08 மார்ச் 2015

L.I.C.OF.INDIA - GOBI CHETTIPALAYAM,

எல்.ஐ.சி.யில் உங்க பாலிசி எண்ணைப் பதிவு செய்யுங்க.....
மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம்.konguthendral.blogspot.com  வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன். எல்.ஐ.சி. யில் இணையதளமான www.licindia.in செல்லுங்க...உங்க ஆயுள் காப்பீட்டு பாலிசி எண்ணை பதிவு செய்யுங்க.. எல்.ஐ.சி. யிலிருந்து  எஸ்.எம்.எஸ் மூலமாக பிரிமியம்,நிலுவைத்தொகை,கடன்,போனஸ்,நாமினி உள்ளிட்ட பல விவரங்களையும் தெரிந்துகொள்ளுங்க..உங்க பாலிசி மட்டுமின்றி உங்க குடும்ப உறுப்பினர்களின் அனைத்து பாலிசிகளுக்கும் நீங்களே ஆன்லைனில் பிரிமியம் கட்டுங்க..
(PARAMES DRIVER - SATHYAMANGALAM).
LICயில் பதிவு செய்யும் முறைகள்...
(1) www.licindia.in  இணையதளத்தில் சென்று  new user ஐ கிளிக் செய்யுங்க.அதில் உங்களது ஒரு பாலிசி எண்,பிரிமியம்,பிறந்த தேதி, இவற்றுடன் மின்னஞ்சலையும் கொடுங்க.  
(2)உங்களது user ID மற்றும்  Password புதியதாக கொடுங்க.பின்னர் அதை ஞாபகமாக வைத்துக்கொள்ளுங்க.
(3)UPdate Profile - ஐ கிளிக் செய்து உங்க  கைபேசி எண்,உங்க மனைவி பெயர்,குழந்தைகளின் பெயர்கள்,பிறந்த தேதியுடன் பதிவு செய்யுங்க.
(4)Enroll Polices ஐ கிளிக் செய்து உங்களது மற்ற அனைத்து பாலிசிகளையும்,மனைவி,மற்றும் குழந்தைகளின் பாலிசிகளையும் பதிவு செய்யுங்க.மேலும் விவரங்களுக்கு; முதுநிலை கோட்ட மேலாளர்-கோவை கோட்டம் அவர்களது அறிவுறுத்தலின்படி வாடிக்கையாளர் சேவை மையத்தின் customerzone_cbe@licindia.com மின்னஞ்சல் முகவரிக்கு செல்லுங்க...அல்லது IVRS 1251அல்லது  0422-2300300  அல்லது 0422-2303318 அல்லது TOLL FREE 18004257676 எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்க.
(PARAMES DRIVER - SATHYAMANGALAM).
LIC PORTAl ன் பயன்கள்..
(1) Pay premium online : Net Banking அல்லது Debit Card அல்லது Credit Card மூலமாக குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் பாலிசிகளை செலுத்தி ரசீதுகளையும் பெற்றுக்கொள்ளலாம்.
(2)வருமான வரி தாக்கல் செய்யConsolidated Premium Paid Statement எடுத்துக்கொள்ளலாம்.இதற்கு அலுவலக முத்திரையோ,கையெழுத்தோ தேவையில்லைங்க.
(3)View Endrolled Policies OPtion ஐ கிளிக் செய்து முகவர் விவரம் உட்பட பாலிசி விவரங்கள் அனைத்தும் தெரிந்து கொள்ளலாம்.
(4)ULIP பாலிசிகளுக்கு யூனிட்ஸ் மற்றும் சரண்டர் மதிப்பு (NAV) அறிந்து கொள்ளலாம்.
(5)Click Here For Details ல் பாலிசி போனஸ் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
(6)Subscribe to SMS எல்.ஐ.சி.அலுவலகத்திலிருந்து உங்களது மொபைல் எண்ணுக்குSMS என்னும் குறுந்தகவல் வாயிலாக பாலிசி தவணைநாள்  போன்ற தகவல்கள் அனுப்பி வைக்கப்படும்.

           உங்க மொபைல் எண்ணை LIC அலுவலகத்திலோ அல்லது www.licindia.in இணையதளத்திலோ பதிவு செய்து கொண்டால் பிரிமியம் தவணைநாள்,வாழ்வுகாலப் பயன்(SB) மற்றும் முதிர்வு தவணைநாள் NEFT -ல் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட அறிவிப்புகளையும் பெற்றுக்கொள்ளலாம். 
(PARAMES DRIVER - SATHYAMANGALAM).
 LIC யின்  SMS சேவையால் கீழ்கண்ட தகவல்களைப் பெறலாம். 
    அவைகளின் விவரம் பின்வருமாறு.
(1)ASKLIC<பாலிசி எண் பதிவிடுங்க>loan என்று டைப் செய்து 9222492224 என்ற எண்ணுக்கு அனுப்புங்க.உடனே எல்.ஐ.சி.யில் உங்க கடன் பற்றிய தகவல் அனுப்பிவைப்பார்கள்.இதே போல மற்ற சேவைகளான
(2)ASKLIC<பாலிசி எண் பதிவிடுங்க>prem என்று டைப் செய்து 9222492224 என்ற எண்ணுக்கு அனுப்புங்க.உங்க பிரிமியம் பற்றிய தகவல்கள் தெரிந்துகொள்ளலாம்.
(3) ASKLIC<பாலிசி எண் பதிவிடுங்க>rev என்று டைப் செய்து 9222492224 என்ற எண்ணுக்கு அனுப்புங்க.உங்க காலாவதியான பாலிசியின் நிலுவைத்தொகை பற்றிய தகவல்கள் தெரிந்துகொள்ளலாம்.
(4)  ASKLIC<பாலிசி எண் பதிவிடுங்க>bonus என்று டைப் செய்து 9222492224 என்ற எண்ணுக்கு அனுப்புங்க.உங்க போனஸ் பற்றிய தகவல்கள் தெரிந்துகொள்ளலாம்.
(5) ASKLIC<பாலிசி எண் பதிவிடுங்க>nom என்று டைப் செய்து 9222492224 என்ற எண்ணுக்கு அனுப்புங்க.உங்க வாரிசு நியமனம் பற்றிய தகவல்கள் தெரிந்துகொள்ளலாம். 
(PARAMES DRIVER - SATHYAMANGALAM).
பாதுகாப்பானது.பத்திரமானது.நம்பிக்கையானது.இதுவே ஆதாரமாகிவிடுதால்நாளை  நமக்கு சாட்சியங்கள் போன்ற சான்றுகள் தேவைக்கும் அலைய வேண்டியதில்லைங்க..
 (PARAMES DRIVER - SATHYAMANGALAM).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...