13 ஜூன் 2015

YOUTH RED CROSS - CHENNAI ANNA UNIVERSITY (DEPARTMENT OF ARCHITECTURE&PLANNING


  மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். 
சென்னை,அண்ணா பல்கலைக்கழகம்  Department of Architecture and planning துறையின்  பேராசியர் மதிப்புமிகு. S.K.ராஜசேகர் ஐயா அவர்களது தலைமையில் உதவி பேராசியர் சிவசங்கரன் துணையுடன் YOUTH RED CROSS (YRC)அமைப்பின் ஐம்பது  மாணவ,மாணவியர் சத்தியமங்கலம் பகுதிக்கு வருகை புரிந்து ஶ்ரீராகவேந்திரா பள்ளி விடுதியில் சமூக சேவை ஆற்றி வருகின்றனர்.
             சென்னை அண்ணா பல்கலை கழகத்தின் கட்டடக்கலைப்பிரிவின் இளஞ்செஞ்சிலுவை சங்கத்தின் குழுவினரை, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் தமிழ்நாடு சார்பாக வாழ்த்தி வரவேற்கிறோம்.

                 நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் தமிழ்நாடு அமைப்புடன் 14.06.2015 இன்றும்15.06.2015நாளையும் இணைந்து சத்தியமங்கலம் மலைவாழ் பழங்குடியின மக்களின் வாழ்வியல் முறைகளை கேட்டறிதல் மற்றும் வாழ்க்கை முன்னேற்றத்திற்கான விழிப்புணர்வு கொடுத்தல் சுற்றுச்சூழல் காத்து வனவளம் காத்தல் என பல்வேறு தளங்களில் சமூக சேவை செய்கின்றனர். 
                          முதல் நாளான 14ந் தேதி இன்று ஆசனூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி மாணவ,மாணவியருடன் உயர் கல்வி வழிகாட்டுதல் சம்பந்தமான கலந்துரையாடல்,மாணவ,மாணவியருக்கு உதவிகள் செய்தல்,சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிளாஸ்டிக் தீங்குகள்,வனவளம் காப்பது மற்றும் இயற்கைவளம் காப்பது,மழை நீர் சேகரிப்பது,மருத்துவத்தாவரங்கள் காப்பது, சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு,புகை,மது,போதைப்பொருட்கள் தவிர்த்து சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து சுகாதாரம் காப்பது பள்ளி வளாகத்தை சுத்தம் செய்வது போன்ற நிகழ்வுகளும்.பிறகு  அருகிலுள்ள பழங்குடி மக்கள் வசிக்கும் கிராமத்திற்கு சென்று அவர்களது வாழ்க்கைச்சூழல் பற்றிய விவரம் அறிதல்,புகை,மது,போதையின் தீங்குகள் பற்றிய விழிப்புணர்வு கொடுத்தல்,சிறுதானிய உணவு வகைகள் பற்றியும் மருத்துவ மூலிகைகள் பற்றியும் கலந்துரையாடல் செய்தல் நடத்த உள்ளோம்.

           இரண்டாவது நாளான 15ந் தேதி குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள பழங்குடி மக்களின் வாழ்வியல்முறைகள் புளியங்கோம்பை பழங்குடி மக்களின் வாழ்வியல் முறைகள்  சந்திக்கும் பிரச்சினைகள்,கல்வி,சுகாதாரம்,வாழ்க்கை முன்னேற்றம் என கரளையம் திரு.தங்கவேல் ஐயா அவர்கள் உதவியுடன் விழிப்புணர்வு கொடுக்க உள்ளோம்.

   என்றும் சமூகப்பணியில் அக்கறையுள்ள
 அன்பன்,
C.பரமேஸ்வரன்,
செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும்
      சாலை பாதுகாப்பு சங்கம் தமிழ்நாடு
 (அரசு பதிவு பெற்ற தன்னார்வ அமைப்பு)
மின்னஞ்சல் முகவரி;consumerandroad@gmail.com
தொடர்பு எண்;+91 9585600733
வலைப்பதிவு முகவரி; http://consumerandroad.blogspot.com


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...