாம் சாப்பாட்டுக்கு பயன்படுத்தும் கல் உப்பு,
களைக்கொல்லிக்கு பதிலா மாட்டு கோமியம்,
ஏழு அடி ஆழத்தில் மண்ணில் இருக்கும் சத்துக்களை மேலே எடுத்து
கொண்டுவர மண்புழு,
பூமியில் காற்றோட்டத்தை உருவாக்க கரையான், எலி..

இப்படி பல்உயிர் வாழும் பூமியாக ஓரளவு எனது பூமியை மாற்றிவிட்டேன்..
நடவு செய்த நூறுநாட்கள் ஆன  செவ்வாழைக்கு இதோடு இரண்டு முறை பஞ்சகவ்யா தெளித்து விட்டேன்..
ஏற்கனவே இந்த வாழைக்குள் கொழுஞ்சி விதைத்து இருந்தேன்,
ஏதோ ஒரு காரணத்தால் சரியாக முளைக்கவில்லை.
கொழுஞ்சி முளைக்காததால் சின்ன டிரேக்டரில் அதிகமாக இருந்த சாரணையை அப்படியே மடக்கி உழுது விட்டேன்.

எந்த நோய் தாக்குதலும் இல்லாமல்
நான் வாழையை அறுவடை செய்து வருகிறேன் என்பதற்கு இதுவும் ஒரு காரணமாக கூட இருக்கலாம்..

இந்த முறை எல்லாமே என்னோட இந்த இருபது வருட விவசாய வாழ்வியல் மூலம் கற்றுக்கொண்டது.அனுபவமான பாடம் என்றும் சொல்லலாம்..
இனிமேல் யாரும் விடாமுயற்சிக்கு
உதாரணமாக
‪#‎கஜினிமுகமது‬ வை சொல்லாதீங்க..!
எங்களை போல விவசாயிகளை உதாரணம்
சொல்லுங்க..!

ஏன்னென்றால் கஜினியைவிட நாங்கள்தான் அதிகமான தோல்விகளை தழுவியிருக்கிறோம்..!
வெற்றி என்பது பெற்று கொள்வது,
தோல்வி என்பது கற்று கொள்வது,
முதலில் கற்று கொள்வோம்,
பிறகு பெற்று கொள்வோம் ..!!

இது எனது முகநூல் நண்பரும் விவசாயியுமான மரியாதைக்குரிய  திருமூர்த்தி அவர்களின் அனுபவத்தின் பதிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...