03 ஜனவரி 2015

நம்ம தாளவாடியில் இலவச கண் சிகிச்சை முகாம்..

      2015 ஜனவரியில் இலவச கண் சிகிச்சை முகாம்..

                நம்ம தாளவாடியில்...

இலவச கண் சிகிச்சை முகாம்
         2015 ஜனவரி 24 ஆம் தேதி சனிக்கிழமை அன்று
                        நம்ம தாளவாடியில்.........
மரியாதைக்குரியவர்களே,
                வணக்கம்.
                    இலவச கண் சிகிச்சை முகாம் 

வருகிற 2015ஜனவரி மாதம் 24 ஆம் தேதி 
தாளவாடி அஸிஸி மருத்துவமனையில்.....
                              ஈரோடு மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம்,
குன்னூர்- மேட்டுப்பாளையம் இம்மானுவேல் கண் நோய் நிவாரணக்குழு,
அஸிஸி மருத்துவமனை தாளவாடி,
  நுகர்வோர் பாதுகாப்பு & சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு,
ஆகியன  இணைந்து இலவச கண் பரிசோதனை மற்றும் இலவச  கண் சிகிச்சை முகாம் நடத்துகின்றன..
மக்கள் சேவையில் எங்களுடன் பங்கேற்றுள்ள அரிமா.V.வைத்தீஸ்வரன்.MJF ஐயா அவர்களையும்
(V.V.FORM குமுட்டாபுரம் ) தாளவாடி மக்கள் சார்பாக வாழ்த்துகிறோம். 

                              கண் சிகிச்சை தேவைப்படும் அனைவருக்கும் அறுவை சிகிச்சை,உணவு ,தங்கும் இடம்,போக்குவரத்து வசதி அனைத்தும் முற்றிலும் இலவசம்...
                        தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா உட்பட மற்ற மாநில மக்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி இலவசமாக கண் சம்பந்தப்பட்ட நோய்களை குணமாக்கிக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.
           தாளவாடியின் கடைக்கோடி கிராமத்திலுள்ள கடைசி மனிதருக்கும் தகவல் சென்றடைய ஆறாயிரம் நோட்டீஸ்கள் விரைவில் விநியோகம் செய்ய உள்ளோம்.
மேலும் விவரங்களுக்கு கீழ்கண்டுள்ள நோட்டீஸ்களை படித்து அறிந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

          இலவச கண் சிகிச்சை முகாம் ஒருங்கிணைப்பாளர் திரு.நடராஜன் அவர்களைத்தொடர்பு கொள்ள....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக