13 மார்ச் 2015

THALAVADI - PUMSCHOOL -ANNUAL DAY-2015

              தாளவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி -
                                        ஆண்டுவிழா-13மார்ச்2015 
பெற்றோரை மதிக்கத்தெரிந்த சான்றோனை வாழ்த்தலாம் வாங்க!.
 மரியாதைக்குரியவர்களே,
                   வணக்கம்.தாளவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டுவிழா-2015மார்ச்13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை  இன்று காலை 10.00மணிக்கு துவங்கி நடைபெற்றது. திருமதி.R.ராஜம்மா B.a.,M.Ed.,அவர்கள் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்   துவக்கிவைத்து தலைமையுரை ஆற்றினர். 
திரு.R.மாதேஷ்M.A.,B.Ed., அவர்கள் தலைமையாசிரியர் அனைவரையும் வரவேற்றார்.
           இப்பள்ளி ஆண்டுவிழா
 குடும்ப உறவுக்கும் வழிகாட்டியாக அமைந்தது அரசுப்பள்ளி ஆண்டுவிழா..
அரசு பள்ளியில் என்ன குறை? என்ன குறை? என்ன குறை?
PUMSCHOOL-THALAVADI -2015
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி -தாளவாடி
  ஆண்டுவிழா திரு.R.மாதேஷ்M.A.,B.Ed., அவர்கள் தலைமையாசிரியர் மற்றும் பள்ளி இருபால் ஆசிரிய குழுவினர் மிகச்சிறப்பாக நடத்தினர்.எவ்வித குறைகளும் இல்லாமல் இந்தப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் இருபால் ஆசிரியர்கள் குழுவாக ஒருங்கிணைந்து தமிழ் மொழி,கன்னடம்,உருது,ஆங்கிலம்  என பல மொழிகளில் இப்பள்ளி குழந்தைகளுக்கு பாடம் நடத்தி நல்வழி காட்டுவது தாளவாடி மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம்.அதற்கான சான்றுதாங்க இந்த ஆண்டுவிழா .
தாளவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆண்டுவிழா-2015

 (எனக்கு மனிதப்பண்பு கொடுத்த விழா என்பதே மிகச்சரியானதுங்க..)

    தாளவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.R.மாதேஷ் M.A.,B.Ed., அவர்கள்  பள்ளி ஆண்டுவிழாவில் தன்னை ஈன்ற தாயாரைப் பெருமைப்படுத்திய  காட்சி....

            மேற்கண்ட படத்தில் உள்ளவர்தாங்க, திரு.R.மாதேஷ் M.A.,B.Ed.,தலைமை ஆசிரியர் அவர்களை ஈன்றெடுத்த தாய்.
                ஆரம்ப காலத்தில் கொடுமையான வறுமையிலும்,எழுத்தறிவு இல்லாமல் இருந்தாலும் கல்வியின் சிறப்பை உணர்ந்து தன் மகனை (தலைமை ஆசிரியர் திரு.R.மாதேஷ் M.A.,B.Ed.,அவர்களை)
            எப்படியாவது படிக்க வைக்க வேண்டும் என்ற விடா முயற்சியினால் படிக்கவைத்து இன்று சிறந்த தலைமை ஆசிரியராக பணியாற்றுவதை கண்ணால் கண்டு ஆனந்தக்கண்ணீர் விட்டு,இந்த வயதிலும் மேடையில் கூடியிருந்த பொதுமக்களிடம் ஐயா,என் மகனை  மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வைத்தேன்.இதே போல பொதுமக்களாகிய நீங்களும் உங்க மகனை,உங்க மகளைப் படிக்க வையுங்க.என்று கல்வியின் சிறப்பைக் கூறினார்.மேலும் தன் மகனின் பணிப்பெருமை பற்றி எல்லோரும் பாராட்டும்போது மகிழ்வுற்ற தாய் ஆனந்தக்கண்ணீர் விட்டு கடந்து வந்த பாதையை நினைவுகூர்ந்தவிதம் கல் மனதையும் கலங்க வைக்கும்படியாக இருந்தது.மேலும் தன் மகனைப்பற்றிக்கூறும்போது
            .அவனுக்கு ஒன்றும் தெரியாது?என் மகன் தவறு ஏதாவது செய்து இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்க...என்று நா தழுதழுக்க வேண்டுகோள் வைத்தார் அப்போது,,,,
                      மேடையில் இருந்த சான்றோர்கள்,உயர்ந்த மனிதர்கள் அனைவருமே கண்ணீர் விட்டு கலங்கிவிட்டனர்.அந்த அம்மையாருக்கு தலை வணங்கி வாழ்த்துவோம். அவரை நமக்கு முன்னுதாரணமாக ஏற்போம்.நம் பிள்ளைகளையும் நன்றாகப் படிக்க வைப்போம்.



