08 ஜூன் 2015

உடல் வலி நீக்க

மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம்.சித்த வைத்தியத்தில் வலி நீக்கும் மருத்துவமுறைகள் அதற்கான பயிற்சி முறைகளை கற்போம்.

       உடலில் வலி வந்தால் உடனே மருத்துவரிடம் சென்று 'வலி நீக்க' ஊசி போட்டுக் கொள்வது இன்றைய நாகரீக தலைமுறையின் நடைமுறை.
வலிநீக்க ஊசிகள் உடலில் ஏற்படுத்தும் பின்விளைவுகள் மிகவும் பயங்கரமானவை என்பது அந்த ஊசிகள் பற்றி அறிந்த மருத்துவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.

கடுமையான உழைப்பு என்பது தமிழர்களின் கலாச்சாரம். நிலத்தினில் உழுதார்கள்; கதிரடித்தார்கள்; களத்திற்கு கொண்டு வந்தார்கள்; உலக்கை அல்லது திருகையால் உதிர்த்து பொங்கி சாப்பிட்டார்கள்.இப்போது டிராக்டர், கதிரடிக்க எந்திரம், கிரைண்டர், குக்கர், மிக்சி என்று ஆகிவிட்டதால் மனிதர்களின் வேலை குறைந்து விட்டது. நோய்களும் பெருகி வருகின்றன.

அலோபதி வைத்தியம் என்பது பொதுவாக அவசர நிலைமைகளுக்கு தற்காலிக தீர்வை தருவதாக இருக்கிறது. எதெற்கெடுத்தாலும் மருத்துவரிடம் ஓடுவதை விடுத்து உடலில் ஏற்படும் வலிகளை நாமே சரி செய்து கொள்ள முடியும். இதற்கு நம் முன்னோர்கள் சொல்லி வைத்த சில எளிய பயிற்சிகள் உதவும்.

பழங்கால சித்த வைத்தியர்கள், முழங்கால் வலி, முதுகுவலி என்று வரும் நோயாளிகளுக்கு அவர்கள் கையால் மூலிகை எண்ணெயை தடவச் செய்து சூரிய ஒளியில் 10 முறை சுற்றி சூரிய வணக்கம் செய்யவும், காதுகளை பிடித்து பிள்ளையார் கோவிலில் தோப்புக் கரணம் போடச் சொல்வதும், பெருமாள் கோவலில் அங்கப்பிரதட்சணம் செய்யச் சொல்வதும், முருகன் கோவலில் காவடி எடுப்பதும், அம்மன் கோவலிலில் முளைப்பாரி  எடுப்பதும், விளக்கு பூஜை செய்யவும் சொல்வார்கள்.
பழங்காலத்தில் சித்த வைத்தியர்களே ஜோதிடர்களாகவும், சாமியார்களாகவும், ஊர் பெரியவர்களாகவும், முதியவர்களாகவும், அருள்வாக்கு சொல்பவர்களாகவும், தர்மகாரியம் செய்பவர்களாகவும் இருந்து வந்தனர். அவர்களின் அறிவுரைப்படியே ஒவ்வொரு ஆண்டும் மாலையணிந்து பாதயாத்திரை செல்வதும், ஊர்கூடி தேர் இழுப்பதும், தீச்சட்டி தூக்குவதும், நெருப்பு மிதிப்பதும் வழக்கமாக இருந்தது. இது உடற்பயிற்சி மட்டுமின்றி மனதை ஒருநிலைப்படுத்தும் உளரீதியான பயிற்சியுமாக இருந்து வந்தன.

அகத்தியர், யூகிமுனிவர் போன்ற சித்தர்களின் நூல்களை படிக்கும் போது நோய்களுக்கான மருந்து முறைகளை மட்டும் அவர்கள் குறிப்பிடுவதில்லை. மாறாக, மந்திரம் ஓதுதல், உடலை வளைத்து வணக்கம் செய்தல், உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றுதல் ஆகியவற்றையும் கூடுதலாக குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முதியவர்கள் கால்மேல் கால் போட்டு காலாட்டுவதும், இளையவர்கள் முதியவர்கள் முன்பு கைகட்டி நிற்பதும், சோம்பேறி மகனை முழங்கால் போடச் சொல்வதும் உடலை சுறுசுறுப்பாக்கவும், மனதை அமைதிப்படுத்தவும் உதவியிருக்கிறது.

நம் உடலின் பல்வேறு பாகங்களில் தோன்றும் வலிகளை மருந்தின்றியோ, மருந்துகளை உட்கொண்டே சில எளிய பயிற்சிகள் மூலம் குணப்படுத்துவதை தான் தற்போது பிசியோதெரபி என்று அழைக்கிறார்கள். உடலில் வலிகளே வராமல் உடல் எந்த கோணத்திலும் வளைவதற்கான உத்தியாகவே யோகாசனங்கள் விளங்கி வந்திருக்கின்றன.
உடலில் எலும்புகள், மூட்டுகள், தசைகள், நரம்புகள் ஆகியவற்றின் தோற்றம், அமைப்பு, மூட்டுகளின் அமைப்பு, பல்வேறு இடங்களில் தோன்றும் வலிகள், அவற்றை நீக்கும் பயிற்சிகளை  கற்றுக் கொண்டு, நீங்களே வலிநீக்கும் பயிற்சி மருத்துவராக செயல்படலாம். இவை எல்லாம் எளிய பயிற்சிகள் தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...