11 ஜூன் 2015

நமது பணம்! நல்ல நோட்டா? கள்ள நோட்டா?


மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.
           நாம் தினந்தோறும் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுக்கள் நல்ல நோட்டுக்களா? கள்ள நோட்டுக்களா? என அறிந்துகொள்வது பற்றி இங்கு பதிவிடுகிறேன்.

              நல்ல நோட்டுக்களுக்கென்றே சில பாதுகாப்பு அம்சங்களை இந்திய ரிசர்வ் வங்கி சில குறிப்புக்களையும்,நுணுக்கங்களையும் வெளியிட்டுள்ளது.
                                        இதோ தங்களது கவனத்திற்காக....
(1) பாதுகாப்பு இழை; 
             நமது ரூபாய் நோட்டுக்களான 10ரூபாய் முதல் 20ருபாய்,50ரூபாய் ஆகிய நோட்டுக்கள் பார்க்கத்தக்க ஆனால் முழுவதும் உள்ளே பதிக்கப்பட்ட பாதுகாப்புச் சாளரம் கொண்ட பாதுகாப்பு இழையைக் கொண்டுள்ளன்ன.100ரூபாய் மற்றும் 500ரூபாய் நோட்டுக்களிலும் பார்க்கத்தக்க சாளரமுள்ள பாதுகாப்பு இழையைக் கொண்டுள்ளன.ஆனால் இவற்றில் பதிக்கப்பட்ட இழை பாதி வெளியில் தெரிவதாகவும்,பாதி உள்ளே பதிக்கப்பட்டதாகவும் உள்ளது.வெளிச்சத்தில் பிடித்துப்பார்க்கும்போது இந்த இழை தொடர்ச்சியான ஒரு கோடாகத்தெரியும்.1000ரூபாய் தாட்களைத்தவிர மற்ற ரூபாய் நோட்டுக்களில் இந்த இழையில்தேவநாகரி எழுத்து வடிவத்திலுள்ள 'பாரத்' என்ற வார்த்தையும்  "RBI" என்ற ஆங்கில வார்த்தையும் மாறி மாறித் தோற்றமளிக்கும்.ஆயிரம் ரூபாய் தாளில் மட்டும் 'பாரத்' என்ற தேவநாகரி வார்த்தையுடன் '1000' மற்றும் 'RBI' ஆகிய வார்த்தைகளும்  இருக்கும்.பழைய நோட்டுக்களில் எழுத்துக்கள் எதுவும் இல்லாமல் பார்க்க இயலாத முழுவதும் உள்ளே பதிக்கப்பட்ட பாதுகாப்பு இழைகளைக் கொண்டிருந்தன.

(2) மறைந்திருக்கும் மதிப்பெண்; 
                    மகாத்மா காந்தியின் உரவப்படத்துக்கு வலது பக்கத்திலுள்ள செங்குத்துப்பட்டைக்கோட்டில் அந்தந்த இலக்க மதிப்புக்கு ஏற்ற எண்கள் அதாவது ரூபாய் மதிப்புக்கேற்ற எண்கள் 20 , 50, 100,500,1000 என அந்தந்த எண்கள் மறைந்திருக்கும்.உள்ளங்கையில் பிடித்து அதன்மேல் 45 டிகிரி கோணத்தில் வெளிச்சம் விழுமாறு செய்தால் மட்டுமே அந்த மதிப்பினைக் காண முடியும்.இல்லாவிட்டால் இந்தத்தோற்றம் வெறும் செங்குத்துக்கோடாகவே தெரியும்.

(3)நுண்ணிய எழுத்துக்கள்; 
       மகாத்மா காந்தி உருவப்படத்துக்கும் செங்குத்துப்பட்டைக்கோட்டுக்கும் இடையில் இந்த நுண்ணிய அம்சம் உள்ளது.10ருபாய் 20ரூபாய் தாள்களில் இந்த இலக்க மதிப்புகளும் RBI என்ற எழுத்துக்களும் உள்ளன.உருப்பெருக்கக்கண்ணாடியின் வழியாகப் பார்த்தால் இதனை தெளிவாகக்காணலாம்.