திருமதி.R.ராஜம்மா அவர்கள்,உதவித் தொடக்கப்பள்ளி அலுவலர்-தாளவாடி.குத்துவிளக்கு ஏற்றி வைத்து ஆண்டுவிழாவை தொடங்கிவைத்து தலைமை ஏற்ற காட்சி.


         திரு. நஞ்சுண்ட நாயக்கர் அவர்கள்,தாளவாடி ஊராட்சி மன்றத் தலைவர் அவர்கள் ஆண்டுவிழாவிற்கு  முன்னிலை வகித்த காட்சி
பெற்றோர் சங்கத்தின் தலைவர் அவர்கள் ஆண்டுவிழாவிற்கு முன்னிலை வகித்த காட்சி.
திரு. சென்னஞ்சப்பா அவர்கள்,
    (திருக்குறள் பேரவை செயலாளர் )ஆண்டுவிழாவிற்கு முன்னிலை வகித்த காட்சி.

                                                    தமிழ்த்தாய் வாழ்த்து
திருமதி.R.ராஜம்மா B.A.,M.Ed.,,உதவித் தொடக்கப்பள்ளி அலுவலர்-அவர்களுக்கு பள்ளி சார்பாக பொன்னாடை அணிவித்து வரவேற்ற காட்சி.
திரு. சென்னஞ்சப்பா அவர்கள்,
    (திருக்குறள் பேரவை செயலாளர் )தாளவாடி அவர்களை பள்ளியின் சார்பாக பொன்னாடை அணிவித்து வரவேற்ற காட்சி..
சிறப்பு விருந்தினரான அரசு மருத்துவர் டாக்டர் பால சுப்ரமணியம்M.D.,SIDDHA _GOVT HOSPITAL THALAVADI அவர்களுக்கு பள்ளியின் சார்பாக பொன்னாடை அணிவித்து வரவேற்ற  காட்சி..
 தாளவாடி வட்டார வள மையம் பொறுப்பாளர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்ற காட்சி.
 திருமதி.R.ராஜம்மா B.A.,M.Ed.,,உதவித் தொடக்கப்பள்ளி அலுவலர்-அவர்களது தலைமை உரையில் அரசுப்பள்ளிகளில் என்ன குறை? என்று கேள்வி எழுப்பினார்.
          நம்ம தமிழ்நாடுஅரசு மாணவர்களுக்காக,  இலவசப் பயண அட்டை,பாடப்புத்தகங்கள்,கணினிகள்,சீருடைகள்,உணவுகள், விலையில்லா மடிக்கணினிகள், மிதிவண்டிகள்,பாதணிகள்,பள்ளிக்கட்டடங்கள்  கட்டமைப்பு வசதிகள் என மாணவர்களின் நலனுக்காக,பொதுமக்களின் நலனுக்காக என பள்ளிகள் அனைத்திற்கும் தேவையான வசதிகள் செய்து கொடுத்து வருகிறது.ஆசிரியப்பெருமக்களும் மாணவர்கள் மீது முழுமையான கவனம் செலுத்தி பாடங்களை கற்பித்து வருகின்றனர்.பொதுமக்களாகிய நாம்தான் சரியாகவும்,முழுமையாகவும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.


