15 ஜூன் 2015

CHENNAI ANNA UNIVERSITY YRC CAMP @ HASANUR HILLS (THALAVADI - ERODE Dt)



மரியாதைக்குரியவர்களே,
                   வணக்கம். சென்னை அண்ணா பல்கலை கழகம்  பேராசிரியர் S.K. ராஜசேகரன் ஐயா அவர்களது தலைமையிலான ANNA UNIVERSITY- SCHOOL OF ARCHITECTURE AND PLANNING ஸ்கூல் ஆஃப் ஆர்க்கிடெக்சர் அண்டு பிளேனிங் துறையைச் சேர்ந்த  YOUTH RED CROSS இளஞ்செஞ்சிலுவை சங்க மாணவர்கள் குழு 

               2015ஜூன் 11 ந்தேதி முதல்18 ந்தேதி வரை
 ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஶ்ரீராகவேந்திரா கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் விடுதியில் தங்கி சத்தியமங்கலம் புலிகள் காப்பத்திற்குட்பட்ட மலைவாழ் மக்களின் வாழ்வியல் முறைகளும் தற்போதைய பிரச்சினைகளும் பற்றி கேட்டறிவதோடு பழங்குடியின மாணவர்களுக்கு தன்னம்பிக்கை,சுற்றுச்சூழல் காப்பது, வனவளம் காப்பது ,மழைநீர் சேமிப்பது,பண்பாடு காப்பது,சுகாதாரம்,புகைத்தலும் மதுவும் போதைப்பொருட்களும் தவிர்த்து உடல்நலம் காப்பது,உயர்கல்விக்கான ஆலோசனை,நல உதவிகள் வழங்கல் போன்ற சமூகப்பணியினையும் ஆற்றி வருகிறது.
                 
                2015ஜூன் 14 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று C. பரமேஸ்வரன் ஆகிய எனது  வழிகாட்டலின்போது தாளவாடி ஒன்றியம் ஆசனூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமின்போது பழங்குடியின மக்களின் வாழ்க்கைச்சூழல் மற்றும் பிரச்சினைகளைப்பற்றி உரைநிகழ்த்தி விடுத்த வேண்டுகோள் விவரம்....



                  சென்னை அண்ணா பல்கலைக்கழகம் பேராசிரியர் S.K.ராஜசேகரன் ஐயா அவர்கள தலைமையில் சிறப்பு முகாமிட்டுள்ள  YRC மாணவர்கள் உட்பட   அவை சார்ந்த சான்றோர் மேன்மக்களே அனைவருக்கும் எனது பணிவான வணக்கம்.
         ஆஸ்திரேலியா பழங்குடியின மக்களுக்கு உதவி செய்யச் சென்றவரை மறித்து
                     '' நீங்கள் எங்களுக்கு உதவி செய்வதற்காக வந்துள்ளீர்! என்றால் தயவு செய்து வந்த வழியே திரும்பி சென்றுவிடுங்க.அதே சமயம் எங்களது வாழ்வாதாரப்போராட்டம் உங்கள் வாழ்க்கையை நீலைத்து நீடிக்க உதவும் என்று உணர்ந்தால் வாங்க,நாம் ஒன்றாக இணைந்து போராடலாம்''  
                    என்று ஆஸ்திரேலியப் பழங்குடியின பெண்மணி ஒருவர் கூறியது மிக முக்கியம் வாய்ந்த கருத்து ஆகும்.

                      பழங்குடியின மக்கள் நலமுடன் வாழ்ந்தால்தான் அவர்களைச் சார்ந்துள்ள வனம்,நிலம்,நீர்,சுகாதாரம்,சுற்றுச்சூழல் போன்ற இயற்கை வளங்கள் சிறப்பாக இருக்கும்.இதனால் ஏனைய மக்களான நமக்கு வளமான,நிலையான வாழ்வு பாதுகாக்கப்படும்.

                  நம் நாட்டில்  பல்வேறு இனத்தைச் சார்ந்த மக்கள் பாரம்பரியம்,வரலாறு,ஒழுக்கம்,நீதி என பலவகையான பண்பாடு கலாச்சாரக்கூறுகளை கொண்டு வாழ்ந்து உலகத்திற்கே உதாரணமாக விளங்கி வருகின்றனர்.
    
              நம் நாட்டின் முதல் குடிமக்களான பழங்குடி இன மக்கள் வனத்தைச் சார்ந்தே இயற்கையோடு ஒட்டி தங்களது வாழ்க்கையை அமைத்துக்கொண்டுள்ளனர்.

                     வனப்பகுதியிலுள்ள நிலங்களில் சிறுதானிய பயிர்களை சாகுபடி செய்துகொள்வதோடு வனத்தைப் பாதுகாத்தும்,
வனத்தில் கிடைக்கும் மூலிகைத்தாவரங்கள்,காய்ந்த மரக்கிளைகள்,வேர்,கிழங்கு,பட்டை,தேன்,பிசின்,அரக்குப்பொருட்கள்,கனிகள்,விதைகள்,கீரை வகைகள்,நீர்த்தாவரங்கள்,மீன்,நண்டு என பலவகையான வனப்பொருட்களை சேகரித்து விற்று தன் வாழ்வாதாரத்தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர்.

