21 ஜனவரி 2015

தமிழே! உயிரே!!

மரியாதைக்குரியவர்களே, 
                                வணக்கம். வளமை மிக்க சொற் பெருக்கம் கொண்ட தமிழின் பெருமை இதோ.....

நம்ம மொழி செம்மொழி.
‪#‎அம்மா‬ மூன்றெழுத்து ‪#‎அப்பா‬ மூன்றெழுத்து ‪#‎தம்பி‬ மூன்றெழுத்து
‪#‎அக்கா‬ மூன்றெழுத்து
‪#‎தங்கை‬ மூன்றெழுத்து
‪#‎மகன்‬ மூன்றெழுத்து
‪#‎மகள்‬ மூன்றெழுத்து
‪#‎காதலி‬ மூன்றெழுத்து
‪#‎மனைவி‬ மூன்றெழுத்து
‪#‎தாத்தா‬ மூன்றெழுத்து
‪#‎பாட்டி‬ மூன்றெழுத்து
இவையனைத்தும் அடங்கிய
‪#‎உறவு‬ மூன்றெழுத்து
உறவில் மேம்படும்
# பாசம் மூன்றெழுத்து
பாசத்தில் விளையும்
‪#‎அன்பு‬ மூன்றெழுத்து
அன்பில் வழியும்
‪#‎காதல்‬ மூன்றெழுத்து
காதலில் வரும்
‪#‎வெற்றி‬ மூன்றெழுத்து
‪#‎தோல்வி‬ யும் மூன்றெழுத்து
காதல் தரும் வலியால்வரும்
‪#‎வேதனை‬ மூன்றெழுத்து வேதனையின் உச்சகட்டத்தால் வரும்
‪#‎சாதல்‬ மூன்றெழுத்து
சாதலில் பறிபோகும்
‪#‎உயிர்‬ மூன்றெழுத்து..
இது நான் எழுதிய
‪#‎கவிதை‬ என்றால் மூன்றெழுத்து..
இது
‪#‎அருமை‬ என்றால் அதுவும்
மூன்றெழுத்து
‪#‎மொக்கை‬ என்றால் அதுவும்
மூன்றெழுத்தே..
‪#‎நட்பு‬ என்ற மூன்றெழுத்தால்
இணைந்து இதைப்படித்த அனைவருக்கும் என்
‪#‎நன்றி‬ ..
#நன்றி யும் மூன்றெழுத்தே ...!
‪#‎மூன்று‬ ம்
மூன்றெழுத்தே........!!!
‪#‎இவை‬ அத்தனையும் உள்ளடக்கிய தமிழ் உம் மூன்றெழுத்து...!!


வாழ்விற்கு!!!வழிகாட்டும் சில தகவல்கள்,,,,
**********************************************

1. ஒரு மொத்த விற்பனை மீன் கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம்,
‘மீன் சாப்பிட வேண்டாம் என்று நினைத்தேன்.
மீனவன் சாப்பிட வேண்டாமா?’
*******************************************************
2. உலகம் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. நாம்தான் ஒருவருக்கொருவர் கவலைப்பட்டுக் கொள்கிறோம்!

***************************************************************************************
3. தோல்விகள் நல்ல பாடங்களை தருபவை -- படிப்போம் ..
வெற்றிகள் கண்ணாடி போன்றவை --- பாதுகாப்போம் ...
நல்ல உறவுகளும் நல்ல நட்பும் விலை மதிப்பற்றவை - தக்க வைத்து கொள்வோம் .
****************************************************************************

நம் வாழ்வில் அறிந்து வைத்திருக்க வேண்டிய முத்தான முன் எச்சரிக்கையான செய்திகள்.
¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥
1. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.
3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!
5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.
7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!
8.பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்
9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.
10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.
11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்
12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்
13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை
15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்
16. யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம்
17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்
தமிழுக்கு நன்றிகள் ,,,,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக