07 ஜூன் 2015

நுகர்வோருக்கான தொலைபேசி சேவை தொடக்கம் - 2015

மரியாதைக்குரியவர்களே,
                     வணக்கம்.நுகர்வோருக்கான தொலைபேசி எண் சேவை துவக்கம்...பதிவிட்ட முகநூல் நண்பர் திரு. செல்வம் பழனிச்சாமி ஐயா அவர்களுக்கு நன்றிங்க..
நுகர்வோருக்கான தொலைபேசி சேவை தொடக்கம்!
************************************************************************

நுகர்வோரின் குறைபாடுகளைத் தீர்ப்பதற்கு ஆலோசனை அளிக்கும் தொலைபேசி சேவை தொடங்கப்பட்டுள்ளது.
"கன்ஸ்யூமர் அசோஷியேஷன் ஆஃப் இந்தியா' அமைப்பின் சார்பில் இந்த தொலைபேசி சேவை தொடக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் தொடர்பான தகவல்களைத் தெரிந்து கொள்வதற்காக, ஒரு பொருளை வாங்குவதற்கு முன்பாக தனிப்பட்ட அறிவுரை அல்லது வழிகாட்டுதலை பெறுவதற்காக, வாங்கிய பொருள்களில் குறைபாடுகள் இருந்தால் அதனை புகார் செய்வதற்காக இந்தச் சேவையைப் பயன்படுத்தலாம்.
044-6633 4346 என்ற தொலைபேசி எண்ணுக்கு நுகர்வோர் அழைக்கலாம். இது 24 மணி நேர சேவையாகும்.
இந்தத் தொலைபேசி எண்ணுக்கு அழைப்பதன் மூலம் தமிழ், ஆங்கிலத்தில் தகவல்களைப் பெற முடியும். நாம் வாங்கும் பொருள்களில் குறைபாடுகள் இருந்தாலும் அது குறித்து எங்கு புகார் செய்வது என நுகர்வோர் பலருக்குத் தெரிவதில்லை.
இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் புகார்களைப் பதிவு செய்யவும் இந்த தொலைபேசி எண் மிகவும் உதவியாக இருக்கும்.
நன்றி : தினமணி 07.06.2015 நாளிதழ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...