(4)அடையாளக்குறியீடு; 
        பத்து ரூபாய் தாளைத்தவிர மற்ற ரூபாய்களில் நீர்க்குறியீட்டுச்சாளரத்திற்கு இடது புறத்தில் ஒரு செதுக்கு உருவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்தத்தோற்றம் பல்வேறு இயக்க மதிப்புத்தாள்களில் வெவ்வேறு வடிவங்களில் உள்ளன.ரூ20 இல் செங்குத்து நீள் சதுரம்,ரூ 50 இல் சதுரம், ரூ100 இல் முக்கோணம், ரூ500 இல் வட்டம், ரு1000 இல் சாய் சதுரம் என மதிப்புக்கேற்ப பல்வேறு தோற்றங்களில் இருக்கும்.இதனால் பார்வை இல்லாதவர்கள் அத்தாளின் இலக்க மதிப்பினை அடையாளம் காண உதவுகிறது.

(5)செதுக்கு உருவம்;
              மகாத்மா காந்தி உருவப்படம்,ரிசர்வ் வங்கி முத்திரை, உத்தரவாத உறுதிமொழி வாசகம்,இடது பக்கத்தில் அசோகா தூண் சின்னம்,ரிசர்வ் வங்கி கவர்னர் கையொப்பம் ஆகியன செதுக்கு உருவத்தில் அச்சிடப்பட்டுள்ளன.அதாவது தூக்கலான அச்சுக்களில் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

(6) ஒளிரும் தன்மை; 
          தாள்களின் எண்  பதிக்கப்பட்டுள்ள இடம் ஒளிரும் மையினால் அச்சிடப்பட்டுள்ளது.தாள்களில் ஒளியிழைகளும் உள்ளன.புற ஊதாக்கதிர் விளக்கின் ஒளியில் பார்க்கும்போது இந்த இரண்டையும் காணலாம்.

(7) பார்வைக்கோணத்தில் மாறுபடும் மை; 
           ரூ 500 மற்றும் ரூ 1000 பணத்தாள்களில் ரூ500 மற்றும் ரூ1000  இவற்றின் மேல் வண்ணம் மாறித்தோன்றும் மையினால் அச்சிடப்பட்டுள்ளன.அதாவது லேசான மஞ்சள்,லேசான ஊதா,பழுப்பு ஆகிய மாற்றப்பட்ட வண்ணத்திட்டங்களில் அச்சிடப்பட்டுள்ளன.இந்தத்தாள்களை கிடைமட்டமாகப் பிடித்துப் பார்த்தால் இந்த எண்களின் வண்ணங்கள் பச்சையாகவும் ஒரு கோணத்தில் பிடித்துப்பார்த்தால் நீல நிறமாகவும் காணப்படும்.

உதாரணமாக  
                ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டை எடுத்து படத்தில் உள்ளவாறு  அறிய முடிகிறதா என பார்க்கலாம்.இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லாவிட்டாலும் அவை கள்ள நோட்டுத்தான்.
















 

முக்கியமான தகவல் 
            தங்களிடமுள்ள அழுக்கடைந்த அல்லது சேதமடைந்த பணத்தாள்களை வங்கிகளில் செலுத்தி அதற்குண்டான முழுத்தொகையினையும்  மாற்றிக்கொள்ளலாம்.
 ஆனால் 
           பணத்தின் பரப்பு குறைவாக இருப்பவை.வரிசை எண்ணின் பெரும்பகுதி இல்லாதவை,ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் மதிப்பிழக்கச் செய்யப்பட்டு இருந்தால்,கள்ள நோட்டு என கண்டறியப்பட்டால்,வேண்டுமென்றே துண்டிக்கப்பட்டிருந்தால்,வேண்டுமென்றே  சேதப்படுத்தி இருந்தால்,வேண்டுமென்றே திருத்தப்பட்டிருந்தால்,தேவையற்ற வார்த்தைகளை எழுதி இருந்தால்,அரசியல் பண்புகளுக்கான நோக்கங்களையுடைய வார்த்தைகளை  எழுதி இருந்தால்,படங்களை வரைந்திருந்தால் எந்த வங்கிகளிலும் மாற்ற இயலாது.