    பழங்குடி இன மக்கள் தங்களுக்கென தனிக் கலாச்சாரம்,சமூகக்குழு, கூட்டுவாழ்க்கை,இயற்கை வைத்தியம்,சொந்தமாக இசை,நடனம்,பாடல் என தனிப்பண்பாடு உடையவர்களாக  வாழ்ந்து வருகின்றனர்.

              இந்திய பழங்குடி நலத்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரப்படி,ஐக்கிய நாட்டு சபை அறிக்கையின்படி,சர்வைவல் இன்டர் நேசனல் என்னும் பன்னாட்டு அமைப்பின் புள்ளிவிவரப்படி உலகில் 622 வகையான பழங்குடி இன மக்கள் குழுக்கள் உள்ளனர். சுமார் எட்டரைக்கோடி பழங்குடி மக்கள் வாழ்கின்றனர்.100க்கும் அதிகமான நாடுகளில் வசிக்கின்றனர்.நாகரீக மக்கள் தொடர்பு இன்றி 100க்கும் அதிகமான பழங்குடி மக்கள் குழுக்கள் இயற்கையாக வாழ்ந்து  விலங்குகள் வாழ்க்கை வருகின்றனர்.

          இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகள்,ஆப்பிரிக்கா,தென் அமெரிக்கா உட்பட உலகின் பல இடங்களில் நிர்வாணமாக அதாவது ஆடையின்றி,நாகரீகமின்றி,நவீனத்தொழில் நுட்பத்தொடர்பின்றி,விலங்கு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

                        தமிழ்நாட்டின்  2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி

   சுமார் ஆறரை இலட்சம் பழங்குடி இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
                                                                                                                                                           இருளர்,சோளகர்,ஊராளி,காட்டுநாயக்கர்,கோத்தர்,தோடர்,பளியர்,பளியன்,பள்ளியன்,
கணியன்,காணிக்கன்,காடர்,
 குருமன்ஸ்,குரும்பாஸ்,இரவலன்,மலைக்குடி,மலைவேடன்,மலைசார்,மலையாளி

      ( மலையாளி என்ற பெயரில் தனி பழங்குடி இனம் உள்ளது இவர்கள் கேரளாவேசார்ந்தவர்கள் அல்ல) 
                 என 36 வகையான பழங்குடி இன மக்கள் தமிழ்நாட்டில் மட்டும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் 90சதவீதம் மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளனர்.

                  நாட்டின் வளர்ச்சி என்ற பெயரால்    புதிய பொருளாதாரக்கொள்கை,உலக மயமாக்கல்,தாராளமயமாக்கல் போன்ற கொள்கைகளால்,இயற்கையை மீறி நம் தேவைகளை பெருக்கி வருவதாலும்,பேராசையாலும்,நகர மோகத்தாலும்,நவீன கருவிகளின் ஆதிக்கத்தாலும் ,கிராம மக்களின் மீது அக்கறை காட்டாமல்,விவசாய மக்களை மரியாதையுடன் நடத்தாமல் , நம் முதல்குடியான பழங்குடி இன மக்கள் மீது கவனம் செலுத்தாமல்  
                   நமது சுயநல மிகுதியால்  இன்று பழங்குடி மக்கள் தம் வாழ்க்கையில் சமூகப்பொருளாதாரத்தில் மிகவும் பின் தள்ளப்பட்டு  கல்வி மற்றும் பொருளாதாரம் பெற முடியாதவர்களாக வாழ்வாதாரப்பிரச்சினையில் சிக்கி விளிம்பின் நிலையில் வாழ்கின்றனர்.
  
            நம் முதல்குடியான பழங்குடி இன மக்களுக்கு சமூகத்தில் சம உரிமை கொடுத்து,கல்வி கொடுத்து,பொருளாதாரத்தில் மேம்படையச்செய்து காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும் உரிமையும் என  இந்நேரத்தில் உறுதி ஏற்று   

                          சென்னை அண்ணா பல்கலை கழகத்திலிருந்து வருகை தந்துள்ள  YRC மாணவர்களாகிய  தாங்கள் அனைவரும் கவனமாக பழங்குடி இன மக்களின் வாழ்வியல் முறைகளும் தற்போது சந்தித்து வரும் ஆபத்துகளும் பற்றி தெரிந்துகொள்வதோடு ,

             தாளவாடி ஒன்றியம் ஆசனூரில் அமைந்துள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடமேல்நிலைபள்ளியாம் இப்பள்ளி மாணவர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து கொடுக்குமாறு தக்க ஆலோசனை வழங்கி நல்ல வழிகாட்டுமாறு நான் சார்ந்துள்ள நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்  தமிழ்நாடு என்ற அரசு பதிவு பெற்ற தன்னார்வ அமைப்பின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...