15 ஜூன் 2015

YOUTH RED CROSS - ANNA UNIVERSITY சிறப்பு முகாம் -நம்ம ஆசனூர் மலையில்


மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். 

அண்ணா பல்கலைக்கழகம் சென்னை பேராசியர் S.K.ராஜசேகரன் ஐயா அவர்கள் தலைமையிலான  YOUTH RED CROSS என்னும் இளஞ்செஞ்சிலுவை சங்கத்தின் இருபால் மாணவர் குழு,  
                 2015ஜூன்14ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், தாளவாடி மலைப்பகுதியிலுள்ள  அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி ஆசனூரில்  சிறப்பு முகாம் நடத்தியது. 











முகாமில் சிறப்புரை நிகழ்த்திய  C.பரமேஸ்வரன் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் செயலாளர்  அவர்கள் பழங்குடி மக்களின் வாழ்வியல் முறைகளும் தற்போது சந்திக்கும் பிரச்சினைகளும் பற்றி எடுத்துக்கூறி வாழ்வின் விளிம்பு நிலையில் இருக்கும் பழங்குடி இன மாணவர்களுக்கு நல்வழிகாட்டுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

           தொடர்ந்து சென்னை அண்ணா பல்கலை கழகம் பேராசிரியர் S.K. ராஜசேகரன் ஐயா அவர்களின் தலைமையிலான YRC மாணவர்குழு 


        உயர் கல்விக்கான விழிப்புணர்வு,

                சுற்றுச்சூழல் காப்போம் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்போம் என விளக்கவுரை, 
               புகை,மது,போதை பொருட்களை தவிர்ப்போம் என உடல் நலத்துக்கான விழிப்புரை,
சுத்தமே சுகாதாரத்துக்கான வழி என விழிப்புரை கொடுத்தல்,
               

       மழை நீரை சேமிப்போம் - வன வளம் காப்போம் என விழிப்புரை,
           பள்ளி வளாகம் சுத்தம் செய்தல்,
               போன்ற சேவைகளை செய்தனர்.

தொடர்ந்து 


                        GTRHSS பள்ளி மாணவர்களின் பழங்குடி மக்கள் நடனத்தை பார்த்து ரசித்த பல்கலை மாணவர்கள் கிளாசிக் மற்றும் மேற்கத்திய நடனமுறை ஆடி மகிழ்வித்தனர்.



            அது சமயம் பள்ளி மாணவ,மாணவியருக்கு மூவாயிரம் ரூபாய் மதிப்புள்ள இலவச நோட்டுபுத்தகங்கள் வழங்கினர்.

                                             மதிய உணவு   
                                                  (சைவம்& அசைவம்)




                 அண்ணா பல்கலை இருபால் மாணவர்களும் அரசுப் பள்ளி இருபால் மாணவர்களும் கலந்துண்ட காட்சி...


          சென்னைஅண்ணா பல்கலை YRC மாணவர்களுக்கு  GTRHSS பள்ளி ஆசிரியர் முனைவர் திருநிறைச்செல்வன் அவர்கள் நன்றி கூறினார்.
 தொடரும் .....



                அதாவது சத்தியமங்கலம் புளியங்கோம்பை மலைவாழ் மக்களின் வாழ்வியல் பற்றிய கலந்துரையாடல் நேரம் கிடைக்கும்போது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...