                   திரு.C. பரமேஸ்வரன் ,செயலாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அவர்கள் பள்ளி ஆண்டுவிழா  வாழ்த்துரையில் , 
          நம்ம தாளவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்தாங்க, உருது, கன்னட, தமிழ், ஆங்கிலம்  என பல மொழிகளில் கல்வி கற்பித்து வேற்றுமையில் ஒற்றுமை காண்கிறது.நாம் அனைவரும் இந்தியரே என்ற ஒற்றுமையை இங்கு காணும்போது மிக்க மகிழ்ச்சிங்க.
             சத்தியமங்கலம் உட்கோட்ட காவல்துறை போக்குவரத்துக் காவல் நிலையம் மற்றும் லோகு டிரைவிங் ஸ்கூல் சத்தியமங்கலத்துடன் இணைந்து
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக் கல்வி தாளவாடி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் கொடுத்து வந்தோம்.அனைத்து பள்ளிகளும் மிகச்சிறப்பாக ஒத்துழைப்புக்கொடுத்தன.அடுத்த ஜூன் மாதம் முதல் ஆண்டு முழுவதும் சாலை பாதுகாப்பு கல்வி அனைத்து இளையோர்களான  மாணவ சமுதாயத்திற்கும் பொதுமக்களுக்கும்  கொடுக்க திட்டமிட்டுள்ளோம்.
                        கடந்த ஆண்டு தாளவாடியில் நடத்திய மூன்று இலவச கண் சிகிச்சை முகாம்களும்  தாளவாடி மக்களுக்கு மிகுந்த பயனை அளித்துள்ளது.வரும்2015 மே மாதம்30 ஆம் தேதி இலவச கண் சிகிச்சை முகாம் நடத்துவோம்.
              வரும் 2015ஜூலை மாதம் முதல் வாரத்தில் சாதி,இன,மொழி,மத வேறுபாடு இன்றி ஒன்றுபட்ட சமூக நல நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து   அந்த நிகழ்வில் ,
    சாலை பாதுகாப்பு படை அனைத்து பள்ளிகளிலும் அமைத்து செயல்படுத்துவது.அதற்கான ஒத்துழைப்பு கேட்டு ஈரோடு மாவட்ட ஆட்சியர் ,வட்டார போக்குவரத்து அலுவலகம்,தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்,மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ,ஆகிய சான்றோர்களிடம் சட்டப்படியாக விண்ணப்பித்து அனுமதி பெற்று செயல்படுவது.
      திரு.சென்னஞ்சப்பா அவர்கள்  மற்றும் திரு. M.வெங்கட்ராஜ் அவர்கள் ஓய்வு பெற்ற உதவி தொடக்கக் கல்வி அலுவலர்  ஆகியோர் பொறுப்பில்  தாளவாடி திருக்குறள் பேரவையை செயல்படுத்துவது., 
  அரசு சித்த மருத்துவர் பாலசுப்பிரமணியம்M.D., Siddha Govt.Hospital- Thalavadi  அவர்கள் தலைமையில்   மூலிகை பாதுகாப்பு இயக்கம் துவக்கி 
                   வனத்துறையின் உதவியுடன் தாளவாடி பகுதியில் உள்ள மூலிகை வளங்களைசேகரிப்பது மற்றும்
                 (அறிந்த தாவரங்கள்-அறியாத மருத்துவக்குணங்கள் என்னும் தலைப்பில்)   மூலிகைகளின் மருத்துவங்களை பரப்புரை செய்வது.                      
                 அனைத்து பள்ளி இருபால் ஆசிரியப் பெருமக்களையும் ஒருங்கிணைத்து
 இளைய சமூகத்திற்காக உயர் கல்வி வழிகாட்டுதல் ,அறிவியல் திருவிழா,கணிதத்திருவிழா,சமையல் திருவிழா,விளையாட்டு நிகழ்வுகள் நடத்தலாம் என திட்டமிட்டுள்ளோம்.
         அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்து பயன் பெற வேண்டுகோள் விடுத்தார்.
 அனைவரின் கவனத்திற்கு,
        தாளவாடிஊராட்சி ஒன்றிய நடுநிலைப்  பள்ளி ஆண்டுவிழா நிறைவு வரை  எனது பணிச்சூழல் காரணமாக பங்கேற்க இயலவில்லை என வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
என அன்பன்
 பரமேஸ்வரன்.C.
 TNSTC - DRIVER - 
THALAVADI (ERODE DT)
 மற்றும்
CONSUMER PROTECTION AND ROAD SAFETY ORGANISATION - TAMIL NADU. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...