09 மார்ச் 2015

மின்சார நுகர்வோர் குறை தீர்வு படியுங்க...

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். மின்சாரம் உபயோகிப்பவர்களா நீங்கள் அப்படியானால் உங்களுக்கான பதிவு இது...
 
நுகர்வோர் குறை தீர்வு


1. நுகர்வோர், தங்கள் குறைகளை தொலைபேசியின் மூலமாகவோ, நேராகவோ அல்லது கடிதம் மூலமாகவோ அந்தப் பகுதிக்குரிய உதவிப் பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களில் கொடுக்கலாம்.

2. மேலும் நுகர்வோர், அவர்கள் குறைகளை செயற் பொறியாளர், மேற்பார்வை பொறியாளர் அல்லது மண்டல தலைமைப் பொறியாளருக்கு கடிதம் மூலமாக தொடர்பு கொள்ளலாம். அல்லது தினமும் மதியம் இரண்டு மணியிலிருந்து மூன்று மணி வரையில் நேரில் சந்திக்கலாம்.

3.மேற்பார்வை பொறியாளர்கள் மாதம் ஒரு முறை அந்தந்த பகுதிக்குரிய செயற் பொறியாளர் அலுவலகங்களில் குறை தீர்க்கும் கூட்டம் நடத்துகின்றனர். இந்த குறைதீர்ப்பு நாளின் தேதி முன் கூட்டியே பிரிவு/கோட் அலுவலக விளம்பர பலகையிலும் மற்றும் செய்தித் தாளிலும் அறிவிக்கப்படும். இவ்வசதியை நுகர்வோர் பயன்படுத்தி அவர்கள் குறைகளை நேரில் தீர்த்துக் கொள்ளலாம். மின்நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றம் - முறையீடு படிவம்

4. மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்களில் நுகர்வோர் குறைதீர்ப்பு அமைப்புகள் செயல்பட்டு  வருகின்றன. நுகர்வோர்,    இந்த  அமைப்பினை தொடர்பு கொண்டு  தங்கள்  குறைகளை தீர்த்துக் கொள்ளலாம். நுகர்வோர் குறை தீர்க்கும் மன்ற அலுவலகங்களின் முகவரிகள்.

5. நுகர்வோர் தொண்டு நிறுவனங்களுக்குன்டான கூட்டம், அந்த பகுதிக்குரிய மண்டல தலைமைப் பொறியாளர் அலுவலகங்களில் காலாண்டுக்கு ஒருமுறை நடைபெறுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...