09 மார்ச் 2015

மின்சார குறை தீர் மன்றம் உங்களுக்காக ...

மரியாதைக்குரியவர்களே,
                                  வணக்கம். கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன். தமிழ்நாடு மின்சார வாரியம் மின் நுகர்வோருக்கான   குறைகளை தீர்த்து வைக்க, குறைதீர் மன்றம் ,மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்களில் செயல்பட்டு வருகின்றன.
                                 மின் நுகர்வோர் குறைதீர் மன்றம் மூவரை உறுப்பினர்களாகக்கொண்டு செயல்படுகிளது. மன்றத்தின்  தலைவராக மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வைப்பொறியாளர் இருப்பார்.மற்ற இருவரை மன்றத்தின் தலைமையிடம் உள்ள மாவட்டத்தின் ஆட்சியாளர் அவர்கள் நியமிப்பார்.
             மன்றத்தில் தெரிவிக்கவேண்டிய குறைகளை எழுத்து வடிவில் உரிய முறையீட்டுப் படிவத்தில் அதாவது இணைப்பு - 1 என்ற படிவத்தில் எழுதிக்கொடுக்க வேண்டும்.அல்லது மின்னணு அஞ்சல் மூலமாகவும் முறையீடுகளைப் பதிவு செய்யலாம்.
               நுகர்வோரிடமிருந்து முறையீடு பெறப்பட்ட ஏழு நாட்களுக்குள் ஒப்புகை அனுப்பப்படும்.
முறையீட்டாளர் அல்லது அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட சார்பாளர் மூலமாக விசாரணையில் பங்கேற்கலாம்.
                   முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டால் அந்த விவரம் எழுத்து மூலமாக முறையீட்டாளருக்குத் தெரிவிக்கப்படும்.
             மன்றத்தில் முறையீடு பெறப்பட்டதிலிருந்து அதிகபட்சம் இரண்டு மாதங்களுக்குள் முறையீட்டின் மீது உரிய ஆணை வழங்க ஆவண செய்யப்படும்.
     மன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஆணையை செயல்படுத்துவதற்காக  முறையீட்டாளருக்கும் உரிமதாரருக்கும் அனுப்பபடும்.
குறை தீர் மன்றம் வழங்கிய ஆணையில் திருப்திப்படாதபோது பாதிக்கப்பட்ட நபர் அந்த ஆணையை எதிர்த்து ஆணையம் நிர்ணயித்த படிவத்தில் குறிப்பிட்டவாறு பூர்த்தி செய்து மின்சார குறை தீர்ப்பாளரிடம் ஆணை கிடைக்கப்பெற்ற முப்பது நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யலாம்.
விவரங்கள் அறிய www.tangedco.gov.in/tamil-index1.php என்ற முகவரியில் சென்று பார்வையிடுங்க...
கீழே பகிர்ந்துள்ள புகைப்படங்கள் மேற்கண்ட இணையதளத்தில் எடுக்கப்பட்டவை. 
 ஆதலால் இதைக்கூட காப்பி எடுத்து பெரிதுபடுத்திப்பார்வையிடுங்க..

 
    மின் நுகர்வோர் குறை தீர் மன்றத்திற்கு 
        கொடுக்க வேண்டிய .இணைப்பு -1 படிவம்.

 
 இங்கு பகிர்ந்துள்ள படங்கள் ஈரோடு வட்டம் மற்றும் கோபி வட்டம் குறை தீர் மன்றத்தின் முகவரி மற்றும் மின்னஞ்சல் விவரம் ஆங்கிலத்திலும் தமிழிலும் காண்க...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...