 இந்திய ரிசர்வ் வங்கியின் ஒபட்ஸ்மேன் திட்டம்.

               இந்தியாவில் அனைத்து வங்கிகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் RBI (இந்தியன் நடுவண் வங்கி) யின் "ஒபட்சு மேன்" (Ombudsman)  என்ற திட்டம் பயனாளர்களுக்கு மிகுந்த சாதகமாகாவும், அசுர வேகத்தில் வாடிக்கையாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்து சிறப்பாக செயலாற்றுகிறது என்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கும் உண்மை.


                      XXXX (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற வாடிக்கையாளர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு உடமையாக்கப்பட்ட வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 3000/- பணம் எடுபதற்கு ATM சென்று உள்ளார். அப்போது பணம் வராமல் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டது என்ற குறுந்தகவல் (SMS ) வந்துள்ளது. உடனே அந்த வாடிக்கையாளர் வங்கியை அணுகி உள்ளார். வங்கியில் ஒரு கடிதம் எழுதி கொடுங்கள் பணம் தருகிறோம் மேலும் அந்த பணம் எடுத்த சீட்டை இதோடு இணைத்து தாருங்கள் என்று கூறியுள்ளனர். இவரும் கடிதம் கொடுத்து காத்திருந்து பலமுறை வங்கியை முறையிட்டும் எந்த பலனும் இல்லை.
சம்பவம் நடந்த நாள் ஏப்ரல் 10 ம் தேதி, வாடிக்கையாளர்  மே 10ம் தேதி வரை காத்திருந்து பலன் இல்லாமல் கடைசியாக பொறுமை இழந்த XXXXXXX என்ற வாடிக்கையாளர்  பின்னர்  தனியார் வங்கியில் வேலை செய்யும் தனது நண்பரிடம் கூறி உள்ளார். அவர் தான் முதன் முதலில் "ஒபட்சு மேன்" {Ombudsman } பற்றி சொல்லி உள்ளார்.
அதே நாளில் தனது அவலத்தை பின்வரும் இணையம் வாயிலாக https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html ஆதங்கமாக தெரிவித்துள்ளார். மே 29 அன்று ரூபாய் 3000/- வங்கி கணக்கில் சேர்ந்துள்ளது. பின்னர் ஜூன் 18ம் தேதி அவருக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 525/-ம் செலுத்தி உள்ளனர்.
அந்த சம்பந்த பட்ட வங்கி பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டு நேரில் அழைத்து கைப்பட கடிதமும் வாங்கி உள்ளனர். மேலும் சகல மரியாதையும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இனி உங்கள் வங்கியும் இதுபோன்ற தவறுகளை செய்தால் நீங்களும் யோசிக்காமல் "ஒபட்சுமேன் {Ombudsman} https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html சொடுக்கி உங்கள் குற்றங்களை பதிவு செய்யுங்கள்.
நீங்கள் கூறும் குற்றம் உண்மை என்று நிருபணம் செய்யப்பட்டால் சமபந்தப்பட்ட அதிகாரி பணியிடை நீக்கம் செய்ப்ப்படும் அளவிற்கு "ஒபட்சு மேன்" க்கு { Ombudsman } அதிகாரம் உள்ளது. மேலும் வங்கி அதிகாரிகளின் குற்றம் தொடர்ந்து அதிகமாக இருந்தால் சமந்தப்பட்ட வங்கி கிளையையே  மூடப்படும் அளவிற்கு "ஒபட்சு மேன்" அதிகாரம் உள்ளது.
PL CLICK THIS LINK TO LOG YOUR COMPLAINTS https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html

https://www.rbi.org.in/commonman/Tamil/Scripts/AgainstBankFAQs.aspx
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...