26 மார்ச் 2015

பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்-சத்தியமங்கலத்தில்..

மரியாதைக்குரியவர்களே,
  வணக்கம்.
     தமிழ்நாடு காவல் துறை- ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின்  பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்  26.03.2015 வியாழக்கிழமை இன்று சத்தியமங்கலத்தில் நடைபெற்றது.
    தலைமையுரை. திரு. எம்.ஆர்.சிபி சக்கரவர்த்தி இ.கா.ப. அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ...
     துவக்கவுரை.  திரு.எஸ்.மோகன் அவர்கள்,காவல் துணை கண்காணிப்பாளர் - சத்தியமங்கலம் உட்கோட்டம்.....

               சத்தியமங்கலத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாமில் தேவையற்ற சர்ச்சைகளால்  சாலை பாதுகாப்பு சம்பந்தப்பட்ட சமூக நலனுக்கான கருத்துக்களை பகிர இயலாமல் தடைபட்டது. 
       சாலை பாதுகாப்பு கருதி 
        நான் கூற இருந்த குறைகள் தங்களது பார்வைக்காக..
                  போக்குவரத்துக் காவல் மற்றும் லோகு டிரைவிங் ஸ்கூல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் இணைந்து சத்தியமங்கலத்தில் சாலை பாதுகாப்பு குழுவாக இணைந்து அறிவுநிலையில் விழிப்புணர்வு கொடுத்தால் மனநிலையில் மாற்றத்தை காண முடியும் என்று முடிவெடுத்து எனது பொறுப்பில்(பரமேஸ்வரன்.சி) இன்றுவரை 18 பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டங்களில் சாலை பாதுகாப்பு கல்வி விழிப்புரை நடத்தியுள்ளோம்.வருடம் முழுவதும் தமிழமெங்கும் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் கொடுக்க உள்ளோம்.அந்த அனுபவத்தின் அடிப்படையில்....
 (1)சாலை பாதுகாப்பு கருதி....
           காவல்துறை,போக்குவரத்துத்துறை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்,நெடுஞ்சாலைத்துறை,கல்வித்துறை,ஊடகங்கள்,
அனைத்து அரசியல் கட்சி  பிரமுகர்கள்,தனியார்துறை சார்ந்த லாரி,டெம்போ,ஆட்டோ உள்ளிட்ட அனைத்து வாகன உரிமையாளர்கள் சங்கங்கள்,,தனியார் அனைத்து வாகன ஓட்டுநர் சங்கங்கள்,பள்ளி மற்றும் கல்லூரி வாகன ஓட்டுநர்கள்,வணிகர்  சங்கங்கள்,விவசாயிகளின் சங்கங்கள்,தினசரிப்பயணிகள் குழுக்கள்,போக்குவரத்து உட்பட அனைத்து தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் ,அரசு சாரா சமூக நல அமைப்புகள்,மருத்துவர் சங்கங்கள்,வழக்கறிஞர் சங்கங்கள்,சமூக ஆர்வலர்கள்,இரு சக்கர வாகன ஓட்டிகள் என அனைவரையும் அழைத்து சாலை பாதுகாப்பு கருத்தரங்கம் மாதம் ஒருமுறையாவது நடத்த வேண்டும். பொதுச்சாலையில் பயணிக்கும் அனைவரும் சமம் என்ற நிலையை உணரச்செய்ய வேண்டும்.அனைவரையும் ஒருங்கிணைத்து சாலை பாதுகாப்பு இயக்கம் வலுவுள்ளதாக்க உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும்.
 (2) ஆசனூர் பள்ளத்தில் அடிக்கடி ஏற்படும் விபத்தினை தவிர்க்க சாலையின் நடுவில் தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(3)தாளவாடி பேருந்து நிலையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(4)சத்தியமங்கலத்தில் ஊர்க்காவல்படை அமைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(5)சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கல்வி அனைத்து பள்ளிகளிலும் நடத்தும்போது அழைப்பு கொடுக்கும்போது காவல்துறை சார்ந்த காவலர் ஒருவராவது  கலந்துகொள்ள  அறிவுறுத்த  வேண்டும்.
          கண்டிப்பாக ஈரோடு மாவட்ட காவல்துறைக்கும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கும் இந்த தகவல் வேண்டுகோளாக சென்றடைய வேண்டும்.
 என 
சமூக நலனில் அக்கறையுள்ள
 அன்பன் 
 C.பரமேஸ்வரன்,
 செயலாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.பதிவு எண் 26/ 2013.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...